எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Wednesday, June 8, 2016

காபியில் போதை பொடி – Bபெல் பையன் – போதையில் அரசுப் பேருந்து ஓட்டுனர்

முகப் புத்தகத்தில் நான் – 8

திருவரங்கம் முரளி காபி – 5 ஜூன் 2016திருவரங்கம் – ராஜ கோபுரத்தின் அருகே ஒரு கடை – பெயர் பலகையோ, பதாகையோ இருக்காது.  சிறிய கடை – வாசலில் எப்போதும் கூட்டம் – அனைவரும் டபரா டம்ளரோடு காபி ருசித்தபடி இருப்பதைப் பார்க்க முடியும். இத்தனைக்கும் கடை காலையும் மாலையும் குறிப்பிட்ட நேரம் மட்டுமே திறந்திருக்கும். காபியின் சுவை – ஒரு முறை குடித்தால் மீண்டும் குடிக்கத் தூண்டும் விதமாய் இருக்கும்.  இக்கடை பற்றி நாளிதழ்களில் கூட வந்திருக்கிறது. நானும் முன்பொரு முறை எழுதி இருப்பதாய் நினைவு......

சமீபத்தில் முரளி கடைக்குச் சென்று காபி குடித்துக் கொண்டிருந்தேன். விலை ரூபாய் 15 மட்டும்! எனக்கு அருகே இன்னும் ஒருவர் காபியைச் சுவைத்தபடியே முரளி கடை காப்பியின் ருசி பற்றி சிலாகித்துக் கொண்டிருந்தார்.

மூணு விதமான காபி பொடி கலக்கி தான் இவங்க பயன்படுத்துகிறார்கள். பாலை சுண்டக் காய்ச்சியபடியே இருப்பார்கள். அதன் பின் ஏதோ ஒரு பொடியை கலக்கி வைப்பார்கள். அது என்ன பொடி? ஒரு வேளை போதைப்பொடியாகக் கூட இருக்கலாம்..... நானும் என்ன பொடின்னு சில முறை கேட்டிருக்கேன். சொல்ல மாட்டேங்கறான்..... ஆனா டேஸ்ட் செமயா இருக்கிறதால திரும்பத் திரும்ப இங்க வந்து காபி குடிக்கத் தோணுது.....  நானும் இங்கே கிட்டத்தட்ட பதினைந்து வருஷத்துக்கு மேலேயே கஸ்டமர்.....

பக்கத்தில் நின்று இதைக் கேட்டபடியே காபி குடித்துக் கொண்டிருந்த எனக்கு மண்டைக் குடைச்சல்.... போதைப் பொடி! ஒரு வேளை அப்படியும் இருக்குமோ..... சே... சே.... இருக்காது. இருந்தா இத்தனை வருஷமா கடையை பிரச்சனை இல்லாம நடத்த முடியாது.  காபி நல்லா இருக்குன்னு தானே எல்லாரும் இங்கே காபி குடிக்க வறாங்க.... பக்கத்து போலீஸ் ஸ்டேஷனுக்குக் கூட இங்கே இருந்து தான் காபி போகுது..... ரகசிய ஃபார்முலா சொல்லாததால இப்படி புரளி கிளப்பி விடறார் போல என்று நினைத்தபடியே கடைசிச் சொட்டு காபியை ரசித்துக் குடித்தபடியே நகர்ந்தேன். காபியின் ருசி இன்னமும் நினைவில்........

Bபெல் பையனும் அழுமூஞ்சி சுப்பியும்........ – 6 ஜூன் 2016

ஒரு அடுக்கு மாடி குடியிருப்பு....  தரை தளத்திலுள்ள ஒரு வீடு. அந்த வீட்டில் உள்ள சிறுவனும் சிறுமியும் தான் இந்த பகிர்வின் முக்கிய பாத்திரங்கள்....  சிறுவனுக்கு ஆறு வயதுக்குள். சிறுமி நான்கு வயது.  பெரும்பாலான நேரங்களில் தரைத் தளத்திலுள்ள வாகனங்கள் வைக்குமிடத்திலேயே சைக்கிளில் சுற்றி வருகிறார்கள்.  சிறுவன் சைக்கிளில் சுற்றி வரும் சமயத்தில் எல்லாம் தேவையோ இல்லையோ Bபெல்லை அடித்து ஓசை எழுப்பியபடியே இருக்கிறான். அந்தச் சிறுமி பெரும்பாலான நேரங்களில், எதற்கெடுத்தாலும் அழுத படியே இருக்கிறாள்.

குடியிருப்பில் இருக்கும் வயதானவர்களுக்கும், மற்றவர்களுக்கும் அச்சிறுவன் எழுப்பும் சைக்கிள் மணியோசையும் சிறுமியின் அழுகையும் ஒரு தொந்தரவாகவே இருக்கிறது.  என்றாலும் யாரும் அவர்களை கண்டிப்பதில்லை. அவ்விருவரின் அம்மா/அப்பாவிடமும் சொல்வதில்லை.  ஏன் என்றால், நாள் முழுவதும் ஓசை எழுப்பினாலும், அழுதாலும் அந்த இருவர்களிடமும் எந்த வித பாதிப்பும் இல்லை. தங்களது குழந்தைகளை கண்டிப்பதோ, அழுகையை நிறுத்த முயற்சிப்பதோ இல்லை. அம்மா பெரும்பாலான நேரத்தில் தொலைக்காட்சி சீரியல்களில் மூழ்கி இருக்கிறார். அதுவும் அதிகமான ஒலியோடு அந்த வசனங்கள் கேட்டுக் கொண்டிருக்கும் அவரிடம் குழந்தைகளின் தொல்லை பற்றி சொல்லி என்ன ஆகப் போகிறது!

பல அடுக்குமாடி குடியிருப்புகளிலும் இது போன்ற பிரச்சனைகள் தான். குழந்தைகளின் குறும்புகள் ரசிக்கும்படியானவை தான் என்றாலும் தொடர்ந்து ஒரே குறும்பாக, ஒரே செயலாக இருக்கும்போது ரசிக்க முடிவதில்லை!
  
மதுவருந்தி வாகனம் செலுத்திய ஓட்டுனர் - 7 ஜூன் 2016

சமீபத்தில் திருச்சியிலிருந்து சென்னைக்கு பேருந்தில் வந்து கொண்டிருந்தேன்.  நள்ளிரவுக்கு மேல் விழுப்புரம் அருகே ஒரு பாடாவதி உணவகத்தில் வண்டி நின்றது. இயற்கை உபாதைகளை முடித்துக் கொண்டு சற்று நேரம் வெளியே காற்றாட நின்று கொண்டிருந்தேன். எதிர் பக்கத்தில் சென்னையிலிருந்து அறந்தாங்கி செல்லும் அரசுப்பேருந்து ஒன்று நின்று கொண்டிருந்தது. அந்தப் பேருந்தில் பயணம் செய்பவர்கள் பலரும் வாகனத்தில் அருகில் நின்றுகொண்டு உரத்த குரலில் நடத்துனரோடு பேசிக் கொண்டிருந்தார்கள்.  சற்றே கவனிக்க, விஷயம் தெரிந்தது.

வண்டி புறப்படும் போதே ஓட்டுனர் மது அருந்தி தான் வண்டியை எடுத்திருக்கிறார். வழி முழுவதும் ஓட்டுனருக்கு, நடத்துனருக்கும், சின்னச் சின்ன விஷயங்களில் சண்டைகள், பயணிகளிடமும் வாக்குவாதங்கள் என தொடர்ந்திருக்கிறது. சாலை வழி உணவகம் வந்த உடன், இதற்கு மேல் வாகனம் செல்லாது எனச் சொல்லிவிட்டு ஓட்டுனர் சென்றுவிட, நடத்துனர், பேருந்தில் வந்த பயணிகளிடம் அந்தப் பக்கம் வரும் வேறு ஏதாவது வண்டியில் ஏற்றி விடுகிறேன் என்று சொல்லி இருக்கிறார்.  அந்த நேரத்தில் சென்னை, திருச்சி, போன்ற இடங்களுக்கு நிறைய பேருந்துகள் இருந்தாலும் அறந்தாங்கி செல்லும் பேருந்துகள் வருவது நிச்சயமல்ல. பக்கத்து ஊர் வரை சென்று அங்கிருந்து சென்று கொள்ளுங்கள் என சாதாரணமாகச் சொல்லிக்  கொண்டிருக்கிறார்......

நான் பார்த்துக் கொண்டிருந்தபோது நடத்துனரும், வேறு வண்டியில் ஏற்றி விடுகிறேன் என்று சொல்லி அங்கிருந்து நடையைக் கட்ட, பயணிகள் எவரும் அவரைத் தொடரவில்லை.  காசும் திருப்பித் தர முடியாது என்று சொல்லி விட்டார்.  ஒன்றரை மணி நேரமாக இதே இடத்தில் பேருந்து இருக்கிறது என்று பலரும் புலம்பிக் கொண்டிருந்தார்கள்.  பெரும்பாலான பயணிகள் பெண்களும், சிறுவர்களும். அந்த நள்ளிரவில் வேறு பேருந்து பிடித்து எப்படி போக முடியும்.....

மது அருந்துவது அவரவர் சொந்த விருப்பம் என்றாலும், பணியில் இருக்கும் போது, அதுவும் குறிப்பாக பேருந்தில் பயணிக்கும் அத்தனை பேருடைய உயிரும் இவரது சிறு தவறினால் போகக் கூடிய நிலையில் மது அருந்துவது அவசியமா?  வாகனத்தினை எடுப்பதற்கு முன்னால் Breath Analyzer வைத்து சோதனை செய்ய வேண்டும் போல இருக்கிறது...... இது போன்ற ஆட்களை பணியிலிருந்து நீக்கம் செய்தாலும் தவறில்லை என்றே தோன்றுகிறது......

என்ன நண்பர்களே, என்னுடைய சமீபத்திய முகப்புத்தக இற்றைகளை ரசித்தீர்களா? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.....

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.

42 comments:

 1. ஓட்டுநரின் செயல் கண்டனத்திற்கு உரியது ஐயா
  தம 1

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 2. இந்த காபியில் பில்டரின் அடித்தளத்தில் மிகவும் லேசாக வசம்பு , கடுக்காய் , அபின் கலந்த ஒரு திரவத்தை தடவுகிறார்கள் என்று நான் 1960 லேயே தஞ்சையில் கேட்டு இருக்கிறேன்.

  நீங்கள் சொன்னது போல, காபியே ஒரு பக்கம் நல்லது என்றாலும் இன்னொரு பக்கம் வயிற்றை பொத்தலாக்கும் திறன் படைத்தது.

  என் செய்வது !
  நான் ஒரு கணக்குப் போட்டு பார்த்தேன். ஒரு வாரத்திற்கு அரை கிலோ வீதம் கடந்த 60 ஆண்டுகளாக, ஏ காபி தூள் வாங்கி, முதல் டிகாஷன் விட்டு குடித்துக்கொண்டு தான் இருக்கிறேன். ஆனால், அதில் சிகிரி கிடையாது. இந்த சிகிரி பற்றி நீங்கள் ஒரு ஆய்வு செய்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அகில இந்திய
  காபி குடியர்கள் பேரவை சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

  அதெல்லாம் இருக்கட்டும். டிகாஷனில் பாலை கலக்கவெண்டுமா?
  பாலில் டிகாஷனை கலக்க வேண்டுமா? எது சுவை அதிகம்?

  ஒரு கவிதைப் போட்டி வையுங்கள்.

  சுப்பு தாத்தா.

  ReplyDelete
  Replies
  1. கவிதைப் போட்டியா அல்லது பட்டிமன்றமா? எது வைக்க வேண்டும்?

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுப்பு தாத்தா.....

   Delete
  2. //ஆனால், அதில் சிகிரி கிடையாது. இந்த சிகிரி பற்றி நீங்கள் ஒரு ஆய்வு செய்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அகில இந்திய
   காபி குடியர்கள் பேரவை சார்பில் கேட்டுக்கொள்கிறேன். //

   சு.தா. நம்ம கட்சி. இங்கேயும் நோ சிகரி! சிகரிக்குத் தடா. மற்றபடி ஃபில்டரின் அடியில் இப்படி எல்லாம் தடவுவாங்கனு இப்போத்தான், இந்த நிமிஷம் தான் தெரியும். :( வெளியில் காஃபி குடிக்கவே யோசிக்கணும் போலிருக்கே! பொதுவா ரயில் பயணம்னால் வீட்டிலிருந்து காஃபி எடுத்துட்டுப் போவோம். இரண்டு நாட்கள் நீண்ட பயணம்னா கஷ்டம்! :(

   Delete
  3. ஒரு சிலர் தம்பளரில் டிகாக்‌ஷனை ஊற்றிக் கொண்டு காய்ச்சிய பாலை அதன் மேல் விடுகின்றனர். நான் அளவாக எடுத்துக் கொண்ட பாலைக் காய்ச்சுகையில் பால் பொங்கி வரும்போது டிகாக்‌ஷனை அதில் ஊற்றிவிட்டுக் கரண்டியால் கலக்கி விடுவேன். கரண்டி போட்டுப் பாலையும் காஃபியையும் கலக்குவதில் காஃபி ரொம்பவே ருசியாக இருக்கும். :)

   Delete
  4. எங்க வீட்டில் எப்பவும் 80-20 காம்பினேஷன் தான்..... காபி குடிச்சே ஆகணும்னு கட்டாயம் இல்லை. கிடைத்தால் குடிப்பவன் நான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா..

   Delete
  5. காபி நல்லா இருக்கணும்.... அதான் மேட்டர்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

   Delete
 3. காபியில் மனித உடலுக்கு ஒவ்வாத ஏதோ கெமிக்கலையோ அல்லது போதைப் பொருட்களையோ கலந்திருக்க நிச்சயம் வாய்ப்பு இருக்கிறது

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   Delete
 4. காபி கடையில் மட்டும் இல்லை நாம் சாப்பிடும் உணவங்களில் சாப்பிடும் பொருளில் நிச்சயம பல வித உடலுக்கு வேதிப் பொருட்கள் கலந்த்துதான் வருகின்றன

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   Delete
 5. பேனரில் இருக்கும் படம் மிக அருமை

  ReplyDelete
  Replies
  1. நன்றி துரை. சமீபத்தில் ஒரு பாசஞ்சர் ரயில் பயணத்தின் போது ரயிலின் உள்ளே அமர்ந்து கொண்டு ஜன்னல் வழியே எடுத்த படம்.......

   Delete
 6. டிரைவர் செய்தது பொறுப்பற்ற செயல்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சாந்தி மாரியப்பன் ஜி!

   Delete
 7. உங்கள் காபி சுவை மிக அருமை. அதை விட அருமை. உங்கள் ட்ரெயின் பேனர் படம். அதைப் பார்க்கும் போது , அதன் பின்னாலும் முன்னாலும் தெரியும் விசாலமான காலியிடம் மனதை நிரப்புகிறது. அது இன்னும் ரியல் எஸ்டேட் காரர்களின் கண்களில் படாமல், கான்கிரிட் காடாக மாறாமல் இருப்பது கடவுள் அனுக்கிரகம் தான்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!

   Delete
 8. காபியின் சிறப்பு பற்றிய ஒரு பிரபல சிறுகதையில் அவர்கள் அதில் துளி சீயக்காய்ப் பொடி கலப்பதாக வரும். அதோடு அந்தக் கடையின் பிராபல்யமும் போய்விடும்.

  மூன்றாவது சம்பவம் ஃபேஸ்புக்கிலேயே வாசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 9. முரளி காஃபியில் ஒரே ஒரு முறை 2012 ஆம் வருடம்னு நினைக்கிறேன். வைகுண்ட ஏகாதசி தரிசனம் முடிஞ்சு வீட்டுக்குத் திரும்பும் போது குடித்தோம். அப்படி ஒண்ணும் ரசிக்கலை! :) ஆனால் பக்கத்திலுள்ள பஜ்ஜிக் கடையில் போடும் ஆனியன் பஜ்ஜி ருசி அபாரம்! :)

  ReplyDelete
  Replies
  1. பக்கத்து பஜ்ஜி கடை முன்பெல்லாம் கிடையாது. சில வருடங்களாகத் தான் இருக்கிறது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   Delete
 10. பையன் பிற்காலத்தில் கார் ட்ரைவர் வேலைக்குப் போயிருவான். ஹார்ன் லே இருந்து கையே எடுக்காம ஏராளமான டிரைவர்களைப் பார்த்தாச்சு இந்தியாவில் :-)

  டிவி சீரியல் போடும் நேரம் நாம் பாட்டுக்கு தெருவிலே நடந்து போய்க்கிட்டு இருந்தாலும் பூரா வசனங்களும் காதுகளில் வந்து தானாகவே விழுதே......... :-(

  ReplyDelete
  Replies
  1. டிவி சீரியல்... :((

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   Delete
 11. சில ரசாயணம் கலப்பதற்கு வாய்ப்பு உண்டு என்றே நினைக்கிறேன்! குடிகார டிரைவரால் பாதிக்கப்படும் பயணிகளுக்கு போக்குவரத்து கழகங்கள் என்ன பதிலை சொல்லப் போகின்றது! கண்டிக்க தக்க செயல். நீங்கள் அனுப்பிய படத்திற்கு கவிதை எதுவும் தோன்றவில்லை! மன்னிக்கவும் வேறு படம் ஏதேனும் அனுப்ப முடியுமா?

  ReplyDelete
  Replies
  1. கருத்துரைத்த பின் அனுப்பிய மின்னஞ்சலும் கவிதையும் வந்து சேர்ந்தது. நன்றி சுரேஷ்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 12. பள்ளிக்கூடங்கள் அருகே தின்பண்டங்கள் விற்பவர்களும் தின்பண்டங்களில் ஏதோ ஒரு விதப் போதைப் பொருளைக் கலக்கிறார்களாம் சிறார்களை மிண்டும் மீண்டும் அவர்கள் கடைப்பக்கமிழுக்க இது ஒரு உத்தியோ

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   Delete
 13. கோழி குருடா இருந்தாலும் குழம்பு ருசியா இருக்கும் என்பது போலத்தானா அந்த காப்பியும் :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

   Delete
 14. காபி என்றதும் கரோல்பாக் ராமனுஜம் காபி ஞாபகம் வந்து விட்டது. கொஞ்சம் பேரை காபியைக் காட்டி அடிமையாக்கித்தான் வைத்திருந்தார்கள்.

  ReplyDelete
  Replies
  1. ராமானுஜம் காபி - காபி குடிப்பதற்காகவே எத்தனை முறை அங்கே சென்றதுண்டு.......

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.....

   Delete
 15. வணக்கம்
  ஐயா

  ஓட்டுனரின் செயல் தவறானது அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   Delete
 16. ஓட்டுனரின் இவ்வகை செயல்கள் இப்பொழுது அதிகரித்துக் கொண்டே வருகின்றது கன்டணத்துக்குறியது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி..

   Delete
 17. காபியே போதைதான் என்று நினைக்கிறேன். காபி குடித்துப் பழகியவர்களால் அது இல்லாமல் ஒரு நாளைக்கூடக் கழிக்க முடியாது. (சமயத்தில் பூஜை அல்லது முக்கியமான விசேஷங்கள் செய்து முடிக்கும்வரை, சாப்பிடாமல் இருக்கவேண்டும் என்ற கட்டாயம் இருந்தாலும், அவர்களும் காபி சாப்பிடுவதற்கு விலக்கு அளிப்பார்கள்). அதுக்கு மேலயா இன்னொரு போதை வஸ்துவை அவர்கள் நுழைக்கவேண்டும்?

  நீங்கள் மது அருந்திய டிரைவரைப் பற்றி எழுதியுள்ளீர்கள். நிறையமுறை சென்னைக்கு பேருந்தில் பயணிப்பதனால், உங்களுக்கு, மது அருந்தி அலப்பறை கொடுக்கும் பயணிகளுடனான அனுபவமும் நிறைய இருக்கும். ஒருவரால் (மது அருந்திய பயணி) நாம் நிம்மதியாகத் தூங்கமுடியாது. மற்றவரால் எல்லோரும் நிம்மதியாகத் தூங்க வாய்ப்பு இருக்கிறது. இரண்டுமே பயங்கரம்தான்.

  ReplyDelete
  Replies
  1. காபியே ஒரு போதை தான் - பலரும் இதில்லாமல் திண்டாடுவதைப் பார்க்கும்போது போதைதான் என்பதை உணர்ந்திருக்கிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
 18. பேருந்தின் ஓட்டுனர் செய்தது தவறு என்றால் நடத்துனர் செய்தது பொறுப்பற்ற செயல். ஓட்டுனரை பணி இடை நீக்கம் செய்து மேல் நடவடிக்கை எடுத்தால்தான் மற்றவர்கள் இது போல் செய்யமாட்டார்கள். நடத்துனர் பேரிலும் நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆனால் எடுக்கமாட்டார்கள். என்ன செய்ய? நாம் தான் எதையும் தாங்கும் பொறுமைசாலிகள் ஆயிற்றே!
  பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. எதையும் தாங்கும் பொறுமைசாலிகள்.... உண்மை தான் ஐயா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 19. காஃபி ராகமே எங்கள் தளத்தில் பாடியாயிற்று! வெளியில் காஃபி என்றால் பார்த்துத்தான் குடிக்க வேண்டியிருக்கிறது. நீங்கள் சொல்லியிருப்பது போல் ஒரு வேளை கஸ்டமர்களை ஈர்க்க தக்க வைத்துக் கொள்ள போதைப் பொருள் என்றில்லை வேறு ஏதேனும் கலக்குகின்றாரோ என்னமோ...அது ஏதோ ஒரு பொடி என்பார்கள். டீயிலும் கூட கலப்பதாகச் சொல்லப்படுகிறது. குறிப்பாகத் தமிழ் நாட்டில்.

  குடித்து விட்டு ஓட்டுநரா...பணி நீக்கம் செய்ய வேண்டுமல்லவா எத்தனைப் பயணிகளின் உயிர் கையில் ஏன் அவரது உயிரும் குடும்பமும்தானே அதில் அடக்கம். மக்கள் போராடியிருக்க வேண்டும். மேலிடத்தைக் கூட்டியிருக்க வேண்டும். ஆனால் நாம் அப்படிச் செய்யாததால்தான் எல்லா செர்வீசிலுமே ஊழல்கள், அலட்சியப் போக்கு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....