அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட ஆகாயம் காணாத நட்சத்திரம் - இந்திரா சௌந்தர்ராஜன் - வாசிப்பனுபவம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
********
வாட்ஸப்பில் வரும் அழகிய வண்ணச் சித்திரங்களுக்கு தகுந்தாற்போல சில வரிகளை விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதி அனுப்ப, அவற்றை தொடர்ந்து இங்கே ஞாயிற்றுக் கிழமைகளில் வெளியிட்டுக் கொண்டிருக்கிறேன்.
அந்த வரிசையில் மேலும் சில படங்களும் அதற்கு விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதிய வரிகளும் உங்கள் பார்வைக்கு! எப்படி இருக்கிறது இந்த முயற்சி என்று சொல்லுங்களேன்! படம் பார்த்து உங்களுக்குத் தோன்றும் எண்ணங்களையும் எழுதுங்களேன். ஓவர் டு விஜி வெங்கடேஷ் - வெங்கட் நாகராஜ்.
********
நானும் பச்ச நீங்களும் பச்ச.. எனக்கும் வாய் சிகப்பு, உங்களுக்கும்.....
கிளி sister கொஞ்சம் கீழ இறங்கறியா காது கிட்ட வந்து கீச்சு மூச்சுனு.... கூசுது.....
இல்ல, என்னையும் உங்களையும் compare பண்ணி உங்களுக்கு நிறைய mark போடுவாங்களேன்னுதான்.... ஆமா உங்களுக்குக் குளுரல???
ஏய் அதிகமா பேசற... உன்ன.....
ஹி ஹி ச்சும்மா.... ரொம்ப அழகா இருக்கீங்க தேவி...
ஓம் தேவ்யை நமஹ🙏🏻🙏🏻🙏🏻
********
குருவி அண்ணா, நான் blush பண்ணினா சத்தியமா என்
கன்னம் சிவக்காதுன்னு இந்த அம்மாக்குத் தெரியாதா? எதுக்கு தன் rouge அ எல்லாம் வேஸ்ட் பண்றா ???? அதையும் சரியா போடல.....😕
உன் ரெண்டு கன்னத்துலயும் குழி விழுது இல்ல? அதுக்கு திருஷ்டி விழாம இருக்கத்தான்.... விடு..
அந்த flute கீழ விழாம balance பண்ற பாரு
Super கிருஷ்ணா 👏🏻(belt ல சொருகிண்டிருக்கறது தெரியாத மாதிரியே maintain பண்ணலாம்...)
ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா 🙏🏻🙏🏻🙏🏻
********
ரெண்டு கையையும் பானைக்குள்ள போட்டு நொளப்பி..... கீழ இத்தன எரச்சு... கடவுளே.. இந்தப் பிள்ளையோட நான் என்ன செய்வேன்...
ஏம்மா அலுத்துக்கற? நீதான Photo எடுக்கும்போது natural ஆ இருக்கணும்ப? அப்புறம் என் ஒரு கைல கொஞ்சமாத்தான் எடுக்க வருது... அதான்.... என் கை குஞ்சுக் கைதான.... நீதான அப்படி கொஞ்சுவ.....
ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா 🙏🏻🙏🏻🙏🏻
********
அதெல்லாம் சரி, அதுக்காக வெண்ணைக்கு பதிலா பாப்கார்ன் offer பண்றது கொஞ்சம்கூட சரியில்ல... நான் diet ல இருக்கேன்னு சொன்னேனா என்ன?
ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா🙏🏻🙏🏻🙏🏻
*********
எனக்கு போடறதுக்கு பதிலா என் லிங்க சொரூபத்துக்கு மாலை போட்டுட்ட சரி, ஆனா நீ என்ன மாலையா போட்டுக்காம ஏதோ கிரீடத்த சுத்தி ரெண்டு பக்கமும் தொங்க விட்டிருக்க தேவி?
அதுவா, நகைகள் மாலைல மறைஞ்சிடக் கூடாதுன்னு தான் நாதா...
சரி சரி, அது உன் இஷ்டம், ஆனா உன் brooch ஐ இனிமே எனக்கு குத்திவிடாத தேவி..... I don't like it....
அச்சோ...🥰.என்ன பண்ணிவிட்டாலும் என் ஆத்துக்காரர் அழகுதான்❤️😍..
கொஞ்சினது போதும்✋🏻... ஆசையா இருந்தா வீட்டுல இதையெல்லாம் பண்ணி அழகு பாத்துக்கோ...ok?(குழந்தைகள படுத்தறது போறாதுன்னு என்ன வேற...... ஹ்ம்ம்😕)
ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻
(Find out the Brooch yourself 😊)
********
விளையாடாத கிருஷ்ணா... பின்னலை விடு...
ஏன் ராதா அது என் கையோட வந்திடும்னு பயமா...😜
சே சே வலிக்குது, அப்புறம் வெண்ணெய்ல படுது பாரு.... எதிலும் attachments (பற்று)
வைக்கக் கூடாதுன்னு சொல்லுவ இல்ல? என் கூந்தல்லயும் அது கிடையாது.... தெரிஞ்சுக்கோ....😏
ஜெய் ஶ்ரீ ராதே கிருஷ்ணா🙏🏻🙏🏻🙏🏻
*******
படங்களும் படங்களுக்கான வரிகளும் உங்களும் பிடித்திருக்கும் என நம்புகிறேன். மீண்டும் வேறு ஒரு பதிவு வழி சந்திப்போம்…
நட்புடன்
விஜி வெங்கடேஷ்
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கம்
2 ஆகஸ்ட் 2026







அழகான படங்கள். புன்னகைக்க வைக்கும் வரிகள். ரசி(ரி)த்தேன்.
பதிலளிநீக்கு