எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Thursday, January 28, 2016

சக்கரக்காலன் அல்லது பயணக் காதலன் – ஷாஜஹான்பேருந்து முழுக்க காலியாகவே இருந்தாலும்
பேருந்து நிறுத்தத்திலேயே பயணி நின்றிருந்தாலும்
ஒரு பக்கமாகச் சாய்ந்து
இடது கை தரையைத் தொடுமளவுக்கு
விந்தையாய் சரிந்து நின்று கைகாட்டினாலும்
நிற்காமல் போவது தான் அரசுப் பேருந்து.
- அதிகாலை 5 மணி அனுபவம்.

அதிகாலை ஐந்து மணிக்கு அரசுப் பேருந்துக்காக காத்திருக்கும் அனுபவம் உங்களுக்கு உண்டா? நாம் காத்திருக்க, நம்மை ஒரு பொருட்டாக மதிக்காது கடந்து போகும் பேருந்து....  பேருந்து ஓட்டுனரையும் நடத்துனரையும் நிச்சயம் நாலு திட்டு திட்டி இருப்போம்! இவர் கவிதை எழுதி இருக்கிறார்!

ஊளையிட்டவாறே விரையும்
எதிர்த்திசை ரயில்களுக்குத் தெரிவதில்லை
இங்கே திடுக்கிட்டு விழித்தெழும்
குழந்தைகளை.

எதிர்த்திசை ரயிலை ஓட்டும் அந்த ஓட்டுனர் எப்போதாவது இப்படி யோசித்திருப்பாரா?

கருத்த முகமும்
இறுக்கிக் கட்டிய
இரட்டைச் சடையும்
மின்னும் விழிகளும்
பள்ளிச் சீருடையுமாய்
இறங்கிச் சென்ற
கிராமத்துச் சிறுமி
அறிந்திருக்க மாட்டாள்
இன்றைய என் தினத்தை
இனியநாளாய் அவள்
ஆக்கிவிட்டுப் போனதை....

பேருந்து பயணத்தில் பார்த்த பள்ளிச் சிறுமி பற்றி எழுதிய கவிதை ஒன்று. அச்சிறுமி இக்கவிதை பற்றி அறிந்திருப்பாளா?

திருப்பூரில் உடுமலைக்குச் செல்லும் பஸ்சில் ஏறி உட்கார்ந்து கண்டக்டரிடம் திருப்பூர் என்று டிக்கெட் கேட்க, அவர் எங்கே போகணுங்க என்று கேட்க, மீண்டும் திருப்பூர் என்று நான் சொல்ல, இதாங்க திருப்பூர் என்று அவர் சொல்ல....  ஒர் நிமிடம் “நான் எங்கே இருக்கேன்என்று ப்ளாங்க் ஆகி..... “சாரி சார்.... ஊர் ஊரா சுத்திட்டே இருக்கிறதுல குழப்பமாயிடுச்சுஎன்று அசட்டுச் சிரிப்பு சிரிக்க....  இதுபோன்ற அனுபவங்கள் உங்களுக்கும் கிடைத்திருக்கும் தானே?

ஊர் சுற்றிக் கொண்டே இருந்தால் இப்படி நடக்கும் வாய்ப்பு உண்டு.  எனக்கும் நடந்திருக்கிறது! :)

மேலே படித்த அனைத்தும் எங்கே படித்தது என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் உங்களுக்கு இருக்கும்.....  அதைப் பற்றி தான் இப்போது சொல்லப் போகிறேன்!

சமீபத்தில் நண்பர் கஸ்தூரி ரெங்கன் அவரது முகப்புத்தக இற்றையொன்றில் திரு ஷாஜஹான் அவர்களின் சக்கரக்காலன் அல்லது பயணக்காதலன்புத்தகம் வெளிவந்திருக்கிறது என்று தெரிவிக்க, தில்லி நண்பரான திரு ஷாஜஹான் அவர்களின் முதல் புத்தகம் வெளிவந்ததில் மகிழ்ச்சி என்று சொன்னதோடு, தில்லியில் அவரைச் சந்தித்து புத்தகம் வாங்கிக் கொள்ள வேண்டும் என்று எழுதி இருந்தேன். இந்த ஞாயிறில் புதுக்கோட்டை சென்றிருந்தபோது நண்பர் கஸ்தூரிரெங்கன் இப்புத்தகத்தினை நினைவுப் பரிசாகக் கொடுத்து விட்டார். 

அடுத்த நாளே சக்கரக்காலனை வாசிக்க ஆரம்பித்து விட்டேன்.  மாலைக்குள் படித்தும் விட்டேன்.  கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளில் அவர் செய்த பல பயணங்களைப் பற்றி முகப்புத்தகத்தில் பகிர்ந்து கொண்ட பல இற்றைகளைத் தொகுத்து மிகச் சிறப்பாக வெளியிட்டு இருக்கிறார். நான்கு வருடங்களில் செய்த பல பயணங்கள் – இரயிலில், விமானத்தில், பேருந்துப் பயணம் என ஒவ்வொன்றிலும் கிடைத்த அனுபவங்கள், பயணத்தின் போது எழுதிய கவிதைகள் என பல சுவாரஸ்யமான விஷயங்களை புத்தகத்தில் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

பயணம் செய்வது யாருக்குத் தான் பிடிக்காது? சிலருக்கு பயணம் செய்யப் பிடிக்காது என்றாலும், அடுத்தவர்களுக்கு பயணத்தில் கிடைக்கும் அனுபவங்களை படிப்பது நிச்சயம் பிடிக்கும். ஷாஜஹான் அவர்களின் பயணத்தில் அவர் சந்தித்த நண்பர்கள், அங்கே கிடைத்த பல வித அனுபவங்கள் ஆகியவற்றினை மிகச் சிறப்பாக தொகுத்து வெளியிட்டு இருக்கிறார். புத்தகம் படிக்க எடுத்தால், நிச்சயம் முடித்து விட்டு தான் அடுத்த வேலைக்குப் போவீர்கள். 

புத்தகத்தின் முன்னுரையில் ஷாஜஹான் அவர்களே குறிப்பிட்டிருப்பது போல “வாழ்க்கையே ஒரு பயணம் தான். வாழ்வின் ஊடான பயணங்கள் பெரும்பாலும் இலக்கை நோக்கியே என்றாலும், வாழ்க்கைப்பயணம் மட்டும் எல்லாருக்கும், இலக்கு நோக்கியதாக வாய்த்து விடுவதில்லை. பெரும்பாலோருக்கு, நீரோடையில் மிதந்து செல்லும் சருகினைப் போல இழுப்பின் போக்கில் பயணப்பட நேர்கிறது, சேர்ந்த இடமே இலக்காய் மாறுகிறது.

பலருடைய புத்தகங்களை வடிவமைத்துத் தரும் நண்பர் ஷாஜஹான் இதுவரை தன்னுடைய ஆக்கங்களை இதுவரை புத்தகமாக வெளியிடவில்லை. பலருடைய கேள்விகளுக்கு பதில் இருந்தாலும், “புத்தகம் போடறதால கிடைக்கிற வருமானத்தை நீங்க கல்வி உதவிக்காகப் பயன்படுத்தலாமேஎன்ற ஒரே ஒரு கேள்வி தான் இப்புத்தகம் வெளிவரக் காரணம்..... இந்த ஒரு காரணத்திற்காகவே புத்தகம் வாங்கிப் படிக்க வேண்டும்....

முகப்புத்தகத்தில் இருக்கும் நண்பர்கள் பலருக்கும் ஷாஜஹான் அவர்கள் செய்து வரும் பல்வேறு நல்ல விஷயங்கள் தெரிந்திருக்கும்.  சமீபத்திய சென்னை வெள்ளத்தின் போது அவர் ஆற்றிய சீரிய பணிகள் பலப்பல.....

புத்தகம் வெளியீடு: New Century Book House Pvt. Ltd., Chennai.  விலை: ரூபாய் 240.

புத்தகத்தின் வாசிப்பனுபவம் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. நிச்சயம் உங்களுக்கும் பிடிக்கும்.  படித்துப் பாருங்களேன்!

மீண்டும் வேறொரு பதிவில் சந்திக்கும் வரை....

நட்புடன்

வெங்கட்.

திருவரங்கத்திலிருந்து....

28 comments:

 1. வரிகள் ரசிக்க வைத்தன.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 2. வாழ்க்கையே ஒரு பயணம் தான்.
  .வாழ்க்கைப்பயணத்தை பதிவு செய்திருக்கும் புத்தக அறிமுகம் அருமை..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 3. வாசிக்க தூண்டும் விமர்சனம்! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 4. நூலைப் படிக்க வைக்கும் பதிவு. நூலினை வாங்க வேண்டும். ஆசிரியர் கஸ்தூரி ரெங்கன் அவர்களும் சென்ற வாரம் இந்த நூலினைப் பற்றி தனது வலையில் எழுதி இருந்தார். அவருக்கு கருத்துரை எழுத முடியாமல் போயிற்று.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.

   Delete
 5. அனைத்தும் அருமை. மிகவும் ரஸித்துப் படித்தேன்.

  //பேருந்து பயணத்தில் பார்த்த பள்ளிச் சிறுமி பற்றி எழுதிய கவிதை ஒன்று. அச்சிறுமி இக்கவிதை பற்றி அறிந்திருப்பாளா?//

  கவிதை நாயகியான அவள் எப்படி அறிந்திருப்பாள்? அவளும் ஏதாவது இதுபோலக் கவிதை எழுதி தன்னிடம் வைத்திருப்பாளோ என்னவோ ! :)


  //எதிர்த்திசை ரயிலை ஓட்டும் அந்த ஓட்டுனர் எப்போதாவது இப்படி யோசித்திருப்பாரா?//

  :) ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! யோசித்தால் அவரின் ரயிலை அவரால் ஓட்ட முடியாதே, ஜி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 6. முன்னுரையும் மிகவும் கவர்ந்த்தது...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 7. படிக்கும் ஆவல் மேலிடுகிறது தகவல் நன்று ஜி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 8. திரு ஷாஜஹான் அவர்களின் ”சக்கரக்காலன் அல்லது பயணக்காதலன்” என்ற நூல் பற்றிய தங்களின் திறனாய்வு அந்த நூலை உடனே வாங்கிப் படிக்க வேண்டும் போல் இருக்கிறது. அருமையான திறனாய்வு. வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 9. பொதுவாக சிலரின் விமர்சனங்கள் நூலைப் படிக்கும் ஆவலைத் தூண்டிவிடும். அவ்வகையில் தங்களுடையதும். நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 10. பகிர்வுக்கு நன்றி ஜி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம் ஜி!

   Delete
 11. பகிர்வுக்கு நன்றி சகோ...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.

   Delete
 12. புதிய வாசிக்க தூண்டும் விமர்சனம் தங்களின் அருமை. வாங்கி படிக்கிறேன் ! நன்றி!
  விஜய்
  புது டில்லி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விஜயராகவன் ஜி!

   Delete
 13. வெங்கட் பயணக்கட்டுரை விளக்கவுரை ரசிக்க வைத்தது. இந்த புத்தகம் படிக்கும் ஆர்வத்தையும் தூண்டுகிறது. கலைப்பயணத்துடன் உங்களின் பயணங்களும் நண்பரின் பயணங்களும் தொடரட்டும். வாழ்த்துக்கள்.

  சுதா த்வாரகாநாதன்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுதா த்வாரகாநாதன் ஜி!

   Delete
 14. வரிகள் அருமை ரசித்தோம். ஆம்! அவர் சொல்லுவது போல வாழ்க்கையே பயணம்தான். சிலருக்கு இலக்கை நோக்கி சிலருக்கு இலக்கில்லாத பயணமாக....வாசிக்க வேண்டும் நூலைப் பற்றி அருமையான, பயணங்கள் மேற்கொண்டுச் சிறப்பான பயணக் கட்டுரைகள் எழுதும் வெங்கட்ஜியின் விமர்சனத்தைச் சொல்ல வேண்டுமா...அருமை..

  ReplyDelete
  Replies
  1. விமர்சனம் என்று சொல்வதை விட, வாசிப்பனுபவம் என்று தான் சொல்வேன்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....