அன்பின் நண்பர்களுக்கு,
வணக்கம்.... நலமா?
சமீப நாட்களாகவே எனது வலைப்பூவில் பதிவுகள் எழுதுவது சற்றே
குறைந்திருக்கிறது. இடைவிடாத பணிச்சுமை காரணமாக கடந்த மாதத்திலும், இந்த மாதத்தின்
தொடக்கத்திலும் பதிவுகள் எழுதியது மிகக்குறைவே.
என்னுடைய தில்லி நண்பர்கள் சிலர் நேரில் பார்க்கும்போதும், தொலைபேசி மூலம்
உரையாடும் போதும் கேட்கும் முதல் கேள்வியே, “இப்பல்லாம் முன்ன மாதிரி நிறைய
எழுதுவதில்லையே?”
என்பது தான்.
எனக்கே கூட அந்த உணர்வு வந்திருக்கிறது. எழுத வேண்டிய
விஷயங்கள் நிறைய இருந்தாலும் எழுதவில்லை.
ஒரு தொய்வு வந்துவிட்டதோ என்றும் தோன்றியது. சில சமயங்களில் இப்படி நடப்பது சகஜம் தானே!
இந்த நேரத்தில் ஒரு மகிழ்ச்சியான செய்தி – இன்றைய காலை
மின்னஞ்சல் திறந்தபோது பார்த்த முதல் செய்தி – “மின்னூல்: மத்தியப் பிரதேசம்
அழைக்கிறது – வெங்கட் நாகராஜ்” எனும் செய்தி தான்.... இதோ அந்த மகிழ்ச்சியை உங்களுடன்
பகிர்ந்து கொள்ள உடனே பதிவிட்டுவிட்டேன்......
சில வருடங்களுக்கு முன்னர் அலுவலக பயிற்சி ஒன்றிற்காக
ஒரு மாதம் வகுப்புகள் நடந்தன. அந்த ஒரு மாத பயிற்சி காலத்தின் ஒரு பகுதியாக
மத்தியப் பிரதேசத்தின் சில மாவட்டங்களுக்கு பயணம் சென்றிருந்தோம். அப்பயணத்தின்
போது பார்த்த இடங்கள், அங்கே கிடைத்த அனுபவங்கள், எடுத்த படங்கள் என அனைத்தையும்
எனது வலைப்பூவில் 27 பகுதிகளாக வெளியிட்டு இருந்தேன். இப்போது சற்றே மாற்றங்களுடன், மின்னூலாக
வெளிவந்திருக்கிறது.
பயணத்தின் ஒரு பகுதியாக மனவளர்ச்சி குறைந்தவர்கள், Autism, Cerebral Palsy போன்றவையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கும்
பெரியவர்களுக்கும் பயிற்சி அளிக்கும் ROSHNI என்கிற
மையத்திற்குச் சென்றிருந்தோம். வாழ்வில் நாம் சந்திக்கும் சிறிய பிரச்சனைகளுக்கே
துவண்டு போகும் நமக்கு அங்கே இருந்தவர்களைப் பார்க்கும்போது நமது பிரச்சனையெல்லாம்
ஒன்றுமே இல்லை என்ற எண்ணம் நிச்சயம் தோன்றும்… எனக்குத் தோன்றியது.
வித்தியாசமான ஒரு அனுபவம் அது.
ஓர்ச்சா எனும் நகரம் ஒன்றில் தங்கியிருந்தபோது மாலை
வேளைகளில் விளக்குகள் இருந்தாலும் அணைத்து விடுகிறார்கள். எங்கும் இருட்டு. எதற்கு என்று புரியாது
நாங்கள் ஒரு ஒலியும் ஒளியும் நிகழ்ச்சிப் பார்த்துக் கொண்டிருக்க, வெளியே வந்தபோது எங்கள் மீது ஒரு படையெடுப்பு நடந்தது – ஊரே இருளில் மூழ்கி இருக்கக் காரணம் அந்த படையெடுப்பு தான். அதுவும் தினம் தினம் நடக்கும்
படையெடுப்பு!
ராஜா மான்சிங் – ஒரு வேட்டையாடச் சென்றபோது வழியில்
பார்த்த ஒரு பேரழகி – நன்ஹி..... அழகில்
மயங்கி, ஏற்கனவே எட்டு மனைவிகள் இருந்தாலும், அவளையும் திருமணம் செய்து கொள்ள
விரும்பிய ராஜா மான்சிங் அவர்களுக்கு நன்ஹி போட்ட கட்டளைகள், ராஜா மான்சிங்
நன்ஹியை “ம்ருக்நயனி” எனப் பெயர் மாற்றம் செய்தது, கட்டளைகளுக்குக்
கட்டுப்பட்டது போன்ற சுவாரஸ்யமான செய்திகளும் இம்மின்னூலில் உண்டு!
இந்த இரண்டாவது மின்னூல் வெளியிட உறுதுணையாக இருந்த
நண்பர் திரு டி. ஸ்ரீனிவாசன் அவர்களுக்கும், முன்பக்க அட்டையை வடிவமைத்த திரு
மனோஜ் குமார் அவர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. அவர்களுடைய இடைவிடாத பணிகளுக்கிடையே
இப்படி புத்தகங்கள் வெளியிடுவது மிகச் சிறப்பான விஷயம். அவர்களது சீரிய பணி மேலும் சிறக்க எனது
வாழ்த்துகள்.
இரண்டாவது மின்னூல் வெளியிடப் போகும் தகவலை நண்பர்கள் தில்லையகத்து
துளசிதரன் மற்றும் கீதா அவர்களுக்குச் சொல்லி, அவர்களை முன்னுரை எழுதித்தரக் கேட்டதோடு,
பிழைகள் இருப்பின் சொல்லவும் கேட்டுக்கொண்டேன்.
அவர்களது பணிகளுக்கு இடையே அனைத்து பகுதிகளையும் ஒரு சேரப்படித்து
தவறுகளைச் சுட்டிக்காட்டி, சிறப்பானதோர் முன்னுரையும் எழுதிக்கொடுத்த நண்பர்கள்
துளசிதரன் மற்றும் கீதா அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றி.
மின்னூலை ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகள், புதிய கிண்டில் கருவிகள், குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகள், பழைய கிண்டில், நூக் கருவிகளிலும் பதிவிறக்கம் செய்து
படிக்க வசதியாக சுட்டிகள் உண்டு.
ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க/பதிவிறக்க:
புது கிண்டில் கருவிகளில் படிக்க:
குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில்
படிக்க:
பழைய கிண்டில்,நூக் கருவிகளில்
படிக்க:
இணையத்தில் படிக்க:
வலைப்பூவில் வெளியிட்டபோது பதிவுகளைப் படித்து உற்சாகம்
தந்த அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவிக்கும் அதே சமயத்தில்,
மின்னூலாக வந்திருக்கும் இச்சமயத்திலும் அதே உற்சாகத்தினை தருவீர்கள் என
நம்புகிறேன்.
என்றென்றும் அன்புடன்
வெங்கட்
புது தில்லி.
“இப்பல்லாம் முன்ன மாதிரி நிறைய எழுதுவதில்லையே? என்னுள்ளும் இந்தக் கேள்வி எழுகிறது.தொடர்ந்து எழுத முயற்சியுங்கள் நண்பரே
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன்.
நீக்குமின்னல் வேகத்தில் மின்னூலாக வந்திருப்பது கேட்க மிக்க மகிழ்ச்சி. பாராட்டுகள். வாழ்த்துகள், வெங்கட் ஜி.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!
நீக்குஇரண்டாவது மின்னூலை வெளிக்கொணர்ந்தமைக்கு பாராட்டுக்கள். இப்போதுதான் அதை எனது மடிக்கணிணியில் பதிவிறக்கம் செய்துதுள்ளேன். தங்களது நூலை படித்து இரசிப்பேன்!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே.நடனசபாபதி ஐயா.
நீக்குவணக்கம்.
பதிலளிநீக்குதரவிறக்கிக் கொள்கிறேன்.
பணிச்சுமையோடே பதிவுகளை எழுதுவது கடினம்தான்.
எனக்கும் இந்தப் பிரச்சினை இருக்கிறது.
பயிற்சிக்காக வேரூர் செல்ல வேண்டி நிர்பந்தமும்.
ஆனால் உங்களைப் போலப் பயணங்களை இரசித்து எழுதிட முடியவில்லை.
வாழ்த்துகள்.
தொடர்கிறேன்.
த ம
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஊமைக்கனவுகள் ஐயா.
நீக்குவாழ்த்துக்கள்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.
நீக்குநேரடி அலைவரிசையாய் நேர்த்தியாக நடந்த சம்பவங்களை கண்முன் கொண்டு வந்து
பதிலளிநீக்குகாட்சி படுத்தும் பாங்கு,
நண்பரே ! தங்களது பதிவுகளின் மகோத்துவம்.
மின்னூல் வடிவில் வெளியாகி இருக்கிறது
நன்னூலாய் சிறப்பு பெற வாழ்த்துகள் நன்றி.
நன்றி!
த ம +
நட்புடன்,
புதுவை வேலு
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி புதுவை வேலு.
நீக்குமுன்னுரையைப் படிக்கும்போது படிக்கவேண்டும் என்கிற ஆவல் வருகிறது.. இறக்கிக் கொண்டேன். வாழ்த்துகள் வெங்கட்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நீக்குநல்வாழ்த்துகள்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.
நீக்குபதிவிறக்கிவிட்டாயிற்று
பதிலளிநீக்குபடிக்க வேண்டும் !
வாழ்த்துகள்
தம +
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி மது.
நீக்குவாழ்த்துகள் ஜி
பதிலளிநீக்குமுதலில் பிழைப்பு பிறகே வலைப்பூ என்ன செய்வது இருப்பினும் மென்மேலும் தொடர்ந்து எழுத முயலுங்கள் ஜி
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.
நீக்குவாழ்த்துக்கள் ஐயா
பதிலளிநீக்குஇதோ தரவிறக்கம் செய்து கொள்கின்றேன்
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குமிகவும் மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி மாதேவி.
நீக்குவாழ்த்துகள்... தரவிறக்கம் செய்து கொள்கிறேன்... நன்றி...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குவாழ்த்துக்கள் சார்! உங்கள் கட்டுரைகள் அனைத்துமே சுவாரஸ்யம்! மின்னூல் மட்டுமின்றி புத்தகமாகவும் விரைவில் வெளிவந்து சாதனைகள் படைக்க வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.
நீக்குவாழ்த்துகள்!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.
நீக்குஅன்புள்ள அய்யா,
பதிலளிநீக்குமத்தியப் பிரதேசம் அழைக்கிறது – மின்னூல் வெளிவந்தது அறிந்து மகிழ்ச்சி. பாராட்டுகள்... வாழ்த்துகள்...!
நன்றி.
த.ம.+1
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி மணவை ஜேம்ஸ் ஜி!
நீக்குவாழ்த்துகள் வெங்கட்
பதிலளிநீக்குதொடரட்டும் சாதனைகள்
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.
நீக்குவாழ்த்துக்கள் ஜி !
பதிலளிநீக்குபிழைப்பின் நடுவில் வலைப்பூ சிரமம் என்றாலும் விட முடியலையே :)
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!
நீக்குஇனிய வாழ்த்துகள்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சாந்தி மாரியப்பன் ஜி!
நீக்குவாழ்த்துகள் வெங்கட் ஜி! எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்! மேலும் மேலும் தங்களது பல கட்டுரைகள் வெளி வரவேண்டும் என்ற வாழ்த்துகள். நாங்கள் அறிந்தவுடன் மிக்க மகிழ்ச்சி கொண்டோம். துளசி பரீட்சைத் தாள் திருத்தம்...கீதா சென்னை இன்டெர்நாஷனல் ஃபில்ம் திரையிடலில் படங்கள் பார்த்தல் என்று...அதனால்தான் தாமதம்.
பதிலளிநீக்குமீண்டும் வாழ்த்துகள் பல.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!
நீக்குவாழ்த்துக்கள் அண்ணா...
பதிலளிநீக்குதரவிறக்கம் பண்ணிக் கொள்கிறேன்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.
நீக்கு