பஞ்ச் துவாரகா - பயணக் கட்டுரை பகுதி 28
விஷாலா உணவகத்தில் மனதும் வயிறும் நிரம்ப உண்ட
பிறகு வீடு திரும்பலாம் என நண்பரின் வாகனத்தில் புறப்பட்ட போது நேரம் இரவு 10.30
மணி. அந்த நேரத்தில் நேராக வீடு
திரும்பாமல் நாங்கள் வேறு ஒரு இடத்தின் வழியே சென்றோம். அந்த இடம் அஹமதாபாத் நகரிலுள்ள ஒரு அருமையான இடம்...... அந்த இடம் பற்றிச் சொல்வதற்கு முன்னர் ஒரு பாடலைக் கேட்கலாமா! பழைய பாடல்
என்றாலும் மிகவும் இனிமையான பாடல் அது! இன்றைய இளைஞர்களில் பலரும் கேட்டிருக்காத
பாடலாக இருக்கலாம்!
என்ன நண்பர்களே, பாடலை ரசித்தீர்களா? இன்று நாம் பார்க்கப் போகும் இடத்திற்கு
மிகவும் தகுந்த பாடல் இது. அஹமதாபாத்
நகரின் நதிக்கரையில் அமைக்கப்பட்டிருக்கும் Riverfront தான் நாம்
பார்க்கப் போகிறோம். நாங்கள் இரவு உணவினை உண்டபிறகு இந்த இடம் வரும் போது இரவு
பதினோறு மணி இருக்கும் என்பதால் உள்ளே சென்று அமைதியாக நடக்கவோ, உட்காரவோ
முடியவில்லை. என்றாலும், பாலத்தின் மீது சற்றே நின்று நதிக்கரையினையும் வண்ண
விளக்குகளால் செய்யப்பட்ட அலங்காரங்களையும் ரசிக்க முடிந்தது.
எத்தனை அழகு இந்த ஏரிக்கரை...... சபர்மதி
ஆற்றின் கரையில் இருந்த பல்வேறு ஆக்கிரமிப்புகளை அகற்றி மிகச் சிறப்பாக அழகுற
அமைத்திருக்கும் இந்த கரையில், நகரவாசிகளுக்கு பலவிதமான வசதிகள் உண்டு. காலையிலும்
மாலையிலும், ஏரிக்கரைப் பூங்காற்றினை ஸ்பரிசித்தபடியே நீண்ட நடைப்பயணம் மேற்கொள்ள
முடியும். குஜராத் மாநிலத்திற்கே உரிய பட்டம் பறக்கவிடும் திருவிழா இக்கரையினில்
தான் நடைபெறும். பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள் இங்கே திரண்டு பட்டம் விட்டு
மகிழ்ச்சியுறுவார்கள்.
இதைத் தவிர, படகோட்டம் – துடுப்பு மட்டுமல்லாது,
Speed Boat வசதிகளும் இங்கே உண்டு. விளையாட்டு வசதிகள் தவிர மிக அழகிய
பூங்காக்களும் இங்கே உண்டு. குடும்பத்துடன் சென்று இயற்கைச் சூழலில் கவலைகளை
மறந்து நிம்மதியாக இருக்க முடியும். இரவு வெகு நேரமாகிவிட்ட காரணத்தினால்
இப்பயணத்தின் போது இங்கே சென்று இளைப்பாற முடியவில்லை.
சமீபத்தில் இரும்புக் கம்பிகளில் தொங்கியவாறே
ஆற்றினைக் கடக்கும் வீர விளையாட்டுக்கான ஏற்பாடுகளும் செய்திருக்கிறார்கள். 60 அடி
உயரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் மேடையிலிருந்து ஆற்றின் மறுபக்கத்தில்
அமைந்திருக்கும் மேடைக்கு அந்தரத்தில் தொங்கியபடியே 1100 அடி நீள இரும்புக்கம்பி
வழியாகக் கடந்து உயரத்திலிருந்து நகரை காண முடியும். 100 கிலோவிற்கும் குறைவான
உடல் எடை கொண்ட எவரும் இந்த வசதியைப் பயன்படுத்த முடியும். கட்டணம் ஒருவருக்கு ரூபாய் 300 மட்டுமே!
சென்ற வருடத்தில் இந்தியா வந்திருந்த சீன
அதிபருக்கு இங்கே தான் வரவேற்பு அளிக்கப்பட்டது. அது பற்றிய செய்திகள் பலவும்
நீங்கள் இணையத்திலும், ஊடகங்களிலும் பார்த்திருக்க முடியும். இந்தப் பதிவினை வெளியிடும் இச்சமயத்தில் அங்கே சர்வதே
பட்டம் பறக்கவிடும் இரண்டு நாள் விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு [10-11
ஜனவரி 2016] முடிவடைந்திருக்கிறது. சக பதிவர் கடல் பயணங்கள் சுரேஷ் குமார் இந்தத்
திருவிழாவில் கலந்து கொண்டு வந்திருக்கிறார்! அவர் பக்கத்தில் படங்கள் விரைவில் வெளியிடுவார்
என நினைக்கிறேன்!
கரையோரமாகவே நின்று சூழலை ரசித்து அங்கிருந்து
புறப்பட்டோம். அடுத்த பயணத்தின் போது நிச்சயம் அங்கே சென்று கொஞ்ச நேரம் அமைதியாகக்
கழிக்க வேண்டும் என மனதுக்குள் நினைத்துக் கொண்டேன். வீடு திரும்பும்போதே
நள்ளிரவைத் தொட்டிருந்தது கடிகார முள்....
அடுத்த நாள் தில்லி திரும்ப வேண்டும் – மாலை 06 மணிக்கு மேல் தான்
தில்லிக்கான விமானம். அதுவரை எங்காவது சென்றே ஆக வேண்டுமே! சும்மா இருந்தால் சரி
வருமா என்ன? அந்த நாளின் பொழுதையும் வீணாகக்
கழிக்கப் போவதில்லை. அஹமதாபாத்
நகரிலிருந்து பரோடா செல்லும் வழியில் உள்ள ஒரு பஞ்ச் துவாரகா ஸ்தலத்திற்குச்
செல்வதாக திட்டம் இருக்கிறது.
அந்த இடம் என்ன, அங்கே கிடைத்த அனுபவங்கள்
ஆகியவற்றை அடுத்த பதிவில் சொல்லி விடுகிறேன்!
வேறொரு பதிவில் உங்களைச் சந்திக்கும் வரை....
நட்புடன்
வெங்கட்
புது
தில்லி.
டிஸ்கி: பதிவுலகில் செப்டம்பர் 30,
2009 அன்று எனது முதல் பதிவு வெளியிட்டேன்.
இன்று ஜனவரி 12, 2016 அன்று எனது பதிவின் எண்ணிக்கை 1000 தொட்டுவிட்டது!
இத்தனை தூரம் வருவேன் என்ற நம்பிக்கை இல்லாது ஆரம்பித்த எனக்கே இது ஆச்சர்யமாக
இருக்கிறது. இத்தனை பதிவுகளுக்கும் ஆதரவு
அளித்த அனைத்து நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.
ஆயிரம் பதிவுக்கும் வாழ்த்துகள்>
பதிலளிநீக்குநதியொர அலங்கரிப்பு படங்கள்,விபரங்கள் அனைத்தும் அசத்தல்.பட்டமிடும் திருவிழா குறித்த செய்திக்கும் நன்றி.
தொடருங்கள்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி நிஷா.
நீக்கு
பதிலளிநீக்கு1000 ஆவது பதிவிற்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். விரைவில் இந்த எண்ணிக்கை 10000 ஆக வாழ்த்துக்கள்!
சேலம் திரு எம்.ஏ.வேணு அவர்களின் தயாரிப்பில் 1957 ஆம் ஆண்டு வெளிவந்த ‘முதலாளி’ என்ற திரைப் படத்தில் வரும் ஏரிக்கரையின் மேலே’ என்ற பாடலைக் கேட்கும்போது நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் வாயசைக்க நடிகை தேவிகா ஏரிக்கரையின் மீது ஓடிய காட்சி நினைவுக்கு வந்தது. பகிர்ந்தமைக்கு நன்றி!
சபர்மதி ஆற்றின் அழகை இரசிக்க உதவியமைக்கு நன்றி! தொடர்கிறேன்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.
நீக்குபாடலும் அதற்கு ஏற்ற அந்த ஏரியும் அழகோ அழகு! பொருத்தமான பாடல்தான். இரவுக் காட்சி ரொம்பவே அழகாக இருக்கின்றது. பலதகவல்கள் குறித்த விளக்கங்கள் அனைத்துப் பகிர்விற்கும் மிக்க நன்றி வெங்கட்ஜி.
பதிலளிநீக்குவாழ்த்துகள்! 1000 பதிவுகளுக்கு! தங்கள் அனைத்துப் பதிவுகளுமே அருமையான பதிவுகளே. பல நல்ல விஷயங்களுடன். நீங்கள் இன்னும் படைப்பீர்கள். வாழ்த்துகள்!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!
நீக்குஇது சமீபத்தில் ஏற்படுத்தப் பட்ட பூங்கா போலிருக்கு ,நான் முன்பு போயிருக்கிறேன் ,அப்போது இது இல்லையே :)
பதிலளிநீக்குஆயிரம் பதிவு கண்ட அபூர்வ சிந்தாமணி பட்டத்தை வழங்கி மகிழ்கிறேன் ,வாழ்த்துக்கள் :)
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!
நீக்குஆயிரம்படிகள் பல ஆயிரங்களாக ....வெற்றிகள் தொடரட்டும் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி மாதேவி.
நீக்கு1000== மாவது பதிவுக்கு வாழ்த்துகள். உங்க பக்கம் இன்றுதான் என் முதல் வருகை.படங்களும் பதிவும் நல்லா இருக்கு.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ப்ராப்தம்.....
நீக்குதங்களது முதல் வருகைக்கு நன்றி.
வெங்கட் நாகராஜ் January 12, 2016 at 8:00 PM
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ப்ராப்தம்..... தங்களது முதல் வருகைக்கு நன்றி.//
நான்தான் இந்தப்புதியவரை உங்கள் பக்கம் இன்று புதிதாக அனுப்பிவைத்தேன், வெங்கட்ஜி. :)
உங்கள் மூலம் இன்னும் ஒருவர் எனது பதிவினை படித்திருப்பது அறிந்து மிக்க மகிழ்ச்சி வை.கோ. ஜி!
நீக்குதொடர்கிறேன். கம்பியில் கடந்து பார்வையா... ஐயோ...
பதிலளிநீக்கு1000 பத்தாயிரமாக வாழ்த்துகள்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நீக்குஆஹா வாழ்த்துக்கள் சகோ, 1000 பதிவுகள் இன்னும் பல மடங்கு உயரனும்,, நல்ல பகிர்வுகள் தங்கள் பதிவுகள். பல மின்னூல்கள் வரனும்,, வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி மகேஸ்வரி பாலச்சந்திரன் ஜி!
நீக்குதங்களின் 1000 மாவது பதிவுக்கு என் அன்பான நல்வாழ்த்துகள். மனம் நிறைந்த பாராட்டுகள்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!
நீக்குபடங்கள் அத்தனையும் அழகு. ஏரிக்கரை படம் சூப்பர்.
பதிலளிநீக்கு’ஏரிக்கரையின் மேலே’ ....... பாடல் கொடுத்துள்ளது மேலும் மகிழ்ச்சியாக உள்ளது. :)
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!
நீக்குஆயிரமாயிரம் வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.
நீக்கு1000 பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்....
பதிலளிநீக்குரம்யமான இரவுக் காட்சி...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி உமையாள் காயத்ரி ஜி!
நீக்குதம +1
பதிலளிநீக்குதமிழ் மண வாக்கிற்கு நன்றி உமையாள் காயத்ரி ஜி!
நீக்குவாழ்த்துகள் 1000...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குஆயிரமாவது பதிவிற்கு வாழ்த்துக்கள் ஐயா
பதிலளிநீக்குஇன்னும் பல்லாயிரம் பதிவு காணவும் வாழ்த்துக்கள்
தம +1
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குவணக்கம்
பதிலளிநீக்கு1000 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் ஐயா....த.ம 8
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ரூபன்.
நீக்குபாடலும் படங்களும் அருமை!
பதிலளிநீக்குஆயிரம் பதிவுகள் கண்ட உங்களுக்கு இனிய வாழ்த்துகள் அண்ணா.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கிரேஸ்.
நீக்குஆயிரம் லட்சங்களாக வாழ்த்துக்கள்! ஏரிக்கரை நிகழ்வுகளை ரசிக்கும்படி பகிர்ந்தமை சிறப்பு! பாடலும் சிறப்பு! நன்றி!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.
நீக்குஅந்த ஏரிக்கரை அழகாய் இருக்கு அண்ணா...
பதிலளிநீக்குபதிவின் மூலமாக விவரம் அறிந்து கொண்டேன்...
1000மாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.
நீக்குஆயிரமாவது பதிவுக்கு வாழ்த்துகள். குஜராத்தில் எந்த அரசு வந்தாலும் குஜராத்தை மேம்படுத்தவேண்டியே திட்டங்கள் தீட்டுகின்றனர். மக்களும் ஒத்துழைக்கின்றனர். இங்கோ? :( கோலம் போட்ட கோலமாவைக் கூடத் திரட்டுவதில்லை. அப்படியே தள்ளிவிடுகின்றனர்! :( சொன்னால் பிரச்னைதான் வரும். :)
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....
நீக்கு