ஞாயிறு, 12 ஜூன், 2016

இயற்கை என்னும் இளைய கன்னி - 2


சென்ற வார ஞாயிறன்று Nature Photography Challenge பற்றி சொல்லி, ஒரு வாரம் ஃபேஸ்புக் பக்கத்தில் நான் பகிர்ந்து கொண்ட புகைப்படங்களை இங்கேயும் வெளியிட்டு இருந்தேன்.  முதல் முறை “அமைதிச்சாரல்சாந்தி மாரியப்பன் அழைத்திருந்தார் என்றால் இரண்டாம் வாரம் அதே சவாலுக்கு என்னை அழைத்தவர் பதிவர் சகோ கீதமஞ்சரி.  இரண்டாம் வாரமாக ஃபேஸ்புக்கில் நான் படங்கள் பகிர்ந்து கொண்டேன். இன்றைக்கு ஃபேஸ்புக்கில் எனைத் தொடராத வலையுலக நண்பர்களுக்காகவும், ஒரு சேமிப்பாகவும் ஒரு தொகுப்பு இங்கேயும்.....

சென்ற வார பதிவினை பார்க்காதவர்கள் வசதிக்காக Nature Photography Challenge என்பது என்ன என்பதை இங்கேயும் மீண்டும் சொல்லி விடுகிறேன்.....

சில மாதங்களாகவே இணையத்தில், குறிப்பாக Instagram, Twitter, Facebook என பல தளங்களிலும் Nature Photography Challenge என்ற ஒரு விஷயம் பரவலாக இருக்கிறது. இயற்கை சம்பந்தப்பட்ட புகைப்படங்களை ஒரு வாரத்திற்கு ஒவ்வொரு நாளும் பகிர வேண்டும்.  ஒவ்வொரு நாளும் வேறு ஒருவரையும் அப்படி இயற்கை சம்பந்தப்பட்ட புகைப்படங்களை பதிவு செய்ய அழைக்க வேண்டும். இது தான் இந்த Nature Photography Challenge.  நமது வலைப்பூக்களில் வரும் தொடர் பதிவு போன்றதொரு விஷயம். 
படம்-1

படம்-1: மத்தியப் பிரதேசத்தின் Bபாந்தவ்கர் காட்டுப் பகுதி.  அதன் உள்ளே ஜீப் மூலம் பயணிக்கும் போது ஒரு குளத்தின் அருகே நிறுத்தினார் வாகனத்தினை ஓட்டியவர்.  வித்தியாசமான குளம் – பெயர் சிகப்புக் குளம் – லால் தலாப்! குளத்தின் நீரே சிகப்பு நிறத்தில் இருக்கிறது! அந்தக் குளம் – இந்தக் குளம்!

படம்-2

படம்-2: ஜம்மு அருகே கட்ரா எனும் இடம். அங்கிருந்து தான் மாதா வைஷ்ணோ தேவி கோவிலுக்குச் செல்ல வேண்டும்.  கட்ராவிலிருந்து சில கிலோ மீட்டர் பயணித்தால் பாபா DHதன்சர் எனும் ஒரு குகைக்கோவில் இருக்கிறது. அங்கே எடுத்த அழகிய காட்சி இது.....

படம்-3

படம்-3: மத்தியப் பிரதேசம் – ஜபல்பூர் அருகே இருக்கும் ஒரு அற்புதமான நீர்வீழ்ச்சி Dhuandhar நீர்வீழ்ச்சி.  அழகிய இந்த நீர்வீழ்ச்சியைப் பார்க்க மட்டுமே முடியும் – இதில் குளிக்க முடியாது என்பது ஒரு சோகம்!

படம்-4

படம்-4: இந்த படம் உத்திரப் பிரதேசத்தின் அலஹாபாத் நகரில் எடுத்த படம்.  கங்கையும் யமுனையும் சங்கமிக்கும் இடம்.  படகுச் சவாரி செய்யும்போது இரண்டு நதிகளும் கலக்குமிடத்தில் எடுத்த படம். நதிகளின் வண்ணங்கள் வேறு வேறாக இருப்பதைப் பார்க்கலாம்.... 

படம்-5

படம்-5:  இந்தப் படம் கேரளத்தின் தலைநகர் திருவனந்தபுரம் அருகே உள்ள பொன்மலை எனும் இடத்தில் எடுக்கப்பட்டது. ஒரு மனிதன் படுத்துக் கொண்டிருப்பது போல இருக்கிறது இந்த மலைத் தொடர்.  மேகங்கள் பல வண்ணங்களில் காட்சி அளிக்கிறது.  இந்த மலையில் தமிழக எல்லையும் உண்டு என்றாலும் மலைக்கு தமிழகத்திலிருந்து செல்ல முடியாது – கேரளத்திலிருந்து மட்டுமே செல்ல முடியும்!

படம்-6

படம்-6: இந்தப் படம் எடுக்கப்பட்ட இடம் கேரளா! திருவனந்தபுரம் அருகே இருக்கும் விழிஞம் கடற்கரையில் மழை பெய்து கொண்டிருந்த ஒரு மாலைப் பொழுதில் எடுத்த படம்.  சூரியன் மேகங்களோடு கண்ணா மூச்சி விளையாடிக் கொண்டிருந்தான்.  அவ்வப்போது எட்டிப் பார்க்கும் சூரியனின் ஒளிக்கதிர்கள் கடலில் பட்டு கடல் தண்ணீர்ல் ஒளிவீசிக் கொண்டிருந்த்து.  நண்பர் குடும்பம் மற்றும் என் குடும்பத்துடன் ரசித்த அந்த நிமிடங்கள் மறக்க முடியாதவை....

படம்-7

படம்-7: இந்த படம் ஒரு ஏரியின் படம்.  ஏரியின் பெயர் sho-nga-tseir ஏரி.  அருணாச்சலப் பிரதேசத்தின் Shak-tsen கிராமத்தின் மேய்ப்பு நிலமாக இருந்த இடம் 1971-ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஏரியாக மாறி விட்டதாம்! அமைதியாக இருக்கும் இடத்தினை கண்டு ரசிக்கலாம்!

என்ன நண்பர்களே, இந்த வாரத்தின் புகைப்படங்களை ரசித்தீர்களா? புகைப்படங்கள் பற்றிய உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன்....

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.

22 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. அங்கும் , இங்கும் இயற்கை அழகை ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  3. புகைப்படங்கள் எடுப்பதில் நீங்கள் ஒரு கில்லி ....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

      நீக்கு
  4. எல்லாம் நல்லா இருக்கு, அதுவும் 1, 2 ரொம்ப அருமை. 10 படம் எடுத்து அதில் ஒன்றிரண்டு நல்லா வந்து அதை செலெக்ட் செய்கிறீர்களா அல்லது ஒரே ஷாட்டில் படம் எதிர்பார்த்தமாதிரி வந்துவிடுகிறதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில இடங்களில் இரண்டு மூன்று படங்கள் எடுப்பதுண்டு. பயணித்தபடியே எடுக்கும் சமயத்தில் ஒரே படமே வெகு அழகாய் அமைந்து விடுவதும் உண்டு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  5. புகைப்படம் அனைத்தும் அழகு ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  6. இயற்கையை அற்புதமாக படம் பிடித்திருக்கிறீர்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

      நீக்கு
  7. புகைப்படக் கவிஞர் தாங்கள்
    படங்கள்அழகோ அழகு
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  8. சிகப்புக் குளம், ஆர்ப்பரிக்கும் நீர்வீழ்ச்சி, நதிகள் வெவ்வேறு வண்ணங்களில் சங்கமிக்குமிடம்‍-எல்லாமே மிக அழகிய புகைப்படங்கள்! இயற்கையின் அதிசயங்களைப்பார்த்து பிரமித்தேன்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

      நீக்கு
  9. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

      நீக்கு
  10. புகைப்படங்கள் அனைத்தும் அருமை! பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  11. இயற்கையே உங்கள் கைகளில் வந்து விட்டது போன்று உள்ளது ஜி! அந்த வைஷ்ணவ தேவி கோயிலுக்குச் செல்லும் வழியில் இருக்கும் அந்தக் குகைக் கோயில் நீர் விழும் படம் பதிவில் வந்திருக்கிறது இல்லையா. அப்போதும் அந்தப் படத்தை மிகவும் ரசித்தோம் இப்போது மீண்டும்...செம படம் அது.

    அது போல எல்லா படங்களும். பொன்முடி ஹில்ஸ் இல்லையா அது திருவனந்தபுரத்தின் அருகில் இருக்கும் அந்த மலை..

    கங்கையும் யமுனையும் சங்கமிப்பது நன்றாகவே தெரிகிறது இரு வேறு கலரில். கடல் போன்று இருக்கிறது பிரம்மாண்டமாய். அது சரி யமுனை இவ்வளவு தண்ணீருடன் இருக்கிறதா? ஆக்ராவிலும் சரி தில்லியிலும் சரி மிக மோசமாக இருக்குமே அதனால்தான்..

    அனைத்தையும் மிகவும் ரசித்தோம் ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொன்முடியே தான். முதல் படம் வைஷ்ணவ் தேவி தொடரிலும் வெளியிட்டு இருந்தேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....