எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, January 1, 2016

முடிவும் தொடக்கமும்.....

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்


நேற்றுடன் நமது வாழ்வில் இன்னுமொரு வருடம் முடிந்திருக்கிறது.  இன்று புத்தாண்டு புதுப்பொலிவுடன் பிறந்திருக்கிறது. ஒவ்வொரு வருடமும் இவற்றைக் கடைபிடிப்பேன், இந்த வழக்கங்களை ஒழிப்பேன் என்றெல்லாம் முடிவு எடுப்பது பலருக்கு வழக்கம். என்னைப் பொறுத்த வரை இப்படி எல்லாம் முடிவு எடுப்பதே இல்லை.....  எப்போதும் போல, அடுத்தவருக்குத் தீங்கு நினைக்காது, நல்லதையே செய்ய நினைக்க வேண்டும் என்பதைத் தவிர வேறு ஒன்றும் புதியதாக நினைப்பதில்லை.

புத்தாண்டினை வரவேற்க, தில்லியில் இருக்கும்
திருப்பதி பாலாஜி கோவிலில் போட்ட கோலம்


சென்ற வருடத்தில் மொத்தமாக 185 பதிவுகள் வெளியிட்டு இருக்கிறேன். சில மாதங்களில் ஒவ்வொரு நாளும் பதிவு வெளியிட்டிருந்தாலும், சில மாதங்களில் சுணக்கம் – மொத்தமாகவே 7 பதிவு தான் ஒரு மாதத்தில் வெளியிட்டு இருக்கிறேன்.  எனது முதல் மின் புத்தகம் வெளியிட்டதும் இந்த வருடத்தில் தான். இரண்டாவது மின் புத்தகம் தயார் செய்து அனுப்பி இருக்கிறேன். இன்னமும் வெளியிடப்படவில்லை.  2016-ஆம் ஆண்டின் ஆரம்பத்திலேயே இரண்டாவது மின்புத்தகம் – “மத்தியப் பிரதேசம் அழைக்கிறதுவெளியிடப்பட இருக்கிறது.  இன்னும் சில மின்புத்தகங்கள் தயாரிக்கும் பணியையும் செய்ய வேண்டும். புதிய வருடம் எப்படி இருக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

வடகிழக்கு மாநிலப் பயணத்தின் போது எடுத்த புகைப்படம்.....


வடகிழக்கு மாநிலப் பயணம் [15 நாட்கள்] சென்ற வருடத்தில் சென்று வந்தது பசுமையாக இருக்கிறது.  அலுவலகத்தில் தொடர்ந்து இருக்கும் பணிச்சுமையை மறக்க இப்படி அவ்வப்போது வெளியிடங்களுக்குச் சென்று வருவது அவசியமாக இருக்கிறது.  இந்த வருடத்திலும் சில பயணங்கள் மேற்கொள்ளும் ஆசை உண்டு. நிறைவேறுமா என்பதையும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.  

புத்தாண்டினை வரவேற்க, தில்லியில் இருக்கும்
திருப்பதி பாலாஜி கோவிலில் போட்ட கோலம்


சென்ற வருடத்தின் கடைசியில் மழையின் காரணமாகவும், வெள்ளத்தின் காரணமாகவும் பலரை இழந்திருக்கிறோம்.  வெள்ளத்தின் காரணமாக பல நல்லுள்ளங்கள் ஒன்றாகச் சேர்ந்து உழைப்பதைப் பற்றி படிக்கும் போதே மகிழ்ச்சி.  வெள்ளத்தின் காரணமாக பலரும் மதம் கடந்து இணைந்து பணியாற்றியதைப் பார்த்திருக்கிறோம்.  அரசியல் ஆதாயம் தேடும் அவலத்தினையும் கண்டுவிட்டோம்.

புத்தாண்டினை வரவேற்க, தில்லியில் இருக்கும்
திருப்பதி பாலாஜி கோவிலில் போட்ட கோலம்


மொத்தத்தில் சில கஷ்டங்கள் இருந்தாலும், 2015 நன்றாகவே கழிந்திருக்கிறது. வரும் ஆண்டிலும் அனைவருக்கும் நல்லதே கிடைக்க எல்லாம் வல்லவனைப் பிரார்த்திக்கிறேன். 

இந்த வருடத்தில் குறைந்தது 200 பதிவுகளாவது எழுத நினைத்திருக்கிறேன். ஆனால் அலுவலகத்தில் இருக்கும் பணிச்சுமையில் தொடர்ந்து எழுத முடியும் என்று தோன்றவில்லை.  இருந்தாலும் மாதத்திற்கு  சில பதிவுகளாவது எழுத வேண்டும்......அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.  இந்த நாளும் வரும் எல்லா நாட்களும் இனிதாய் அமைந்திட்டடும்......

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.58 comments:

 1. வணக்கம்
  ஐயா

  அற்புதமான கோலங்களுடன் அற்புதமான கருத்தையும் சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் த.ம1
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   Delete
 2. வணக்கம் சகோதரரே.

  நலமா? தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். வளம் சேர்க்கும் நலம் நிறைந்த ஆண்டாக இவ்வாண்டு அமைய இறைவனை பிராத்திக்கிறேன்.

  தங்களின் இப்பதிவும், புகைப்படங்களும், கோலங்களும் மிகவும் அருமையாக உள்ளது. நான் வலையில் வாரா நாட்களில் விட்டுப்போன தங்கள் பதிவுகளையும், மற்ற அனைவரின் படைப்புகளையும் படித்து வருகிறேன். என் தாமதக் கருத்துக்களுக்கு மன்னிக்கவும்.

  நன்றியுடன,
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

   Delete
 3. அன்பு நண்பரே,வணக்கம்.

  "இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள் - 2016"

  TM +

  நட்புடன்,
  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.com

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி புதுவை வேலு.

   Delete
 4. நினைப்பவைகள் எல்லாம் இவ்வாண்டு
  நிச்சயம் சிறப்பாய் நடக்கும்
  வாழ்த்துக்களுடன்..

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 5. தங்கள் கனவுகள் நிறைவேற வாழ்த்துகள். மகாமகம் காணும் 2016இல் ஐந்தாமாண்டு நிறைவு பெறும் எனது முதல் வலைப்பூவைக் காண அழைக்கிறேன். http://ponnibuddha.blogspot.com/2016/01/blog-post.html

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 6. நல்ல முடிவு. அவ்வப்போது எழுதுவதையும், வலைப்பதிவர்களையும் மறந்து விடாதீர்கள். எனது உளங்கனிந்த புத்தாண்டு – 2016 நல் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.

   Delete
 7. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  to you and your family members.

  subbu thatha.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சுப்பு தாத்தா.

   Delete
 8. வாழ்த்துகள். வரும் வருடங்கள் இன்பமாகட்டும்.

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  தம +1

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 9. Happy New Year to you and your family Venkat Ji!!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி மஹி.

   Delete

 10. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 11. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

   Delete
 12. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 13. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் ...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம் ஜி!

   Delete
 14. 200 பதிவுகள் என்ன அண்ணா...
  2000 பதிவுகள் எழுதலாம்...
  முதலில் வேலை முக்கியம் பின்னர் பதிவுலகம்...
  எப்போது எழுதினாலும் வாசிக்க நாங்க காத்திருக்கிறோம்...

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   Delete
 15. Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   Delete
 16. அன்பின் இனிய புத்தான்டு நல்வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

   Delete
 17. வாழ்க நலமுடன்..
  அன்பின் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   Delete
 18. அருமையான கோலங்கள்.
  "//அடுத்தவருக்குத் தீங்கு நினைக்காது, நல்லதையே செய்ய நினைக்க வேண்டும் என்பதைத் தவிர வேறு ஒன்றும் புதியதாக நினைப்பதில்லை.//"
  -இது ஒன்றே போதுமே.

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   Delete
 19. புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 20. அன்பு வெங்கட், நிறைய பதிவுகள் எழுதி தமிழ் உலகம்
  மகிழ பிரசுரியுங்கள். இனிய புத்தாண்டு வாழ்த்துகள். ரோஷ்ணிக்கும் ஆதிக்கும் என் அன்பு வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா....

   Delete
 21. உங்கள் எண்ணம் நிறைவேறிட வாழ்த்துக்கள். உங்களுக்கும் , குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி எழில்.

   Delete
 22. எப்போதும் போல, அடுத்தவருக்குத் தீங்கு நினைக்காது, நல்லதையே செய்ய நினைக்க வேண்டும்//

  நல்ல எண்ணம் வாழ்க!
  உங்கள் ஆசைகள் இந்த புத்தாண்டில் நிறைவேற வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   Delete
 23. உங்களைப் போலவே எனக்கும் பணியில் ,ஆணிப் பிடுங்கும் வேலை அதிகரித்துக் கொண்டே போகிறது :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

   Delete
 24. கோலங்கள் மிகவும் அழகு புத்தாண்டு வாழ்த்துகள் ஜி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 25. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 26. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   Delete
 27. 2016 மேலும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   Delete
 28. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். டெல்லிக் கோயில் கோலங்கள் அனைத்தும் அழகோ அழகாக உள்ளன.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி வை.கோ.ஜி!

   Delete
 29. 1000 பதிவுகளை முடிக்கப்போகும் உங்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள் சகோ..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....