வெள்ளி, 10 ஏப்ரல், 2026

அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி அறுபத்தி ஐந்து - விஜி வெங்கடேஷ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட நெய்வேலிக்கு ஒரு பயணம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


வாட்ஸப்பில் வரும் அழகிய வண்ணச் சித்திரங்களுக்கு தகுந்தாற்போல சில வரிகளை விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதி அனுப்ப, அவற்றை தொடர்ந்து இங்கே ஞாயிற்றுக் கிழமைகளில் வெளியிட்டுக் கொண்டிருக்கிறேன். இந்த வாரம் ஞாயிறுக்கு பதிலாக வெள்ளிக்கிழமையில்!  


அந்த வரிசையில் மேலும் சில படங்களும் அதற்கு விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதிய வரிகளும் உங்கள் பார்வைக்கு! எப்படி இருக்கிறது இந்த முயற்சி என்று சொல்லுங்களேன்! படம் பார்த்து உங்களுக்குத் தோன்றும் எண்ணங்களையும் எழுதுங்களேன். ஓவர் டு விஜி வெங்கடேஷ் - வெங்கட் நாகராஜ்.


*******



சட்டுனு (உடம்பைப்) பார்த்தா அண்ணாவா தம்பியான்னே தெரியல.. முகத்தை பார்த்தாத்தான் தெரியுது... ஊஞ்சலைக் கட்டியிருக்கற வேர் strong ஆ இருக்கணுமே....

ஆண்டவா🙏🏻(இப்பவே லேசா பிரிஞ்சு வர மாதிரி இருக்கு..😟) 

க்ளுக் க்ளுக் குனு சிரிக்கிறான, நமக்கு பக்கு பக்குனு இருக்கு.....


ஓம் சண்முகாயை நமஹ🙏🏻🙏🏻🙏🏻


*******



கன்னத்துல சந்தனம், ஆனா வெண்ணை னு நினைக்க மாட்டாங்களா பாக்கறவங்க? photo எடுக்கறதுக்கு முன்னாடி கவனிக்க மாட்டியாமா? எனக்கு உன்னாலயே நிறைய கெட்ட பேரு..... ஹ்ம்ம்..


பரவால்ல, இதுவும் அழகாகத்தான் இருக்கு என் தங்கத்துக்கு..😘😘


(பண்ணின தப்ப மறைக்க கொஞ்சிடு..)


ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா🙏🏻🙏🏻🙏🏻


*******



அச்சோ என் பட்டுக்கு smile பண்ணினாலே அதோட பட்டுக்கன்னம் சிவக்குது! சுத்திப் போடணும்...


ரொம்ப கொஞ்சாத, உன் dressing table ல இருந்த ரோஸ் powder கை பட்டு கீழ கொஞ்சம் கொட்டிருச்சு.. அதை waste பண்ண வேணாம்னுதான்... அது கை பட்டு... கன்னப்பட்டு இல்ல... ப்ப்ப்ப்பா இந்தத் தாய்ப் பாசம் இருக்கே… முடியல...☹️


ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா🙏🏻🙏🏻🙏🏻



*******



உன்னோட அலங்காரமும் உக்கார்ந்திருக்கிற தோரணையும் அருமையா அம்சமா இருக்கு குமரா.. ஆனா அந்தக் கவசம் இன்னும் கொஞ்சம் இடுப்பு வரைக்கும் cover பண்றமாதிரி இருக்க வேண்டாம்? இல்ல, சும்மா தெரிஞ்சுக்கத்தான் கேட்டேன்...


இது summer special  மயில் bro.. உனக்கு எதுக்கு இந்தக் கவல? நீ ஒழுங்கா சஷ்டி கவசம் சண்முகக் கவசம் எல்லாம் படி, போதும்… ok?


ஓம் சண்முகா போற்றி🙏🏻🙏🏻🙏🏻


*******



இந்த ரோஜாப் பூக்களைத் தொடுவதற்கு எதுக்கு குச்சியெல்லாம் கிருஷ்ணா?


உனக்காகக் கொண்டுவந்தேன். என் கை சூடு பட்டு அவை வாடிவிடக் கூடாதல்லவா.. அதான் ராதா… (பறிக்கும்போது காம்பு புட்டுக்கிச்சுன்னு 

எப்படி சொல்றது??? சமாளிப்போம்....)


ஜெய் ஶ்ரீ ராதே கிருஷ்ணா🙏🏻🙏🏻🙏🏻


*******



இந்தா சரஸ்வதி வெண்தாமரை.. உனக்காகவே தேடி பறிச்சுகிட்டு வந்தேன்.


நன்றி நாதா. ஆமா அங்க யாரு இருக்காங்க, சிரிக்கிறீங்க?


உன்னைப் பார்த்துத்தான் சரசு...


இல்ல உங்க மீதி மூன்று முகங்களைக் கேட்டேன்...


(ஹ்ம்ம்...ரொம்ப கஷ்டம்...😕)


ஓம் சரஸ்வத்யை நமஹ🙏🏻🙏🏻🙏🏻


*******



வெண்ணை இல்லன்னு  கைல குலாப்ஜாமூன் குடுத்துட்ட, Photo எடுக்க.. ஜீராவெல்லாம் வழியுது பாரு... அம்மா எனக்கு ஒரு சந்தேகம், சாதா குலாப்ஜாமூனை 

கருக்கினா காலா ஜாமூனா மா?


ரொம்ம்ம்ப முக்கியம் கிருஷ்ணா… சரியா பாரு இங்க… பேசாத.. (ஓவரா இருக்கு பேச்சு🤨).


(அப்படின்னா answer தெரியல… ok ok)


ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா🙏🏻🙏🏻🙏🏻


*******


படங்களும் படங்களுக்கான வரிகளும் உங்களும் பிடித்திருக்கும் என நம்புகிறேன்.  மீண்டும் வேறு ஒரு பதிவு வழி சந்திப்போம்…


நட்புடன்


விஜி வெங்கடேஷ்


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

12 ஏப்ரல் 2026


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....