[படம்-4
கவிதை-2]
படமும்
கவிதையும் வரிசையில் நான்காம் புகைப்படத்திற்கு வந்த இரண்டாம் கவிதையோடு உங்களை
இன்று சந்திப்பதில் மகிழ்ச்சி. கவிதையை எழுதி அனுப்பியவர் தில்லி நண்பர் பத்மநாபன்
அவர்கள். படம் பற்றிய குறிப்பும் கவிதையும்
இதோ....
புகைப்படம்-4:
எடுக்கப்பட்ட இடம்: காவிரிக்கும்
கொள்ளிடத்திற்கும் நடுவே திருவரங்கம்.
காவிரி ஆற்றில் இப்போதெல்லாம் தண்ணீர் வரத்து வெகு குறைவு. மணல் கொள்ளை
போய்க்கொண்டே இருக்கிறது – அரசாங்கத்தின் ஒத்துழைப்போடு..... கோடைக் காலம் வந்துவிட்டால், திருச்சி
மாநகராட்சியே காவிரி ஆற்றின் மணல்வெளியில் Summer Beach என பதாகை
வைத்து இசை நிகழ்ச்சிகளையும், தின்பண்டக் கடைகளையும் இங்கே அமைக்க அனுமதி
தருகிறார்கள். வற்றிய காவிரி
ஆற்றிலிருந்து பணம் சம்பாதிக்க வழி – பார்வையாளர்களுக்கு நுழைவுக் கட்டணமும்
உண்டு! சென்ற ஆண்டு இப்படி Summer Beach அமைத்தபோது நாங்களும் சென்றிருந்தோம்.
வறண்டு கிடக்கும் காவிரி ஆற்றின் கரை. நேரம் மாலையும் இரவும் சந்திக்கும் நேரம். அங்கே இக்குழந்தை பந்து விளையாடிக்
கொண்டிருந்தாள். அவள் கைகளில் ஒட்டிக்
கொண்டிருக்கும் மணல் துகள்! அவள் ஊடுருவும் கண்கள் எனை புகைப்படம் எடுக்கத் தூண்டியது.
புகைப்படத்திற்கு நண்பர் பத்மநாபன் எழுதி அனுப்பிய கவிதை
இதோ.....
கவிதை-2:
மின்னல் கண்ணழகி!
காவிரியின் மேல் நின்று
கண் விரியப் பார்க்கின்றாள்!
மணல் வாரி விற்பவரை, மதி கெட்ட மானுடரை,
நஞ்சு உளம் கொண்டு நரகம் செல்ல விழைவோரை
முக்கண்ணால் எரித்திடவும் மணல் வாரித்
தூற்றிடவும்
காவிரியின் மேல் நின்று கண் விரியப்
பார்க்கின்றாள்!
மன்னனுக்கும் அஞ்சாதார் நல்ல
மறைகளுக்கும் அஞ்சாதார்!
வஞ்சம் ஒன்றேதான் வாழ்வெனவே
நினைப்போரை
பிஞ்சுக் கையாலே பந்தாடி முடித்திடவே
காவிரியின் மேல் நின்று கண் விரியப்
பார்க்கின்றாள்!
பொன்னி நதியாலே பொன் விளைந்த காலமதை
களவாடிச் சென்றவரை, கலங்கி நிற்க வைத்தவரை,
காலால் உதைத்திடவும் , கண்ணால் எரித்திடவும்,
காவிரியின் மேல் நின்று கண் விரியப்
பார்க்கின்றாள்!
காக்கை கொண்டு வந்த கற்பகமாம் காவிரியின்
போக்கை மாற்றி விட்டு புதுச்
செல்வம்
சேர்ப்போர்கள் புல்லினும் சிறியரென
காவிரியின் மேல் நின்று கண் விரியப்
பார்க்கின்றாள்!
பத்மநாபன்.....
என்ன நண்பர்களே, படமும் கவிதையும் வரிசையில் நான்காம்
படமும் நண்பர் பத்மநாபன் அவர்கள் எழுதிய கவிதையையும் ரசித்தீர்களா? தொடர்ந்து
புதன் கிழமைகளில் படமும் கவிதையும் பதிவுகள் வெளிவரும். நான் எடுத்த புகைப்படத்திற்கு
கவிதை எழுத விருப்பம் இருந்தால் எனக்கு மின்னஞ்சல் [ venkatnagaraj@gmail.com ] அனுப்பினால் நான் எடுத்த புகைப்படம் ஒன்றினை அனுப்பி வைக்கிறேன்.
கவிதை எழுதுபவர்களுக்கு ஊக்கம் தரும் முயற்சி மட்டுமே.
வேறு எந்த நோக்கமும் இல்லை. சில கவிதைகள்
சேர்ந்தபிறகு அவற்றைத் தொகுத்து மின்னூலாகவும் வெளியிடலாம். அனைவருடைய படைப்புகளையும் படிப்பவர்களிடம்
கொண்டு சேர்க்க இது ஒரு முயற்சி.... கவிதை
மற்றும் புகைப்படம் பற்றிய எண்ணங்களை பின்னூக்கத்தில் சொல்லுங்கள்.....
மீண்டும் வேறொரு பதிவில் சந்திக்கும் வரை....
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.
கவிதையை ரசித்தேன்.
பதிலளிநீக்குகைகளில் சர்க்கரைத் துகள்களாய் மணல்!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நீக்குTM not yet submitted!
பதிலளிநீக்குபல சமயங்களில் தமிழ் மணம் Button வருவதில்லை! :)
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
செமை... http://ethilumpudhumai.blogspot.in/
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீமலையப்பன் ஸ்ரீராம்.
நீக்குஅருமை
பதிலளிநீக்குநன்றி ஐயா
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குதம2
பதிலளிநீக்குதமிழ் மணம் வாக்கிற்கு மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குகவிதை மிக அருமை.
பதிலளிநீக்குகவிதையில் கடைசியில் கூறியது மணல் அள்ளுபவர்களுக்கு சாட்டையடி.
இவையெல்லாம் தெரிந்தே செய்யும் தப்புகள்.
நேற்று பத்திரிக்கையில் வந்த செய்தி மணல் தட்டுபாட்டால் கட்டுமானப் பணிகள் நிறுத்தம் என்று. ஒரு லாரி மணல் ரூ . 11 ஆயிரம் என்று.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....
நீக்குகவிதைக்கேற்ற புகைப்படமா, புகைப்படத்திற்கேற்ற கவிதை என்று வியக்குமளவு அருமையாக உள்ளன. தொடரட்டும். வாழ்த்துகள்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.
நீக்குமின்னல் கண்ணழகி! - படமும் கவிதையும் - படமும் அருமை கவிதையும் அருமை.
பதிலளிநீக்குடில்லி விஜயராகவன்
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விஜயராகவன் ஜி!
நீக்குகவிதையை பகிர்ந்தமைக்கு நன்றிகள். கவிதையை படித்து ரசித்தோர்க்கும் நன்றிகள் பல.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.
நீக்குசிறப்பான கவிதை! பாராட்டுக்கள்!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.
நீக்குகவிதையை இரசித்தேன்! கவிதை படைத்த திரு பத்மநாபனுக்கு பாராட்டுக்கள்!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.
நீக்குcold pressed mustard oilProducts along with extremely minor differences with one another. Nowadays, mustard seeds are generally on the list of preferred condiments which can be used around the world, ranging from Parts of Asia, Europe, Africa, and the actual Americas in addition to Australia.
பதிலளிநீக்கு