செவ்வாய், 26 பிப்ரவரி, 2019

கதம்பம் – புளிக்காய்ச்சல் – உழைப்பாளி – தமிழ் இளங்கோ ஐயா – பிஸ்கெட் சாம்பார்




சாப்பிட வாங்க – புளிக்காய்ச்சல் – 22 ஃபிப்ரவரி 2019



ரொம்ப நாளாச்சேன்னு நேற்று செய்தேன். புளியோதரை வேணுங்கிறவங்க வரிசையில நில்லுங்க :) அடிதடி கூடாது ஃபிரண்ட்ஸ்!

உழைப்பாளி – மார்க் நினைவுபடுத்திய விஷயம் – 15 ஃபிப்ரவரி 2019

இதே நாளில் இரண்டு வருடத்திற்கு முன்னர் பகிர்ந்ததாக மார்க் நினைவுபடுத்தியது….

வீட்டிற்கு தண்ணீர் கேன் கொண்டு வரும் பையனிடம் இதுவரை பேசியதில்லை. நேற்று எதேச்சையாக ஞாயிறான படியால் கடை இன்று விடுமுறையா தம்பி என்று வினவ, “லீவே இல்லக்கா, எல்லா நாளும் உண்டு என்றான்”. அப்பா என்ன வேலை செய்யறார் என்று கேட்க, சுங்கவரி அலுவலகத்திலும், அம்மா வீட்டிலும் இருப்பதாக தெரிவித்தான். என்னுடைய அடுத்த கேள்வி “உடன்பிறந்தவர்கள்” என்று தாவ, அக்காவை கட்டி குடுத்தாச்சு என்றான்... ”ஏன் தம்பி படிக்கலையா” என்றேன். ”டிப்ளமோ”க்கா என்றான். எந்த துறை என்று வினவ இயந்திரவியலாம். அப்புறம் ஏம்ப்பா கடையில வேலை செய்யற என்றேன்.

”இரண்டு மாசம் லீவுக்கா” அதான் சம்பாதிக்கலாமே என்று இந்த வேலையில் சேர்ந்தேன் என்றான். நல்ல விஷயம்ப்பா என்று தண்ணீருக்கான பணத்தை தந்து விட்டு, உறவினருக்காக வடை தட்டிக் கொண்டிருந்த நான், ”இருப்பா தம்பி வடை எடுத்துக்கோ” என்று கொடுப்பதற்குள் , எஸ்கேப் ஆகிவிட்டான்.....

பதிவர் சந்திப்பு – தமிழ் இளங்கோ ஐயா – 22 ஃபிப்ரவரி 2019

மார்க் செய்த இன்னுமொரு நினைவூட்டல்….



22 ஃபிப்ரவரி 2015 - இன்று மாலை திருச்சி பதிவர்கள் சந்திப்பு ஸ்ரீரங்கத்தில் திருமதி ருக்மணி சேஷசாயி அம்மாவின் வீட்டில் அமர்க்களமாக நடைபெற்றது. ஏறக்குறைய 10 பதிவர்கள் கலந்து கொண்ட குட்டி பதிவர் மாநாடாக இருந்தது. முடிந்தால் நாளை பதிவாக வெளியிடுகிறேன். படங்களுடன் வை.கோ சார் விரைவில் விலாவரியாக பதிவிடுவார். இப்போதைக்கு பை...பை...

இந்த பதிவர் சந்திப்பில் கலந்து கொண்ட தமிழ் இளங்கோ சார் இன்று நம்முடன் இல்லை என்பது மிகுந்த வருத்தம் தருகிறது.

அழகான திருச்சி – 23 ஃபிப்ரவரி 2019



"புதுபொலிவு பெற்ற தென்னூர் FLYOVER விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படவுள்ளது‌."

மாநகராட்சியின் நகரை அழகு படுத்தும் திட்டத்தின் கீழ் தென்னூர் மேம்பாலத்திற்கு கீழுள்ள பகுதி கண்கவர் வண்ணங்கள் தீட்டப்பட்டு, பொதுமக்கள் நடந்து செல்லும் வகையில் சிறந்த நடைபாதை வசதிகள் அமைக்கப்பட்டு, பாதை முழுவதும் செடிகள் வளர்க்கப்பட்டு, பாதுகாப்பு கம்பி வளையங்கள் கொண்ட அழகான இடமாக புதுபொலிவு பெற்றுள்ளது. விரைவில் இந்த பகுதி பொது மக்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்படவுள்ளது‌.

ரோஷ்ணி கார்னர் – அம்மா Vs. பெண் – 25 ஃபிப்ரவரி 2019

காலை நேர பரபரப்பில் சின்ன வெங்காயம் உரிப்பதே பெரிய விஷயம்!! அதைப் போட்டு சாம்பார் வைத்தால்...

அம்மா! வெங்காயம் இல்லாம ஊட்டி விடு!!

பண்ணினதே வெங்காய சாம்பார்!!

வேண்டாம்மா!! என அலறல் மகளிடமிருந்து...

இரு!! இரு!! நாளைக்கு உனக்கு பிடிச்சதெல்லாம் போட்டு ஒரு சாம்பார் பண்றேன்!!

அது என்ன???

ம்ம்ம்… Oreo, Bourbon, Dark fantasy... அதெல்லாம் போட்டு ஒரு கதம்ப சாம்பார் பண்ணி... மேலே ஆலு புஜியா தூவி விடறேன்… :) சூப்பரா இருக்கும்...

உவ்வே!!! ச்சீ!! அதெல்லாம் போட்டு யாராவது சாம்பார் பண்ணுவாங்களா!!!

நாம பண்ணுவோம்!!!!

என்ன நண்பர்களே, இந்த நாளில் பகிர்ந்து கொண்ட கதம்பம் பதிவு உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்....

நட்புடன்

ஆதி வெங்கட்

48 கருத்துகள்:

  1. இனிய மகிழ்வான காலை வணக்கம் ஆதி அண்ட் வெங்கட்ஜி!

    பிஸ்கட் சாம்பார் என்பது ஆஆஆ என்று நினைக்க வைத்தது...வரேன் பார்க்க...கொஞ்சம் வேலை முடித்துவிட்டு

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் கீதா ஜி!

      பிஸ்கட் சாம்பார்! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. கதம்பம் வழக்கம் போலவே அருமை.

    திரு. தமிழ் இளங்கோ அவர்களுக்கு எமது இரங்கலை தெரிவிக்கிறேன். அருமையான மனிதர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  3. புளிக்காய்ச்சலுக்கு அடிதடி கூடாது...ஹா ஹா ஹா..இதைப் பார்த்ததும் வேலை இருக்குன்னு சொன்னவ நின்றுவிட்டேன்....மீ தான் ஃபர்ஸ்டூஊஊஊஊஊ...ஸோ கொஞ்சம் எடுத்துட்டுப் போறேன்!!! இதோ பின்னாடி ஸ்ரீராம் வருவார்...!!!வரிசையில் தான் வருவோமாக்கும்......

    எபி யில முன்னல்லாம் தள்ளுமுள்ளா இருக்கும் ஹா ஹா ஹா ஹா காலைல குதிக்க...இப்பல்லாம் அங்கும் வரிசை கட்டிதான்....ஹா ஹா ஹா...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதா... ஃபேஸ்புக்லயே வரிசைல நின்னு புளியோதரை எடுத்தாச்சாக்கும்... எனக்கு முன்னால நின்னவர் ரிஷபன் ஜி!

      நீக்கு
    2. ஆஹா!!! அப்ப அங்க வினியோகம் முடிஞ்சுதான் இங்கயா.....ஆமாம் ல ஆதி அங்க முதல்ல போட்டுருவாங்க!!! அப்ப அங்க எடுத்துக்காதவங்களுக்குத்தான் இங்க முதல்ல...ஹா ஹா...அதிரா எல்லாம் லேட்டு...

      கீதா

      நீக்கு
    3. ஹாஹா... முகநூல் விநியோகம் முடிந்த பிறகு தான் இங்கே! அதனால ஸ்ரீராம் முந்திக்கொண்டார்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
    4. உங்களுக்கு முன்னால் ரிஷபன் ஜி! ஹாஹா... முகநூலில் மட்டுமே அவர் வருவார்! இந்த பிளாக் பக்கம் வரதே இல்லை மனுஷர்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
    5. ஆமாம் கீதா ஜி! அங்கே வராதவங்கள்ல நீங்க தான் ஃப்ர்ஸ்ட்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. குட்மார்னிங்.

    மார்க் நினைவு படுத்திய விஷயம் பற்றி... "மார்க் மை வர்ட்ஸ்... அந்தப் பையன் பின்னால் பெரிய ஆளா வருவான்"

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மார்க் மை வர்ட்ஸ்! - :) உண்மை. பெரிய ஆளாக வரட்டும்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. புளியோதரை பேஸ்புக்ல வரிசைல நின்னு கொஞ்சம் எடுத்தாச்சு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா... இங்கேயும் எடுத்துக்கலாம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  6. தமிழ் இளங்கோ ஸார்... வருத்தத்துக்குரிய இழப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருத்தம் தந்த இழப்பு அவர் இழப்பு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  7. வெங்காயத்தை பெரிது பெரிதாக போடாமல், சிறிதாக அரிந்து போட்டால் அந்த பாதிப்போக்கு / அலர்ஜி தெரியாது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா... சின்னச் சின்னதாக இருந்தாலும் கண்டுபிடித்து ஒதுக்குவது சிலருக்கு சுலபம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  8. தமிழ் இளங்கோ ...வருத்தம்.
    மற்றது முகனூலில் பார்த்தேன். அந்த வாட்டர் பாய் நல்லா முன்னுக்கு வருவார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாட்டர் பாய் முன்னுக்கு வர எனது வாழ்த்துகளும்...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...

      நீக்கு
  9. தென்னுர் மேம்பாலம் மிக அழகாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி.

      நீக்கு
  10. தமிழ் இளங்கோ ஐயா அவர்களின் பிரிவு துயரைத்தான் தருகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துயர் தரும் இழப்பு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  11. புளிக்காய்சல் படம் போட்டிருக்கீங்க. புளியோதரை வேணும்னா நாங்க வெறும் சாதம் கொண்டுவரணுமான்னு சொல்லலையே நீங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புளிக்காய்ச்சல் தரும்போது கூட கொஞ்சம் சாதம் கொடுக்க மாட்டோமா! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  12. கதம்பம் நன்றாக இருக்கிறது.
    தமிழ் இளங்கோ அவர்களை பார்க்கும் போது கஷ்டபடுகிறது மனது.
    ரோஷ்ணி சொல்வது போல்தான் என் மகள் சொல்வாள் வெங்காயம் வேண்டாம் அவளுக்கு, அடையில் வெங்காயம் இல்லாமல் செய்து கொடு, உப்புமா, வெங்காயம் இல்லாமல்.
    கடைசியில் நீங்கள் சொன்னது சிரிப்பு.
    புளிக்காய்சல் என் கணவருக்கு பிடிக்கும் எடுத்துக் கொள்கிறேன். (நிலக்கடலை போடக்கூடாது அவர்களுக்கு)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழ் இளங்கோ ஐயா... வருத்தம் தரும் இழப்பு.

      நிலக்கடலை இல்லாமல் புளிக்காய்ச்சல். சிலருக்கு அப்படித்தான் பிடிக்கும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  13. அந்தப் பையனின் உழைப்பு மகிழ்ச்சியான விஷயம். கண்டிப்பாக இந்த அட்டிட்யூட் அவனை முன்னுக்கு வர வைக்கும்!

    இளங்கோ சகோவின் மறைவு எதிர்பாராத மனதுக்கு வேதனை அளித்த விஷயம்.

    தென்னூர் பாலம் மிக மிக அழகாக இருக்கிறது. இது போன்று விசாகப்பட்டினத்திலும் மேம்பாலம் அடியில் வர்லி பெயிண்டிங்க் அடிச்சுருக்காங்க ரொம்ப அழகா இருந்தது. ஆனால் இந்தத் தென்னூர்பாலம் அடியில் செடிகள், சுற்றி கம்பி, உள்ளே நடக்கும் வசதி எல்லாம் சூப்பர். இப்படிச் சென்னையிலும், பங்களூரிலும் செய்தால் நன்றாக இருக்கும். இரு இடங்களிலும் மேம்பாலகள் நிறைய....

    அம்மா பெண் உரையாடலை மிகவும் ரசித்தேன்....பிஸ்கட் சாம்பார் வாசித்து சிரித்துவிட்டேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படி பாலங்களின் கீழே ஓவியங்கள் வரைவது இப்போது நிறைய இடங்களில் நடக்கிறது. தொடர்ந்து பராமரித்தலும் அவசியம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  14. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  15. தென்னூர் FLYOVER...அழகா இருக்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!

      நீக்கு
  16. நேற்றுத் தான், ம்ஹூம், முந்தாநாள் தான் நானும் புளிக்காய்ச்சல் காய்ச்சினேன். ஆதி போட்டிருப்பதைப் பார்த்துட்டுத் தான். ஆனால் ஒருத்தரிடமும் சொல்லலை! :)))) தென்னூர் ஃப்ளை ஓவர் நல்லாவே வந்திருக்கு. ஒருதரம் போய்ப் பார்க்கணும். மற்றவை எல்லாமும் முகநூலில் பார்த்துப் படித்தவைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா... முகநூலில் பார்த்துட்டு நீங்களும் செய்தீர்களா! இங்கே விஷயத்தை நீங்களே சொல்லிட்டீங்களே!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  17. இளங்கோ அண்ணனுக்கு இரங்கல்கள்...

    புளிக்காய்ச்சலை அல்வா நினைச்சு கருத்து போட்டது இன்னும் மறக்கலை...

    தென்னூர் பாலத்தின் அடியில் நல்லா இருக்கு. எல்லா ஊரிலும் இப்படி முயற்சிக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மேம்பாலத்தின் கீழ் ஓவியங்கள் - இப்போது பல இடங்களில் இந்த மாதிரி செய்கிறார்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

      நீக்கு
  18. திருமதி சேஷாசாயியை ஒரு முறை சந்தித்ததுண்டு புதுக்கோட்டை வலைபதிவர் விழா முடிந்து காரில் திருச்சி திரும்பும்போது அவர் எங்களுடன் பயணித்தார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் நீங்கள் சந்தித்த பதிவர் தான் திருமதி ருக்மணி...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  19. அஆவ் புளிக்காய்ச்சல் பார்க்க ஆசையா இருக்கு :)
    அந்த உழைப்பாளி பதிவு நானும் படிச்ச நினைவிருக்கு அங்கே fb யில் .
    நல்லா இருக்கட்டும் அந்த வாட்டர் கேன் மாணவர் .
    இளங்கோ அண்ணா .எதிர்பாரா அதிர்ச்சி :(

    ஹாஹாஆ :) ரோஷ்ணியும் என் மகள் போலத்தானா ? :)
    எங்க மகளுக்கு வெங்காயத்தை எதிலே சேர்த்தாலும் பிடிக்காது . தட்டில் ஒவ்வொரு துண்டை எடுத்து தனியே டேம் கட்டுவா :)
    அநேகமா நீங்களோ இல்லைனா உங்க கணவர் வெங்கட்டோ சின்னத்தில் வெங்காய ஹேட்டர்ஸாக இருந்திருப்பீங்க :) .ஏனென்றால் நானும் சின்னத்தில் வெங்காயத்தை தொட மாட்டேன் அதே பழக்கம் இப்போ மகளுக்கு .

    திருச்சி தென்னூர் fly ஓவர் அழகா இருக்கு




    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் வெங்காயத்தினை வெறுத்ததில்லை! மனைவியும் அப்படி இருந்ததாகத் தெரியவில்லை ஏஞ்சல்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  20. வணக்கம் சகோதரி

    இன்றைய கதம்பம் நன்றாக உள்ளது. புளிக்காய்ச்சல் பார்க்கவே அழகாக உள்ளது. புளியோதரையாக செய்து சாப்பிடும் ஆவலை தூண்டியது.

    தண்ணீர் கேன் கொண்டு வரும் அந்த சகோதரரின் தன்னம்பிக்கைக்கு பாராட்டுக்கள். வாழ்க வளமுடன்..

    சகோதரர் இளங்கோ அவர்களின் இழப்பு மிகவும் வருத்தமாக இருந்தது. அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

    பொது மக்களுக்காக சகல வசதிகளுடன் திறக்கப்பட இருக்கும் அந்த flyover மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பயன்பாடும் விரைவில் துவங்கினால் மக்கள் சந்தோஷம் அடைவார்கள்.

    தங்களுக்கும் மகளும் இடையே நடைபெற்ற சம்பாஷணை சுவாரஸ்யமாக இருந்தது. இந்த கால குழந்தைகள் காய்கறிகளை மட்டுமல்ல...! சாதத்தையே ஒதுக்குகிறார்கள். பிஸ்கட் சாம்பார் விரைவில் எதிர்பார்க்கிறேன்.
    பகிர்வுக்கு மிக்க நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிஸ்கட் சாம்பார் ஹாஹா... செய்யப் போவதில்லை!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

      நீக்கு
  21. கதம்பம் நன்றாக இருக்கிறது. உழைப்பாளி அந்தப் பையன் நன்றாக முன்னேறி வர வேண்டும்.

    தமிழ் இளங்கோ அவர்களின் எதிர்பாரா மறைவு மனதிற்கு வேதனை அளிக்கும் ஒன்று.

    மேம்பாலம் மிக அழகாக இருக்கிறது.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

      நீக்கு
  22. புளிக்காய்சலை கொஞ்சம் இங்கே அனுப்புங்களேன்

    இளங்கோ ஐயாவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புளிக்காய்ச்சல் தானே அனுப்பி வைத்தால் போகிறது...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்...

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....