1969-ஆம்
வருடம் வெளிவந்த தமிழ் திரைப்படம் – சாந்தி நிலையம். காதல் மன்னன் ஜெமினி கணேசன் நடித்த
திரைப்படம். இந்த படத்தில் வரும் ஒரு
பாடல் தான் “இயற்கை என்னும் இளைய கன்னி” என்கிற பாடல். கவியரசு கண்ணதாசன் அவர்கள் எழுத,
மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் அவர்கள் இசையமைக்க எஸ்.பி. பாலசுப்ரமணியன் மற்றும்
பி.சுசீலா சேர்ந்து பாடிய பாடல். அந்த
பாடலுக்கும் இன்றைய பதிவுக்கும் சற்றே சம்பந்தம் உண்டு! இன்றைய பதிவும் இயற்கை சம்பந்தப்பட்டது
தான்.....
சில மாதங்களாகவே இணையத்தில், குறிப்பாக Instagram, Twitter, Facebook என பல தளங்களிலும் Nature Photography Challenge என்ற ஒரு விஷயம் பரவலாக இருக்கிறது. இயற்கை
சம்பந்தப்பட்ட புகைப்படங்களை ஒரு வாரத்திற்கு ஒவ்வொரு நாளும் பகிர வேண்டும். ஒவ்வொரு நாளும் வேறு ஒருவரையும் அப்படி இயற்கை
சம்பந்தப்பட்ட புகைப்படங்களை பதிவு செய்ய அழைக்க வேண்டும். இது தான் இந்த Nature Photography Challenge. நமது
வலைப்பூக்களில் வரும் தொடர் பதிவு போன்றதொரு விஷயம்.
ரொம்ப நாட்களாகவே ஃபேஸ்புக்கில் இப்படி நண்பர்கள் சிலர்
புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்டிருந்ததை பார்க்க முடிந்தது. தினம் ஒரு புகைப்படம்
பகிர்வதோடு, வேறு நண்பரையும் புகைப்படம் பகிர அழைத்த வண்ணம்
இருந்தார்கள்..... ஒரு நாள் எனக்கும்
அழைப்பு வந்து விட்டது. தினம் ஒரு புகைப்படம் – இயற்கை சம்பந்தப்பட்ட புகைப்படம்
பகிர்ந்து கொள்வதில் சிரமம் இல்லை என்றாலும் தினம் ஒருவரை புகைப்படம் பகிர
அழைப்பது கடினம் என்பதால் சற்றே சிந்தனையாக இருந்தது.
சரி வாரம் முழுவதும் ஒவ்வொரு நாளும் நான் எடுத்த ஒரு
புகைப்படத்தினை பகிர்ந்து கொண்டு, வாரத்தின் கடைசி நாளன்று வேறு ஒருவரை இதைத்
தொடரச் சொல்வோம் என்று களத்தில் இறங்கி விட்டேன்.
சென்ற சில நாட்களில் எனது ஃபேஸ்புக் கணக்கில் வெளியிட்ட ஏழு
புகைப்படங்களும் அவை எடுத்த இடங்களும் இந்த ஞாயிறில் இங்கே ஒரு தொகுப்பாக –
ஃபேஸ்புக்கில் எனைத் தொடராத வலையுலக நண்பர்களுக்காகவும், ஒரு சேமிப்பாகவும் –
இங்கே......
படம்-1: சென்ற வருடம் வடகிழக்கு
மாநிலங்களுக்குப் பயணம் செய்த போது கடைசியாக கொல்கத்தா நகருக்கு வந்து
சேர்ந்தோம். அங்கே வரும்போது ஒரு ஏரியில்
பார்த்த இலை தான் இந்த படம்..... இயற்கை
அன்னையின் படைப்பில் எத்தனை அழகு......
படம்-2
படம்-2: சென்னையிலிருந்து மஹாபலிபுரம்
செல்லும் வழியில் இருப்பது முட்டுக்காடு. முட்டுக்காடு ஏரியில் படகுப் பயணம்
செய்யும் போது எடுத்த படம் இது.....
படம்-3
படம்-3: ஹிமாச்சலப் பிரதேசம் – அழகான மாநிலம்.
அந்த மாநிலத்தின் மணாலி நகரில் இருக்கும் சோலாங்க் வேலி.... பனி படர்ந்த மலைகள்,
மலைகளைத் தொடும் மேகங்கள், பைன் மரங்கள் என அற்புதமான அனுபவம். அங்கே எடுத்த புகைப்படம் இது. இந்த வருடத்தின்
மார்ச் மாத கடைசியில் அங்கே சென்றபோது எடுத்த புகைப்படம்.
படம்-4
படம்-4: இந்த படம் உத்திராஞ்சல்
மாநிலத்தில் எடுத்த படம். “ஏரிகள் நகரம் – நைனிதால்” அருகே இருக்கும் நோகுச்சியா தால் எனும்
ஒன்பது முனை ஏரி.....
படம்-5
படம்-5:
ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினம் நகரம் – அழகிய கடற்கரை – அதன் அருகே
ஒரு சிறு மலை – பெயர் கைலாசகிரி.... அந்த
சிறு மலையிலிருந்து கடற்கரையை எடுத்த புகைப்படம்.....
படம்-6
படம்-6: இந்தப் படமும் ஹிமாச்சலப்
பிரதேசத்தில் எடுத்த படம் தான். பயணம் செய்தது – இந்த ஏப்ரல் மாதத்தில். இடம் – டல்ஹவுசி அருகே இருக்கும் ஒரு ஏரி. அருகே மலை மேல் அமைந்திருக்கும் தேவி கோவிலில்
இருந்து ஏரியை எடுத்த படம் இது.
படம்-7
படம்-7: அருணாச்சலப் பிரதேசம் – தவாங் அருகே
மார்ச் மாதத்தில் உறைந்து கிடக்கும் ஒரு சிறு ஏரி. ஏரியின் வடிவம் – இயற்கையாகவே இதய
வடிவத்தில்! நிச்சயம் பிடிக்கும்!
என்ன நண்பர்களே, இந்த வாரத்தின் இயற்கை புகைப்படங்களை
ரசித்தீர்களா? புகைப்படங்கள் பற்றிய உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன்....
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.
இயற்கையின் அற்புதங்கள் கண்கொள்ளாக்காட்சி அற்புதமாக படம் பிடித்திருக்கிறீர்கள்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.
நீக்குபடங்கள் அருமை. நாரைகள் படம் சிறப்பாக உள்ளது.
பதிலளிநீக்கு--
Jayakumar
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் ஐயா.
நீக்குபடங்கள் அனைத்தும் அருமை..
பதிலளிநீக்குஇயற்கை - இயற்கையாக இருக்கும் வரையில் அழகுதான்..
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!
நீக்குவழக்கமாக உங்களது பதிவில் புகைப்படங்கள் முக்கிய இடத்தைப் பெறும். தற்போது அதற்கும் அப்பால் சென்று தாங்கள் அருமையான புகைப்படங்களைப் பகிர்ந்த விதம் அருமை.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.
நீக்குஒவ்வொருப் படங்களும் தங்களின் கலைத்தாகத்தை வெளிப்படுத்துகின்றன,தங்களின் வலைப்பூ படைப்புகளைபோல.வாழ்த்துக்கள் வெங்கட்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன்.
நீக்குஅற்புதமாக படம் பிடித்திருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குசிறப்பு சகோ...
https://kovaikkavi.wordpress.com/
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவைக்கவி இலங்காதிலகம் ஜி!
நீக்குஇங்கேயும் ரசித்தேன்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நீக்குவிழியும் மனதும் குளிர்ச்சியடைந்தது அய்யா
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீமலையப்பன் ஸ்ரீராம்....
நீக்கு
பதிலளிநீக்குபடங்கள் அனைத்தும் அருமை. அதுவும் அவை தேர்ந்த புகைப்பட கலைஞரால் எடுக்கப்பட்டிருக்கும்போது அழகிற்கு கேட்கவா வேண்டும்? பாராட்டுகள்!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.
நீக்குபுகைப்படங்கள் அனைத்தும் ரசித்தேன் ஜி அருமை.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!
நீக்குஇயற்கையின் அழகை அப்படியே படம் பிடித்து கொடுத்தமைக்கு நன்றி.அங்கும், இங்கும் ரசித்தேன்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஐயா
படங்களுடன் அற்புத விளக்கம் கண்டு மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.
நீக்குபடங்களில் ரசிக்கும் இடங்களை ,நேரிலும் ரசிக்கணும் என்ற ஆசையை தூண்டுகிறதே :)
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!
நீக்குஇயற்கைக் காட்சிகளை ரசிக்கும் மனம் வேண்டும் அந்த நேரத்தில் கையில் காமிரா இருக்க வேண்டும் அவை உங்களிடம் தாராளமாகவே இருக்கிறது அனைத்தையும் ரசித்தேன்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.
நீக்குஅருமை! அருமை!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.....
நீக்குபடங்கள் எல்லாமே நிஜமாக நன்றாக இருந்தது. உங்கள் வலைத் தளத்தில் அவ்வப்போது முகப்புப் படத்தை மாற்றுவதையும் பார்க்கிறேன். ரயிலை சரியான நேரத்தில் படம் பிடித்துள்ளீர்கள். இயற்கையை, வித்தியாசமாகப் பார்க்கிற அந்தக் கண்கள் ஃபோட்டோகிராபிக்கு மிகவும் முக்கியமானது.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.
நீக்குஇயற்கைக் காட்சிகள் - படங்கள் மிகவும் அருமை அய்யா. வாழ்க உங்கள் தொண்டு.
பதிலளிநீக்குவிஜயராகவன்
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விஜயராகவன் ஜி!
நீக்குஜி! உங்கள் காமேரா கண்களும் உங்கள் காமேராவும் விளையாடுகின்றன!!! மிக மிக ரசித்தோம் ஜி!அருமை அருமை...பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல இருக்கின்றன அனைத்தும்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!
நீக்கு