அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
வாட்ஸப்பில் வரும் அழகிய வண்ணச் சித்திரங்களுக்கு தகுந்தாற்போல சில வரிகளை விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதி அனுப்ப, அவற்றை தொடர்ந்து இங்கே ஞாயிற்றுக் கிழமைகளில் வெளியிட்டுக் கொண்டிருக்கிறேன்.
அந்த வரிசையில் மேலும் சில படங்களும் அதற்கு விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதிய வரிகளும் உங்கள் பார்வைக்கு! எப்படி இருக்கிறது இந்த முயற்சி என்று சொல்லுங்களேன்! படம் பார்த்து உங்களுக்குத் தோன்றும் எண்ணங்களையும் எழுதுங்களேன். ஓவர் டு விஜி வெங்கடேஷ் - வெங்கட் நாகராஜ்.
*******
என் செல்லம் எத்தனை அழகா அந்தச் சொம்புகள் நக ராம இருக்க காலை வெச்சுண்டு தூங்கறது!😘 இல்லக்கா?
ஆமா கைகேயி தூக்கத்துல கூட அந்த வில்லையும்
அம்பராத்தூனியையும்
கீழ வெக்காம தூங்கறது பாரு🥰
ஆமா நீதான் அதோட கொண்டைல குச்சி சொருகினியா?
ஆமாக்கா கொண்டை அவு ராம இருக்க. நாம கொஞ்சம் தள்ளிப் போய்
அதி ராம பேசலாம் கா. குழந்தை
முழிச்சுண்டுடப் போறான் ..
ஜெய் ஶ்ரீ ராம் 🙏🏻🙏🏻🙏🏻
*******
வேலைக் கொஞ்சியது போதும் கொஞ்சம் இந்தப் பக்கம் திரும்பு முருகா...
பொறாமை ஆகாது மயில் bro...
கண்ணுல கிண்ணுல குத்திடப் போகுதுன்னு சொன்னேன்.. எனக்கென்ன...
ஓம் குமாராயை நமஹ🙏🏻🙏🏻🙏🏻
*******
எங்க குடும்ப group photo ல நீயும் இருக்கணும்னு நினைக்கிறது தப்பில்ல மயில் bro. அதுக்காக எங்களுக்கு நடுவில இப்படி பூந்து புறப்படறது அவ்வளவு நல்லால்ல… நாங்களே தூணைப் பிடிச்சுக்கிட்டு சிரிச்சுக்கிட்டே pose குடுக்கறதுக்கு எவ்வளவு சிரமம் எடுத்துக்க வேண்டியிருக்கு தெரியுமா? புரிஞ்சுக்கோ....
ஓம் நமசிவாய🙏🏻🙏🏻🙏🏻
*******
பாதுகை கூட இல்லாம நெருப்பு மேல நடக்கறாரு மகாதேவன். அவருக்கென்ன.. அவரே அக்னி சொரூபம்… நமக்குத்தான் ரோமமெல்லாம் தீஞ்சு போயிடுச்சு… fireproof coat ஒண்ணு வாங்கித் தரச் சொல்லணும்....
எல்லாம் வாங்கலாம். முன்னாடி பாத்து நட பைரவா...
(ஓ கேட்டுடுச்சா... அப்ப சரி...)
ஓம் நமசிவாய🙏🏻🙏🏻🙏🏻
*******
ஏம்மா, என்னைச் சுத்தி சீரியல் bulb 💡 எல்லாம் சுத்திவிட்டதுக்கு (காலைக் கூட விடல😕) ஒரு நல்ல டிரஸ் போட்டு விட்டிருக்கலாம்...
அதில்ல வேலவா நாம பழனி முன்னால உக்காந்திருக்கோம்னு தெரியணுமில்ல அதான்..
(ரொம்ப முக்கியம்...😏)
ஓம் சரவண பவாய நமஹ🙏🏻🙏🏻🙏🏻
*******
அலங்காரம் பூ வெச்சதெல்லாம் போறுமா மா? எதுக்கும் என் கை, ரெண்டு தோள் எல்லாத்துலயும் சொருகி விடு… காதும் (f)ப்ரீயாத்தான் இருக்கு...
ஓ sorry கிருஷ்ணா, மறந்துட்டேன் அங்கல்லாம் வைக்க..
Ammmaaaaa...☹️. நான் ஒரு விளையாட்டு பொம்மையா....
அட அழகா பாடறதே என் செல்லம்🥰😍❤️😘
ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா🙏🏻🙏🏻🙏🏻
*******
பறக்கறதுக்கு வாகனம், நிக்க மேடை, உக்கார ஆசனம், ஹ்ம்ம் நான் கிட்டத்தட்ட table mate மாதிரி ஆயிட்டேன்...😏
என்ன மயில் bro?
உன் பாதம் பட நான் எவ்வளவு புண்ணியம் பண்ணியிருக்கணும்னு சொன்னேன் முருகா..
வேலை மட்டும் கொஞ்சம் கீழ நிக்க வெச்சா தேவல....
ஓம் சரவண பவாய நமஹ🙏🏻🙏🏻🙏🏻
*******
படங்களும் படங்களுக்கான வரிகளும் உங்களும் பிடித்திருக்கும் என நம்புகிறேன். மீண்டும் வேறு ஒரு பதிவு வழி சந்திப்போம்…
நட்புடன்
விஜி வெங்கடேஷ்
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கம்
26 ஏப்ரல் 2026








கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....