வெள்ளி, 1 பிப்ரவரி, 2019

பெயர் காரணம் என்றொரு தொடர் பதிவு – ஆதி வெங்கட்



பெயர் காரணம் – உங்கள் பெயருக்கான காரணம் என்ன என்பதை எழுதச் சொல்லி பதிவுலகில் ஒரு தொடர் பதிவு – பெரும்பாலான பதிவர்கள் எழுதினார்கள். நானும் எழுதினேன். கோவை2தில்லி வலைப்பூவில் எழுதிய பதிவு இன்றைக்கு மீண்டும் இங்கே.




பெயர்க் காரணம் பற்றிய தொடர் பதிவுக்கு திருமதி ராஜி அவர்கள் எனக்கு அழைப்பு விடுத்திருந்தார். என்னை தொடர் பதிவுக்கு அழைப்பு விடுப்பது இதுவே முதன்முறையாகும். இதைப் படித்து விட்டு யாராவது டென்ஷன் ஆனால் திருமதி ராஜியை கேட்கலாம்!

நான்கு வருட தவத்துக்கு பின் பிறந்த எனக்கு குடும்ப வழக்கப்படி மூன்று பெயர்கள் வைக்க வேண்டுமென முதல் பெயராக ஆதிலக்ஷ்மி என்றும்  இரண்டாம் பெயராக புவனாவும், மூன்றாவது  பெயராக குலதெய்வத்தின் பெயரையும் வைத்தனர். (அந்த பெயர் என்னன்னு சொல்ல மாட்டேனே!) தெரிந்து யாராவது கிண்டல் செய்தால் உம்மாச்சி கண்ணை குத்தி விடும்! அப்பாடி உங்க கண்ண நான் காப்பாத்திட்டேன்.

ஆதிலக்ஷ்மி என்ற பெயர் வைத்ததன் காரணம் என் தாத்தாவின் (அப்பாவின் அப்பா) பெயர் ஆதிநாராயணன். முதல் குழந்தை பையனாக பிறந்தால் தாத்தாவின் பெயரான ஆதிநாராயணன் என்று வைக்கலாம் என்றே பெற்றோர் முடிவு செய்திருந்தார்களாம். பெண்ணாக பிறந்ததால் ஆதிலக்ஷ்மி என்று வைத்து விட்டனர். முதன் முதலாக தாத்தாவின் பெயரில் பேத்திக்கு பெயர் வைத்த ஒரே ஜீவன் நானாகத்தான் இருப்பேன் என்று நினைக்கிறேன்.

இரண்டாவது பெயரான புவனா என் அப்பாவின் நண்பர் நியூமராலஜிப்படி புவனேஸ்வரி (அ) புவனா என்று வைக்கலாம் என்று சொன்னதால் புவனா என்று அழைத்திருக்கிறார்கள். சான்றிதழில் ஆதிலக்ஷ்மி என்றாலும் பள்ளி, கல்லூரியில் எல்லோரும் செல்லமாக அழைத்த பெயர் ஆதி. வீட்டிலும் உறவினர்கள் வட்டத்திலும் புவனா.

குடும்ப நண்பரான ஒரு மாமா நான் பிறந்த போது ரோஸ்கலரா (நெஜமாப்பா!) இருப்பதை பார்த்து என்னை டயானா என்று அழைக்க தொடங்கி இப்போது வரை அப்படித்தான் அழைப்பார். எங்கம்மா காலையில் அன்றாடம் என்னை எழுப்ப கூறும் சுப்ரபாதமே “கடங்காரி போற இடத்துல மொத்து வாங்கப் போற எழுந்திரு” என்பது தான். முகத்தில் தண்ணீர் ஊற்றினாலும் துடைத்துக் கொண்டு தூங்குவேன்! இப்பல்லாம் அந்த தூக்கம் மிஸ்ஸிங். பின்னே? நடுராத்திரி 6 மணிக்கே எழுந்திருக்க வேண்டியதாகி விட்டதே! தம்பியுடன் சண்டை போடும் போது வாங்கிய பெயர்கள் நாயே, பேயே, முண்டம் ஆகியவை.  என்னைஅவ்வப்போது பாட்டி (அம்மாவின் அம்மா) "இம்புட்டு உசரமா போயிண்டு இருக்கியே உனக்கு எப்படிடீ  மாப்பிள்ளை தேடி கண்டு பிடிக்கிறது? " என்பார்கள். (அதான் தேடிக் கண்டு பிடிச்சிட்டாங்கல்ல!)

பள்ளி மற்றும் கல்லூரி காலத்தில் எனக்கு வைத்த பட்டப்பெயர் என்றால் அது ”தயிர்சாதம்” தான். இப்போ கூட மூன்று வேளையும் தயிர்சாதம் குடுத்தாலும் சாப்பிட்டு விட்டு சமத்தா இருப்பேன். ஆதிலக்ஷ்மி என்ற பெயர் பழைய பெயராக இருக்கு சான்றிதழில் புவனா என்று வைத்திருக்கலாமே என்று பலமுறை அப்பாவிடம் கேட்டதுண்டு. அதற்கு "எங்கப்பா பெயர்ல ஆரம்பிக்குது அதுவும் போக அஷ்டலக்ஷ்மில ஒரு லக்ஷ்மி ஆதிலக்ஷ்மி நல்ல பெயர் "என்பார் என் அப்பா. (அவருக்கென்ன!) அவரே என்னை செல்லமா பப்ளி, பப்லு என்றும் அழைத்ததுண்டு.

இந்த பெயராலான விளைவுகள் என்ன என்று கேட்டால் ஆங்கில எழுத்தான A வில் ஆரம்பிப்பதால் எங்கள் துறையில் ரோல் நம்பர் 1 நான் தான். முதல் டெஸ்க். பல நேரம் கேள்விகள் கேட்கப்பட்டு 'திருதிரு'வென்று    முழிக்க வேண்டியிருக்கும். தூங்க முடியாது. இன்னொரு காரணம் எங்கள் இயந்திரவியல் துறையில் நாங்கள் மூன்றே பெண்கள் தான். அதனாலும் முதல் இருக்கை தான். எங்களிடம் தான் புத்தகம் வாங்கி ஆசிரியர் பாடம் நடத்துவார்.

திருமணமாகி தில்லி வந்த பின் இங்குள்ள நண்பர்களுக்கும் புவனா தான் பரிச்சியம். திருமதி ராஜி கூறியிருப்பது போல என் முழு பெயரான ஆதிலக்ஷ்மி வெங்கட்ராமன் என்று எழுதி முடிப்பதற்குள் கை வலி வந்து விடும். "லக்ஷ்மி" என்று யாராவது கூப்பிடுவார்களா என்றும் நினைத்ததுண்டு. அதுவும் ஒருவரால் நடந்தது. கருவுற்றிருந்த போது மாதா மாதம் செக்கப் செல்லும் போதும் இங்குள்ள பஞ்சாபி மருத்துவர் லக்ஷ்மி என்று தான் கூப்பிடுவார்.

இப்போது என் மகள் அவளுக்கு பிடித்தமான (பாகற்காய் ரோஸ்ட்) அயிட்டங்களை செய்து கொடுத்தால் ”செல்லகுட்டி அம்மா” “அம்மா ரொம்ப அழகும்மா, நீ சமத்தும்மா” என்று கொஞ்சுவது பிடித்திருக்கிறது.

ஒன்பது வருடமாக ”ஹலோ” என்ற பெயரும் எனக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இது என்னடா இது! தொலைபேசியில் தானே முதலில் எடுத்ததும் ஹலோ என்பார்கள். இப்படி ஒரு பெயர் கூட இருக்குமா என்று யோசிக்க வேண்டாம். சமயத்தில் என் கணவருக்கு என் பெயர் மறந்து விடும். அப்போது என்னை அவர் அழைப்பது ”ஹலோ”ன்னுதான். [இப்போதும் அதாவது திருமணம் முடிந்து 16 வருடத்திற்குப் பிறகும்! அப்படி சில சமயங்களில் கூப்பிடுவது உண்டு!]

இந்த பதிவை எழுத வைத்து என் நினைவலைகளை மீட்ட உதவி செய்த திருமதி ராஜிக்கு என் நன்றிகள். என்னை ஊக்கப்படுத்தி எழுத வைத்து என் எண்ணங்களை வெளிக்கொணர வைத்த என் கணவருக்கும், என்னுடைய சந்தோஷ வாழ்வை வானத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிற என் அப்பா, அம்மாவுக்கும் இந்த பதிவை அர்ப்பணிக்கிறேன்.

மீண்டும் சந்திப்போம்!

ஆதி வெங்கட்.

60 கருத்துகள்:

  1. குட்மார்னிங். பெயர்க்காரணம் சுவாரஸ்யம். எல்லோருக்கும் உலகில் ரொம்பப் பிடித்த பெயர் அவரவர் பெயர்தான் என்று(ம்) சொல்வார்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம்.

      அவரவர் பெயர் அவரவருக்கு சிறப்பு தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. எனக்கு இரண்டு பெயர் வைத்தார்கள். இந்த எனது பெயர் நட்சத்திரக்காரணம்! இரண்டாவது பெயர் எனது பாட்டி ஆசையாய் வைத்தார்கள். இன்று வரை அது வழக்கத்துக்கே வரவில்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு ஒரே ஒரு பெயர் தான். இரண்டாவது சுருக்கி அழைத்த பெயர் தான!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. இப்படி ஒரு தொடர்பதிவு வந்ததா? எனக்கு நினைவில்லை. நான் வெங்கட் பதிவுக்கு வந்ததே பிற்காலத்தில்தான்!!! உங்கள் பதிவு பக்கம் மிகச் சொற்பமே வந்திருப்பேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஸ்ரீராம். அப்பொழுது நிறைய தொடர்பதிவுகள். இந்தப் பெயர் காரணம் தொடர்பதிவு நானும் எழுதினேன்....

      நான வந்ததும் தாமதமாக தான்.

      நீக்கு
  4. இனிய மகிழ்வான காலை வணக்கம் ஆதி அண்ட் வெங்கட்ஜி...

    வரேன் பதிவுக்கு. இன்று நெட் படுத்தலால் தாமதம்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் கீதாஜி.

      நெட் படுத்தல்... :) இங்கே திருவரங்கத்தில் சிக்னல் பிரச்சனை.....

      நீக்கு
  5. எனக்கு புவனாவை விட ஆதிலக்ஷ்மி தான் பிரித்திருக்கு ஆதி!

    பெயர்க்காரணம் தொடர்பதிவு வந்ததா? நோ ஐடியா...ஒரு வேளை நாங்கள் பதிவுலகிற்கு வரும் முன் இருக்குமோ?!!

    நீங்க சொல்லுற அந்த யே...வெரைட்டிஸ் எல்லாம் எங்க ஊர்ல அப்ப மலையாள வழக்குச் சொல்லில் பட்டி, குந்துமணி, குந்தன்...மொந்தன்..அலவலாதி..என்றாலும் பட்டி என்பதெல்லாம் கூட ரொம்பவே அபூர்வம்....என்று. வீட்டில் நாங்கள் இப்படிச் சொல்லுவதில் தடா இருந்தது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்போது இப்படி நிறைய தொடர்பதிவு வந்தது கீதாஜி. கிட்டத்தட்ட 50 பதிவர்களுக்கும் மேல் எழுதிய தொடர்பதிவு உண்டு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

      நீக்கு
    2. டைப்போ- பிரித்திருக்கு - பிடிச்சிச்சுருக்குன்னு வரனும் தப்பாயிடுச்சு சாரி...

      கீதா

      நீக்கு
    3. ஹாஹா. இந்த டைப்போவும் நல்லாதான் இருக்கு! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

      நீக்கு
  6. ”செல்லகுட்டி அம்மா” “அம்மா ரொம்ப அழகும்மா, நீ சமத்தும்மா” என்று கொஞ்சுவது பிடித்திருக்கிறது.//

    ஹா ஹா ஹா என் மகனும் என்னை முன்பு அப்படித்தான் சொல்லுவான்.

    இப்ப வளர்ந்துட்டானே...ஸோ "ஏய் கீதா பின்னிட்ட போ" "கீதா ஜமாய்ச்சுட்ட போ" என்பான்...

    நான் அவனை சிறு வயதில் திட்டிய போது கூட கடும் வார்த்தைகள் சொன்னதில்லை. வெண்டைக்காய், கத்தரிக்கா, டேய் பூஷணிக்கா, தடியங்கா இப்படித்தான் திட்டல் வார்த்தைகள்..ஹா ஹா ஹா..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏ கீதா பின்னிட்ட போ.... ஹாஹா... இப்படி அழைப்பது இன்னும் நெருக்கமாக இருக்கிறது.... :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

      நீக்கு
    2. ஆமாம் ஜி ரொம்பவே ரசிப்பேன்....

      கீதா

      நீக்கு
    3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

      நீக்கு
  7. சரி இனிமே ஆதி புவனான்னு கூப்பிடலாம். வெகு அழகாக எழுதி இருக்கிறீர்கள் ஆதி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

      நீக்கு
  8. Very interesting ! I also have two names. Family name is Ravi. I regretted many times that instead of short and sweet name why my parents given a long name during my school admission. What to do? That is destiny!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி.

      நீக்கு
  9. பெயர காரணம் நானும் எழுதி இருக்கிறேன்.
    முன்பும் படித்தேன் , இப்போதும் படித்தேன் ஆதி.

    //என்னைஅவ்வப்போது பாட்டி (அம்மாவின் அம்மா) "இம்புட்டு உசரமா போயிண்டு இருக்கியே உனக்கு எப்படிடீ மாப்பிள்ளை தேடி கண்டு பிடிக்கிறது? " என்பார்கள். (அதான் தேடிக் கண்டு பிடிச்சிட்டாங்கல்ல!)//

    அப்போதும் ரசித்தேன், இப்போதும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்... அப்போதும் உங்கள் கருத்தை சொல்லி இருந்தீர்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  10. முன்ன்ன்ன்ன்ன்ன்னர் என்னையும் ரேவதி அழைத்து எழுதி இருக்கேன். பதிவு சுட்டி தேடித் தரணும். எனக்கும் இரண்டு பெயர்கள் என்றாலும் எங்க வீட்டில் பிறக்கும் பெண்கள் எல்லோருக்குமே அந்தப் பெயர் தான்! என் அப்பாவின் அம்மா பெயர் சீதாலக்ஷ்மி. இந்தப் பெயரிலும் என் தாத்தா அப்பாவின் அப்பா பெயரிலும் தான் நாங்க எல்லாப் பேரன் பேத்திகளும். கூப்பிடும் பெயரால் தான் வித்தியாசம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு
  11. "//மயத்தில் என் கணவருக்கு என் பெயர் மறந்து விடும். அப்போது என்னை அவர் அழைப்பது ”ஹலோ”ன்னுதான்.//" - இந்த வரிகளை படித்தவுடன்,எனக்கு ஒரு துணுக்கு தான் ஞயாபகத்துக்கு வருகிறது. ஒரு 80 வயது முதியவர் எப்பொழுதும் தன் மனைவியை டார்லிங் என்று தான் அழைப்பாராம். மனைவியின் மீது அவ்வளவு பாசமா என்று கேட்டதற்கு, அதெல்லாம் ஒரு பாசமும் இல்லை. அவள் பெயர் மறந்து விட்டது . அதனால் தான் என்று சொன்னாராம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா நல்ல துணுக்கு. நானும் படித்து ரசித்த துணுக்கு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன்.

      நீக்கு
  12. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  13. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  14. ஆதி எங்க வீட்டுலயும் இந்த ஹலோ பிஸினஸ் எல்லாம் உண்டு!! ஹா ஹா ஹா

    என் பெயர்க்காரணம் நான் பிறந்தப்ப என் தாத்தா - அப்பாவின் அப்பா - பகவத்கீதை வாசிச்சிட்டிருந்திருக்கார் அதனால கீதா...என்று வைத்தாராம்...என் கஸின்ஸில் சிலர் என்னை இப்பவும் கீதை அப்படின்னு கூப்பிடுவாங்க. என் அத்தை என்னை டார்லிங்க் நுதான் கூப்பிடுவாங்க நான் அவங்களுக்கு ரொமப் செல்லம். இரு அத்தைகளும் இப்ப இல்ல.

    என் பையன இப்பவும் நான் கோந்தே, குட்டிமா, குட்டிப்பூ, செல்லக் குட்டிமா இப்படி ஏதாவது ஒன்னு சொல்லித்தான் கூப்பிடுறேன். ஹா ஹா ஹ அஹா

    ரொம்ப அழகா எழுதியிருக்கீங்க ஆதி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

      நீக்கு
  15. பெயர்க்காரணம் ரொம்ப ரசனையா எழுதியிருக்கீங்க (ஒண்ணு தெரியுமா, நிறைய வீடுகள்ல கணவரை மனைவி, 'சார்' என்று சொல்வாங்க. கூப்பிடும்போது 'ஹலோ' என்று கூப்பிடுவாங்க).

    இருந்தாலும் அம்மா கோபத்தில் சொல்லும் பெயர்களும், சகோதரர் சொல்லும் பெயர்களும் நல்லாத்தான் இருக்கு (அனேகமா எல்லா தமிழ் வீட்டிலயும்தான்... எதுக்குச் சொல்றேன்னா.. என் பசங்க ஆங்கிலப் பெயர்லதான் சின்ன வயசுல ஒருவரை ஒருவர் திட்டுவாங்க. கடன்காரி... இதெல்லாம் அவங்களுக்குப் பரிச்சயமில்லை)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  16. என் அம்மா பெயரும் ஆதிலஷ்மி தான். அது சரி உங்க குலதெய்வம் கண்ணுடை நாயகி என்கிற கண்ணாத்தா தானே?
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்ணாத்தா இல்லை. :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  17. போதுமா?! ஊரிலிருக்கும் அத்தனை பேரையும் நீங்களே வச்சுக்கிட்டா நாங்க எங்க போறது?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

      நீக்கு
    2. :)))))

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா பிரேம்குமார் ஜி.

      நீக்கு
  18. நல்லா இருக்கே பேர் பாடும் புராணம் ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா பிரேம்குமார் ஜி.

      நீக்கு
  19. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானும்மா.

      நீக்கு
  20. முதன் முதலாக தாத்தாவின் பெயரில் பேத்திக்கு பெயர் வைத்த ஒரே ஜீவன் நானாகத்தான் இருப்பேன் என்று நினைக்கிறேன்.

    Yen Thatha peyar Subbuseshan,nan pennaga pirandhadal Subashree yendru vaithargal.Periya Thatha (thathavin annan)Vaishno devi koiluku pona piragu pirandhadal Vaishnavi aka Subhashree

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது முதல் வருகையோ? மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வைஷ்ணவி.

      நீக்கு
  21. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கயல் இராமசாமி மேடம்.

      நீக்கு
  22. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  23. அழகாக எழுதியிருக்கின்றீர்கள்..

    நாளெல்லாம் நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி.

      நீக்கு
  24. வாவ் !! அழகா ரசனையா எழுதியிருக்கீங்க ஆதி ..உங்களுக்கு இத்தனை பெயர்களா ! எனக்கும் வால் மாதிரி நீளும் 3 நேம்ஸ் .பாஸ்போர்ட் அப்ளிகேஷனுக்காக சுருக்கிட்டேன் அப்பாக்கு தெரியாம :)

    //ஆங்கில எழுத்தான A வில் ஆரம்பிப்பதால் எங்கள் துறையில் ரோல் நம்பர் 1 நான் தான். //
    ஆவ்வ் இந்த இதே பிரச்சினையை நானும் அனுபவிச்சிருக்கேன் :) அதனாலே மகளுக்கு நடுவில் வர ஆல்பபெட்ட்டில் செலெக்ட் பண்ணிட்டேன் .எல்லா பெயரும் அழகுதான் ஆனா ஒரு பேரை வச்சிதானே நம்மை கூப்பிடப்போறாங்க .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஏஞ்சல்.

      நீக்கு
  25. வணக்கம் சகோதரி

    பெயர் பெற்ற கதை நன்றாகவே இருக்கிறது. ஒவ்வொருவரும் அவரவர்களுக்கு பிடித்த பெயரில் அழைப்பதை சுவாரஸ்யமாக எழுதியுள்ளீர்கள். ஆதிலக்ஷ்மி என்ற முதல்பெயர் நன்றாகத்தான் உள்ளது. பழைய பதிவையும் படித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி.

      நீக்கு
  26. நல்ல பதிவு சகோதரி ஆதி.

    எனக்கெல்லாம் என் பெயர்க்காரணம் என்று குறிப்பாக எதுவும் தெரியவில்லை. எங்கள் குழந்தைகளை நாங்கள் குஞ்ஞே என்று கூப்பிடுவதுண்டு.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி.

      நீக்கு
  27. பெயர்க் காரணம் பற்றி சுவையாய் சொல்லியிருக்கிறீர்கள். பாராட்டுகள்! அநேகமாக நம்மில் பலருக்கு இரண்டு பெயர்கள் இருக்கும். வீட்டில் பெரியவர்களின் பெயரை வைத்துவிட்டு அவர் பெயரைச் சொல்லி கூப்பிடுவது மரியாதைக் குறைவாக இருக்கும் என்பதால் வேறொரு பெயரில் அழைப்பதுண்டு. நான் கூட எனது பதிவில் 19-01-2012 இல் எனது பெயர் பற்றி என் பெயர் பட்ட பாடு என்ற தலைப்பில் எழுதியிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....