எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Wednesday, October 17, 2012

வானர வைபவம் – கோபுலு ஓவியங்கள்குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்...என்று ஒரு பாடல் கேட்டு இருக்கீங்களா! சில சமயங்களில் அந்தப் பாட்டில் சொன்னது உண்மை தானோ என்று நம்பும்படியாக நாம் நடந்து கொள்கிறோமே! சரி இன்னிக்கு என்ன குரங்கு பற்றிய பதிவு...  ஒண்ணுமில்ல...  நம்ம கோபுலு இருக்காரே அவர் ஆனந்த விகடனில் வரைந்த படங்கள் எத்தனை எத்தனை.  இப்படி ஒரு தீபாவளி மலரில் வந்திருந்த படங்களும் கட்டுரையும் இந்த வார பொக்கிஷமாக உங்களுக்குத் தந்திருக்கிறேன்.  கட்டுரையை எழுதியதும் கோபுலு சார் தான் என நினைக்கிறேன். அத்தனை ஹாஸ்யம் – அவரது நகைச்சுவையான படங்களைப் போலவே!

ஆங்கிலத்தில் சொல்வது போல The floor is all Gopulu Sir’s!வானரமும் நாமும் அப்பனும் பிள்ளையுமா? – அத்தான் அம்மாஞ்சிதானா? வால் குறுகிக் கூன் நிமிர்ந்து வானரன் நரனாகி விட்டதாக ஒப்புக்கொள்கிறோம். இதில் இருவகை நஷ்டம் நமக்கு – கூனும் போச்சு, வாலும் போச்சே! இந்த இரண்டு நஷ்டங்களுக்கு எதிராக ஒரு லாபமாவது கணக்கில் காட்ட வேணுமே என்று, வால் குறுகிக் கூன் நிமிர்ந்து மூளை பெருகிநரனாகி விட்டோம் என்று நமது வைபவம் பேசுகிறோம். ஆனால், ‘வானரன் = வால் + நரன்என்று தமிழிலக்கணுமுங் காட்டி, நரன் மூடத்தனமாக இழந்து விட்ட அந்த மூல அங்கத்தின் அருமை பெருமைகளை வானரம் தன்னுடைய ‘குர் குர்பாஷையில் வெளியிட்டு நம்மை நோக்கிச் சிரிக்கவில்லை என்றா நினைக்கிறீர்கள்? அதே சமயம் அதே பாஷையில் நம்மையே அது ‘அட அம்மாஞ்சி!என்று அழைப்பது போலவும் தோன்றுகிறது.

இந்த அத்தான்மார்களில் நம்மைப் போல் வாலில்லாத மனிதக் குரங்குகளும் உண்டு. ஹிந்துஸ்தானி, பாக்கிஸ்தானி, ஐரோப்பியன், அமெரிக்கன் என்ற பிரிவுகளைக் காட்டிலும் நிஜமான ஜாதிகளான உராங் ஊடாங், சிம்பன்ஸி, கொரில்லா முதலியவை உண்டு. இந்த வானரங்கள் மகாநாடு கூடிப் பேசினால், ‘மனிதன் நம்முடைய அசல் பரம்பரையிலிருந்து தோன்றியிருக்க முடியாது. எந்தக் குரங்கு விவாகரத்து வழக்காடுகிறது? தாயே தெரியாமல் போகும்படி சேயை எந்தக் குரங்கு பிறரிடம் வளர்க்க விட்டிருக்கிறது? வெட்கம், வெட்கம்!என்றெல்லாம் ஒரு வானர வாசாலகன் குர் குர் பாஷையில் பேசியிருக்கக் கூடுமல்லவா?

நமது நாகரிகம் குறித்துப் பெருமை அடித்துக் கொள்கிறோம். நம்மைப் போல் வானரமும் விரும்பினால் சிரம்மில்லாமலே நாகரிகம் அடையக்கூடும். மனிதனைப் போல் ‘பிரஷ்கொண்டு ‘மக்ளீன்செய்து கொள்ளத் தெரியாதா ஸ்ரீமான் சிம்பன்ஸி அவர்களுக்கு? தட்டிலிருந்து கரண்டியா லெடுத்துச் சாப்பிடத் தெரியாதா திருவாளர் கொரில்லாவுக்கு? தையல் தைக்கவும் சிறிது சிரமத்துடன் கற்றுக்கொள்ள முடிகிறதே! ‘கிச்சு கிச்சுமூட்டி இன்பமடைகிறது; குட்டியைக் குளிப்பாட்டவும் தெரிந்து கொள்கிறது; நவநாகரிகப் புருஷன் போல் அச்சமில்லாமல் ‘ஸிகார்புகைக்கவும் பழகிக் கொள்கிறதே! நமது சங்கீதக் கலைஞர் போல் ஜாலராக் கொட்டுகிறது! மனிதனைப் போல் நிமிர்ந்து – ஏன், மனிதனைக் காட்டிலும் நிமிர்ந்து நின்று – கர்வப்படவும் தெரியுமே!கூனல் கிழவனாகிக் குலை குலைந்து இருமிக் கொண்டிருக்கும் ஒரு மனிதனுடய முகஜாடையில் ஒரு கவிராயர் பழைய வானர உறவைக் கண்டு பிடித்து விடுகிறார்.

‘அறவழிந்திடக் குடித்திடும்சேட்டை கண்டு வேறொரு கவிராயர் அந்த ‘அரக்குச் சேட்டைக்கும் (அரக்குச் சாராயம் குடித்த சேட்டைக்கும்) ‘குரங்குச் சேட்டைக்கும் விசேஷ உறவு காண்கிறார். ஏன், கவிராயருக்கும் வானரத்திற்கும் உள்ள உறவையே இன்னொரு கவிராயர் ஒப்புக் கொண்டிருக்கிறார்!

இத்தகைய நெருங்கிய உறவை ஒரு வானரம் தானும் தெளிவாகத் தெரிந்து கொண்டது போல் ஒரு மனிதனின் முகத்தை உற்று நோக்கி, அன்று பிரிந்த பந்து அல்லவா?என்று அப்படியே அணைத்துக் கொண்டதாம் அந்தச் சகோதரனை. ‘உறவு பிடித்தாலும் விடோம்!என்று சில மனிதர்கள் பெருமை பாராட்டிக் கொண்டாலும் கூட, பிடித்த பிடி விடாத வானர குலம் போல் எந்த உறவை, எந்த நட்பை, எந்தச் சகோதர தர்மத்தை எப்படித்தான் நாம் பிடித்துக் கொண்டிருக்கிறோம்? வானரம் அணைத்துக் கொண்ட அந்த மனிதனின் முகமும் பீதியால் உறவை மேலும் வற்புறுத்த, வானரம் விடாப் பிடியாய்ப் பிடித்துக் கொண்டதாம். பிரித்துவிட்ட பாடு பெரும்பாடுதான்!

அணைத்த கைக்கு அடிக்கவும் கிள்ளவும் தெரியுமே! ஒரு பெரிய மனிதர் ஒரு குரங்குக் குட்டியைப் பழக்க விரும்பிப் பிடித்துக் கொண்டார். தாய்க் குரங்கு அம்மனிதர் எதிர்பாராத நிலையில் அவரைத் தாக்கித் தன் குழந்தையை விடுவித்துக் கொண்டதோடு, அவருக்கொரு பாடம் கற்பிக்க வேண்டும் என்றும் தீர்மானித்தது. ‘என்ன பாடம் கற்பிக்கலாம்?என்பதையும் அவரிடத்திலிருந்தே கற்றுக்கொண்டது. அப்போதுதான் அந்தப் பெரியார் தம் மகன் காதைத் திருகிக் கொண்டிருந்தார்.  அவனையும் தன்னைப் போல் கல்வியில் பழக்கத்தான் – பிள்ளை சரியாகப் படிக்கவில்லையே என்று தான். ‘அதே தண்டனையை நாமும் விதித்தால் போதும்என்று நினைத்த்து போல் வானரப் பெரியாரும் அப்பெரியாரின் காதைப் பற்றித் திருகிவிட்டார்!மனிதர்களின் காதல் நாடகம் வானர உலகிலும் நடைபெறத்தான் செய்கிறது. இந்த நாடகமொன்றை,

           வானரங்கள் கனிகொடுத்து
                மந்தியொடு கொஞ்சும்;
           மந்திசிந்து கனிகளுக்கு
                வான்கவிகள் கெஞ்சும்!

-          என்று குற்றாலக் குறவஞ்சி ஆசிரியர் வருணித்திருக்கிறார்.

இவ்வளவு ஒற்றுமை கண்டும் மனிதன் தாயாதிக் காய்ச்சலுடன் நடந்து கொள்கிறான். பலாப் பழத்தைப் பறித்ததென்று உழவன் கீழே கிடந்த ஒரு சங்கை எடுத்துக் குரங்கை நோக்கி எறிய, குரங்கும் தற்காப்புக்காக இளநீரைப் பறித்து வீசியதென்று ஒரு கவிஞர் நாட்டு வளம் பாடியிருக்கிறார். பறித்த பலாப்பழங்களைத் தான் காதலனும் காதலியுமான குரங்குகள் எப்படி ரசித்துச் சாப்பிடுகின்றன!இந்த வானரங்கள் புலவர்களின் கற்பனையைப் பிரமாதமாகத் தூண்டியிருக்கின்றன. பாரதியாரின் குயில் பாட்டிலே வானரருடன் மனிதர் போட்டி போடுவது எவ்வளவு ஹாஸ்யமாக வருணிக்கப்படுகிறது! மனிதரோடு போட்டி போட வல்ல குரங்குகள் மனிதருடைய சுகபோகச் செயல்களிலும் போட்டியிடக் கூடும் என்பதற்கு அவை ஊஞ்சலாடுவதும் ஒரு சாட்சி. மரக்கிளைகளில் தலைகீழாக ஆடுவது மட்டுமா? ‘அனுமாரின் குலவிளக்கே! ஆடிரூஞ்சல்என்று ஒரு குரங்கு ஆட்ட, வேறொரு குரங்கு ஆடுமானால், அதுதான் அழகாயிராதா?

இத்தகைய வானரங்கள் சுதந்திர பாரத மாதாவை வினயமாய்ப் போற்ற, அன்னை இந்தக் குரங்குகளையும் ஆசீர்வதிப்பதாய்க் கற்பனை செய்து கொண்டு, வானர சகோதரர்களிடம் விடைபெற்றுக் கொள்வோம்!

நன்றி - ஆனந்த விகடன்.
தீபாவளி மலர் 1949.

என்ன நண்பர்களே, இந்த வானரம் பற்றிய பகிர்வினை நீங்களெல்லாம் நிச்சயம் ரசித்திருப்பீர்கள் என இந்த வானரம் நினைக்கிறது! மீண்டும் வேறொரு பொக்கிஷப் பகிர்வுடன் பிறிதொரு நாள் சந்திக்கிறேன். அது வரை...

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

  

66 comments:

 1. அருமை!!!!

  நேத்துதான் புது டிவி சீரியல் எங்கூர்லே ஆரம்பிச்சது.

  Wildest India என்று வாரம் ஒரு நாள். ஒரு மணி நேரம்.

  குரங்கன்மாரைத்தான் முதலில் காமிச்சாங்க.

  ReplyDelete
  Replies
  1. தங்களது உடனடி வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   Delete
 2. வானர வாசாலகன் -

  ரொம்ப ரச்னையான பகிர்வுக்கு பொறுப்பேற்றுக்கொண்டாரே !

  பாராட்டுக்கள் !

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 3. என்ன அவ்வளவு அவசரமா பதிவைப் படிக்கிறே !! என்ன விசேஷம் !!

  இல்லீங்க.. ! உங்க ஃபோட்டோ இருக்கா அப்படின்னு பாத்துகிட்டே இருந்தேன்...

  இருக்குதா ?

  மறந்து போயிருப்பாரு. !! பார்ட் 2 போடும்போது போடுவாரு. பொறுத்து இருங்க.


  மீனாட்சி பாட்டி.

  ReplyDelete
  Replies
  1. ஆஹா... நல்லாத்தான் தேடினீங்க போங்க மீனாட்சி பாட்டி. ஆனா இதுல இருந்தாதான் உண்டு. இரண்டாம் பார்ட் இல்லை!

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

   Delete
 4. அருமையான கட்டுரை.சிந்தனையை தூண்டும் விஷயங்களை ஹாயிஸயமாக சொல்லியிருக்கிறார்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரமா ரவி.

   Delete
 5. சூப்பர்!

  // எந்தக் குரங்கு விவாகரத்து வழக்காடுகிறது? தாயே தெரியாமல் போகும்படி சேயை எந்தக் குரங்கு பிறரிடம் வளர்க்க விட்டிருக்கிறது? வெட்கம், வெட்கம்!’ என்றெல்லாம் ஒரு வானர வாசாலகன் குர் குர் பாஷையில் பேசியிருக்கக் கூடுமல்லவா?//

  நிஜமாகவே இது ஒரு பொக்கிஷம் தான்!

  படங்கள் திரு கோபுலுவினுடையது. எழுதியது யார்?

  ஒரு மின்னிதழுக்காக 'நடாஷா' என்ற மனிதக் குரங்கு பற்றி எழுதி இருந்தேன். இணைப்பு இதோ:http://wp.me/p244Wx-60


  ஒரு சிறிய வேண்டுகோள்:

  என்னுடைய தளத்தில் உங்களுடைய இந்தப் பதிவுக்கு இணைப்பு கொடுக்கலாமா?

  ஏதோ ஒரு புழமொழி நினைவுக்கு வருகிறது, இல்லையா?

  அன்புடன்,
  ரஞ்ஜனி

  ReplyDelete
  Replies
  1. //படங்கள் திரு கோபுலுவினுடையது. எழுதியது யார்?//

   எழுதியதும் அவர் தான் என நினைக்கிறேன் - ஏனெனில் புத்தகத்தில் பெயர் எதுவும் போடவில்லை. ஓவியங்களில் மட்டும் கோபுலு என்று எழுதியிருந்தார்....

   உங்கள் பதிவினையும் படிக்கிறேன்.

   //என்னுடைய தளத்தில் உங்களுடைய இந்தப் பதிவுக்கு இணைப்பு கொடுக்கலாமா?//

   தாரளமாக! :))

   தங்களது வருகைக்கும் இனிய கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.

   Delete
 6. படங்களும் பதிவும்
  மிக மிக அருமை
  ரசித்து மகிழ்ந்தோம்
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 7. Replies
  1. தமிழ் மணம் இரண்டாம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 8. வித்தியாசமான அதே நேரத்தில் சுவையான சிரிப்பான சிறப்பான பகிர்வு சார், கோபுலுவின் எழுத்துக்கள் மிக அருமை அவர் ஓவியங்களைப் போலவே

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சீனு.

   Delete
 9. மனிதர்களின் காதல் நாடகம் வானர உலகிலும் நடைபெறத்தான் செய்கிறது தலைப்பும் ஓவியங்களும் அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சசிகலா.

   Delete
 10. கோபுலுவின் கட்டுரை ப்ரமிக்க வைக்கிறது.உண்மையில் ஜீனியஸ்தான்
  தேடிக் கண்டு பகிர்ந்ததற்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   Delete
 11. ஸ்ரீமான் சிம்பன்ஸி ... வானரப் பெரியாரும்

  --- ரசித்து படித்தேன்... இந்த கட்டுரையையும், கோபுலுவின் ஓவியத்தையும் பதிந்தமைக்கு நன்றி...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி ஸ்வர்ணரேக்கா.

   Delete
 12. ஆஹா! படிக்கும்போதே எஸ்.வி.சேகர் நாடகம் போல வால் முளைத்த உணர்வு.

  பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. சீனு, அந்த எஸ்.வி.சேகர் நாடகமெல்லாம் டேப்-ல ரெக்கார்ட் பண்ணி வைத்திருந்தோமே அதெல்லாம் இருக்கா! வால் முளைத்த உணர்வு! :)))

   உனது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சீனு [வேங்கட ஸ்ரீனிவாசன்]

   Delete
  2. //டேப்-ல ரெக்கார்ட் பண்ணி வைத்திருந்தோமே அதெல்லாம் இருக்கா! //
   டேப்பெல்லாம் இருக்கு. ஆனால், ப்ளேயர் தான் உபயோகிக்கப்படாமல் செயலிழந்துவிட்டது. :-)

   Delete
  3. ஓ... என்னிடம் டேப் கூட இல்லை... :)

   சிடியில் கிடைக்கிறதா பார்க்க வேண்டும்! கேட்டு ரொம்ப நாளாச்சு!

   நன்றிடா சீனு [வேங்கட ஸ்ரீனிவாசன்]

   Delete
 13. நகைச்சுவையும் கொஞ்சம் இலக்கியமும் கலந்து வானரக் கட்டுரை மனதைப் பிடித்துக் கொண்டது. கோபுலுவின் தூரிகையை என் சொல்ல...? வழக்கம் போல மிக அருமை. நல்ல பொக்கிஷம் தந்தமைக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி கணேஷ்.

   Delete
 14. நகைச்சுவை ததும்பும் அருமையான பொக்கிஷம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்.

   Delete
 15. சுவாரஸ்யமான பகிர்வு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 16. நல்ல பகிர்வு சார்...

  பதிவாகிப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி... tm11

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும், தமிழ்மணம் பதினோறாம் வாக்கிற்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 17. வானரம் என்ற பெயரைப் பார்த்ததுமே தாவித் தாவி ஓடி வந்து விட்டேன் வெங்கட்ஜீ! :-)

  ReplyDelete
  Replies
  1. தாவி தாவி ஓடி வந்திங்களா... அதான் இங்கே கணினி கொஞ்சம் ஆடிச்சு!

   வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேட்டை ஜி!

   Delete
 18. "வானர வைபவம் – கோபுலு ஓவியங்கள்" - மிகவும் அருமயான பகிர்வு. உங்களுக்கும் நன்றி கோபுலுவுக்கும் நன்றி.
  வாழ்த்துக்கள்.
  விஜய்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி விஜயராகவன் ஜி!

   Delete
 19. Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

   Delete
 20. நல்ல நகைச்சுவைப் பகிர்வு.
  கோபுலுவின் ஓவியங்கள் எனக்குப் பிடிக்கும். வாய்விட்டு சிரிக்கலாம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   Delete
 21. சுவையான பகிர்வு

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி குட்டன்.

   Delete
 22. நீண்ட நாள் கழித்து உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி...
  படங்களும் பதிவும் அருமை...ரசித்தேன் வெங்கட்ஜி...


  ReplyDelete
  Replies
  1. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தங்களது வருகை.... மிக்க மகிழ்ச்சி ரெவெரி.

   Delete
 23. கோபுலு படங்களுக்காகவே அந்த நாட்களில் தொடர்கள்/படைப்புகள் வாசிக்கப்பட்டன

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!

   Delete
 24. // எந்தக் குரங்கு விவாகரத்து வழக்காடுகிறது? தாயே தெரியாமல் போகும்படி சேயை எந்தக் குரங்கு பிறரிடம் வளர்க்க விட்டிருக்கிறது? வெட்கம், வெட்கம்!’ என்றெல்லாம் ஒரு வானர வாசாலகன் குர் குர் பாஷையில் பேசியிருக்கக் கூடுமல்லவா?//
  அட்டகாசம்! பொக்கிஷங்கள் தொடரட்டும்! பகிர்இற்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

   Delete
 25. வானரங்களின் படமும் அதற்கேற்ற வருணனைகளும் அசத்தல். பழம்பெரும் பகிர்வு என்றாலும் நெஞ்சை கொள்ளை கொண்டது. கவலை மறந்து சிரித்தேன். ஆனந்த விகடனின் தரம் இன்று குறைந்துதான் போய்விட்டது. பகிர்வுக்கு நன்றி சார்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி துரை டேனியல். ஆ.வி. தரம் பற்றி நான் சொல்வதிற்கில்லை. தில்லி வந்த பிறகு, அதுவும் சமீப காலத்தில் ஆ.வி. படிக்க முடிவதில்லை - வாங்குவதற்கு வெகு தூரம் செல்ல வேண்டியிருப்பதால்....

   Delete
 26. எந்த அபிமான ஓவியர் கோபுலு பங்கு பெறும் இந்த வாரப் பொக்கிஷம் மிகவும் அருமை வெங்கட். பாலஹனுமானுக்கு இந்தப் பதிவு பிடிப்பது இயற்கைதானே என்று நீங்கள் நினைப்பது எனக்குத் தெரிந்து விட்டது :-)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் இப்பதிவினை ரசித்து கருத்துரைத்தமைக்கும் மிக்க நன்றி பாலஹனுமான் ஜி! உங்களுக்கு நிச்சயம் பிடிக்குமென நினைத்தேன்...

   Delete
 27. எங்கே பிடித்தீர்கள்? பொக்கிஷம் தான்.
  திரிகூட ராசப்பரின் கவிதை நிறைய நினைவுகளைக் கிளறியது. வானரத்துக்கும் மந்திக்கும் வித்தியாசம் சொல்லித் தமிழாசிரியர் சிலாகிப்பார்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அப்பாதுரை...

   இங்கே நூலகத்தில் பிடித்தேன். இன்னும் பல பொக்கிஷங்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றாய் பகிர்கிறேன் - வாரத்திற்கொன்றாய்!

   Delete
 28. http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_18.html


  பொக்கிஷப் பகிர்வு வலைச்சரத்தில் பொதிந்திருக்கிறது... வாழ்த்துகள் !!பாராட்டுக்கள்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் இனிய தகவலுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 29. கோபுலுவே சிரிப்புக்கும் சிந்தனைக்கும் அடையாளம். அதில் 1949 வரை போய்த் தேடிப் பிடித்தீர்களா. அருமை வெங்கட்.
  மிக அருமை. அவரது எழுத்துக்கும் சித்திரங்களுக்கும் வணக்கங்கள். நீங்கள் பகிர்ந்ததிற்கு நல்ல பெரிய பூங்கொத்து.

  ReplyDelete
 30. பூங்கொத்தின் வாசம்.... மிக்க நன்றி வல்லிம்மா...

  எல்லாப் புகழும் கோபுலு அவர்களுக்கே!

  ReplyDelete
 31. பழைய நினைவுகளை தந்து மகிழ்வித்தது உங்கள் படப்பும் படங்களும் நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கோவை மு சரளா.

   Delete
 32. கோபுலு எனக்கு மிகவும் பிடித்தமான ஓவியர்.
  நல்ல பகிர்வு. சிரித்தேன், ரஸித்தேன்.
  பாராட்டுக்கள், வெங்கட்ஜி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி வை. கோ. ஜி!

   Delete
 33. நல்ல பதிவு..பகிர்வு அண்ணா! தீபாவளி வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி விஜயன்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....