எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Wednesday, June 15, 2016

ஓய்வு! - படமும் கவிதையும்

[படம்-5 கவிதை-1]

படமும் கவிதை வரிசையில் இந்த வாரம் ஐந்தாம் வாரம்.  நான் எடுத்த புகைப்படம் ஒன்றிற்கு தளிர் எனும் வலைப்பூவில் எழுதி வரும் நண்பர் சுரேஷ் அவர்கள் எழுதிய கவிதையோடு உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. 

புகைப்படம்-5:எடுக்கப்பட்ட இடம்:  இந்த புகைப்படம் தில்லியின் கடும் குளிர் சமயத்தில் எடுக்கப்பட்ட படம்.  குளிருக்கு இதமாய் மதிய நேர வெய்யிலில் அமர்ந்திருந்த மூதாட்டி. பின் பக்கம் அந்த மூதாட்டியின் கணவர் படுத்திருக்கிறார்.

படம் பார்த்த போது எனக்குத் தோன்றிய எண்ணம்:  என்னதான் ஆண்கள் தங்களைப் பற்றி பெரிதாய் நினைத்துக் கொண்டாலும், வயதான காலத்தில் தங்களது துணை இல்லாது இருக்க முடிவதில்லை. துணையை இழந்த பின்னர் வாழும் ஆண்கள் படும் மனக் கஷ்டங்கள் சொல்ல முடியாதவை. பெண்கள் தனது துணையை இழந்தாலும், அத்தனை துயரம் கொள்வதில்லை. தங்கள் பேரக் குழந்தைகள், மகன்/மகள் ஆகியோர் மீது கொண்டுள்ள பாசத்தினால் தனது கவலைகளை ஓரளவு மறந்து விடுகிறார்கள் அல்லது மறைத்து விடுகிறார்கள்.

கணவன் படுத்துறங்க, மனைவி அமர்ந்தபடியே உறங்குவதைப் பார்த்தபோது அவரும் பாவம் – இன்னுமொரு கட்டில் போட்டு உறங்கலாமே என்றும் தோன்றியது......   

புகைப்படத்திற்கு தளிர் சுரேஷ் எழுதி அனுப்பிய கவிதை இதோ.....

கவிதை-1:

ஓய்வு!

உழைத்திட்ட காலங்கள்
ஓடிப்போயிட
ஓய்வுக்கான காலம் இது!
தழைத்திட்ட பிள்ளைகள்தான்
தள்ளிப் போயினரோ?
பாதையோரம் பாந்தமாய்
படுத்த கணவருக்கு ஆதரவாய்
அமர்ந்திட்டேன் ஆறுதலாய்!
படர்ந்திட்ட பனியெல்லாம் விலகிஓட
சுடர்விட்ட ஆதவனே  வருக!
சுருக்கம் வீழ்ந்த இந்த முதியோரையும்
உன் கதிர் கரங்களால் தழுவி
இன்பம் அதனை தருக!
நாளை எண்ணிக்கொண்டிருக்கும் எங்களுக்கு
நாளையை நல்ல பொழுதாய்  நல்க!

     தளிர் சுரேஷ்......

என்ன நண்பர்களே, படமும் கவிதையும் வரிசையில் ஐந்தாம் படமும் நண்பர் தளிர் சுரேஷ் அவர்கள் எழுதிய கவிதையையும் ரசித்தீர்களா? தொடர்ந்து புதன் கிழமைகளில் படமும் கவிதையும் பதிவுகள் வெளிவரும். நான் எடுத்த புகைப்படத்திற்கு கவிதை எழுத விருப்பம் இருந்தால் எனக்கு மின்னஞ்சல் [ venkatnagaraj@gmail.com ] அனுப்பினால் நான் எடுத்த புகைப்படம் ஒன்றினை அனுப்பி வைக்கிறேன்.

கவிதை எழுதுபவர்களுக்கு ஊக்கம் தரும் முயற்சி மட்டுமே. வேறு எந்த நோக்கமும் இல்லை.  சில கவிதைகள் சேர்ந்தபிறகு அவற்றைத் தொகுத்து மின்னூலாகவும் வெளியிடலாம்.  அனைவருடைய படைப்புகளையும் படிப்பவர்களிடம் கொண்டு சேர்க்க இது ஒரு முயற்சி....  கவிதை மற்றும் புகைப்படம் பற்றிய எண்ணங்களை பின்னூக்கத்தில் சொல்லுங்கள்.....

மீண்டும் வேறொரு பதிவில் சந்திக்கும் வரை....

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.

28 comments:

 1. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 2. உங்கள் எண்ணத்திலிருந்து லேசாக மாற்றி யோசித்திருக்கிறார் 'தளிர்' சுரேஷ். அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 3. படமும் கவிதையும் அருமை சார்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீமலையப்பன் ஸ்ரீராம்.

   Delete
 4. கவிதை மனம் கணக்க வைத்தது ஜி நண்பர் திரு. தளிர் சுரேஷ் அவர்களுக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 5. நன்றி வெங்கட் ஜி! இந்த படத்திற்கேற்ற கவிதையை நீண்ட நாளாய் யோசித்தும் எழுத முடியாமல் போய் கடைசியில் ஓர் வேகத்தில் எழுதிய கவிதை இது. தங்கள் தளத்தில் வெளியிட்டு ஊக்கப்படுத்தியமைக்கு மிக்க நன்றி!

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் எழுதிய கவிதையை எனது பக்கத்தில் வெளியிட அனுமதித்ததற்கு நன்றி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 6. கவிதை அருமை!

  //தழைத்திட்ட பிள்ளைகள்தான்
  தள்ளிப் போயினரோ?//

  அப்படி இல்லாதிருக்கட்டும்.
  தில்லிக் குளிர்கால வெயிலில் கவலை மறந்து ஓய்வெடுப்பதாகவே தோன்றுகிறது. நல்ல குழந்தைகளைப் பெற்ற பெற்றோராகவே இவர்கள் இருக்க இறைவனை வேண்டுவோம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.....

   Delete
 7. முதுமை.. இப்படித்தான் ஆகுமோ?...

  ஆனாலும் - படத்திற்கு ஏற்றதாக கவிதை...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   Delete
 8. அருமையான கவிதை.படமும் கவிதை அருமை.
  இருவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.....

   Delete
 9. தளிர் சுரேஷின் கவிதை என்றால் சும்மாவா அதிருதில்ல

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   Delete
  2. என் மீது இவ்வளவு நம்பிக்கை வைத்திருப்பதற்கு மிக்க நன்றி ஜி.எம்.பி ஐயா!

   Delete
  3. தங்களது மீள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்......

   Delete

 10. தங்களின் புகைப் படத்திற்கு பொருத்தமான கவிதை இயற்றிய திரு ‘தளிர்’சுரேஷ் அவர்களுக்கு பாராட்டுகள்! புகைப்படம் தந்த தங்களுக்கு வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 11. படமும் கவிதையும் மிகவும் பொருத்தம் வாழ்த்துகள் இருவருக்கும் !

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   Delete
 12. வழக்கம்போல கவிதையும், படமும் அருமை. இரு பாராட்டுகள். நண்பர் சுரேஷுக்கும், உங்களுக்கும்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 13. படமும் கவிதையும் அருமை! சுரேஷ் கவிதையில் கலக்குபவர்! எல்லாவற்றிலுமேதான். வாழ்த்துகள் சுரேஷ்! தங்களுக்கும் ஜி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....