வியாழன், 21 பிப்ரவரி, 2019

கதம்பம் – தேன் நெல்லி – அப்பா சொல்லே வேதம் – கட்டபொம்மன் – பாலங்கள் – சிமிலி உருண்டை


சாப்பிட வாங்க – தேன்நெல்லியும் நீர்நெல்லியும் – 4 February 2019





நெய்வேலிக்குச் சென்று தன் தோழமைகளைப் பார்த்து வரச் சென்ற என்னவரிடம், கல்லூரித் தோழி ஒருவர் தன் வீட்டு தோட்டத்திலிருந்து  நெல்லிக் காய்களையும், எலுமிச்சம் பழங்களையும் கொடுத்து விட்டிருந்தார்.

உறவுகளுக்கும், குடியிருப்பில் இருப்பவர்களுக்கும் பங்கீடு செய்து கொடுத்தோம். எலுமிச்சம்பழங்களை சற்றே பழுக்க வைத்து விட்டு, நெல்லிக்காய்களை சுத்தம் செய்து தேன்நெல்லியும், வெந்நீரில் உப்பும், மஞ்சளும் சேர்த்து நீர்நெல்லியும் செய்தேன்.

அப்பா சொல்லே வேதம் – 14 ஃபிப்ரவரி 2019

அப்பா சொல்லுக்குத் தான் எவ்வளவு சக்தி!! அம்மா காட்டுகத்தலாக பலமுறை சொன்னாலும் காதிலேயே வாங்காத மகள், அப்பா சொன்னதும் அதை செவ்வனே செய்து முடிக்கும் மாயமென்ன!!!

வாரத்தில் இரண்டு நாளாவது வாசலில் கோலம் போட்டு பழகும்மா! எப்படியிருந்தாலும் பரவாயில்லை. யார் என்ன சொல்லப் போறாங்க! என்று மகளிடம் பலமுறை சொல்லியிருக்கேன். ம்ம்ம்ஹும்!! ஒண்ணும் செல்லுபடியாகலை :))

இம்முறை ஊருக்கு வந்த அப்பா!! "அம்மாவுக்கு ஹெல்ப் பண்ணும்மா!! உடம்பு சரியில்லன்னாலும் அம்மாவே தானே செய்யறா!!! வீட்டுவேலைகளும் சீக்கிரம் கத்துக்கோ!! வாசலில் தினமும் கோலம் போட்டு ஃபோட்டோ எடுத்து வாட்ஸப்ல அப்பாவுக்கு அனுப்பி விடு!! அப்பா பார்க்கிறேன் என்று அறிவுரைகள் சொல்லிச் சென்றுள்ளார் :)

அதனால் அன்றாடம் கோலம் போடும் வேலை சிறப்பாக நடக்கிறது :) அம்மா கண்ணுக்குள் வைத்து வளர்த்தாலும் மகள்களுக்கு அப்பா மீது தான் பாசம் அல்லவா!!

அப்பாவுக்கு அழுகை பிடிக்காது என்று கட்டுப்படுத்திக் கொண்டு, கிளம்பிச் சென்றதும் இந்த பதினான்கு வயது குழந்தை என் தோளின் மீது சாய்ந்து தேம்பித் தேம்பி அழுகிறாள்..அன்று சமாதானம் செய்யவே நெடுநேரம் ஆனது.

அப்பாவோ தன் பாசத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல், மனதிலேயே குழப்பங்களுடன் கிளம்பிச் செல்கிறார்.

நானும் என் அப்பாவை நினைத்து தவிக்கும் மகள் தானே!!!!

சிமிலி உருண்டை எனும் எள்ளுருண்டை – 13 February 2019




மகளுக்கு மிகவும் பிடித்த எள்ளுருண்டை!!! பாகு எல்லாம் செய்யாமல் எள்ளை வறுத்து, வெல்லத்தையும் பொடித்து மிக்சியில் விட்டு விட்டு அரைத்தால் ஆச்சு!!

படித்ததில் பிடித்தது - பாலங்கள் – 14 February 2019




எனக்கு மிகவும் பிடித்த புத்தகங்களுள் ஒன்று. மனதில் பதிந்து போன கதை. வாடகை நூலகத்தில் எடுத்து நான்கு நாட்களுக்குள் வாசித்து மனமில்லாமல் திருப்பித் தந்தேன்.

சமீபத்தில் என் மாமா பெண்ணிடமிருந்து அலைபேசியில் அழைப்பு. அக்கா! புத்தக கண்காட்சியில் இருக்கிறேன்! உங்களுக்கு என்ன வேண்டும் என்றாள்!! வேண்டாமென மறுத்தும், வற்புறுத்திக் கேட்டாள். உடனே என் மனதில் முதலில் தோன்றியது இந்த புத்தகமே!! எனக்காக வாங்கி வைத்திருக்கிறாள். விரைவில் என் கைகளில் கிடைக்கப் போகிறது. நிதானமாக வாசிக்க வேண்டும்.

ரோஷ்ணி கார்னர் – 14 ஃபிப்ரவரி 2019

மகளின் Social Studies பாடத்திற்கான ஒரு Activity – கட்டபொம்மன் பற்றி எழுத வேண்டியிருந்தது. வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தினை கத்தரித்து ஒட்டுவதற்கு பதில் அவளே வரைந்தாள் – அந்தப் படம் கீழே….




என்ன நண்பர்களே, இந்த நாளில் பகிர்ந்து கொண்ட கதம்பம் பதிவு உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்....

நட்புடன்

ஆதி வெங்கட்

42 கருத்துகள்:

  1. குட்மார்னிங். நான் சிறுவனாய் இருந்தபொழுது எங்கள் தஞ்சை வீட்டில் நெல்லி மரமும் இருந்தது. எலுமிச்சையுமிருந்தது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம்.

      நெய்வேலியில் அரிநெல்லியும் எலுமிச்சையும்! இன்னும் பல மரங்கள் உண்டு தோட்டத்தில்...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. அப்பா மகள் பாசம் நெழவைத்தது. எள்ளுருண்டை எனக்கும் மிகப் பிடிக்கும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. வாசித்த புத்தகத்தையே, அதுவும் மிகச் சமீபத்தில் வாசித்த புத்தகத்தியே விலை கொடுத்தான் வான வேண்டுமா என்ற கேள்வி எனக்குள் எழுந்தது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல கேள்வி! :) பதில் தான் இதுவரை வரவில்லை! :) இது அன்பளிப்பாக கிடைக்கப் போகும் புத்தகம்! படித்ததாக இருந்தாலும், சேமித்து வைக்கலாம் என்ற எண்ணமாக இருக்கலாம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. வீ பா க படத்தைக் கத்தரித்து ஓடுவதற்கு பதிலாக ரோஷ்ணியே வரைந்திருப்பது அழகு. என்ன ஒரு திறமை! இதற்கு அவர் பள்ளியில் என்ன பாராட்டு, சிலாகிப்பு கிடைத்தது என்று அறிய ஆவல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பள்ளியில் கிடைத்த அனுபவம் பற்றி இன்னும் தெரியவில்லை. கேட்க வேண்டும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. வீ.பா.க.பொ. ஜிவாஜி மாதிரி இருக்கார்னு முகநூலில் கருத்துச் சொன்ன நினைவு! அங்கேயும் பார்த்தேன். ரோஷ்ணியின் திறமை நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வீ.பா.க.பொ மட்டுமல்ல, கர்ணன், அப்பர், சிவன் என பல காரக்டர்களைச் செய்துவிட்டதால் அவரே நினைவுக்கு வருகிறார்! :)))

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  6. வீரபாண்டிய கட்டபொம்மன் நம்ம பங்காளி மாதிரியே இருக்கிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெரிய மீசை வைத்திருப்பவர்கள் எல்லோரும் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு பங்காளியாக முடியாது நண்பரே

      நீக்கு
    2. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
    3. ஹாஹா....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன் ஜி.

      நீக்கு
  7. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  8. கதம்பம் அருமை.

    நெல்லிக்காய்கள் சிறியதாக இருக்கின்றனவே... நாட்டு மரமோ? ஆனால் அதுதான் இயற்கையாக நல்லது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  9. படத்தில் வலது கையில் நான்கு விரல்கள் தெரியும்படியும் இடது கையில் ஐந்து விரல்கள் தெரியும்படியும் வரைந்துள்ளதைப் பாராட்டறேன். எது தெரியுமோ (பார்வைக்கு) அதன்படி வரைந்துள்ளது சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
    2. அதே அதே....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  10. கட்டபொம்மனைக் கண்டேன். மகளுக்கு வாழ்த்துகள். முகநூலிலும் பார்த்த நினைவு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  11. கதம்பம் அருமை... ரோஷ்ணிக்கு பாராட்டுகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  12. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

      நீக்கு
  13. ரோஷிணிக்கு பாராட்டுகள்..

    அப்பா சொல்லையாவது மதிக்குதேன்னு சந்தோசப்படுங்க. இந்த காலத்து பிள்ளைக யார் பேச்சையும் கேட்பதில்லை. தேன் நெல்லி செய்முறை முகநூலிலேயே பார்த்தாச்சு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

      நீக்கு
  14. கதம்பம் அருமை! அப்பா மகள் பாச்ப்பிணைப்பும் அம்மாவின் செல்லமான அங்கலாய்ப்பும் அதை மீறிய கணவரைப்பற்றிய அக்கறையும் தானும் ஒரு காலத்தில் இப்படிப்பட்ட மகளாகத்தானே இருந்தேன் என்ற ஏக்கமும்... மனம் நெகிழ்ந்து விட்டது! அந்த சமயத்தில் கதம்பம் அதிக மணம் வீசுவதை உண்ர்ந்தேன்!!!

    ரோஷிணிக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

      நீக்கு
  15. கதம்பம் அருமை.
    ரோஷினிக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன் ஜி.

      நீக்கு
  16. கதம்பம் அருமை.
    முகநூலில் பார்த்தேன்.
    ரோஷிணிக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  17. கதம்பம் அருமை சகோதரி!

    ரோஷிணியின் ஓவியம் அழகாக இருக்கிறது. வாழ்த்துகள்

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி.

      நீக்கு
  18. ரோஷினிக்குட்டியின் ஓவியம் வெகு அழகு. அதுவும் கட் செய்து ஒட்டுவதற்குப் பதில் அவளே வரைந்தது செம!!! அதற்கு பாராட்டுகள். சரி அதுக்கு டீச்சர் என்ன சொன்னாங்க? ப்ளீஸ் அதையும் பதியுங்க ஆதி...

    அப்புறம் நீர் நெல்லி போன வருடம் போட்டது இந்த வருடம் போடலை அதுவே இருப்பதால்...அப்புறம் தேன் நெல்லை போட்டது தீர்ந்துவிட்டது. அது மட்டும் நெல்லி வாங்கி போடனும்..

    எள்ளுருண்டை யம்மி! நீங்கள் செய்திருப்பது போலச் செய்யலாம் ஆனால் வெல்லத்தில் பல சமயங்களில் மணல் போன்றவை இருக்குமே என்பதால் நான் வெல்லத்தில் செய்வதில்லை. அதற்குப் பதில் இப்போது வெல்லப் பொடியாகவே சர்க்கரைக்குப் பதில் பயன்படுத்துவ்து கிடைக்கிறது இல்லையா அதைப் பயன்படுத்தி இப்படிச் செய்வதுண்டு. வெல்லம் என்றால் நான் கரையவிட்டு வடித்துப் பாகு எடுத்துதான் செய்யறேன்..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  19. அப்பாவுக்கு அழுகை பிடிக்காது என்று கட்டுப்படுத்திக் கொண்டு, கிளம்பிச் சென்றதும் இந்த பதினான்கு வயது குழந்தை என் தோளின் மீது சாய்ந்து தேம்பித் தேம்பி அழுகிறாள்..அன்று சமாதானம் செய்யவே நெடுநேரம் ஆனது.//

    மனதை ரொம்பவே நெகிழ்த்திவிட்டது....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....