எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Thursday, June 23, 2016

நாகாலாந்து – என்ன அழகு எத்தனை அழகு.....


ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் பகுதி 20

இந்தப் பயணக் கட்டுரையின் முதல் 19 பகுதிகளைப் படிக்கவில்லையா? இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் சுட்டிகளுக்கான ஒரு Drop Down Menu.....


இத்தொடரின் சென்ற பகுதியை இப்படி முடித்திருந்தேன்.....

காட்சிகளைக் கண்டவாறே நாங்கள் தேவாலயத்தின் வாயிலை அடைந்திருந்தோம்.  தேவாலயம் பற்றியும் அங்கே நாங்கள் கண்ட காட்சிகள் பற்றியும் அடுத்த பதிவில் சொல்கிறேன்!

தேவாலயம் - ஒரு தோற்றம்

இந்த தேவாலயம் கத்தோலிக்க பிரிவினர்களைச் சேர்ந்தது. வாயிலில் பெரிய கதவு – பூட்டியிருக்க, பக்கத்திலிருந்து சிறு நுழைவு வாயில் வழியே உள்ளே நுழைந்தோம்.  நுழைவாயிலின் அருகே இருந்த செடிகளில் இருந்த அழகழகான மலர்கள் எங்களை வரவேற்க முன்னேறினோம்.  பெரும்பாலும் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் தான் இங்கே மக்கள் அதிகம் வருவார்கள் போலும். யாரையும் காணவில்லை. மலர்களின் அழகை ரசித்தவாறே உள்ளே நடந்தோம்.  கொஞ்சம் கீழ் நோக்கி நடக்க வேண்டியிருந்தது.

தேவாலயம் -  வேறொரு கோணத்தில்.....

மலைப்பகுதியில் அமைந்திருக்கும் இந்த தேவாலயம் மிக அழகிய வடிவில், நாகாலாந்து பழங்குடி மக்களின் வீடுகள் எப்படி வடிவமைக்கப்படுமோ அதே தோற்றத்துடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அரை வட்ட வடிவில் இருக்கும் அப்பகுதியில் தேவாலயம், குடியிருப்புகள், தோட்டங்கள் என அனைத்தும் உண்டு. நாகாலாந்து பகுதியின் முதலாம் பிஷப் Lt.Rt.Rev.Abraham Alangimattathil அவர்கள் யோசனையில் உருவானது தான் இந்த தேவாலயம். 1986-ஆம் ஆண்டு கட்டிட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு 1991-ஆம் வருடம் தேவாலயம் கட்டி முடிக்கப்பட்டது.

 ஏசு பிரானின் வாழ்விலிருந்து ஒரு காட்சி

தேவாலயம் கட்டுவதற்கு அந்த நாட்களிலேயே மூன்று கோடி ரூபாய் தேவைப்பட்டது. இதில் பெரும்பகுதியை ஜப்பானியர்கள் கொடுத்திருக்கிறார்கள் – இரண்டாம் உலகப் போரில் இப்பகுதியில் நடந்த போரில் உயிர்நீத்த ஜப்பானியர்களின் நினைவாக தினமும் பிரார்த்தனை நடத்த இந்த தேவாலயம் வழிவகுக்கும் என்பதால் இந்த நன்கொடை கொடுத்திருக்கிறார்கள்.  ஆங்கிலத்திலும், ஜப்பானிய மொழியிலும் பிரார்த்தனைகள் நடத்த வசதிகள் இங்குண்டு. ஒரே சமயத்தில் கிட்டத்தட்ட 4500 பேர் இங்கே பிரார்த்தனை செய்ய முடியும். மொத்தம் நான்கு வாயில்கள்.

மலைப்பகுதியிலிருந்து கொஹிமா நகர் ஒரு பார்வை
கட்டிடங்கள்... எங்கும் கட்டிடங்கள்.....

16 அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் மிகப் பெரிய மரச் சிலுவை ஆசியப் பகுதியிலேயே பெரியதாக சொல்லப்படுகிறது. தேவாலயம் மலைப்பகுதியில் அமைந்திருப்பதால், அங்கே இருந்து கொஹிமா நகரினை முழுவதுமாக பார்க்க முடிகிறது....  எத்தனை எத்தனை வீடுகள்.....  முழுக்க முழுக்க வீடுகள், கட்டிடங்கள் மட்டுமே இருக்கிறதோ எனத் தோன்றுகிறது. தேவாலயத்தின் வெளியே மட்டும் தான் பார்க்க முடிந்தது – பிரார்த்தனை நேரத்தில் சென்றால் மட்டுமே உள்ளே சென்று பார்க்க முடியும் என்பதை எங்கள் ஓட்டுனர் சொல்ல வெளியிலிருந்து மட்டுமே பார்த்தோம்.  மனதிற்குள் அனைவருடைய நலனுக்காகவும் பிரார்த்தனை செய்து விட்டு சில புகைப்படங்களை எடுத்துக் கொண்டு அங்கிருந்து வெளியே வந்தோம். 
 மலர்களே... மலர்களே......
தேவாலயத்தில் இருந்த மலர்களில் சில!
என்ன அழகு.... எத்தனை அழகு.....

எங்கள் ஓட்டுனர் காத்திருக்க, அவரிடம் பேச்சுக் கொடுத்தேன். இவர் கொஞ்சம் வாய் திறக்காதவர் – நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பெரும்பாலான பதில்கள் ஒன்றிரண்டு வார்த்தைகளாகத் தான் இருக்கும்! நானும் பல முறை பேசிப் பார்த்து விட்டேன் – ஆனாலும் அதற்கு மேல் அவர் வாயிலிருந்து வார்த்தைகளை வெளி வர வைக்க முடியவில்லை. தொடர்ந்து நான் பேச அவரும் ஓரிரு வார்த்தைகளிலேயே பதில் சொல்லிக் கொண்டிருந்தார்! சரி அடுத்து எங்கே? எனக் கேட்க, அவரை அனுப்பி வைத்த கேரள நண்பர் எங்களை ஒரு இடத்திற்கு அழைத்துப் போகச் சொல்லி இருப்பதாகவும், அங்கே தான் போகப் போகிறோம் என்றும் சொன்னார்.  அது எந்த இடம்.....

அடுத்த பதிவில் சொல்கிறேன்!

மீண்டும் சந்திப்போம்....

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.

22 comments:

 1. பூக்கள் அழகோ அழகுதான்! மலைப்ரதேசங்களில் மேலே ஏறிப்பார்த்தால் கட்டடக்காடுன்னுதான் சொல்ல முடியும்.

  புதுவிதமான அமைப்புடன் தேவாலயம்! ரசித்தேன். பக்கத்துலே பாஸ்ட்டரிருந்தால் அவரைக் கேட்டு உள்ளே போக முடியும்.

  ReplyDelete
  Replies
  1. அங்கே யாருமே இல்லை.... இருந்திருந்தால் உள்ளேயும் சென்று பார்த்திருக்கலாம்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   Delete
 2. இயற்கையுடன் தேவாலயம் அழகாக இருக்கிறது...மலர்கள் கொள்ளையழகு....

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உமையாள் காயத்ரி ஜி!

   Delete
 3. Replies
  1. தமிழ் மணம் இரண்டாம் வாக்கிற்கு மிக்க நன்றி உமையாள் காயத்ரி ஜி!

   Delete
 4. அழகிய தேவாலயம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 5. //தேவாலயம் கட்டுவதற்கு அந்த நாட்களிலேயே மூன்று கோடி ரூபாய் தேவைப்பட்டது.// அதான் இவ்வளவு அழகா இருக்கு. பூக்களும் அழகோ அழகு!

  நாகாலாந்தில் நாகலிங்கப்பூ இருக்கா இல்லையா? எங்க நாகர்கோவிலில் உண்டுப்பா!

  ReplyDelete
  Replies
  1. நாகாலாந்தில் நாகலிங்கப் பூ! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

   Delete
 6. அருமையான தேவாலயம், அழகான மலர்கள்.
  தொடர்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.....

   Delete
 7. கொஞ்சம் பெரிய சைஸ் தேவாலயம்தான் !!!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீமலையப்பன் ஸ்ரீராம்.

   Delete
 8. தேவாலயம் அருமை. அடுத்த பயணத்திற்காகக் காத்திருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 9. தேவாலயம் புதிய வடிவம்! பூக்கள் அழ்கு! எல்லா ஊர்களுமே மலையின் மீதேறிப் பார்த்தால் இப்படித்தான் இருக்கும் போல..

  அடுத்து என்ன இடம் என்று அறிய ஆவலுடன் இருக்கின்றோம்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 10. அருமையான வண்ணமயமான பூக்கள்! எங்கேயோ ஜப்பானில் இருக்கும் மக்களின் நன்கொடையால் கட்டி முடிக்கப்பட்ட தேவாலயம்! உண்மையிலேயே ஆச்சரியமான விஷயம் தான்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   Delete
 11. Are the templates are default or you downloaded it somewhere sir? தங்களின் தளம் மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கோஹிமாவில் டிசம்பர் மாதம் நடக்கும் Horn bill Festival மிகவும் அருமையானது, வட கிழக்கு மாநில பழங்குடிகள் தங்களின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் ஒரு விழா.

  ReplyDelete
 12. Google தரும் template தான்... முகப்பில் வரும் படம் மட்டும் நான் எடுத்த படம், அதில் எனது வலைப்பூவின் தலைப்பினை வடிவமைத்து சேர்த்திருக்கிறேன். அவ்வப்போது படம் மட்டும் மாற்றுவதுண்டு.

  தங்களது முதல் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சோமேஸ்வரன்.

  ReplyDelete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....