சற்றே இடைவெளிக்குப்
பிறகு:
சென்ற
வருடத்தில் ஃப்ரூட் சாலட் பகிர்ந்து கொண்ட பிறகு நான்கு வாரங்களுக்கு மேலாக ஃப்ரூட்
சாலட் பகிர்ந்து கொள்ள முடியவில்லை. பழங்கள் கிடைக்கவில்லையோ என்று நீங்கள் எண்ணி
இருக்கக்கூடும்! பழங்கள் நிறையவே இருந்தாலும் அதை தேர்ந்தெடுத்து பழக்கலவையாக
உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கான நேரக் குறைவு தான் இடைவெளிக்குக் காரணம். இதோ
மீண்டும் வந்து விட்டேன்!
அடுத்தவனுக்காவே....
இவன்
என்ன நினைப்பான், அவன் என்ன நினைப்பான்னு நினைச்சே வாழ்றோம்.... ஆனா உண்மையில் ஒருத்தனும்
நம்மளைப் பத்தி நினைக்கிறதேயில்ல.......
கல்யாணம்... கல்யாணம்!:
Marriage
may be made in heaven…. But the
maintenance charges must be paid on Earth!
சுத்தம் – ஒரு பாடம்:
வெளியே சென்று வீடு திரும்பினால் அப்போது தான் உங்கள் மனைவி அல்லது அம்மா
வீட்டைத் துடைத்து சுத்தம் செய்து இருப்பார்கள். அழுக்குக் காலோடு வீட்டுக்குள்
நுழைய பூரிக்கட்டையோ அல்லது மண்டகப்படியோ நிச்சயம் வாங்கிக் கொள்வோம்..... அப்படி நடக்கக் கூடாது என்றால் இந்தக்
காணொளியைப் பாருங்களேன்... எவ்வளவு அழகாய்
நமக்குச் சொல்லித் தருகிறது இந்த நாய்க்குட்டி....
சீட் பெல்ட் அணியுங்கள்:
நான்கு சக்கர வாகனங்களில் பயணிக்கும் போது சீட் பெல்ட் அணிந்து கொள்வது மிகவும் அவசியமானது..... மிகச் சிறப்பாக அதைச் சொல்கிறது இக்காணொளி.... பாருங்களேன்.
ரசித்த திறமை.....
உயிர்களை நேசிப்போம்....
பாசம் வைக்க
பூனையென்ன,புலியென்ன..?
கருணை மிகுமனிதனுக்கு
புலியோ,பூனையோ..
ஏன் காகமாயினும் கூட..
உயிர் விலை மதிப்பற்றது!
அன்பு செலுத்துவோம்...
உயிர்களை நேசிப்போம்!!!
மின் புத்தகம்:
எனது இரண்டாவது மின் புத்தகம் “மத்தியப் பிரதேசம் அழைக்கிறது” பற்றி முன்னரே தெரிவித்திருந்தேன். இப்போது இன்னுமொரு மகிழ்ச்சியான செய்தி. ”மத்தியப் பிரதேசம் அழைக்கிறது” தொடர் இப்போது தின வணிகம் நாளிதழின் சுற்றுலா.காம் பகுதியில் வாரா வாரம் வெளி வருகிறது. முதல் பகுதி 13 ஜனவரி 2016 அன்று வெளியாகி இருக்கிறது. நண்பர் செந்தில் குமாருக்கு நன்றி.
மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை….
நட்புடன்
வெங்கட்
திருவரங்கத்திலிருந்து.....
கதவையே தபேலா ஆக்கிப் பாடும் அந்த சிறுவனின் பாடலை ரசித்தேன் :)
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!
நீக்குசீட் பெல்ட் முன்பே பார்த்திருக்கிறேன். மற்ற காணொளிகள் பிறகு பார்ப்பேன். ப்ருட் சாலட் சுவையோ சுவை!
பதிலளிநீக்குமின் நூலுக்கும் சுற்றுலா.காம் இல் வெளிவருவதற்கும் வாழ்த்துகள் அண்ணா.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கிரேஸ்.
நீக்குஃப்ரூட் சாலட் – 155 – சீட் பெல்ட் – மின் புத்தகம் – கல்யாணம்!
பதிலளிநீக்குஅனைத்தும் அருமை, ஜி.
//இவன் என்ன நினைப்பான், அவன் என்ன நினைப்பான்னு நினைச்சே வாழ்றோம்.... ஆனா
உண்மையில் ஒருத்தனும் நம்மளைப் பத்தி நினைக்கிறதேயில்ல.......// மிகவும் உண்மை.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!
நீக்குஆஹா நாய்குட்டி நல்லா கத்துக்கிட்டு இருக்கே....!
பதிலளிநீக்குசுவை
ம.பி.அ.-வாழ்த்துகள்
தம.+1
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உமையாள் காயத்ரி ஜி!
நீக்குநாளிதழில் வருவதற்கு வாழ்த்துகள் காணொளிகள் அனைத்தும் நன்று ஜி காகத்தின் கவிதையும் அருமை வாழ்த்துகள்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!
நீக்குஇடைவெளிக்குப் பின் தொடங்கினாலும் முதல் செய்தி "நச்". படத்திலுள்ளது காக்கை போலத் தெரியவில்லையே.. ஒரு வகைக் குருவிதான் அது. தின வணிகம் நாளிதழில் உங்கள் படைப்பு வெளிவருவதற்கு வாழ்த்துகள். அதற்குச் சன்மானம் ஏதும் உண்டா?
பதிலளிநீக்குசன்மானம்.... - ஹாஹா... நல்ல கேள்வி!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நாய்க்குட்டி கால்களை சுத்தமாக்கும் காணொளி அருமையான பாடம்.
பதிலளிநீக்குசீட் பெல்ட், குடும்பமெனும் பாதுகாப்பு இருபொருள் படும்காணோளி அசத்தல்.
சிறுவனின் பாடல் ரசித்தேன்.!
மின்நூலுக்கும் தொடருக்கும் பாராட்டுகள்.
தொடர்வோம்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிஷா.
நீக்குதின வணிகம் நாளிதழின் சுற்றுலா.காம் பகுதியில் வெளி வருவது குறித்து மிக்க மகிழ்ச்சி... வாழ்த்துகள்...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குபழக்கலவை, கல்யாணம் எல்லாம் நன்றாக இருக்கிறது. இதில் காக்கை குருவி எங்கள் ஜாதி என்று சொல்லாமல் சொல்லிக்காட்டும் அந்தச் சகோதரியின் அன்பு நெஞ்சைப்பிழிகிறது நண்பரே இதற்காகவே தம-7
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முத்துநிலவன் ஐயா.
நீக்குகாணொளிகளில் சீட் பெல்ட் அணிவது பற்றிய சிறுகுறும்(?)படம் அடடா..அருமை! பாதுகாப்பு என்பது மனைவி மற்றும் மகளின் கைகள்தான் என்பதை இதைவிட வேறெப்படிச் சொல்ல முடியும்? அடுத்த சிறுவனின் பாடலை மொழிச்சிக்கலால் புரிந்துகொள்ள முடியவில்லை, அடுத்து, தங்கள் பயண எழுத்துகள் தமிழ் இதழில் தொடர்வது மிகவும் மகிழ்ச்சி தருவது, வாழ்த்துகளும் நன்றியும் அய்யா. வருக வருக வணக்கம்.
பதிலளிநீக்குசிறுவன் பாடுவது ஒரு ஹிந்தி சினிமா பாடல்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முத்துநிலவன் ஐயா.
மகிழ்ந்தேன்
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் ஐயா
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குஇணைய இதழுக்கும், தொடருக்கும் இனிய வாழ்த்துக்கள்..
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.
நீக்குவருடத்தின் முதல் செய்தி ஃப்ரூட் சாலடில் நறுக்கென்று ஒரு சுவை! அப்படித்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
பதிலளிநீக்குஅந்தப் பப்பி காணொளி ம்ம் நன்றாகவே கத்துத் தருகின்றது...ரசித்தோம். அந்தக் குட்டிப்பையன் ஓ!!! ஹப்பா என்ன ஒரு திறமை வியக்க வைக்கின்றான். நல்ல ஞானம் இருக்கின்றது.
சீட்பெல்ட் காணொளி சூப்பர். உயிர்களை நேசிப்போம் படமும் நெகிழ்ச்சி...வரிகளுடன்..
தங்கள் கட்டுரை சுற்றுலா.காமில் வெளிவருவதற்கு மிக்க மகிழ்ச்சி வெங்கட்ஜி. வாழ்த்துகள். வருவது பற்றி அறிந்தோம் ஏற்கனவே!!!
அருமையான ஃப்ரூட்சாலட் இந்த வருடத்தின் தொடக்கம்..
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!
நீக்குசுவையான சாலட்! புத்தக வெளியிட்டீற்கு வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.
நீக்குமின்னூல் வெளிவருவதுக்கு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனிமரம் நேசன்.
நீக்குஃப்ரூட் சாலட்டை ருசித்தேன். வீடியோ காட்சிகளும் நல்ல தேர்வு. உங்களது மின்நூல் ஒன்றை ஏற்கனவே எனது கோப்பில் சேமித்து வைத்துள்ளேன். மற்றவற்றையும் பார்க்க வேண்டும்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஐயா
மின்நூல் வெளியீட்டுக்கு வாழ்த்துக்கள் ஐயா.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.
நீக்குமனமார்ந்த வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.
நீக்குஉங்கள் படைப்புப் பத்திரிகையில் வருவது குறித்து மகிழ்ச்சி. குட்டி நாய் கால்களைத் துடைத்துக் கொண்டு உள்ளே நுழைவதை ஏற்கெனவே பார்த்தேன். மற்றவை புதிது.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....
நீக்குஉயிர்களை நேசிப்போம் படம் அருமை. மனதைத் தொடும் படம். "உயிர்களிடத்தில் அன்பு வேண்டும்" என்ற பாரதியின் வரிகள் நினைவுக்கு வந்தன.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.
நீக்குபையன் எவ்வளவு நேரமா கதவ தட்டிட்டே இருக்கான் ..... திறக்கவே மாட்றாங்களே....
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி யூர்கன் க்ருகியர்.
நீக்கு
பதிலளிநீக்குமூன்று காணொளிகளுமே அருமை. அதுவும் அந்த நாய்க்குட்டி செய்யும் செயல் நமக்கு ஒரு பாடம். வழக்கம்போல் பழக்கலவை அருமை. வாழ்த்துக்கள்!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.
நீக்கு