அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட குலுக்கி சர்பத் - சமோசா சாட் - Lulu Mall Coimbatore பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
********
சினிமா உலகம்:
சினிமா உலகம் - அதில் எனக்கு பெரிதாக ஈடுபாடு கிடையாது. நான் பார்த்த படங்கள் எண்ணிக்கை மிகமிகக் குறைவாகவே இருக்கும். அதில் நடிக்கும் நடிகர்கள் மீது பெரிதான அபிப்ராயம் கிடையாது. சினிமா உலகம் மிகவும் மோசமான பல விஷயங்களை உள்ளடக்கியது என்ற எண்ணம் எனக்கு உண்டு. என்னதான் பலரை வாழ வைத்தாலும் அதில் தன்னை இழந்தவர்கள் தான் அதிகம். நடிக்க வரும் அனைவரும் star ஆகிவிடுவதில்லை. Director ஆக வேண்டும் என்று வரும் ஒவ்வொருவரும் அந்த எல்லையைத் தொடுவதில்லை. வாழ்க்கையைத் தொலைத்த பலரும் இந்த சின்னா உலகில் உண்டு. பெரிய எதிர்பார்ப்புகள், ஆசைகள் உடன் வீட்டை விட்டு ஓடிவந்து இந்த சினிமா உலகில் சிக்கிச் சீரழிந்து சின்னாபின்னமான கதைகள் நிறையவே உண்டு. இந்த இடம் பலரை வாழ்க்கையில் இடர வைத்திருக்கிறது. ஜெயித்தவர்கள் என்று பார்த்தால் மிக மிகக் குறைவு. அப்படி ஜெயித்தவர்களும் இழந்த விஷயங்கள் குறித்து வெளியில் சொல்ல முடியாது - குறிப்பாக நடிகைகள்.
இந்த சினிமா உலகம் குறித்த நிறைய கதைகள் உண்டு. அப்படி ஒரு கதை தான் சமீபத்தில் கிண்டில் வழி வாசித்த கல்லூரிப் பூக்கள் என்ற தலைப்பிட்ட கதை...... பாலகுமாரன் அவர்களின் எழுத்தில் பல நூல்களை வாசித்து இருந்தாலும் இந்த நூலை இப்பொழுது தான் முதன் முதலாக வாசிக்கிறேன். அப்பப்பா சினிமா உலகில் இருக்கும் போட்டி, பொறாமை, அசிங்கங்கள், வெற்றி பெற நடத்தும் போராட்டங்கள், இழந்த வாழ்க்கை என பலவற்றையும் இந்தக் கதை வழி நம் கண் முன்னே கொண்டு நிறுத்தி இருக்கிறார் பாலகுமாரன். வழக்கமான அவரது பாணியில் நிறைய வாக்கியங்கள். ஒவ்வொன்றும் அட்சர சுத்தமாக சினிமா உலகினை நமக்கு படம் பிடித்துக் காட்டும் விதமாக எழுதி இருக்கிறார். அமேசான் கிண்டில் தளத்தில் படிக்கக் கிடைக்கிறது. முடிந்தால் வாசித்துப் பாருங்கள். மின்னூல் வாசிக்க சுட்டி கீழே.
*******
Beyond Periods:
உதிரப் போக்கு நாட்களில் மனைவி படும் கஷ்டங்களை, அவளின் வேதனையை புரிந்து கொள்ளாத ஒரு இளம் கணவன். இந்த மாதிரி நாட்களில் என் அம்மாவோ, சகோதரியோ வேதனை அடைந்து நான் பார்த்ததில்லை, நீ தான் ஓவராக டிராமா போடுகிறாய் என்று சொல்லிச் சொல்லி நோகடிக்கிறான். முதல் மூன்று நாட்கள் வேதனை அடைந்தாலும் அவனுக்குப் புரிய வைக்கும் முயற்சிகள் பலனளிக்காது போக, நான்காம் நாள் வேறு ஒரு விஷயத்தைச் செய்கிறாள். அதன் பிறகு என்ன நடந்தது என்பதைச் சொல்லும் ஒரு குறும்படத்தினை - மலையாள மொழியில் பார்த்தேன். தலைப்பு Beyond Periods....... YouTube இல் பார்க்கக் கிடைக்கிறது. பார்க்கச் சுட்டி கீழே...... முடிந்தால் பாருங்களேன். நன்றாகவே எடுத்து இருக்கிறார்கள்.
*********
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கம்
21 ஜூலை 2026


இன்றைய பதிவு மொபைல்வழி இடப்பட்டது என்று நினைக்கிறேன். சிக்கனமாக புடவைக்கு வேஷ்டிக்கு பார்டர் போல வந்திருக்கிறது! வேஷ்டியை நீளவாக்கில் மடித்து வைத்தாற்போல!
பதிலளிநீக்குகடந்த 14 - ஆம் தேதியிலிருந்து வெளியிட்ட அனைத்து பதிவுகளும் அலைபேசி வழி தான் ஶ்ரீராம். இன்னும் சில நாட்கள் தொடரலாம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
எனில் ஏன் இன்று ஓடை போல ஒரு ஓரமாக ஒதுங்கி கிடக்கிறது பதிவு?!!
நீக்குஅலைபேசியில் சரியாக வருகிறது. கணினிக்கான பக்கத்தில் பிரச்சனை இருக்கலாம். சரி செய்ய முயற்சிக்கிறேன்.
நீக்குநன்றி ஶ்ரீராம்.
இன்றைய வாசகத்தை நான் இரண்டு நாட்களுக்குமுன் ஒரு நெருங்கிய உறவுக்கு நினைவுபடுத்தினேன்!!!
பதிலளிநீக்குநல்லதொரு வாசகம் இது. ஆனால் கடைபிடிக்க முடியாமல் நம்மில் பலரும் சிக்கிக் கொண்டுதான் உழல்கிறோம் என்பதும் நிதர்சனம் தானே ஶ்ரீராம்.
நீக்குகல்லூரிப்பூக்கள் படித்ததில்லை. படிக்கவேண்டும். எப்போது என்றுதான் தெரியவில்லை!
பதிலளிநீக்குமுடிந்தபோது வாசித்துப் பாருங்கள் ஶ்ரீராம் - சினிமா உலகம் குறித்த ஒரு புரிதல் உங்களுக்குக் கிடைக்கும்.
நீக்குகுறும்படம் 21 நிமிடங்கள் போல.
பதிலளிநீக்குதிறந்து வைத்து நிறுத்தி இருக்கிறேன். பின்னர் பார்க்க வேண்டும்.
ஆம். சற்று நேரம் ஆகலாம். முடிந்த போது பாருங்கள். உங்கள் கருத்துக்களையும் சொல்லுங்கள் ஶ்ரீராம்.
நீக்குகுறும்படம் பார்த்து ரசித்தேன். ரசனையாயிருந்தது. தனக்கு வந்தால்தான் தெரியும் தலைவலியும் காய்ச்சலும்!
பதிலளிநீக்குதனக்கு வந்தால்தான் ...... சரியாகச் சொன்னீர்கள்..... தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஶ்ரீராம்.
நீக்குபதிவு அருமை.
பதிலளிநீக்குகுறும்படம் நன்றாக இருக்கிறது. அந்த பெண்ணின் மாமியார் நல்ல மாமியார் மகனுக்கு அறிவுரை கூறி நல்வழி படுத்தி விட்டார். பெண்ணின் கஷ்டங்களை புரிந்து அந்த நேரத்தில் ஆதரவாக இருக்கவேண்டிய அவசியத்தை உணர்த்திவிட்டார்.
பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.
நீக்குநல்ல மாமியார்/தாயார் தான். சரியான விதத்தில் எடுத்துச் சொல்லி இருப்பது சிறப்பு.
பாலகுமாரன் நாவலைப் படித்திருக்கிறேன்..சுருக்கமான ஆயினும் மிகச் சரியான அறிமுகப் பகிர்வு..வாழ்த்துக்களுடன்..
பதிலளிநீக்குவாசகம் நல்ல வாசகம் கடைபிடிக்க முடியாது. எத்தனையோ ஆசைகள் வசதி வாய்ப்பு உடல்நிலை அதற்கான சூழல் எல்லாம் இருக்கணும்.
பதிலளிநீக்கு