வியாழன், 9 ஜூன், 2016

காணாமல் போன காவிரி! - படமும் கவிதையும்

[படம்-4 கவிதை-1]

படமும் கவிதை வரிசையில் இந்த வாரம் நான்காம் வாரம்.  நான் எடுத்த புகைப்படம் ஒன்றிற்கு சகோ பி. தமிழ் முகில் அவர்கள் எழுதிய கவிதையோடு உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. சகோ பி. தமிழ் முகில் அவர்கள், முகிலின் பக்கங்கள் எனும் வலைப்பூவில் எழுதி வருகிறார். 

புகைப்படம்-4:



எடுக்கப்பட்ட இடம்:  காவிரிக்கும் கொள்ளிடத்திற்கும் நடுவே திருவரங்கம்.  காவிரி ஆற்றில் இப்போதெல்லாம் தண்ணீர் வரத்து வெகு குறைவு. மணல் கொள்ளை போய்க்கொண்டே இருக்கிறது – அரசாங்கத்தின் ஒத்துழைப்போடு.....  கோடைக் காலம் வந்துவிட்டால், திருச்சி மாநகராட்சியே காவிரி ஆற்றின் மணல்வெளியில் Summer Beach என பதாகை வைத்து இசை நிகழ்ச்சிகளையும், தின்பண்டக் கடைகளையும் இங்கே அமைக்க அனுமதி தருகிறார்கள்.  வற்றிய காவிரி ஆற்றிலிருந்து பணம் சம்பாதிக்க வழி – பார்வையாளர்களுக்கு நுழைவுக் கட்டணமும் உண்டு!  சென்ற ஆண்டு இப்படி Summer Beach அமைத்தபோது நாங்களும் சென்றிருந்தோம். 

வறண்டு கிடக்கும் காவிரி ஆற்றின் கரை.  நேரம் மாலையும் இரவும் சந்திக்கும் நேரம்.  அங்கே இக்குழந்தை பந்து விளையாடிக் கொண்டிருந்தாள். அவள் கைகளில் ஒட்டிக் கொண்டிருக்கும் மணல் துகள்! அவள் ஊடுருவும் கண்கள் எனை புகைப்படம் எடுக்கத் தூண்டியது.

புகைப்படத்திற்கு சகோ பி. தமிழ் முகில் எழுதி அனுப்பிய கவிதை இதோ.....

கவிதை-1:

காணாமல் போன காவிரி!

ஆடி விளையாடும்
ஆறும்  இன்று
காணவில்லையே என
மணலுள் தேடித் தேடி
ஓய்ந்தவளாய் - வீடு
திரும்புகிறாளோ ? -
சிறு கிள்ளை !

வான் பொய்ப்பினும்
தான் பொய்யா காவிரி
கண் முன் மணல் மேடாய்
காட்சிப் படுகிறது - நன்றாக
பார்த்துக் கொள் சிறு நங்கையே !

நாளை மணலும் கூட
மாயமாகிப் போய் - காவிரி
கட்டாந்தரையாய் காட்சியளித்தாலும்
ஆச்சர்யமில்லை ! - மீண்டும் இங்கு
காவிரி புது நுரையாய் பொங்கி ஓட
சிவபெருமானிடம் காவிரியை
அகத்தியர் பெற்று வர - விநாயகர்
காகமென வடிவெடுத்து வந்து
கமண்டலத்தை கவிழ்த்திட  வேண்டுமோ ?

     பி. தமிழ் முகில்......

என்ன நண்பர்களே, படமும் கவிதையும் வரிசையில் நான்காம் படமும் சகோ பி. தமிழ் முகில் அவர்கள் எழுதிய கவிதையையும் ரசித்தீர்களா? தொடர்ந்து புதன் கிழமைகளில் படமும் கவிதையும் பதிவுகள் வெளிவரும். நான் எடுத்த புகைப்படத்திற்கு கவிதை எழுத விருப்பம் இருந்தால் எனக்கு மின்னஞ்சல் [ venkatnagaraj@gmail.com ] அனுப்பினால் நான் எடுத்த புகைப்படம் ஒன்றினை அனுப்பி வைக்கிறேன்.

கவிதை எழுதுபவர்களுக்கு ஊக்கம் தரும் முயற்சி மட்டுமே. வேறு எந்த நோக்கமும் இல்லை.  சில கவிதைகள் சேர்ந்தபிறகு அவற்றைத் தொகுத்து மின்னூலாகவும் வெளியிடலாம்.  அனைவருடைய படைப்புகளையும் படிப்பவர்களிடம் கொண்டு சேர்க்க இது ஒரு முயற்சி....  கவிதை மற்றும் புகைப்படம் பற்றிய எண்ணங்களை பின்னூக்கத்தில் சொல்லுங்கள்.....

மீண்டும் வேறொரு பதிவில் சந்திக்கும் வரை....

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.

26 கருத்துகள்:

  1. அழகான புகைப்படத்திற்கேற்ற அருமையான கவிதை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  2. அருமையான கவிதை சூப்பர் கிளிக்

    பதிலளிநீக்கு
  3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீமலையப்பன் ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  4. தமிழ் முகிலின் கவி மழை அருமை :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

      நீக்கு
  5. உங்கள் புகைப்பட விளக்கம் இல்லாமல் இருந்தால் இக்கவிதை வேறு மாதிரியாய் இருக்குமோ. தமிழ் முகிலுக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விளக்கம் இல்லாமல் இருந்தால்.... - கவிதை வேறு மாதிரி இருந்திருக்கலாம்... :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

      நீக்கு
  6. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

      நீக்கு
  7. மீண்டும் இங்கு
    காவிரி புது நுரையாய் பொங்கி ஓட
    சிவபெருமானிடம் காவிரியை
    அகத்தியர் பெற்று வர - விநாயகர்
    காகமென வடிவெடுத்து வந்து
    கமண்டலத்தை கவிழ்த்திட வேண்டுமோ ?//

    மீண்டும் அது போன்ற காவிரி வர மகிழ்ச்சிதான்.

    கவிதை அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  8. திரு தமிழ் முகில் அவர்களின் யதார்த்த கவிதை அருமை. அவருக்கு பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  9. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  10. தமிழ் முகில் அல்லவா? மழையாக பொழிந்துவிட்டார் கவிதையை! அருமை பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

      நீக்கு
  11. படமும் கவிதையும் வரிசையில் நான்காம் படமும் சகோ பி. தமிழ் முகில் அவர்கள் எழுதிய கவிதையையும் மிகவும் சூப்பர் நைனா. பாராட்டுக்கள்!
    விஜயராகவன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விஜயராகவன் ஜி!

      நீக்கு
  12. குழந்தையும் அழகு! கவிதையும் அழகு! வாழ்க பல்லாண்டு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி....

      நீக்கு
  13. தாங்கள் எடுத்த புகைப்படத்திற்கு கவிதை எழுத வாய்ப்பளித்தமைக்கு மனமார்ந்த நன்றிகள் சகோதரரே.

    வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் கவிதையை எனது தளத்தில் வெளியிடத் தந்தமைக்கு நன்றி சகோ தமிழ் முகில்.

      நீக்கு
  14. குழந்தை அழகு! முகிலின் கவிதையும் அழகு ரசித்தோம் இரண்டையும்!

    பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றி ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....