எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Sunday, January 3, 2016

ப[b]தா[dh]ய் நடனம் – பு[b]ந்தேல்கண்டிலிருந்து....சில வாரங்களுக்கு முன்னர் மத்தியப் பிரதேசத்திலிருந்து [G]குடும் [B]பாஜா எனும் நடனம் பற்றியும் புகைப்படங்களையும் பகிர்ந்து கொண்டிருந்தேன்.  சற்றே இடைவெளிக்குப் பிறகு இந்த ஞாயிறில் புந்தேல்கண்ட் பகுதியில் ஆடப்படும் நடனமான ப[b]தா[dh]ய் நடனம் பற்றியும், அந்நடனத்தினை நான் எடுத்த புகைப்படங்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. புந்தேல்கண்ட் [Bundhelkand] என்பது எப்பகுதி என தமிழகத்தில் இருக்கும் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பதால் முதலில் அது பற்றி சொல்லிவிடுகிறேன்.

படம்: இணையத்திலிருந்து....

உத்திரப் பிரதேசத்தின் சில பகுதிகளும் மத்தியப் பிரதேசத்தில் சில பகுதிகளும் சேர்ந்தது தான் புந்தேல்கண்ட் பகுதி. மத்தியப் பிரதேசம் மற்றும் உத்திரப் பிரதேசம் இரண்டிரண்டு மாநிலங்களாக பிரிக்கப்பட்டபோது இப்பகுதியையும் தனி மாநிலமாக பிரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தாலும் பிரிக்கப்படவில்லை.  மிகவும் பின்தங்கிய மாவட்டமாகவும், வரட்சி அதிகம் நிலவும் பகுதியாகவும் உள்ள இடம் இது.  இவ்விடத்தில் இருக்கும் ஓர்ச்சா எனும் நகரம் பற்றி என்னுடைய பயணக் கட்டுரை ஒன்றில் முன்னரே எழுதி இருக்கிறேன்.

புந்தேல்கண்ட் பகுதி மக்கள், ஷீத்லா மாதா எனும் இறைவியின் தீவிர பக்தர்கள். வெள்ளம், நோய் போன்ற அபாயங்களிலிருந்து தங்களை காக்கவும், ஆண் குழந்தைகள் பிறக்கவும் ஷீத்லா மாதாவிடம் வேண்டிக் கொள்வது இவர்களுடைய வழக்கம்.  ஆண் குழந்தை பிறந்த பிறகு தங்கள் கோரிக்கையை நிறைவேற்றிய ஷீத்லா மாதா கோவிலுக்குச் சென்று நன்றி செலுத்துகிறார்கள்.  அப்படிப் பட்ட காலங்களில் பதாய் என அழைக்கப்படும் இந்நடனத்தினை ஆடுவார்கள்.  ஆண்கள், பெண்கள் என இருவரும் இணைந்து ஆடும் ஆட்டத்தில் இனிய இசையும் தாளமும் சேர பார்க்கவே அருமையாக இருக்கும். அவர்கள் அணிந்திருக்கும் உடையும் இந்நடனத்திற்கு மேலும் அழகு சேர்க்கும்.  
சமீபத்தில் தில்லியில் நடந்த ஒரு விழாவில் இந்நடனத்தினைக் கண்டு ரசித்தேன்.  அங்கே நான் எடுத்த சில புகைப்படங்களை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அப்பெண்கள் அணிந்திருந்த நகைகள், ஆண்களின் அலங்காரம், ஆகியவற்றை நிச்சயம் ரசிக்க முடியும். கைகளில் விளக்கு ஏந்தி ஆடுவதும், பெரிய சக்கரத்தினைச் சுழற்றியபடியே ஆடுவதும் பார்க்க முடிந்தது. நடனத்தின் போது அவர்களின் முகத்தில் தெரியும் மகிழ்ச்சி நிச்சயம் நம்மையும் தொற்றிக் கொள்ளும் என்பதில் சந்தேகமில்லை.

நடனம் எப்படி இருந்தது என்பதை உங்களுக்கு காணொளியாகவும் காண்பிக்க நினைத்தாலும் நான் எடுக்க இயலவில்லை.  இணையத்தில் இருக்கும் இந்நடனத்தின் ஒரு காணொளி இதோ.....  மூன்றாம் நிமிடத்திலிருந்து நடனம் பார்க்கலாம். முதல் மூன்று நிமிடங்கள் நடனம் பற்றிய விவரங்கள் உண்டு.  நடனம் மற்றும் பார்க்க விரும்புவர்கள் நேராக மூன்றாம் நிமிடத்திலிருந்து பார்க்க ஆரம்பிக்கலாம்.
என்ன நண்பர்களே இந்த வாரத்தில் இங்கே பகிர்ந்து கொண்ட படங்களையும் நடனத்தினையும் ரசித்தீர்களா?  பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்......

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

38 comments:

 1. நீங்கள் அடுக்கி இருக்கும் படங்களைப் பார்த்தாலே காணொளி போலத்தான் இருக்கிறது ,அருமை :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

   Delete
 2. நடனத்தையும் படங்களையும் பார்த்தேன் நன்றி. தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சரவணன்.

   Delete
 3. அழகான படங்களுடன் இனிய பதிவு..

  கண்கவர் நடனம்.. காணொளி அருமை..

  மகிழ்ச்சி.. வாழ்க நலம்!..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

   Delete
 4. அழகிய புகைப்படங்கள். ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 5. எனெர்ஜெடிக் அண்ட் ஏஸ்தெடிக் நடனம் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற வேண்டுமானால் அவர்களுக்கு இந்த நடனம் ஆடத்தெரிந்திருக்கவேண்டுமே

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   Delete
 6. படங்கள் அருமை ஐயா
  நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 7. புகைப்படங்கள் அனைத்தும் அழகு ஜி காணொளியும் கண்டேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 8. புதியதொரு நடனம் பற்றி அறிந்துகொண்டேன்! படங்கள் வழக்கம் போல அசத்தல்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 9. நடனம் பற்றி அறியத் தந்தீர்கள் அண்ணா...
  உங்கள் படங்களே ஆயிரம் கதை சொல்லுதே... அவ்வளவு அழகான படங்கள்...
  நடனம் ரசித்தேன்... யூடிப்பில் போய் டவுன்லோட் பண்ணிட்டேன்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   Delete
 10. நடனம் பற்றிய விளக்கமும் அதற்கான ஏராளமான படங்களும் மிக அருமையாக இருந்தது. நேரில் கண்டதுபோல் உணர்வு தோன்றியது.
  த ம 5

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில்குமார்.

   Delete
 11. காணக் கிடைக்காத காட்சி
  காணத் தந்தமைக்கு நன்றியே சாட்சி!
  த ம +
  நட்புடன்,
  புதுவை வேலு

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புதுவை வேலு.

   Delete
 12. அருமையான படங்கள், நல்ல தொகுப்பு,
  புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி மகேஸ்வரி பாலச்சந்திரன் ஜி!

   Delete
 13. படங்கள் பல கதை பேச,, பதிவோ அதை விட பேச... அசைபடம் கூட ஆடச்சொல்ல மொத்தமாய் பதிவும் அமர்க்களம் தான்.

  கண்டதை கேட்டதை இன்னும் கொட்டுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிஷா.

   Delete
 14. கண்கவரும் படங்கள் அருமை. ஒரு பாரம்பரிய நடனத்தை அறிந்தேன்.பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   Delete
 15. ரொம்ப அழகான படங்கள். அறியாத தகவல்களுடன் நடனம் பற்றித் தெரிந்து கொண்டோம் வெங்கட்ஜி. மிக்க நன்றி.

  கீதா: இன்னும் ஒரு முறை கூட வாசிக்க வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 16. உயிருள்ள படங்கள்
  அருமை

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.

   Delete
 17. http://thaenmaduratamil.blogspot.com/2016/01/travel-with-my-friends.html

  நட்பின் பயணத்தில் உங்களை அழைக்கிறேன் :)

  ReplyDelete
  Replies
  1. அழைப்பிற்கு நன்றி கிரேஸ். விரைவில் எழுதுகிறேன்.....

   Delete
 18. உங்கள் படங்கள் மிக அழகு! காணொளியும் கண்டேன்..உற்சாகம் தொற்றிக்கொள்கிறது, பகிர்விற்கு நன்றி அண்ணா

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கிரேஸ்.

   Delete
 19. அனைத்துப்படங்களும் கலர்ஃபுல்லாக மிகவும் அழகோ அழகு. பகிர்வுக்கு நன்றிகள், ஜி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....