சனி, 10 டிசம்பர், 2022

யாரிவள் தொடரின் பயணங்கள் - பகுதி இரண்டு


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

இதற்கு முன் வெளியிட்ட பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

NO ONE IS TOO BUSY IN THIS WORLD; WE ALL HAVE THE SAME 24 HOURS AND IT'S ALL ABOUT PRIORITIES.

 

******

 

யாரிவள் தொடரின் பகுதிகள் அனைத்தும் இந்தச் சுட்டி வழி படிக்கலாம்.


 

'2002 டெல்லிக்கு வந்த புவனாவுக்கு எதுவுமே தெரியாதுன்னு நினைச்சேன்! அவ ரொம்ப innocent இருந்தா!

 

உனக்குள்ள எவ்வளவு டேலண்ட்ஸ் இருக்குடா!! 'யாரிவள்' தொடர்ந்து படிச்சிட்டு வரேன்! சூப்பர்டா! என் ஃப்ரெண்ட்ஸ் சிலர் கிட்டயும் சொல்லி படிக்கச் சொல்லியிருக்கேன்! நிறைய எழுது புவனா!

 

இத்தனை வருஷமா தனியா எப்படி மேனேஜ் பண்ணினேன்னு எழுது! உன் பொண்ண எப்படி வளர்த்தன்னு எழுது! அப்போ என்னென்ன சவால்கள சந்திச்சேன்னு எழுது! அதெல்லாம் நிறைய பேருக்கு உதவியா இருக்கும்!

 

உனக்கு நாங்க எல்லாரும் இருக்கோம் டா! சென்னைக்கு வரும் போது கட்டாயமா வீட்டுக்கு வா என்ன!'

 

எதிர்பாராத நேரத்தில் வந்த பல வருடங்களாக தொடர்பிலேயே இல்லாத டெல்லியில் அப்போது  எங்கள் பகுதியில் வசித்த தோழி ஒருவரின் அலைபேசி உரையாடல் தான் இது!

 

அவர் பேசிய பின் மனதிற்கு மிகவும் நெருக்கமாக உணர்ந்தேன்.

 

மகள் ஐந்து மாதக் குழந்தையாக இருந்த போது ஒருநாள் மதியம் சன் ஸ்ட்ரோக்கால் எனக்கு இடைவிடாத வாந்தியும், தலைசுத்தலும் ஏற்பட்டதில் குழந்தை எங்கே இருக்கின்றது என்றே  தெரியவில்லை!

 

தடுமாறிக் கொண்டு மொபைலில் ஸ்க்ரோல் செய்த போது இந்தத் தோழியின் எண் கண்ணில் படவே  ஃபோன் செய்து நிலைமையைச் சொன்னேன்! சில நிமிடங்களிலேயே தன் சின்னச்சிறு மகனையும் கூட்டிக் கொண்டு வீட்டுக்கு வந்துவிட்டார்.

 

என்னை ஓய்வெடுக்கச் சொல்லி விட்டு என் மகளையும் பார்த்துக் கொண்டு, மருத்துவருக்கு அழைத்து விவரத்தைச் சொல்லி அவர் பரிந்துரைத்த மருந்துகளை மெடிக்கல் ஷாப்புக்கு ஃபோன் செய்து வரவழைத்து கொடுத்து என்னை தூங்கச் செய்தார்.

 

மாலை என்னவர் அலுவலகம் விட்டு வந்ததும் அவரிடம் விவரத்தைச் சொல்லி குழந்தையை தோழியே அவர் வீட்டுக்கு எடுத்துச் சென்று பார்த்துக் கொள்வதாகவும், என்னை மருத்துவரிடம் அழைத்துச் செல்லவும் சொல்லிச் சென்றார்.

 

அன்பு சூழ் உலகில் இறைவன் யாரோ ஒருவர் மூலம் உதவிக் கொண்டு தான் இருக்கிறார்!

 

இதுமாதிரி கிடைக்கும் கருத்துகளால் இன்னும் நிறைய எழுதணும் என்ற உத்வேகமும், உற்சாகமும் கிடைக்கின்றது!

 

(தொடரும்)

 

*****

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்

 

5 கருத்துகள்:

  1. தோழியும் அவரது செயலும் மனத்தைக் கவர்கின்றன(ர்)..

    பதிலளிநீக்கு
  2. தொடரை இன்றுதான் கண்டேன். நல்ல நடை.

    சோழ நாட்டில் பௌத்தம் என்ற என்னுடைய நூல் அச்சேற்றப்பணி காரணமாக சில மாதங்களாக வலைப்பூக்களின் பக்கங்கள் வர இயலா நிலை. பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன். அண்மையில் இந்நூல் வெளியாகியுள்ளது. இனி தொடர்ந்து பதிவுகள் மூலமாகச் சந்திப்போம்.

    பதிலளிநீக்கு
  3. இக்கட்டான நேரத்தில் தோழியின் உதவி போற்றுதற்குரியது நல் உள்ளங்கள் நலமே வாழ்க!

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....