எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Wednesday, June 1, 2016

இடம்பிடி! தடம் பதி! - படமும் கவிதையும்

[படம்-3 கவிதை-1]

படமும் கவிதை வரிசையில் இந்த வாரம் மூன்றாம் வாரம்.  இந்த புதன் கிழமையில் நான் எடுத்த புகைப்படம் ஒன்றிற்கு நண்பர் சேஷாத்ரி அவர்கள் எழுதிய கவிதையோடு உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. நண்பர் சேஷாத்ரி, காரஞ்சன் சிந்தனைகள் எனும் வலைப்பூவில் எழுதி வருகிறார்.  நடுநடுவே பணிச்சுமைகள் காரணமாக வலைப்பூவிலிருந்து விலகி விடுகிறார்!  நான் எடுத்த புகைப்படம் ஒன்றிற்கான கவிதையோடு இதோ மீண்டும் வலையுலகில்.....

புகைப்படம்-3:எடுக்கப்பட்ட இடம்:  சமீபத்தில் விசாகபட்டிணம் அருகே இருக்கும் அராக்கு வேலி எனும் இடத்திற்கு பாசஞ்சர் ரயில் மூலம் பயணம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. பாசஞ்சர் ரயிலின் ஒரு பெட்டி முழுவதும் சுற்றுலா பயணிகள். அதில் பல இடங்களிலிருந்தும் சுற்றுலா பயணிகள்.  அங்கே வந்திருந்த ஒரு சுற்றுலா பயணிக்கு இரண்டு பெண் குழந்தைகள். சுட்டியாக அங்கேயும் இங்கேயும் சென்றும், சிரித்தும் சக பயணிகளை மகிழ்வித்துக் கொண்டிருந்தார்.  அதில் மூத்த பெண் தான் இந்தப் புகைப்படத்தில் இருப்பவர். பாசஞ்சர் ரயிலின் மேல் சாமான்கள் வைக்கும் இடத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டு கம்பிகள் வழியே பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார்.  அவரை என் காமிராவில் சிறை பிடித்தேன். 

சில நாட்கள் முன்னர் இந்த புகைப்படத்தினை ஃபேஸ்புக்கில் பகிர்ந்த போது நண்பர் ரிஷபன் அவர்கள் எழுதிய இரட்டை வரிக் கவிதை.....

உன் பார்வைச் சதுரங்கள்
என்னை வட்டமிடுகின்றனவே...

புகைப்படத்திற்கு நண்பர் சேஷாத்ரி எழுதி அனுப்பிய கவிதை இதோ.....

கவிதை-1:

இடம்பிடி! தடம் பதி!

பயணத் தடமெங்கும்
பார்த்து மகிழ்ந்திட
இடம்பிடித்தாயோ?
அரும்பிடும் புன்னகையில்
ஆர்வம் வெளிப்படுதே!

பயணங்கள் அனைத்துமே
பயனுள்ளவைதான்!
படிப்பினை தருவனதான்!

வாழ்க்கைப் பயணத்தில்- நல்
வழிகளைத் தெரிவுசெய்!
தக்க தருணங்களைத்
தவறவிடாதே!

தன்னம்பிக்கையும்
தளரா உழைப்பும் -நீ
தடம்பதிக்கத்
துணைநிற்கும்!

திறமையின் துணையுடன்
தடம் பதிப்பாய்!
உலகோர் உளத்தில்
உனக்கென ஓர் இடம்பிடிப்பாய்!

     சேஷாத்ரி.....

என்ன நண்பர்களே, படமும் கவிதையும் வரிசையில் மூன்றாம் படமும் நண்பர் சேஷாத்ரி அவர்கள் எழுதிய கவிதையையும் ரசித்தீர்களா? தொடர்ந்து புதன் கிழமைகளில் படமும் கவிதையும் பதிவுகள் வெளிவரும். நான் எடுத்த புகைப்படத்திற்கு கவிதை எழுத விருப்பம் இருந்தால் எனக்கு மின்னஞ்சல் [ venkatnagaraj@gmail.com ] அனுப்பினால் நான் எடுத்த புகைப்படம் ஒன்றினை அனுப்பி வைக்கிறேன்.

கவிதை எழுதுபவர்களுக்கு ஊக்கம் தரும் முயற்சி மட்டுமே. வேறு எந்த நோக்கமும் இல்லை.  சில கவிதைகள் சேர்ந்தபிறகு அவற்றைத் தொகுத்து மின்னூலாகவும் வெளியிடலாம்.  அனைவருடைய படைப்புகளையும் படிப்பவர்களிடம் கொண்டு சேர்க்க இது ஒரு முயற்சி....  கவிதை மற்றும் புகைப்படம் பற்றிய எண்ணங்களை பின்னூக்கத்தில் சொல்லுங்கள்.....

மீண்டும் வேறொரு பதிவில் சந்திக்கும் வரை....

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.

32 comments:

 1. அருமை. ரிஷபன் ஜியின் கவிதையும் அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 2. நல்ல முயற்சி....படம் சூப்பர்....விரைவில் நானும்.....

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   Delete
 3. இனிய கவிதையாய் - மழலையின் அழகு முகம்..

  அழகு.. அருமை!..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   Delete
 4. புகைப்படமும் அது தந்த
  கவிதையும் அருமை
  வாழ்த்துக்களுடன்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 5. மழலையின் அழகில் ..
  தன்னம்பிக்கை கவிதை ...

  அருமை ...


  உங்கள் தளத்தின் முகப்பு படமும் அழகு ...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம் ஜி!

   Delete
 6. //வாழ்க்கைப் பயணத்தில்- நல்
  வழிகளைத் தெரிவுசெய்!
  தக்க தருணங்களைத்
  தவறவிடாதே!//

  அருமையான வரிகள்.
  படமும் கவிதையும் மிக அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   Delete
 7. கவிதை எழுதத் தெரிந்தவர்கள் ஜமாய்க்கிறார்கள் நான் ரசிக்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   Delete
 8. இரு வரிக் கவிதை பதிவினில் ரசித்தேன்,பொருள் அதை அறிய தடையேதும் இல்லை:)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 9. பணிச்சுமை உள்ளவரைக்கூட எழுதவைத்துவிட்டீர்கள். வாழ்த்துகள். தங்களின் முயற்சி தொடரட்டும்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 10. ஊக்குவிக்கும் நல்ல பணி !தொடருங்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   Delete
 11. இடம் பிடி! தடம் பதி! தலைப்பே அருமையான கவிதை! வாழ்க.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி....

   Delete
 12. இரண்டு கவிதையும் சிறப்பு! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 13. படம் அழகு ஜி! முகப்புப் படம் வெகு அழகு. இரு வரிக் கவிதையையும், சேஷாத்ரி அவர்களின் கவிதையையும் ரசித்தோம் நேர்மறையான அருமையான வரிகள்.

  அரக்கு வேலி மிக மிக அழகான சுற்றுலாத்தளம். விரைவில் உங்கள் பயணக் குறிப்பை எதிர்ப்பார்க்கின்றோம் வெங்கட்ஜி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 14. அழகான படமொன்றை அனுப்பிவைத்து அதற்காக நான் எழுதிய கவிதையினை தங்களின் வலைப்பக்கத்தில் வெளியிட்டமைக்கு மிக்க நன்றி! இருவரிக் கவிதையை இரசித்தேன்! கருத்துரையிட்டு பாராட்டிய அனைத்து நல்லிதயங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி!

  ReplyDelete
  Replies
  1. கவிதை எழுதி அனுப்பியதற்கு நன்றி சேஷாத்ரி.

   Delete
 15. கடைசி வரி அருமை! திரு சேஷாத்ரி அவர்களுக்கு வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 16. கம்பித் தடுப்பு
  குழந்தையின் சிரிப்பு
  ரயில் பயணம்

  Jayakumar

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் ஐயா.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....