எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Thursday, July 6, 2017

விமானத்தில் விசாகா – அரக்கு பள்ளத்தாக்கு – பகுதி 2முதல் பகுதி இங்கே….


படம்: இணையத்திலிருந்து....

அரக்கு பள்ளத்தாக்கு சென்று வர வேண்டும் என முடிவு செய்தவுடனேயே நண்பர் தனது அலுவலகம் மூலமாக ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்திருந்தார். விமானத்திலும், அரக்கு பள்ளத்தாக்கு சென்று வர இரயில்/பேருந்து முன்பதிவு, அங்கே தங்க வேண்டிய இடங்கள், பார்க்க வேண்டிய இடங்கள் என எல்லாம் அவர் பொறுப்பில்! என் வேலை அவர்களுடன் சென்று சுற்றிப் பார்த்து வருவது மட்டுமே! எவ்வளவு சுலபமான வேலை இல்லையா! அதனால் பயணிக்க வேண்டிய நாள் வரை எந்தக் கவலையும் இல்லாமல் “எல்லாம் அவர் சித்தம்!” என்று சுகமாக இருந்தேன்.  பயணத்திற்குத் தேவையான ஏற்பாடுகளை அவர் பார்த்துக் கொள்ள, புறப்படும் நாளிற்கு முதல் நாள் தேவையான உடைகள் மற்றும் செல்லப்பெட்டி – நமக்குச் செல்லப்பெட்டி நமது கேனன் கேமரா தானே! எடுத்துக் கொண்டு நான் தயார்! வாங்க விமானத்தில் விசாகபட்டினம் நோக்கி பயணிக்கலாம்!


முன்பெல்லாம் பயணம் என்றால் இரயில்/பேருந்து மூலமாகத் தான் பெரும்பாலும் பயணங்கள் இருந்தன. இப்போது இந்தியாவின் பல பகுதிகளுக்கும் மாநிலத் தலைநகரங்களிலிருந்து/தில்லியிலிருந்து விமான வசதிகள் இருக்கின்றன. தலைநகர் தில்லியிலிருந்து இண்டிகோ, ஏர் இந்தியா, ஜெட் ஏர்வேஸ், ஸ்பைஸ் ஜெட் என பெரும்பாலான விமான சேவை நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு விமானங்களை இயக்குகிறார்கள். தில்லியிலிருந்து நேரடியாக விசாகப்பட்டினம் செல்லும் விமானங்கள் இரண்டு மணி நேரத்தில் உங்களை விசாகப்பட்டினத்தில் கொண்டு விட்டுவிடுகிறார்கள். சுமார் 1800 கிலோமீட்டர் [சாலை வழியே] தூரத்தில் இருக்கும் இடத்திற்கு இரண்டு மணி நேரத்தில் பயணம்!

தூர தேசம் பயணிக்க நாட்கணக்கில் ஆன சமயங்கள் பற்றி கேள்விப்பட்டதுண்டு! கட்டு சோறு கட்டிக்கொண்டு நடை பயணமாகவோ, வண்டி கட்டிக்கொண்டோ சென்றவர்கள் எவ்வளவு நாட்கள் பயணித்திருப்பார்கள், தினம் தினம் அவர்களுக்கு எத்தனை அனுபவங்கள் கிடைத்திருக்கும், எத்தனை மனிதர்களைச் சந்தித்து இருப்பார்கள் என நினைக்கும்போதே பிரமிப்பாக இருக்கிறது அல்லவா! இப்போதோ இரண்டு மணி நேரத்தில் இத்தனை தொலைவு கடந்து வந்தாலும், பலரும் அலுத்துக் கொள்கிறார்கள் – Travelling time பற்றியும், வசதிகள் பற்றியும் புலம்புபவர்களைக் கண்டால் கொஞ்சம் கோபம் தான் வருகிறது! இரயில் மூலம் பயணித்தால் சுமார் குறைந்தது 36 மணி நேரம் ஆகும். விமானத்தில் இரண்டு மணி நேரம்.

இரயில் மூலம் II AC/III AC Coach பயணிக்க Rs.2959/Rs.2015 ஆகிறது. சற்று முன் கூட்டியே விமானத்தில் பயணிக்க முன்பதிவு செய்துவிட்டால் II AC செலவுக்குள் விமானத்திலேயே பயணிக்க முடிகிறது! ஆகஸ்டு மாதத்திற்கான தில்லி-விசாகப்பட்டினம் விமானக் கட்டணம் Rs.3028/- என்று பார்த்தேன்! இப்ப எதுக்கு அதைப் பார்த்தீர்கள், திரும்பவும் விசாகப்பட்டினம் செல்லப் போகிறீர்களா என்று கேட்டால் பதில் – இல்லை! என்று தான் வரும்! உங்களுக்குத் தகவல் சொல்லவே இந்தத் தேடல்! முன்னரே திட்டமிட்டதால் எங்களுக்கு Rs.2600/-க்குள் விமானத்தில் பயணிக்க முடிந்தது. இரண்டு மணி நேரத்தில் தலைநகர் தில்லியிலிருந்து ஸ்டீல் சிட்டி என அழைக்கப்படும் விசாகப்பட்டினத்திற்கு வந்து சேர்ந்து விட்டோம்.


படம்: இணையத்திலிருந்து....

நண்பர் அலுவலகத்தின் மூலமாக ஏற்பாடுகள் செய்திருந்தார் என்பதால், விமான நிலையத்திற்கு வந்து எங்களை அழைத்துச் செல்ல கார் ஒன்று காத்திருந்தது. கூடவே விசாகப்பட்டினம் கிளை அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு நபரும் எங்களுக்காகக் காத்திருந்தார். விமான நிலையத்திலிருந்து வெளியே வந்ததும், விசாகப்பட்டினம் அலுவலகத்திற்கு அழைக்க, அலைபேசி மூலம் அழைக்க, காத்திருக்கும் கார் எண்ணையும், காத்திருப்பவரின் அலைபேசி எண்ணையும் தந்து காத்திருப்பது பற்றி தகவல் தந்தார். கார் மூலம் நாங்கள் தங்க வேண்டிய Konark Lodge [விமான நிலையத்திலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவு, இரயில் நிலையத்திலிருந்து 3 கிலோமீட்டர்] வந்து சேர்ந்தோம்.

கார் காத்திருக்க, தங்குமிடத்தில் எங்கள் உடைமைகளை வைத்து விட்டு சற்றே ஓய்வெடுத்து, தயாரானோம்.  அதிகாலையில் தில்லியிலிருந்து புறப்பட்டு விட்டதால், அன்றைய தினம் முழுவதும் எங்களுக்குக் கிடைத்தது – விசாகப்பட்டினம் மற்றும் அதன் அருகே இருக்கும் சில இடங்களைக் காண எங்களுக்கு நேரம் இருந்தது. இரண்டாம் நாள் தான் அரக்கு பள்ளத்தாக்கு செல்ல முன்பதிவு செய்திருந்தோம்.  முதல் நாள் பயணத்தில் பார்க்க வேண்டிய இடங்கள் என சில கோவில்களைத் தேர்ந்தெடுத்து இருந்தார் நண்பர். அந்த இடங்கள் என்ன, அங்கே கிடைத்த அனுபவங்கள் ஆகியவற்றை அடுத்த பகுதியில் சொல்கிறேன்.  விசாகப்பட்டிணத்திலும் ஒரு தமிழ்ப் பதிவர் இருக்கிறார் – அவரைச் சந்திக்க முடிந்ததா என்பதையும் வரும் பகுதியில் சொல்கிறேன்!  

தொடர்ந்து பயணிப்போம்!

நட்புடன்

வெங்கட்

புது தில்லி.

34 comments:

 1. ஒரு காலத்தில் கிட்டத்தட்ட 24 மணி நேரம் ரயிலில் பயணம் செஞ்சு விசாகப்பட்டினம் போயிருக்கேன். கோபால் அப்போ அங்கேதான் வேலை செஞ்சுக்கிட்டு இருந்தார்.

  சிம்மாச்சலம் கோவிலுக்குப் போயிருப்பீங்கன்னு நினைக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. சிம்மாச்சலம்! அடுத்த பகுதியில் சொல்கிறேன்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   Delete
 2. Admire ur hardwork in compiling information and writing, enakku thaan padikka time illa munna pola. Nice to read today. Felt like visited that place

  ReplyDelete
  Replies
  1. நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்களது வருகை. மிக்க மகிழ்ச்சி புவனா.... சில சமயங்களில் இணையப் பக்கம் வருவது சிரமமாகத் தான் இருக்கிறது எனக்கும்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாவி தங்கமணி.

   Delete
 3. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   Delete
 4. செல்லப்பெட்டி - செல்லமான பெட்டி! செல்லம் என்றால் பெட்டி என்றும் ஒரு பொருள் உண்டு என நினைக்கிறேன். வெற்றிலை போடும் பழக்கமுள்ள எனது தாத்தா, வெற்றிலை, பாக்கு, புகையிலை, சுண்ணாம்பு வைத்திருக்கும் சிறிய பித்தளை பெட்டியை வெற்றிலைச் செல்லம் என்றுதான் சொல்லுவார்.

  ReplyDelete
  Replies
  1. செல்லப் பெட்டி, வெற்றிலைச் செல்லம் இப்படி இரண்டும் கேட்டதுண்டு.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

   Delete
 5. தொடர்கிறேன். முன்னுரை சடக்குனு முடிஞ்சமாதிரி இருக்கு. த.ம

  ReplyDelete
  Replies
  1. இரண்டு பகுதியும் முன்னுரை மாதிரி இருப்பதாலோ? :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன் ஜி!

   Delete
 6. செல்லப்பெட்டியின் வேலையை அடுத்த பகிர்வில் காண ஆவலுடன்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 7. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 8. அலுவலக வேலையாக ஒரு முறை விசாகப் பட்டினம் சென்றிருக்கிறேன் என் மைத்துனன் அங்கு பிஎச் ஈ எல் லில் வேலையிலிருந்தபோதும் சென்றிருக்கிறேன் நிறையவே இடங்கள் சென்றிருக்கிறோம் சிம்மாசலம் கோவில் ஒன்று அங்கிருந்து சுமார் 80 கிமீ தூரத்தில் அன்னாவரம் என்னும் இடம் அங்கேயே கைலாஷ் கிரி என்னும் இடம் இதுபோக வைசாக் பீச் அங்கே இரண்டு நிமிடத்தில் கைக்கு அழகான டிசைன்களில் மெஹ்ந்தி வரைகிறார்கள் பழைய நினைவுகளை மீட்டது இப்பதிவு

  ReplyDelete
  Replies
  1. உங்கள் பழைய நினைவுகளை மீட்க இப்பதிவு உதவியதில் மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி G.M.B. ஐயா.

   Delete
 9. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 10. அடுத்தப் பதிவிற்காகக் காத்திருக்கிறேன் ஐயா
  தம +1

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 11. இப்பொழுது இரண்டு மணிநேர பயணத்திற்கே அலுத்துக் கொள்கிறார்கள் உண்மைதான் ஜி
  நம் முன்னோர்கள் எவ்வளவு பொறுமைசாலிகள். தொடர்கிறேன்....

  ReplyDelete
  Replies
  1. உண்மை தான் நண்பரே.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

   Delete
 12. தொடர் நன்றாக டேக் ஆப் ஆகியிருக்கு
  தொடர்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது.

   Delete
 13. தொடர்கிறோம்...அழகான பயணம் என்று தெரிகிறது..

  கீதா: ஹஹஹஹ் செல்லப்பெட்டி!!! ஆமாம் ஜி எனக்கும் எனது சின்ன செல்லப்பெட்டி இல்லாமல் பயணிப்பது என்பது என்னவோ எதையோ இழந்தது போன்ற ஒரு உணர்வு வந்துவிடும்...

  நாங்கள் ரயில்நிலையத்திலிருந்து நடக்கும் தூரத்தில் ஜஸ்ட் ஒரு கிமீ தூரத்தில் தங்கியிருந்தோம். ஆர் கே பீச் 6 கிமீ தூரம்... சிம்மாசலம் மற்றும் சத்யநாயாரணா கோயில் சென்றோம்.. பீச்சிலிருக்கும் சப்மெரைனும் பார்த்தோம்..கைலாசகிரி...அழகு! அங்கிருந்து கீழே கடற்கரையின் அழகு சொல்லி முடியாது அது போல அதனைத் தாண்டியதும் மலையும் மற்றொரு புறம் இருக்கும் கடற்கரை வளைந்து செல்லும் பகுதியும் அழகு.....ரிஷி கொண்டா பீச்சும் ரொம்ப அழகு! நான் மிகவும் ரசித்த இடங்கள் இவை அரக்கும் தான்...உங்கள் அனுபவங்களை அறிய ஆவலுடன்....

  ReplyDelete
  Replies
  1. இந்தப் பயணத்தில் எங்கள் முக்கிய இலக்கு அரக்கு மற்றும் சில கோவில்கள்.... பயணத்தில் பார்த்த இடங்கள் வரும் பகுதிகளில் சொல்கிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 14. அருமையான தொடரை தொடர்கிறேம்.
  பகிர்ந்தவை பயனுள்ளது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   Delete
 15. அருமையான சுற்றுலாவினைத் தொடர்கின்றேன்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   Delete
 16. செல்லப்பெட்டினதும், "வெற்றிலைச் செல்லம்" என நினைச்சேன். வைசாகெல்லாம் போகலை! இனி போக முடியுமானும் தெரியலை! பயணங்களையே குறைச்சுட்டு வரோம்.

  ReplyDelete
  Replies
  1. இனி போகமுடியுமா தெரியலை! முடிந்தால் சென்று வாருங்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   Delete
 17. அருமை அற்புதம். ஐயா.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....