எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, June 24, 2016

ஃப்ரூட் சாலட் – 167 – மனிதம் – தன்னம்பிக்கை – பலி!


மனிதம் மகத்தானது:

ஜூன் 16, 2016: இன்று காலை கடலூரிலிருந்து சிதம்பரம் செல்ல பி.முட்லூர் இறங்கி எனது பைக்கில் சிதம்பரம் அரசு கலைக்கல்லூரியை நெருங்கும்போது ஒரு விபத்தில் அடிபட்டு ஒரு இளைஞன் துடித்துக்கொண்டிருந்தான். உடனடியாக ஆம்புலன்சுக்கும் கவல்துறைக்கும் போன் செய்துவிட்டு காத்திருந்தோம். அந்த நேரம் சொல்லிவைத்தார்போல ஒரு தனியார் அம்புலன்ஸ் அப்பக்கம் வந்தது.

அந்த ஆம்புலன்ஸில் மருத்துவ உதவியாளர்கள் இல்லாமல் ஓட்டுனர் மட்டுமே இருந்தர். உடன் சொந்தங்கள் யாராவது வரவேண்டும் இவ்வுளவு பணம் வேண்டும் என பேரம் பேச துவங்கினார்.

அதே நேரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது. அந்த வண்டியை கைகாட்டி நிறுத்தியபோது அதில் வந்த ஓட்டுனர் அங்கே நின்ற தனியார் ஆம்புலன்ஸ் வண்டியை பார்த்துவிட்டு அந்த வண்டியில எடுத்து வாருங்கள் என சொல்லிவிட்டு நிறுத்தாமல் சென்றுவிட்டார்.

திரும்பி வருவதற்குள் அங்கு உதவி செய்ய நின்றவர்களிடம் பேரம் பேசிவிட்டு தனியார் ஆம்புலன்சும் சென்றுவிட்டது. நாங்கள் போன் செய்த வண்டியும் வரவில்லை. அடிபட்ட இளைஞனுக்கு ரத்தம் கொட்டிக்கொண்டே இருந்தது.

அப்போது சி.முட்லூர் கிராமத்தை சார்ந்த விஜி எனும் வாலிபன் தனது நண்பர்களுடன் வந்தான். உடலெல்லாம் இரத்தம் ஒழுக வலியால் துடித்துக்கொண்டிருந்த அந்த இளைஞனை அள்ளி எடுத்தனர், ஒரு பைக்கின் நடுவில் அவனை அமரவைத்து அணைத்து பிடித்துக்கொண்டு சிதம்பரம் அண்ணாமலை நகர் மருத்துவமணை நோக்கி சென்றனர்.

அந்த இளைஞனை இடித்த காரில் இருந்தவர்கள் யாரும் ஓட வாய்ப்பிருந்தும் ஓடவில்லை. அவனை எப்படியும் காப்பாற்ற துடித்தனர். எங்களோடு மருத்துவமணைக்கு வந்தனர்.

நாங்கள் 6 கிலோ மீட்டர் கடந்து மருத்துவமணையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்து முதலுதவி ஏற்பாடு செய்து அங்கு முடியாது பாண்டி ஜிப்மர் கொண்டு செல்லுங்கள் என கூறியதால் அதற்கும் ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்தோம்.

முகம் தெரியாத ஒருவனை காப்பாற்ற உதவிய, தங்களது உடைகளில் தோய்த இரத்த வாடையோடு விஜியும் அவனது நண்பர்களும் "அண்ணா நாங்க கிளம்பரறோம்" என இரத்தம் உலர்ந்த கையை நீட்டினார்கள்.

அடிபட்ட இளைஞனை சுமந்த ஆம்புலன்ஸ் சைரன் ஒலியோடு புதுச்சேரியை நோக்கி செல்ல துவங்கியது. .

ஏனோ கண்ணீர் சுரந்து விஜியும் அவரது நண்பர்களும் மங்களாக தெரிந்தனர்.

அவர்களது கரங்களை இறுக பற்றிக்கொண்டேன். "தம்பி நீங்கள் நம்பிக்கை. நல்லா இருப்பீங்க . . பார்த்து பத்திரமா போய் வாருங்கள்" என அனுப்பிவைத்தேன்.

இளைஞர்கள் எப்போதும் இளைஞர்கள்தான்.

-          ஃபேஸ்புக்கிலிருந்து.  எழுதியவர் திரு ரமேஷ் பாபு...  பகிர்ந்து கொண்ட நண்பர் ரமேஷ் ராமலிங்கம் அவர்களுக்கு நன்றி.

மனிதனும் இயந்திரமும்:

500 ரூபாயை எண்ணினாலும்
, 50000 ரூபாயை எண்ணினாலும் ஒரே மாதிரி சத்தத்தோடு நடந்து கொள்ளும் ஏடி எம் மெஷின்..... ஏன்னா அது மெஷின், மனிதன் இல்லை.

தன்னம்பிக்கை....:

உதவிக்கு யாருமே இல்லை என வருந்தாதே.... உனக்கு துணையாக நான் இருக்கிறேன், தைரியமாக போராடு.... – இப்படிக்கு தன்னம்பிக்கை!
 
சாலைக் காட்சிகள்:

சென்ற ஞாயிறன்று நண்பருடன் பல்சர் பைக்கில் சென்று கொண்டிருந்தேன்.  வழியே சிக்னலில் நிற்க வேண்டியிருந்தது. எங்களுக்கு முன்னர் ஒரு கார் நின்று கொண்டிருந்தது. பச்சை விளக்கு எரிந்த பிறகும் கார் நகரவில்லை.  பின்னாலிருந்த அனைத்து வாகனங்களும் விதம் விதமாக ஒலிப்பான்களை அழுத்த காதில் ரணம்.  முன்னால் நின்றிருந்த வாகனம் நகருவதாய் இல்லை....  என்ன பிரச்சனை என கொஞ்சம் கூர்ந்து கவனிக்க, வாகனத்தில் இருவர் – ஒரு இளைஞர், பக்கத்தில் ஒரு இளைஞி....

அந்தப் பெண் பீர் பாட்டிலிலிருந்து பீர் குடித்துக் கொண்டிருக்க, வண்டியைக் கிளப்பினால் பீர் சிந்தி விடுமாம்! அதனால் குடித்து முடித்த பிறகு வண்டியை எடுப்பாராம்....  பாட்டில் கீழே வைத்த பிறகு தான் வண்டி புறப்பட்டது! நல்ல முன்னேற்றம் தான் போங்க!
   
ஒளிந்திருக்கும் திறமை:

திறமை எங்கேயும் இருக்கலாம்....  இவரது திறமையைப் பாருங்கள்.... ஓவியம் வரைவதில் என்ன ஒரு லாவகம்!


படித்ததில் பிடித்தது:ஒரு பானை செய்பவரை சந்திக்க குரு சென்றார். பானைகளை செய்து கொண்டிருந்தார் குயவர். பக்கத்தில் ஒரு காட்டுஆட்டை கட்டி போட்டிருந்தார். குரு எதற்கு அந்த ஆட்டை கட்டி போட்டிருக்கிறாய் என்று கேட்டார்.

அதற்கு குயவன் இது காட்டு ஆடு, இதை கடவுளுக்கு பலி குடுக்க போகிறேன் என்றான். உடனே குரு அவன் செய்த பானைகளில் இருந்து இரண்டை அவன் முன் போட்டு உடைத்தார். இதை பார்த்த குயவனுக்கு கோவம் வந்துவிட்டது.

எதற்கு பித்துபிடித்ததை போல உடைக்கிறீர் என்று கேட்டான்.அதற்கு குரு உனக்கு பிடிக்குமே என்றுதான் என்று சொன்னார். நான் உருவாகியதை உடைத்தால் எனக்கு எப்படி பிடிக்கும் என்று கேட்டான். அதற்கு குரு ஆண்டவன் கஷ்ட பட்டு படைத்த உயிரை அவன் முன்னால் கொல்கிறாயே அது மட்டும் எப்படி ஆண்டவனுக்கு பிடிக்கும் என்று கேட்டார்.

அவன் ஆட்டை கயிற்றை அவிழ்த்து விட்டுவிட்டான். ஆண்டவன் படைத்ததை அவனுக்கே குடுக்க வேண்டும் என்று நினைத்தால் நல்ல எண்ணங்களை கொடுங்கள்.அன்பை கொடுங்கள். இல்லாதவர்க்கு உதவி செய்யுங்கள். ஆண்டவன் மகிழ்ச்சி அடைவான்.

மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை….

நட்புடன்

வெங்கட்

புது தில்லி.....

26 comments:

 1. மனிதம் கண்கலங்க வைத்தது. அனைத்துமே அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 2. அருமை அனைத்தும்.. விஜி மற்றும் அவரது நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீமலையப்பன் ஸ்ரீராம்.

   Delete
 3. அருமையான பதிவு.

  விஜியும் அவனது நண்பர்களும் "அண்ணா நாங்க கிளம்பரறோம்" என இரத்தம் உலர்ந்த கையை நீட்டினார்கள்.//
  மனிதநேயம் மிக்க இளைஞர்களுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   Delete
 4. மனிதம் நெகிழ்த்திவிட்டது. இப்படித்தான் ஆம்புலன்சுகள் படுத்துகின்றன. கேரளத்தில் இப்படி இல்லை. விஜிக்கும் அவரது நண்பர்களுக்கும் பாராட்டுகள், வாழ்த்துகள்.

  தன்னம்பிக்கை சொல்வது அருமை..

  சாலை நிகழ்வு இப்போது எல்லாம் சகஜமாகிவிட்டதோ அதுவும் தில்லி போன்ற ஊர்களில்...

  படித்ததில் பிடித்தது மிகவும் பிடித்தது. அனைத்துமே அருமை வழக்கம் போல்...  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 5. விபத்தில் உதவிய இளைஞர்கள் பாராட்டுக்குரியவர்கள்! குட்டிக்கதை சிறப்பு! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 6. பொதுவாகவே நல்ல செயல்களை நாம் அதிகமாகக் கண்டுகொள்வதில்லை. ஏன் என்றால் அவை பலரும் அறியாவண்ணம் செய்யப்படுகிறது பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   Delete
 7. மனிதம் மரணிக்கவில்லை என்பதை உணர்த்தியது முதல் செய்தி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 8. நல்ல தொகுப்பு. மனிதம் மரிக்கவில்லை. மனதுக்கு ஆறுதல்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 9. நல்ல தொகுப்பு அண்ணா...
  மனிதம் இன்னும் இருக்கிறது... கலங்க வைத்து விட்டது...

  பீர் குடிக்க சிக்னலில் காரை நிறுத்திய காதலன்... நல்ல வளர்ச்சி...

  குருவின் செயல்... நல்ல கதை...

  அருமை அண்ணா...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   Delete
 10. பீர் தவிர்த்த மற்றவை அருமை..

  ஆபத்து நேரத்தில் - உதவிக்கரம் நீட்டிய வாலிபர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்..

  வாழ்க நலம்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   Delete
 11. பீர் குடிக்கும்வரை சிக்னலில் இருந்த போலீஸ் பார்த்துக் கொண்டா இருந்தார் ?ஆயிரம் ரூபாய் பைன் போட்டிருக்க வேண்டாமா :)

  ReplyDelete
  Replies
  1. தில்லியின் பெரும்பாலான சிறிய சிக்னல்களில் காவல்துறை நண்பர்கள் இருப்பதில்லை! இதுவும் அப்படியான ஒன்று...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

   Delete
 12. ஆபத்திற்கு உதவாத ஆம்புலன்ஸ் வண்டியால் யாருக்குப் பிரயோஜனம்? ஆம்புலன்ஸ் வண்டியோட்டிகளுக்கு இல்லாத மனிதம் இளைஞர்களிடம் அதிகம் இருந்ததை உணர்த்திய நிகழ்ச்சி நெகிழவைத்தது.
  பீர் குடிக்க மற்றவர்களுக்கு இடைஞ்சல் ஆக இருந்த ஆண் பெண் இருவரும் மனதை வருத்தப்பட வைத்துவிட்டனர். தனிமனித ஒழுக்கம் எவ்வளவு மலினப்பட்டிருக்கிறது, பாருங்கள்.
  குருவின் நடவடிக்கை நல்ல பாடத்தை உணர்த்தியது.
  ப்ரூட் சாலட் வடிவம் மாறியிருந்தாலும் ருசி அப்படியே இருக்கிறது.
  காணொளி ஏற்கனவே பேஸ்புக்கில் பார்த்து ரசித்தேன்.

  பாராட்டுக்கள்!

  ReplyDelete
  Replies
  1. சற்றே இடைவெளிக்குப் பிறகு எனது பதிவில் உங்கள் வருகையும், கருத்துரையும். மிக்க மகிழ்ச்சி...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா....

   Delete
 13. ஹூம்! பெண்கள் முன்னேற்றம்! :( எல்லாமே நன்றாக இருந்தன.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....