சனி, 24 ஆகஸ்ட், 2019

காஃபி வித் கிட்டு – ஓயோ விளம்பரம் – ராஜா காது – கவிதை – வானவில் – காஃபி ஓவியம்





காஃபி வித் கிட்டு – பகுதி – 42

அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

இந்த வாரத்தின் ரசித்த வாசகம்:



கோரா கேள்வி பதில்கள் - ஸ்வாரஸ்யம்:



கேள்வி: ஒரு கருத்து நிறைந்த குட்டிக் கதையைச் சொல்ல முடியுமா?

பதில்: வானவில்: முன்காலத்தில் வானவில்லே கிடையாதாம். வானவில்லில் இருக்கும் நிறங்கள் எல்லாம் தனித்தனியா வானத்தில் இருக்குமாம். வானவில் பற்றி கதையோ, கவிதையோ யாரும் எழுதலையாம். எல்லாருமே வானம், மேகம், நிலா பற்றித்தான் எழுதுவாங்களாம். அந்த நிறங்களுக்கு ரொம்ப வருத்தமாம். ஒருநாள், எல்லா நிறங்களும் சூரியனைப் பார்த்து, ‘‘எங்களைப் பற்றி யாருமே கதை, கவிதை எழுதமாட்டேங்கிறாங்க. பார்க்கக்கூட மாட்டேங்கிறாங்க’’னு புகார் சொல்லிச்சுங்களாம்.

ஏழு நிறங்களும் ஒன்றாக வரும்போது பார்க்க ரொம்ப அழகா இருந்ததை கவனிச்ச சூரியன், ‘‘இனிமேல் நீங்க சேர்ந்தே இருங்க. மக்கள் உங்கள் அழகை ரசிப்பாங்க’’ன்னு சொல்லிச்சாம். அன்றையிலிருந்து வானவில் நமக்குக் கிடைச்சதாம். நீதி- ஒற்றுமையே சிறந்தது!

படித்ததில் பிடித்தது – கால் தடம் – கவிதை:



இணையத்தில் மேய்ந்து கொண்டிருந்த போது மேலே உள்ள படம் பார்த்தேன் – படத்தைச் சுட்டி அது இருந்த தளம் சென்றபோது அது ஒரு Word press தளம். ரேணு சக்தி என்பவரின் தளம். தளத்தின் பெயர் உயர்வுள்ளல்! டிசம்பர் 2015-க்குப் பிறகு ஒன்றும் புதிதாக எழுதப்பட வில்லை என்பது சோகம். அந்த தளத்திலிருந்து படித்ததில் பிடித்ததாக ஒரு கவிதை.

கடவுளின் கால் தடம்…

நேற்று,
கடற்கரையில் நடை
மகிழ்ச்சியான தருணம்
இருவரின் கால்தடங்கள்
ஒன்று உன்னுடையது
மற்றொன்று கடவுளினுடையது

இன்று,
கடற்கரையில் நடை
துன்பமான தருணம் – இப்போது
ஒருவரின் கால்தடம் மட்டும்தான்
உனக்குள் கோபம்
துன்பத்தில் கடவுள் உன்னுடன் இல்லையென்று

தன்னுடைய கால்தடம்தான்
என நீ நினைக்க – அது
துன்பத்திலிருக்கும் உன்னை
சுமந்துகொண்டு செல்லும்
கடவுளின் கால்தடம்
என்பதை நீ அறிவாயா!!!

இந்த வாரத்தின் ரசித்த விளம்பரம் – தந்தையர் தினம்:  

ஓயோ ரூம்ஸ் – பயணங்களில் சில முறை இந்த ஓயோ ரூம்ஸ் செயலியை பயன்படுத்தியது உண்டு. சில இடங்களில் நன்றாக இருக்கும். சில இடங்களில் பெரிதாக ஒன்றும் சொல்வதற்கு இல்லாமல் இருக்கும் அறைகள். ஒரு தந்தையர் தினம் சமயத்தில் அவர்கள் வெளியிட்ட ஒரு விளம்பரம் – ஹிந்தி மொழியில் என்றாலும் பார்த்து ஓரளவு புரிந்து கொள்ளலாம்! பாருங்களேன்.


இந்த வாரத்தின் ரசித்த ஓவியம்:

காஃபி – குடிக்க மட்டுமே என்று நினைத்திருந்தேன். காஃபித் தூள் வைத்து வரையவும் செய்யலாம் என்று சமீபத்தில் தான் தெரிந்து கொண்டேன். காஃபித் தூள் கொண்டு விதம் விதமாக வரைகிறார்கள். சில ஓவியங்கள் ரொம்பவே அழகாக இருக்கின்றன. அப்படி ரசித்த ஓவியம் ஒன்று கீழே. காஃபித் தூள் கொண்டு எப்படி வரைவது என்று கற்றுத் தர இணையத்தில் நிறைய காணொளிகள் இருக்கின்றன. தேடிப் பாருங்களேன்!



பின்னோக்கிப் பார்க்கலாம் வாங்க:

2012-ஆம் வருடம் இதே நாளில் வெளியான ஃப்ரூட் சாலட் பதிவில் தான் முதன் முதலாக ”ராஜா காது கழுதைக் காது” எழுத ஆரம்பித்து இருக்கிறேன்!  சமீப நாட்களாக இப்பகுதி வெளியிடுவது இல்லை! எங்காவது போனால் தானே காதைத் தீட்டிக் கொள்ள! ஹாஹா. பலருக்கும் பிடித்த பகுதி அது! அடுத்தவர்கள் பேசுவதைக் கேட்பதில் பலருக்கும் ஆர்வம் உண்டல்லவா! அந்தப் பதிவிற்கான சுட்டி கீழே…


இந்த வாரத்தின் நிழற்படம் - பயணம்:



ஒரு கேரளப் பயணத்தில் எடுத்த நிழற்படம். இந்த மாதிரி மரங்கள் அடர்ந்த சாலையில் நீண்ட நெடுந்தூரம் பயணிக்க வேண்டும். சமீபத்தில் பயணங்களே செல்ல முடியாமல் இருக்கிறது. ஏதாவது பயணம் சென்றே தீர வேண்டும் என நினைத்து ஒரு பயணம் அமைந்தது! அது பற்றி விரைவில் உங்களுடன் பகிர்ந்து கொள்ள வாய்ப்புண்டு!

நண்பர்களே, இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு பற்றிய உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு சில செய்திகளோடு மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி

40 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி

    வாசகம் அருமை. அதென்னவோ எத்தனை வயதானாலும் இது பொருந்தும் தான்..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் கீதாஜி!.

      எத்தனை வயதானாலும் இது பொருந்தும் - உண்மை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. கோரா பதில் செம இல்லையா? சும்மா அடிச்சுவிட்டாலும் கூட அழகான கதையாகச் சொல்லிருக்காங்க..நல்ல கற்பனை வளம் அதை எழுதியவருக்கு

    கடவுளின் கால்தடம் செம...ரொம்ப ரசித்தேன். அழகான சிந்தனை...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /சும்மா அடிச்சுவிட்டாலும் கூட// ஹாஹா... அழகான கதை தான் கீதாஜி!

      கடவுளின் கால் தடம் - உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. குட்மார்னிங்.

    எழுந்ததே லேட் என்பதால் நானும் இப்போதுதான் காஃபி! பொன்மொழி ஓகே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம்.

      எழுந்ததே லேட்! - நானும்... :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. உயர்வுள்ளல் கவிதை ரசித்தேன். அது கடவுளின் கால் தடமோ.. கூகுளின் கால் தடமோ... ஏனென்றால் அதுதான் எப்போதும் நம்முடனேயே நின்றுநம்மைப் பார்த்துக்கொண்டிருக்கிறது! விட்டால் "நேற்று கடற்கரைக்கு சென்றாயே.. கடற்கரைக்கு எவ்வளவு மார்க்?" என்று ஐந்து நட்சத்திரங்களைக் காட்டிவிடும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அது தான் எப்போதும் நம்முடனேயே நின்று நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறது!// ஹாஹா... ரொம்பவே அதிகமான கவனிப்பு தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. காபித்தூள் ஓவியம் சிறப்பு. எங்கள் வீடுகளில் முன்பு கோலங்களில் தூவும் கலர்ப்பொடியாக காபித்தூளை உபயோகித்திருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோலங்களில் தூவும் கலர்பொடியாக காபித்தூள் - ஆமாம் பயன்படுத்தி வீணாகும் காபித்தூளை காய வைத்து கலர்பொடியாக பயன்படுத்தியது உண்டு எங்கள் வீடுகளிலும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  6. பழைய பதிவில் என் பின்னூட்டத்தடியும், இப்போது வலையுலகத்துக்கு வராத அப்பாட்டுரை, மஞ்சுபாஷிணிஉள்ளிட்டநண்பர்கள் கமெண்ட்ஸும் பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மஞ்சுபாஷிணி, அப்பாதுரை, மோகன்ஜி, ரிஷபன்ஜி, பத்மநாபன் என பலரும் இப்போது வலைப்பக்கம் வருவதே இல்லை! :(

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  7. ஒரு கேரளப் பயணத்தில் எடுத்த நிழற்படம். இந்த மாதிரி மரங்கள் அடர்ந்த சாலையில் நீண்ட நெடுந்தூரம் பயணிக்க வேண்டும்.//

    அதே ஜி. நான் சில மாதங்கள் முன்னர் வழிக்கடவு டு குடலூர், குடலூர் டு மைசூர், அப்படியே பெங்களூர் வந்த போது வழிக்கடவு டு குடலூர் பாதை செமையா இருக்கும். பேருந்தில் என்பதால் கொஞ்சம்தான் படனள் எடுக்க முடிந்தது. குடலூரிலிருந்து மைசூருக்கு முதுமலை, பந்திப்பூர் வழி செமையா இருக்கும். அதுவும் பேருந்தில் என்பதால் ஜன்னல் சீட் கிடைக்கவில்லை எனவே கொஞ்சமே கொஞ்சம் படங்கள்தான் எடுக்க முடிந்தது. சாலை இருபுற்மும் மரங்கள்காடு, மலை என்று அருமையான வழி. நிறைய விலங்குகள் பறவைகள் பார்க்க முடிந்தது. அதுவும் மிக அருகில் ஆனால் படம் எடுக்க இயலவில்லை.

    மீண்டும் செல்ல வாய்ப்பு கிடைத்தால் ஏதேனும் காரில் சென்றால் தான் ஆங்காங்கே இறங்கி பார்த்து படம் எடுக்க இயலும்.

    நீங்கள் பகிர்ந்திருக்கும் பாதை செமையா இருக்கு ஜி...

    அதே போல நாகர்கோவிலில் இருந்து வள்ளியூர் செல்லும் போது ஆரல்வாய்மொழிப் பார்தை மிக மிக அருமையாக இருக்கும் அப்போது. இப்போது எப்படி இருக்கும் என்று தெரியவில்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சில பாதைகள் ரொம்பவே ரம்மியமானவை. முன்பு தமிழகத்திலும் இப்படி சாலைகள் இருந்தன. குஜராத்திலும், ஜார்க்கண்டிலும் இப்படி சில பாதைகள் பார்த்ததுண்டு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!

      நீக்கு
  8. நீங்கள் பயணம் செய்யவில்லை என்பது ஆச்சரியத்திற்குரியது. வழக்கம்போல் காணொளி மத்தியானம் தான். காஃபிப்பொடிப் படம் நன்றாக உள்ளது. கேரளச் சாலைகள் போலவே நம் தமிழ்நாட்டிலும் ஒரு காலத்தில் இருந்தது! சின்ன வயதில் அத்தகைய சாலைகளில் பேருந்துப் பயணம் செல்ல ஆசையாக இருக்கும். இப்போதெல்லாம் மரங்களையே பார்க்க முடிவதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நீங்கள் பயணம் செய்யவில்லை என்பது ஆச்சரியத்திற்குரியது// ஹாஹா... சில சமயங்களில் பயணம் வாய்ப்பதில்லை! சில சமயங்களில் தொடர்ந்து பயணங்கள்! எல்லாம் அவன் ஆட்டுவிக்கும்படி தானே கீதாம்மா...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. வானவில் போதித்த கதை அருமை ஜி
    கவிதையும் அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  10. அனைத்துமே அருமை. காப்பித்தூளை வைத்து ஓவியம் மிகவும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  11. அத்தனையும் அருமை, குட்டிக்கதை நன்று... கவிதை, கதையாக அறிஞ்சிருக்கிறேன் கவிதையாகப் போட்டிருக்கிறீங்க அருமை.

    அது ஓவியமோ.. என்னால நம்பவே முடியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.

      நீக்கு
  12. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  13. ஓவியம் அருமை. படத்தையும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  14. அனைத்து அருமை ஜி...

    காஃபி என்றவுடன் வேறு நினைவு வந்தது...




    அவர் பாவம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  15. அத்தனையும் ரசித்தேன். கடைசிப்படம் போல் தொடர்ந்தும் பயணிக்க சாலைகள் ஓரம் மரங்கள் இருக்குமா என்பதும் இனி கேள்விக்குறிகள் தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாலையோர மரங்கள்... இன்னும் சில பல வருடங்கள் ஆகலாம் இப்போது வைத்து இருக்கும் செடிகள் வளர.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிஷா.

      நீக்கு
  16. வணக்கம் சகோதரரே

    முதல் வாசகம் நன்றாக உள்ளது. என்றுமே குழந்தை மனதுடன் இருந்து விட்டால், பிரச்சனைகள் வந்து துன்புறுத்தாமல் இருக்குமில்லையா?

    வானவில்லின் கதையும் சுவாரஸ்யம்.
    "கடவுளின் கால் தடம்" நல்லதொரு கவிதையெனில் அந்த அம்மாவின் முகத்தில் எத்தனை அமைதியான சிரிப்பு. மிகவும் ரசித்தேன்.
    விளம்பர காணொளி நன்றாக உள்ளது தந்தையர் தினத்தை போற்றும் விளம்பரம் நன்றாக இருந்தது.

    காஃபித்தூள் ஓவியம் அமர்க்களம். நானும் இது போல் பார்த்திருப்பதாக ஞாபகம்.
    " ராஜா காது" தங்கள் பதிவில் நிறைய தடவை ரசித்துள்ள பகுதி. முதலில் ஆரம்பித்துள்ள பகுதியையும் படித்து ரசித்தேன். இன்றைய கதம்பம் மிகவும் இனிதாக இருந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி.

      நீக்கு
  17. படித்த வாசகம் மிக அருமை. குழந்தை மனம் வேண்டும், இறைவனிடம் கேட்கனும்.
    காலதட கவிதை, தாய் சேய் படம் மற்றும் பதிவின் அனைத்தும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  18. வானவில் கதை, காணொளி அனைத்தும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  19. வெங்கட்ஜி காலையிலிருந்து மீதி கருத்தையும் போட நினைத்து அதன் பின் தளம் ஓப்பன் ஆகவே இல்லை. கருத்தும் போகாமல் இவ்வளவு நேரம் முயன்று இப்பதான் வந்திருக்கு. ஸோ சட்டுபுட்டுனு போட்டுட்டு ஓடிப் போயிடறேன்!!!!!

    விளம்பரம் நன்றாக இருக்கிறது ஜி. ஓயோ செயலி என்பது இப்போதுதான் கேள்விப்படுகிறேன். முதலில் ஒயோ என்பதைப் பார்த்ததும் ஒரியோ போன்று ஏதேனும் பிஸ்கட்டோ என்று நினைத்துவிட்டேன்..(ஹூம் எப்ப பாரு திங்கற நினைப்புத்தான்னு வெங்கட்ஜி நினைக்கிறார்!!!!!!!!!!!! ஹா ஹா ஹா ஹா)

    காப்பித்தூள் காபி டிக்காக்ஷன் இறக்கிய பிறகு நன்றாகக் காய வைத்து ப்ரவுன் கலருக்காக ரங்கோலியில் பயன்படுத்தியதுண்டு. நம்ம ரங்கோலி வாசனையா இருக்கும்!!!!

    காஃபி பெயின்டிங்க் செய்திருக்கிறேன். இன்ஸ்டன்ட் காஃபியை வேண்டுவது போல் திக்காகவோ இல்லை லைட்டாகவோ கரைத்து வைத்துக் கொண்டு தீட்ட வேண்டியதுதான். ஆனால் இந்த அளவு எல்லாம் அழகாகத் தீட்ட வராது. ஏதோ குழந்தை போன்று தீட்டி வைப்பேன்...நன்றாக ஷேட் எல்லாம் கொடுக்க வரும். அதே போன்று மஞ்சள் பொடியையும் கரைத்துக் கொண்டு...நான் வரைந்த அந்தப் படங்கள் இங்கு வந்திருக்கிறதா என்று தெரியவில்லை. இல்ல சென்னையில் இருக்கும் சாமானுடன் இருக்கா என்று தெரியவில்லை...இங்கு கொடுத்திருக்கும் ஓவியம் மிக மிக அழகாக இருக்கிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

      நீக்கு
  20. பொன்மொழி நன்றாக இருக்கிறது.

    கவிதை மிக மிக நன்றாக அருமையான அர்த்தம் பொதிந்ததாக உள்ளது. கவிஞருக்கு வாழ்த்துகள்.

    காணொளி நன்றாக இருக்கிறது. ஓ ரூம் புக் செய்ய இப்படி ஒரு செயலியா?

    கோரா வில் வானவில்லின் கதை ரசிக்கும்படியாக இருக்கிறது.

    எல்லாமே அருமை வெங்கட்ஜி.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....