எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Tuesday, May 31, 2016

பாசத் துணைவன்! - படமும் கவிதையும்

[படம்-2 கவிதை-4]

படமும் கவிதையும் வரிசையில் இரண்டாம் புகைப்படத்திற்கு வந்த நான்காம் கவிதையோடு உங்களை இன்று சந்திப்பதில் மகிழ்ச்சி. கவிதையை எழுதி அனுப்பியவர் வலைப்பதிவாளர் பி. தமிழ்முகில் அவர்கள்.  படம் பற்றிய குறிப்பும் கவிதையும் இதோ....

புகைப்படம்-2:எடுக்கப்பட்ட இடம்:  சென்னை ECR சாலையில் முட்டுக்காடு அருகே இருக்கும் தக்‌ஷிணசித்ரா. கிராமங்களிலேயே மாட்டு வண்டிகள் இல்லாத ஒரு நிலை இன்று. அங்கே சுற்றுலா வரும் பள்ளிக் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் விரும்பினால் காசு கொடுத்து மாட்டு வண்டி பயணம் மேற்கொள்ளலாம்.  அப்படி சில பள்ளிச் சிறுவர்கள் மாட்டு வண்டி பயணம் சென்றபோது எடுத்த புகைப்படம் இது.  பி. தமிழ்முகில் அவர்கள் எழுதித் தந்த கவிதை இதோ.....

கவிதை-4:

பாசத் துணைவன் !

ஏர்க் கலப்பையில் காளையை பூட்டி
விவசாயம் பார்த்தது
ஒரு காலம் !

உறவோடு கூடி கொண்டாட
கட்டுச் சோற்றுடன் வண்டி கட்டி
சென்றது - ஒரு காலம் !

வீரத்தின் அடையாளமாய்
பாசத் துணைவர்களை ஏர் தழுவியது
ஒரு காலம் !

சல் சல் சலங்கை கட்டி- காளை
பூட்டி வண்டி கட்டி வியாபாரம் பார்த்தது
ஒரு காலம் !

மனித வாழ்வோடு இயைந்து
வாழ்வின் ஆதாரமாய்  இருந்த
குடும்பத்தின் அங்கமாய் காணப்பட்ட
காளையும் காளை பூட்டிய வண்டிகளும்
அருங்காட்சியகத்தில் காணும் நிலை
கண்முன் அரங்கேறும் வேளையில் -

மனித  இனம் தனை
அருங்காட்சியகத்தில் காணும் நாள்
வெகுதொலைவில் இல்லை !

     பி. தமிழ் முகில்

என்ன நண்பர்களே, படமும் கவிதையும் வரிசையில் இரண்டாம் படமும் பி. தமிழ் முகில்  அவர்கள் எழுதிய கவிதையையும் ரசித்தீர்களா? படத்திற்கு கவிதை எழுத விருப்பம் இருந்தால் மின்னஞ்சல் ( venkatnagaraj@gmail.com ) மூலம்  எனக்கு தெரிவியுங்கள். நான் எடுத்த புகைப்படம் ஒன்றினை அனுப்பி வைக்கிறேன்.

கவிதை எழுதுபவர்களுக்கு ஊக்கம் தரும் முயற்சி மட்டுமே. வேறு எந்த நோக்கமும் இல்லை.  சில கவிதைகள் சேர்ந்தபிறகு அவற்றைத் தொகுத்து மின்னூலாகவும் வெளியிடலாம்.  அனைவருடைய படைப்புகளையும் படிப்பவர்களிடம் கொண்டு சேர்க்க இது ஒரு முயற்சி....  கவிதை மற்றும் புகைப்படம் பற்றிய எண்ணங்களை பின்னூக்கத்தில் சொல்லுங்கள்.....

மீண்டும் வேறொரு பதிவில் சந்திக்கும் வரை....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.26 comments:

 1. Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
  2. கவிதைகள் வந்து குவிந்தவண்ணம் உள்ளன. பாராட்டுகள்.

   Delete
  3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 2. வித்தியாசமான கோணம்....அருமை

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செல்வக்குமார்....

   Delete
 3. கவிதை எழுத வாய்ப்பளித்து, அதை வெளியிட்டு ஊக்கமளிக்கும் தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் சகோதரரே.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் முகில்.....

   Delete
 4. மிகவும் ரசித்தோம் அதுவும் இறுதி வரிகள் நச்....தமிழ்முகிலிற்கு வாழ்த்துகள்.

  வெங்கட்ஜி தங்களுக்கும் வாழ்த்துகள். கவிதைகள் நிறைய வருகின்றனவே...நல்ல முயற்சி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 5. உண்மை! குடும்ப அங்கத்தினராய் இருந்த பசுக்களையும் காளைகளையும் புறக்கணித்து விட்டோம்! இழப்பு நமக்குத்தான்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.....

   Delete
 6. வீரத்தின் அடையாளமாய்

  பாசத் துணைவர்களை ஏர் தழுவியது

  ஒரு காலம் !

  அழகான உண்மை வரிகள்.இரசித்தேன் தமிழ் முகில் ஐயாவுக்கு வாழ்த்துகள்.தங்களுக்கு பாராட்டுடன் எனது நன்றிகள் ஐயா.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வைசாலி செல்வம்.

   Delete
 7. அற்புதமான காலப்பெட்டகமாய் ஒரு படமும்.. ஏங்கவைக்கும் காலத்தினை மிக அழகாகப் பதிவு செய்த வரிகளும்.. பிரமாதம். பாராட்டுகள் இருவருக்கும்.

  ஏர் தழுவுதல் - ஏறு தழுவுதல் என்று நினைக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி.

   Delete
 8. அருமையாக எழுதியுள்ளார். பாராட்டுக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 9. கவிதை அருமை ஜி திரு. பி. தமிழ்முகில் அவர்களுக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 10. தமிழ்முகில் கவிதை அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   Delete
 11. கவிதை அருமை வாழ்த்துக்கள் தமிழ்முகிலுக்கு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனிமரம் நேசன்.

   Delete
 12. கவிதையை இரசித்தேன்! திரு பி.தமிழ் முகில் அவர்களுக்கு வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....