வெள்ளி, 10 செப்டம்பர், 2021

ஒரே கூரையின் கீழ் - குறும்படம்/விளம்பரம் - காணொளி



அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட கல்லூரி நாட்கள் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


விட்டுக் கொடுப்பதும், மன்னிப்பதும் தான் வாழ்க்கை.  ஆனால் வாழ்க்கையின் போராட்டமே, யார் விட்டுக் கொடுப்பது, யார் மன்னிப்பது என்பது தான்.


******


இந்த நாளில் மீண்டும் குறும்படம்/விளம்பரம் பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. இன்றைக்கு நாம் பார்க்கப் போகும் காணொளி சீன புத்தாண்டு சமயத்தில் தன்னை சந்திக்க வரப்போகும் மகன்/மகள் குடும்பத்தினருக்காக எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் ஒரு தந்தை குறித்த காணொளி. மனதைத் தொடும் விதமாக எடுத்திருக்கிறார்கள்.  ஆங்கிலத்தில் சப் டைட்டில் இருக்கிறது என்பதால் நீங்கள் பார்த்து புரிந்து கொள்ளவும் முடியும் என்பது கூடுதல் வசதி.  காணொளியைப் பார்க்கலாமே!

மேலே உள்ள காணொளி வழி பார்க்க இயலவில்லை என்றால், இந்த இணைப்பு வழி பார்க்கலாம்!


நண்பர்களே இன்றைய குறும்படம்/காணொளி குறித்த உங்கள் கருத்துரைகளை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.  நாளை வேறொரு பதிவு வழி உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்



வெங்கட் நாகராஜ்

திருவரங்கத்திலிருந்து...

18 கருத்துகள்:

  1. குறும்படம் பின்னர் வந்து பார்க்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்த போது பாருங்கள் ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. பிறகு வருவேன் ஜி
    இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்த போது பாருங்கள் கில்லர்ஜி.

      விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள் - தங்களுக்கும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. புத்தாண்டுக்காக ஆவலோடு பிள்ளைகளை எதிர்பார்த்து....சமைத்து...அவருடைய எதிர்பார்ப்பும் ஆனந்தமும் சிறப்பு. போகிற போக்கில் பெற்றோர் தம் பிள்ளைகளை இவ்வாறாக எதிர்பார்ப்பது என்பது வீணாகிவிடும் என்றே நினைக்கிறேன். அவரவர் தத்தம் குடும்பம் என்று தம் பிள்ளைகள், தன் மனைவி/கணவன் என்று கவனம் செலுத்தி, பெற்றோரை நினைக்க மறந்துவிடுகிறார்கள், அல்லது நினைக்க நேரமில்லை எனலாம். மனதைத்தொட்ட குறும்படம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. பதில்கள்
    1. குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. மிக அருமையான குறும்படம். பாசமும், நேசமும் ததும்பி வழிகிறது.

    நேரம் காலம் ஒத்து வந்தால் குடும்பத்துடன் இணைந்து இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. மிகவும் ரசித்த, சோகப்பட வைத்த
    பின் மீண்டும் மகிழ்சியுற வைத்த படம்.

    அந்த தந்தை தான் எத்தனை அருமையாக நடித்திருக்கிறார்.
    அன்பு வெங்கட்,
    முதுமையின் இரு பக்கங்களும் சரியாகப் பாலன்ஸ் செய்தால்
    மகிழ்ச்சி தொடரும் என்பது புரிகிறது.
    நன்றி மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. பதில்கள்
    1. குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி இராமசாமி ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. மிகவும் ரசித்தேன் முதலில் மனம் ரொம்ப வேதனையானது ஹப்பா கடைசியில் ஆல் இஸ் வெல்...போல சுபம்!

    அப்பா அசத்தல்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. பின்னர் தான் பார்க்கணும். அது என்னமோ குறும்படங்கள் எல்லாமும் பார்க்க முடியறதில்லை. நேரம் அப்படி அமைகிறது. :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்த போது பாருங்கள் கீதாம்மா. எல்லா சமயத்திலும் குறும்படங்கள் பார்க்க இயலாது தான். நானும் பார்த்து சில நாட்கள் ஆகிவிட்டது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....