எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Thursday, June 30, 2016

முகம் காட்டு கண்மணியே – ராஜி வெங்கட்


[படம்-7 கவிதை-1]

படமும் கவிதை வரிசையில் இந்த வாரம் ஏழாம் வாரம்.  நான் எடுத்த புகைப்படம் ஒன்றிற்கு கற்றலும் கேட்டலும்வலைப்பூவில் எழுதி வரும் ராஜி வெங்கட் [எ] ரேவதி வெங்கட் அவர்கள் எழுதிய கவிதையோடு உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. 

புகைப்படம்-7:எடுக்கப்பட்ட இடம்:  திருவரங்கம் என்றாலே எல்லோருக்கும் நினைவுக்கு வருவது அரங்கனின் திருக்கோவில் தான். ஆனால் அதே திருவரங்கத்தில் விஷ்ணுவின் பத்து அவதாரங்களையும் ஒருங்கே வழிபட வசதியாய் “தசாவதார சன்னதியும் உண்டு என்பது தெரியுமா? அந்த தசாவதார சன்னதிக்கு ஒரு முறை போயிருந்த போது கோவிலின் வாசலில் இரண்டு குழந்தைகள் முகமூடி போட்டுக் கொண்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள்.  அவர்களை எடுத்த படம் தான் இது.....

படம் பார்த்த போது எனக்குத் தோன்றிய எண்ணம்:  இச்சிறு வயதிலேயே முகமூடி போட்டுக் கொண்டு பழக்கப் படுத்திக் கொள்ள வேண்டுமோ? பெரிதான பிறகு போட்டுக்கொள்ள வேண்டியிருக்குமோ என இப்பொழுதே பழக்கம் செய்து கொள்கிறார்களோ.....

புகைப்படத்திற்கு ராஜி வெங்கட் எழுதி அனுப்பிய கவிதை இதோ.....

கவிதை-1:

முகம் காட்டு கண்மணியே!

வளர்கின்ற பிஞ்சுகளே
விளையாட்டோ முகமூடி?
வெளிக்காட்டா கயமைகளை
விரைவாக உள்புதைத்து,
ஒளிக்கின்ற காலமுண்டு
ஒவ்வொன்றாய் அணிவோமே!
களிக்கின்ற வயதினிலே
கழட்டுங்கள் கண்மணிகாள்!

     ராஜி வெங்கட் [எ] ரேவதி வெங்கட்......

என்ன நண்பர்களே, படமும் கவிதையும் வரிசையில் ஏழாம் படமும் ராஜி வெங்கட் அவர்கள் எழுதிய கவிதையையும் ரசித்தீர்களா? தொடர்ந்து புதன் கிழமைகளில் படமும் கவிதையும் பதிவுகள் வெளிவரும். நான் எடுத்த புகைப்படத்திற்கு கவிதை எழுத விருப்பம் இருந்தால் எனக்கு மின்னஞ்சல் [ venkatnagaraj@gmail.com ] அனுப்பினால் நான் எடுத்த புகைப்படம் ஒன்றினை அனுப்பி வைக்கிறேன்.

கவிதை எழுதுபவர்களுக்கு ஊக்கம் தரும் முயற்சி மட்டுமே. வேறு எந்த நோக்கமும் இல்லை.  சில கவிதைகள் சேர்ந்தபிறகு அவற்றைத் தொகுத்து மின்னூலாகவும் வெளியிடலாம்.  அனைவருடைய படைப்புகளையும் படிப்பவர்களிடம் கொண்டு சேர்க்க இது ஒரு முயற்சி....  கவிதை மற்றும் புகைப்படம் பற்றிய எண்ணங்களை பின்னூக்கத்தில் சொல்லுங்கள்.....

மீண்டும் வேறொரு பதிவில் சந்திக்கும் வரை....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.


டிஸ்கி:  இந்த பதிவு என்னுடைய வலைப்பக்கத்தில் வெளிவரும் 1100-வது பதிவு.  என் பதிவுகளை வாசிக்கும், கருத்துரைகள் பகிர்ந்து கொள்ளும், ஊக்க மொழிகள் சொல்லும் அனைத்து நட்புகளுக்கும் மனம் நிறைந்த நன்றி! 

26 comments:

 1. படம் பார்த்ததும் சட்டெனத் தோன்றும் உணர்வை அருமையான கவிதையாக வடித்து விட்டார். அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 2. வாழ்த்துக்கள்! சுருக்கமான கவிதையாயினும் நிறைவாக படைத்து அசத்தி விட்டார் ராஜி அவர்கள்! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 3. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீமலையப்பன் ஸ்ரீராம்.

   Delete
 4. அதுதானே.. எதற்கு முகமூடி?..
  காட்சியும் கருத்தும் - அருமை..

  வாழ்க நலம்!..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   Delete
 5. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 6. படத்துக்கு உங்கள் விளக்கமும் ராஜி வெங்கட்டின் கவிதையும் அசத்தல்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   Delete
 7. 1,100 வது பதிவுக்கு வாழ்த்துகள். கவிதையும் அருமை! ரேவதி வெங்கட் இவர் தானா? முகநூலில் பார்த்திருக்கேன்.

  ReplyDelete
  Replies
  1. நீங்க மட்டும் தான் 1100-வது பதிவு என்பதை கவனித்து வாழ்த்தி இருக்கிறீர்கள்... :) நன்றி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   Delete
 8. படமும் அழகு கவிதையும் அருமை. யதார்த்தமும் அதுதானே வாழ்வில் எத்தனையோ முகமூடிகள் போட வேண்டியச் சூழல் ஏற்படுகிறதுதான்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 9. படமும் கவிதையும் அருமை அண்ணா...
  1100க்கு வாழ்த்துக்கள்... தொடரட்டும் தங்கள் எழுத்து...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த்துகளுகும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   Delete
 10. கவிதையும், அதற்கான விளக்கமும் பொருத்தம்.அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 11. ஆயிரம் பதிவு கண்ட வெங்கட்ஜிக்கு வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சாந்தி மாரியப்பன் ஜி!

   ஆயிரம் பதிவு அல்ல... ஆயிரத்து நூறு பதிவு! :)

   Delete
 12. 1100 ஆவது பதிவிற்கு வாழ்த்துகள்! விரைவில் தங்களின் பதிவுகள் ஐந்து இலக்கத்தைத் தொட வாழ்த்துகள்!

  தங்களின் புகைப்படத்திற்காக திருமதி ராஜி வெங்கட் [எ] ரேவதி வெங்கட்...... அவர்கள் படைத்த கவிதை மிக அருமை. அவருக்கும் எனது பாராட்டுக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 13. கவிதையை ரசித்தேன்...வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருள்மொழிவர்மன்....

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....