எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Monday, June 27, 2016

ஊர்வன, பறப்பன, நடப்பன, குரைப்பன – அனைத்தும் உணவு

ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் பகுதி 21

இந்தப் பயணக் கட்டுரையின் முதல் 20 பகுதிகளைப் படிக்கவில்லையா.....  இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் சுட்டிகளுக்கான ஒரு Drop Down Menu.....


இத்தொடரின் சென்ற பகுதியை இப்படி முடித்திருந்தேன்.....

சரி அடுத்து எங்கே? எனக் கேட்க, அவரை அனுப்பி வைத்த கேரள நண்பர் எங்களை ஒரு இடத்திற்கு அழைத்துப் போகச் சொல்லி இருப்பதாகவும், அங்கே தான் போகப் போகிறோம் என்றும் சொன்னார்.  அது எந்த இடம்.....

கடைவீதி கலகலக்கும்....

நாகாலாந்து செல்வதற்கு முன்னரே நாகாலாந்து மக்களின் உணவுப் பழக்கங்கள் பற்றி கொஞ்சம் தெரிந்து வைத்திருந்தோம். தில்லியில் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலிருந்தும் மக்கள் வந்து வசிக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பழக்கம். அலுவலகத்திலும் நாகாலாந்து மக்கள் ஒன்றிரண்டு பேர் உண்டு. அங்கே இருக்கும் வித்தியாசமான உணவுப் பழக்கங்கள் பற்றி அவர்களிடம் பேசியதுண்டு.  கேள்விப்பட்ட சில கதைகளும் உண்டு.  அவற்றைப் பார்க்கும் முன்னர் எங்கள் ஓட்டுனர் அழைத்துச் சென்ற இடத்திற்கு உங்களையும் அழைத்துச் செல்கிறேன்....

உள்ளே சென்றால்.......

ஓட்டுனர் வண்டியை லாவகமாக கொஹிமா நகரின் சிறிய சந்துகளில் ஓட்டிச் சென்றார். ஒரு வண்டி எதிர் புறமாக வந்துவிட்டால் இரண்டு வண்டிகளும் எதிரும் புதிருமாக நிற்க வேண்டியிருக்கலாம். அல்லது ரொம்பவே சிரமப்பட்டு தான் முன்னேற வேண்டியிருக்கும். அப்படிப்பட்ட சந்துகள் வழியே எங்களை அழைத்துச் சென்று வண்டியை நிறுத்திய இடம் ஒரு கடைத்தெரு – சுற்றிலும் கடைகள். கடைகளைத் தவிர வேறு எதுவுமில்லை.  என்ன கடைகள் என்று தானே கேட்கிறீர்கள் – சொல்கிறேன்.

புழுக்களும் விற்பனைக்கு.....

எங்கு பார்த்தாலும் இறைச்சிக் கடைகள் – பெரும்பாலான உயிரினங்களை – ஊர்வன, பறப்பன, நடப்பன, மிதப்பன மற்றும் குரைப்பன சாப்பிடும் வழக்கம் நாகாலாந்து மக்களுக்கு உண்டு. நாய்களைக் கூட இவர்கள் விட்டு வைப்பதில்லை.  நாய் இறைச்சி இங்கே மிகவும் பிரபலமான உணவு! ஒவ்வொரு கடையிலும் ஒவ்வொரு உயிரினத்தின் இறைச்சி விற்கப்படுகிறது – ஒரு பக்கம் பார்த்தால் பன்றி இறைச்சி, இன்னுமொரு பக்கத்தில் கோழி, நாய் என பக்கம் பக்கமாக வெட்டித் தள்ளுகிறார்கள்.  அவற்றை வாங்குவதற்கு மக்கள் வந்த வண்ணமே இருக்கிறார்கள்.

தவளை, நத்தை, வெள்ளெலி விற்பனை......

சின்னச் சின்ன சந்துகளில் இருந்த கடைகளுக்கு எங்களை அழைத்துச் செல்கிறார் அந்த ஓட்டுனர் – நாங்கள் ஐவரும் கையில் கேமராவைப் பிடித்தவாறு கூடவே நடக்கிறோம்.  எல்லா பக்கமும் பார்த்தவாறே உள்ளே செல்ல, அவர் எங்களை நிறுத்திய இடம் நாய்க்கறி விற்கும் ஒரு கடைக்கு முன்னர்! இங்கே தான் நாய்கள் வெட்டுவார்கள் எனச் சொன்னதோடு, கடைக்காரரிடம் நாகா மொழியில் பேசுகிறார் – அவர் உள்ளே சென்று ஒரு தட்டில் நாயின் இறைச்சி எடுத்து வந்து காண்பித்து, நாய் வெட்டுவதைப் பார்க்க வேண்டுமா என்றும் கேட்க, நாங்கள் மெர்சலானோம்..... 

மீனம்மா.... மீனம்மா....

அவசரமாக மறுத்து விட்டு, முன்னேறினோம்.  ஒவ்வொரு கடையிலும் வைத்திருக்கும் அவர்களது உணவு வகைகளின் பெயர்கள் கூடத் தெரியாமல், அவற்றை பார்த்தபடியே முன்னேறுகிறோம்.  ஒரு கடையின் வாசலில் மூங்கில் தட்டுகள் – அதில் பிளாஸ்டிக் பைகளில் ஏதோ இருக்கிறது – பிளாஸ்டிக் பைகளுக்குள் குதித்த வண்ணம் இருக்கிறது – சற்றே கூர்ந்து கவனித்தால் அவை உயிருள்ள தவளைகள்/தேரைகள்.  அவற்றையும் சாப்பிடுவார்களாம். வாத்து, வெள்ளெலி, புழுக்கள், நத்தை, தேனீக்கள் என எதையும் விடுவதில்லை......

தட்டுத் தட்டாய் புழுக்கள்...... - உயிருடன்!

ஒரு கோழிக்கடையில் சின்னதாய் ஒரு டிரம். அதற்கு ஒரு மூடி. உயிருடன் இருக்கும் கோழியை ஒருவர் எடுத்துக் கொடுக்க, டிரம்மில் கோழியைப் போட்டு ஒரு Switch போட டிரம் சுற்ற ஆரம்பிக்கிறது.  டிரம்மின் அடிப்பகுதியில் இருக்கும் ஒரு ஓட்டை வழியே ரத்தம் கொட்ட ஆரம்பிக்கிறது. உயிருடன் போட்ட கோழி உள்ளே ஒரு உயிர்போராட்டம் நடத்துகிறது. டிரம்மில் இருக்கும் கத்திகள், கோழியின் இறக்கைகளையும் தோலையும் உரித்து எடுக்கிறது! Switch-ஐ நிறுத்தி உரித்த கோழியை எடுக்கிறார் கடைக்காரர்...

தேனடை - தேனீக்களுடன்.....

எங்குமே சுத்தம் என்பது இல்லை. ரத்தமும், தோல்களும், இறக்கைகளும் கிடக்க, ஒரு வித ரத்த வாடை அடித்த படியே இருக்கிறது. எங்கெங்கும் இறைச்சியும், ரத்தமும்!

வேறு வகை புழுக்கள் - இவையும் உயிருடன்.....

என்னைத் தவிர மற்ற நான்கு நண்பர்களும் அசைவம் சாப்பிடுபவர்கள் தான் என்றாலும், கடைகளைப் பார்த்த பிறகு அவர்கள் நான்கு பேருமே கொஞ்சம் தடுமாறித்தான் போனார்கள் என்று சொல்ல வேண்டும்.  “இரும்பு அடிக்கற இடத்துல ஈக்கு என்ன வேலை?என்று என்னிடம் நீங்கள் கேட்கலாம்.....  பயணத்தின் போது இப்படி அமைந்து விடுவது தவிர்க்க முடியாத ஒன்று! நான் சாப்பிடுவது இல்லை என்றாலும் அடுத்தவர்கள் சாப்பிடுவதை தவறாகச் சொல்வதில்லை. பிடித்தவர்கள் சாப்பிடுகிறார்கள், சாப்பிடட்டும் என்று நினைப்பவன் நான்.

உணவாகப் போகும் வெள்ளெலிகள்......

கைகளில் கேமராவுடன் நாங்கள் அனைவரும் செல்ல, முன்னே நாகாலாந்து ஓட்டுனர் இருக்க, எங்களைப் பார்த்த கடைக்காரர்கள், வந்திருந்த மக்கள் அனைவரும் வித்தியாசமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். சில கடைக்காரர்கள் ஓட்டுனரிடம் நாகா மொழியில் எங்களைப் பற்றிக் கேட்கவும் செய்தார்கள். அவர் என்ன சொன்னார் என்பது புரியவில்லை – சுற்றுலாப் பயணிகள் என்பதைத் தவிர – கூடவே அரசுத் துறை என்றும் சொன்னது புரிந்தது. நாங்கள் கடைகளையும், அங்கே விற்பனை செய்யப்படும் பொருட்களையும் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம்.

பைக்குள் தவளைகள்/தேரைகள்.....

வித்தியாசமான அனுபவம் அது. நாகாலாந்தில் பெரும்பாலானவர்கள் இறைச்சி சாப்பிடும் வழக்கம் கொண்டவர்கள் – எதையும் விட்டுவைப்பதில்லை. அவர்களுக்கு பிடித்திருக்கிறது சாப்பிட்டுப் போகிறார்கள் என்று நினைத்தபடியே தில்லி நண்பர் அவர்களைப் பற்றி சொன்ன கதையை நினைத்துக் கொண்டேன்.  அது என்ன கதை?.....

ஓடுகளோடு.....  

தில்லியில் முனீர்கா பகுதியில் வடகிழக்கு மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் – நாகாலாந்து மக்களும் உண்டு. அவர்கள் வந்த பிறகு இரவு நேரங்களில் தெரு நாய்களை பிடித்து சமைத்து விடுவார்கள் என்றும், அவர்களிடம் இருந்து வரும் வியர்வை காரணமாக நாய்கள் அவர்களைப் பார்த்தாலே ஓடி விடும் என்றும் சொல்வார்கள்.  சில அரசுக் குடியிருப்புகளில் நாகாலாந்து மக்கள் வந்த பின்னர் தெரு நாய் தொந்தரவு இல்லை என்றும் பேசிக் கொள்வார்கள். இது உண்மையோ இல்லை கட்டுக் கதையோ தெரியாது....  நாகாலாந்தில் வசிக்கும் பலர் நாய்க்கறி சாப்பிடுவார்கள் என்பது உண்மை!

பன்றி இறைச்சிக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த முதியவர்......

எது எப்படியோ, இங்கே சென்று வந்ததில் எனக்குப் பெரிதாய் பாதிப்பு எதுவும் இல்லை என்றாலும், என்னுடன் வந்த அசைவ உணவு சாப்பிடும் நண்பர்கள் இரண்டு நாட்களுக்கு அசைவ உணவு சாப்பிடவில்லை.....

மார்க்கெட் சென்ற பிறகு, எங்கே சென்றோம் என்பதை அடுத்த பதிவில் சொல்கிறேன்.....

மீண்டும் சந்திப்போம்....

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.

46 comments:

 1. ஐயோ..... படிக்கும்போதே அடிவயித்துலே அப்படி ஒரு திகில்..... பாவம் நாய்களும்தான் :-(

  ஒவ்வொருவர் உணவுப் பழக்கம். நாம் ஒன்னும் சொல்றதுக்கு இல்லை என்றாலும்..... செல்லமாக நாம் வளர்க்கும் நாய்களும் என்று நினைக்கும்போது பகீர்.........

  ReplyDelete
  Replies
  1. பாவமாகத் தான் இருந்தது.

   அவர்களுக்கு அந்த மாதிரி உணவுப் பழக்கம். நாம் ஒன்றும் சொல்வதிற்கில்லை என்று நினைத்தபடியே தான் நானும் நகர்ந்து கொண்டிருந்தேன்..

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   Delete
 2. எப்படித்தான் சப்பிடுகிறார்களோ
  தம +1

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 3. அங்கேயும் ஒரு வள்ளலார் தோன்றினால் நல்லது :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

   Delete
 4. பதிவையே பினாயில் போட்டு வாஷ் பண்ணனும் போல...

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா.... நல்ல வேளை பதிவு எழுதுன Laptop-ஐ தண்ணீல முக்கல! :)

   வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஆதி வெங்கட்.

   Delete
  2. அதுக்குப் பதிலா இங்கே நம்ம மடிக்கணினி காப்பியால் அபிஷேஹம் செய்து கொண்டது! :)

   Delete
  3. ஆஹா காபி அபிஷேகமா.... நடத்துங்க.... :)key ஒட்டுமே!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   Delete
 5. நானும் அசைவம் உண்பவன் தான் என்றாலும் இது கொஞ்சம் தடுமாற வைக்கிறது. எப்படித்தான் சாப்பிடுகிறார்களோ . நீங்கள் அதுவும் சைவம் எப்படி இதைப் பார்த்தீர்கள்! சல்யூட்! கீதா இது பற்றிச் சொல்லியது உண்டு அவரது கணவர் அங்கு சென்று வந்ததால். வித்தியாசமான அனுபவம் தான் உங்களுக்கு. தொடர்கின்றோம்..

  கீதா : “இரும்பு அடிக்கற இடத்துல ஈக்கு என்ன வேலை?” என்று என்னிடம் நீங்கள் கேட்கலாம்..... பயணத்தின் போது இப்படி அமைந்து விடுவது தவிர்க்க முடியாத ஒன்று! நான் சாப்பிடுவது இல்லை என்றாலும் அடுத்தவர்கள் சாப்பிடுவதை தவறாகச் சொல்வதில்லை. பிடித்தவர்கள் சாப்பிடுகிறார்கள், சாப்பிடட்டும் என்று நினைப்பவன் நான்.//

  அதே அதே வெங்கட்ஜி! நானும் மகனும் இப்படித்தான் பார்த்தாலும் பாதிப்பு ஏற்படாது. கணவர் நாகாலாந்து சென்று வந்த போது சொல்லியிருக்கிறார். ஆனால் அவர் கல்லூரி வளாகத்தில் தங்கியிருந்ததால் அங்கு உணவு அசைவம் என்றாலும் இவர் கெஸ்ட் வகுப்புகள் எடுக்கப் போயிருந்ததால் ப்ரெட் ஜாம், ரொட்டி/பூரி தால், உருளைக் கிழங்கு என்று சமாளித்து விட்டார். ஆனால் மற்றபடி சுற்றுலா என்றால் சமாளிக்க முடியாத்வர்களுக்குச் சற்றுச் சிரமம்தான் என்றார். உங்கள் பதிவிலிருந்து அது நன்றாகவே தெரிகிறது என்றாலும் பிரதானம் , ஆர்வம் சுற்றுலாவை அனுபவிப்பதுதானெ...அருமையாக இருக்கிறது ஜி. தொடர்கின்றோம்..

  ReplyDelete
  Replies
  1. சுற்றுலா செல்லும்போது பல அனுபவங்கள் கிடைப்பதுண்டு. சிலவற்றை நமக்குப் பிடிக்கவில்லை என்றாலும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். அவர்கள் மாநிலப் பழக்கம் எல்லாவற்றையும் சாப்பிடுவது - அதை குறை சொல்ல நமக்கு உரிமை இல்லை. சில அனுபவங்கள் முதல் முறையாக கிடைப்பவை.... :) இந்த அனுபவம் போல!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 6. ஆண் சிங்கம் என்று பார்த்தேன் முதலில்...வந்ததும் காணவில்லையே. காட்டில் விட்டு விட்டீர்களோ??!!!!!! ஹஹஹ்...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. ஆண் சிங்கம் இன்று பதிவாக..... நேற்றே தவறாக இரண்டு பதிவுகளையும் Schedule செய்து விட்டேன்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   Delete
 7. எதையுமே விட்டுவைக்காத நாகா மக்கள்! வித்தியாசமானவர்கள்தான்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 8. ஐந்து வருடம் சிங்கப்பூரில் இருந்தபோது - இப்படிப்பட்ட கடைத் தொகுப்புகளைப் பார்த்திருக்கின்றேன்..

  நாய்க்கறி விற்பனையைக் கண்டதில்லை.. ஆனால் குரங்கு பரிமாறப்படும் கடையைப் பார்த்திருக்கின்றேன்..

  சர்வசாதாரணமாகப் பாம்புகளின் தோலுரித்துக் கொண்டிருப்பார்கள்..

  இங்கே பாம்புக்கறி விற்கும் கடைகளைக் காணோமே!..

  ReplyDelete
  Replies
  1. பாம்புக்கறி விற்கும் கடை - இன்னும் சில கடைகள் உண்டு. அவற்றை சில பதிவுகளுக்குப் பிறகு பகிர்ந்து கொள்கிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   Delete
 9. எங்க வீட்டுப் பக்கத்துல பெருசா நார்த்-ஈஸ்ட், நாகாலாந்து சம்பந்தப்படட ஒரு பெரிய கட்டடம் வருகிறது. இனி தெருநாய் தொல்லை குறைந்துவிடும் என்று நினைக்கிறேன்.

  (தமிழ்நாட்டில் விவசாயம் குறைந்து கொண்டே வருவதை பார்க்கும் போது இன்னும் ஒன்றிரண்டு தலைமுறைக்கு அப்புறம் எல்லோரும் மீண்டும் மாமிசம் தின்ன ஆரம்பித்து விடுவார்களோ என்னமோ?)

  ReplyDelete
  Replies
  1. ரொம்ப நாளா கட்டிட்டு இருக்காங்களே... இன்னுமா முடிக்கல?

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.....

   Delete
 10. நாகாலாந்து மக்கள் நாய்க்கறி உண்பவர்கள் என்பதை ஏற்கனவே அறிந்திருந்தேன் ஜி படங்களை காணும் பொழுதே குமட்டுகின்றது.

  ReplyDelete
  Replies
  1. நேரில் பார்த்தால் என்னாவது?

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 11. உங்களுக்கு அசாத்திய தில்

  ReplyDelete
  Replies
  1. அசாத்திய தில்! :)))

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!

   Delete
 12. பிலிப்பைன்ஸ் நாட்டிலும் மக்கள் நாய்க்கறி சாப்பிடுவார்கள். அந்த ஊரில் தெரு நாய்களே இல்லை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ப. கந்தசாமி ஐயா.

   Delete
 13. நாய்கள் கூடவா? அடைப்பு பாவமே... இந்தப் பதிவைப் படிக்காமலே இருந்திருக்கலாமோ!

  ReplyDelete
  Replies
  1. நாய்களும்..... அடடா... பதிவு போட்டு உங்களை கஷ்டப்படுத்திட்டேனா....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 14. உவ்வேஏஏஏஏக்!!!! ஐயோ...படிக்கவே என்னவோ மாதிரி இருக்கு!! நீங்க உள்ள போயிட்டு வந்து பதிவு வேற எழுதிட்டீங்களே!! க்ரேட்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மஹி.....

   Delete
 15. அடப்பாவிங்களா ஒண்ணையும் விடமாட்டானுங்க போல...
  அசைவம் சாப்பிடாத நீங்கள் அந்த ஏரியாவுக்குள் சென்று வந்ததே பெரிய விஷயம்தான்...

  ReplyDelete
  Replies
  1. ஒண்ணையும் விடறது இல்ல!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   Delete
 16. பியர் கிரில்ஸ்ச முந்திருவான்களோ ///

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீமலையப்பன் ஸ்ரீராம்.

   Delete
 17. ஒரு சில மேலை நாடுகளில் இப்படிச் சாப்பிடுவாங்கனு கேள்வி! முக்கியமாய்ச் சீனா, மங்கோலியாவைச் சேர்ந்தவர்கள். நம் உலக(க்கை) நாயகரும் எல்லாவத்தையும் சாப்பிடுவேன்னு பேட்டி கொடுத்த நினைவு மனதில் வந்தது. :)

  ReplyDelete
  Replies
  1. உலக நாயகர் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். எல்லாமே தலைப்புச்செய்தி தான்..

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   Delete
 18. அங்கு உணவுப் பஞசமே இருக்காது என்று நினைக்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. பஞ்சம் வந்த பிறகு தான் இப்படி எல்லாவற்றையும் சாப்பிடத் துவங்கி இருக்க வேண்டும் என்று தோன்றியது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   Delete

 19. ஒருவரின் உணவு இன்னொருவருக்கு விஷம் என்று பழமொழி ஒன்று உண்டு. இங்கே விஷம் என்பதற்கு பதிலாக வேடிக்கை என்று சொல்லலாம் போல. உண்மையில் அசைவ உணவு சாப்பிடுபவர்கள் கூட இதைப் பார்த்தால் ரியாண்டு மூன்று நாட்கள் எதையும் சாப்பிடமாட்தார்கள் என நினைக்கிறேன். இருப்பினும் உணவுப் பழக்கம் ஒருவரின் தனிப்பட்ட இரசனை. இதில் பிறர் சொல்ல ஏதுமில்லை.

  அடுத்து எங்கு சென்றீர்கள் என அறியக் காத்திருக்கிறேன்!

  ReplyDelete
  Replies
  1. ஒருவரின் உணவு இன்னொருவருக்கு விஷம்..... ஆமாம்.

   அசைவம் சாப்பிடும் நண்பர்களும் இரண்டு நாள் அப்படித் தான் இருந்தார்கள். சைவம் மட்டுமே....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 20. அருமையான பயண செய்தி தொகுப்பு.

  சைனா சென்றிருந்தபோது விசாரித்தேன் நாய் கறி பற்றி,ஆனால் திடுக்கிடும் தகவல் எதுவுமென் செவிகளில் கேட்கவில்லை. நாய் நன்றி உள்ள பிரியாணி சாரி பிராணி என்று மட்டுமே அறிந்திருக்கிறேன்.

  தொடரட்டும் பயணம்.

  கோ

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவில் பிள்ளை ஜி!

   Delete
 21. படிக்கவும் பார்க்கவும் கொஞ்சம் கஷ்டம்தான். சிங்கப்பூரில் அந்தக்காலத்தில் (12 வருடங்களுக்கு முன்பு) நடைபாதையில் ஓரத்தில், பாம்புகள், பூச்சிகளை ரெடியாக வைத்துக்கொண்டிருந்த சிறு கடைகளைப் பார்த்திருக்கிறேன். (சொன்னா, உடனே வெட்டித் தருவார்கள் என்று நினைக்கிறேன்). தாய்வானில், அவர்களது உணவின் மணம் வயிற்றைப் பாடாய்ப்படுத்தும். வெட்கமில்லாமல், கர்சீப்பால் முகத்தை மூடிக்கொண்டு கடந்துசெல்லவேண்டியிருக்கும். பிலிப்பைன்ஸில் அந்த அளவுக்கு இல்லை. அந்த வாசனைதான் ரொம்ப டிரெபிள் கொடுக்கும். எப்படித்தான் அந்தப் பாதையெல்லாம் கடந்துசென்றீர்களோ. (அவர்களுக்கு, நம்ம கத்திரிக்கா கூட்டு வாசனையும், சாம்பார் வாசனையும் உவ்வே ரகமாயிருக்கலாம். யாருக்குத் தெரியும்)

  ReplyDelete
  Replies
  1. அந்தப் பாதையெல்லாம் கடந்து செல்லும்போது கொஞ்சம் கடினமாகத் தான் இருந்தது. குமட்டிக் கொண்டு வரவில்லை என்றாலும், உயிரினங்கள் துடிக்கும்போது மனதுக்குக் கஷ்டமாக இருந்தது.

   அவர்களுக்கு நம்ம கத்திரிக்கா கூட்டு வாசனை உவ்வே ரகமாயிருக்கலாம்! :))

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
 22. நாகாலாந்து மக்கள் முன்காலத்தில் நரமாமிசம் சாப்பிடுவார்கள் என்று கதைகளில் படித்து இருக்கிறேன். அப்புறம் மற்றவற்றை சாப்பிடுவது ஒன்றும் அதிசயமில்லை. நீங்கள் வாடையை சகித்துக் கொண்டு படம் எடுத்து இருப்பது பெரிய விஷ்யம்.

  ReplyDelete
  Replies
  1. இப்போது இருப்பவர்கள் நரமாமிசம் சாப்பிட மாட்டார்கள் என்ற ஒரு நம்பிக்கை தான்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா..

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....