சனி, 6 மார்ச், 2021

காஃபி வித் கிட்டு - 101: மாஸ்க் - தலையலங்காரம் - நம்பிக்கை - கவிதை - சுர்தி ப்ளாசா


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட தான்யா - குறும்படம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை ரசித்ததொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


COURT IS THE MOST ROMANTIC PLACE ON EARTH, HERE EVERYBODY COMES ON A DATE AND GETS A NEXT DATE AS WELL!


*****




இந்த வாரத்தின் எண்ணங்கள் - மாஸ்க் - இப்படியும் பயன்படுத்தலாம்:


தீநுண்மி வருவதற்கு முன்பே கூட தலைநகர் தில்லியில் பல பேர் முகக்கவசம் - அதாங்க மாஸ்க் பயன்படுத்துவதை வழக்கமாக வைத்திருந்தார்கள் - குறிப்பாக அதீத அளவு சுற்றுச்சூழலில் மாசு இருக்கும் சமயங்களில்!  மூக்கையும் வாயையும் மூடிக்கொள்ளும் விதமாக இந்த மாஸ்க் இருந்தாலும், அதன் பயன்பாடு இந்த இரண்டோடு மட்டும் முடிந்துவிடுவதில்லை.  கைக்குட்டை போல அதனைப் பயன்படுத்துவதைப் பார்த்திருக்கிறேன்.  சென்ற ஞாயிறன்று மாலை பிரசாத் நகர் பகுதியில் இருக்கும் நரசிம்மர் கோவிலுக்குச் சென்று பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்தேன்.  சில பஞ்சாபி பெண்கள் பேருந்தை தனது வீடு போல நினைத்து உரத்த குரலில் வீட்டுக் கதைகளை பேசிக் கொண்டிருந்தார்கள்.  அவர்கள் பேசியதை எல்லாம் இங்கே எழுத முடியாது! (என்ன தான் ராஜா காது கழுதை காதுன்னு எழுதிக் கொண்டிருந்தாலும் கேட்கும் எல்லா விஷயங்களையும் எழுதி விட முடியுமா என்ன!). அந்தப் பெண்களில் ஒருவர் கண்ணுக்குக் கீழே ஏதோ ஒட்டிக் கொண்டிருக்கிறது என்று சொல்ல, தன்னிடம் கைக்குட்டை இல்லை என்று அந்தப் பெண் சொல்ல, ஏன் அதான் மாஸ்க் இருக்கே என்று பதிலளித்தார்!  இதுவரை எல்லாம் ஓகே!


அந்தப் பெண், தனது முகத்தில் இருந்த மாஸ்கை கழற்றி, ஒரு விரலில் அதை ஒரு துணி போல சுற்றி, நாக்கில் எச்சில் தொட்டு (யக்!), அலைபேசி கேமராவை ஆன் செய்து, கண்ணுக்குக் கீழ் இருந்த தூசியை/ஒட்டிக் கொண்டிருந்ததை துடைக்க, “ஐயோடா! இந்த மாஸ்க் எதுக்கு பயன்படுத்த வேண்டும் என்ற எல்லையே இல்லையா?”  என்று கேட்கலாம் போல எனக்குத் தோன்றியது!  நீங்க நினைக்கிறது சரி தான் - நான் கேட்கலையே!  கேட்டு அடி வாங்கவா என்ன!  ஹாஹா… மாஸ்க் வைத்து எதை வேண்டுமானாலும் செய்யலாம் என நினைக்கும் இவர்களை என்ன செய்ய? 


இந்த வாரத்தின் நிழற்படம் - முள்ளம்பன்றித் தலையா…:





ஹுனர் ஹாட் நிகழ்ச்சிக்குச் சென்று வந்தது பற்றி எழுதி இருந்தேன்.  அங்கே பார்த்த ஒரு Dடோல் கலைஞரின் தலையலங்காரம் தான் இந்த வாரத்தின் நிழற்படம்!  எப்படியெல்லாம் தலையலங்காரம் செய்து கொள்கிறார்கள் - பாருங்களேன்! இவரைப் பார்த்தால் கவுண்டமணி சொல்லும் “முள்ளம்பன்றித் தலையா” என்பது தான் நினைவுக்கு வந்தது!  தொட்டால் குத்திவிடுமோ?


இந்த வாரத்தின் விளம்பரம் - ID Fresh Food - நம்பிக்கை


இந்த வாரம் நான் பார்த்து ரசித்த விளம்பரமாக ID Fresh Food - உங்களுக்கும் பிடிக்கலாம்! இரண்டே இரண்டு கேரக்டர் தான் விளம்பரத்தில் - அந்தச் சிறு பெண் சுட்டி!  பாருங்களேன்!


இந்த வாரத்தின் பின்னோக்கிப் பார்க்கலாம் பதிவு - உலக மகளிர் தினம்


எட்டாம் தேதி தானே மகளிர் தினம் - இன்னிக்கே ஏன் அது பற்றிய பதிவு என்று கேட்க வேண்டாம்!  இதே நாளில் 2013- ஆம் ஆண்டு எழுதிய ஒரு பதிவு தான் இன்றைக்கு நாம் பார்க்கப் போகும் பின்னோக்கிப் பார்க்கலாம் பதிவு.  பதிவிலிருந்து சில வரிகள் இங்கே உங்கள் பார்வைக்கு!


ஓட்டுனர் உரிமம் வழங்கும் அலுவலத்திற்கு ஒரு பெண் தனது உரிமத்தினை புதுப்பிக்க வருகிறார். அங்கே இருந்த அலுவலர் அந்த பெண்ணின் விண்ணப்பத்தினை பார்த்தபடியே ”நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்” எனக் கேட்டபோது, அந்தப் பெண்மணி சற்றே யோசித்தார். அப்போது அந்த அலுவலர் உதவும் மனப்பான்மையோடு, “நீங்கள் ஏதாவது அலுவலகத்தில் பணிபுரிகிறீர்களா, இல்லை ஏதாவது சொந்தமாய் வர்த்தகம் ஏதும் செய்கிறீர்களா?” எனக் கேட்க, அந்தப் பெண் ”நான் ஒரு முழு நேர பணியாளர் – நான் ஒரு தாய்” என்று சொல்லவே அந்த அலுவலர் – ”இதெல்லாம் எங்களது படிவத்தில் இல்லை! நீங்கள் ஒரு இல்லத்தரசி என எழுதிவிடுகிறேன் – அதுவே அனைத்திற்கும் சமம்!” என்று சொன்னார்.


இன்றைய நிலையில் இதே கேள்வியை இந்த அலுவலகத்தில் கேட்கும்போது நீங்கள் இப்படி பதில் சொல்லலாம்! “நான் குழந்தை வளர்ப்பு, சத்துணவு மற்றும் சக மனிதர்களுக்கு இடையேயான உறவுகள் ஆகியவற்றை ஆராய்ச்சி செய்யும் ஆராய்ச்சியாளர்!” இதைக் கேட்டபின் அந்த அலுவலர் முகத்தில் நிச்சயம் ஒரு கேள்வி தெரியும்? நீங்கள் சொன்னதை அப்படியே எழுதி விட்டு அடுத்த கேள்வியை கேட்டும் விடுவார் – ‘அது என்ன வேலை? அதில் நீங்கள் செய்வது என்ன?’ நீங்கள் இப்படி பதில் சொல்லலாம்!


முழுப்பதிவையும் படிக்க சுட்டி கீழே!


உலக மகளிர் தினம்


இந்த வாரத்தின் ரசித்த நிழற்படம்:


வாட்ஸ் அப் வழி வந்த நிழற்படம் ஒன்று!  அட்டகாசமாக எடுத்திருக்கிறார் - அந்த படத்தினை எடுத்தவர்.  அவருக்கு வாழ்த்துகள்!  நீங்களும் ரசிக்கலாமே!





இந்த வாரத்தின் உணவு - சுர்தி ப்ளாசா:





குஜராத் மாநிலத்தின் உணவு இந்த சுர்தி ப்ளாசா.   ராஜஸ்தான் பகுதிகளிலும் இந்த உணவு கிடைப்பதுண்டு.  சமீபத்தில் இந்த உணவினை ருசித்தேன்!  எப்படிச் செய்வது என்பதை இணையத்தில் பார்க்கலாம்! யூவில் நிறைய காணொளிகள் இருக்கின்றன.  இணைத்திருக்கும் படம் - நான் சுவைக்கும் முன் எடுத்தது! :)


இந்த வாரத்தின் ரசித்த கவிதை:


சொல்வனம் தளத்தில் ரசித்த கவிதை ஒன்று உங்கள் பார்வைக்கு!





ஈயாடும் காபி கோப்பையுடன்

யாரும் நடமாடாத‌

படிக்கட்டில்

தலை கவிழ்ந்து அமர்ந்திருக்கிறாள்

மெல்லக்குலுங்கும் முதுகுடனும்

கண்ணீர் சொட்டுகள்

பிரதிபலிக்கும் காலணிகளுடனும்

தெரியாத ஒருத்திக்கு

சொல்வதற்கு என்னிடம்

எந்த ஆறுதல் வார்த்தைகளும் இல்லை.

அதே படிக்கட்டை

ஒவ்வொரு முறை கடக்கும்போதும்

நினைத்துக்கொள்கிறேன்

தெரிந்த ஒருத்திக்குச்

சொல்வதற்கு

எந்த ஆறுதல் வார்த்தைகளும்

இல்லாதவர்களை


– லதாமகன்


*****


என்ன நண்பர்களே, இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு உங்களுக்குப் பிடித்திருந்ததா?  பதிவு குறித்த உங்கள் எண்ணங்களை, பின்னூட்டம் வழி பகிர்ந்து கொள்ளுங்களேன்.  மீண்டும் வேறு ஒரு பதிவு வழி உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்



வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து…


36 கருத்துகள்:

  1. இன்றைய கதம்பம் அருமை.

    தாய் - அதற்கு உரிய பொறுப்பு, வேலை, கடமை, தன்னலமின்மை மிகவும் அதிகம்.

    எத்தனையோ ஹேர்ஸ்டைலைப் பார்த்திருக்கிறேன். விநோதங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்றைய காஃபி வித் கிட்டு பதிவு உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி நெல்லைத் தமிழன்.

      விதம் விதமான ஹேர்ஸ்டைல் நானும் பார்த்திருக்கிறேன். இவரை படம் எடுக்க முடிந்தது! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. பாஸ்க் வர ஆரம்பித்த காலங்களில் இங்கு ஒரு மார்வாரி, கலம்காரி பிரின்டட் மாஸ்க் என்றெல்லாம் விற்க ஆரம்பித்தார். அதையும் முக அழகிற்காக உபயோகிக்கும் காலமாகிவிட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கற்கள் வைத்த மாஸ்க் கூட கிடைக்கிறது நெல்லைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    2. கட்டிக்கும் உடைகளுக்குச் சேரும்படியாகவும் மாஸ்க்குகள் இருக்கின்றனவே!

      நீக்கு
    3. ஆமாம் - மேட்சிங் மாஸ்க் வர ஆரம்பித்து சில மாதங்களாகி விட்டது கீதாம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. மாஸ்க்கை எதற்கு உபயோகப்படுத்துவது என்று விவஸ்தையே இல்லை போல...!    ஆனால் ஒரு ஆறுதல் மாஸ்க் என்று ஒன்று அணிந்து வந்திருக்கிறார்கள்..   இங்கே அணிவதில்லை, அணிந்தாலும், கொடியில் காயும் ஏதாவது ஒரு துணியை எடுத்து முகத்தில் சுற்றிக் கொண்டுவ் வருகிறார்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாஸ்க் என்ற பெயரில் பலவும் பயன்பாட்டில் இருக்கிறது தான் ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. இந்த மாதிரி எல்லாம் முடிவெட்டிக்கொண்டு எப்படி கூச்சமில்லாமல் பொதுவெளியில் நடமாடுகிறார்கள்!  

    விளம்பரம் மனதைத் தொட்டது.  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடி - அவர்களுக்குப் பிடித்த விதத்தில் இருப்பதே அவர்களுக்கு மகிழ்ச்சி. நமக்குப் பிடிக்கவில்லை என்பது வேறு விஷயம் :)

      விளம்பரம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. பின்னோக்கிப் பார்க்கலாம் பதிவு -  த்ரீ இடியட்ஸ் படத்தில், வகுப்பை விட்டு  வெளியில் துரத்தும் ஆசிரியரிடம் ஆமீர்கான் நோட்டை எடுத்துக் கொள்வதாய் சொல்லும் காட்சி நினைவுக்கு வந்தது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பின்னோக்கிப் பார்க்கலாம் பதிவு குறித்த உங்களுடைய கருத்துப் பகிர்வுக்கு நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  6. நிழற்படம் அருமை.  அந்தத் தின்பண்டம் கவர்கிறதே...  அதுசரி..   அது இனிப்பா, காரமா?  கவிதை மிக அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிழற்படம் உங்களுக்குப் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      தின்பண்டம் - குஜராத்தி ஸ்னாக் - இனிப்பு அல்ல!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. சுவையான கதம்பம் ...

    கவிதையும் , படமும் மிக பிடித்தது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அனுப்ரேம் ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. முள்ளம்பன்றித் தலையா... சரிதான்...

    கவிதை அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. முள்ளம்பன்றித் தலையர் ரசிக்க வைத்தார் ஜி

    மாஸ்க் அவசரத்தில் குழந்தையின் மூக்கை துடைக்கவும் உதவுகிறது ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாஸ்க் - எதெதற்கோ பயன்படுகிறது - :(

      பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அரவிந்த்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. என்னதான் ஜூம் ஷாட் என்றாலும் இவ்வளவு பெரிதாக எடுக்க முடியுமா? நிலவு படத்தைதான் சொல்கிறேன். நிலவின் சைஸுக்கு பிரதிபலிப்பு சரியில்லையே! 

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படம் குறித்த உங்கள் கருத்துகளுக்கு நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா.

      நீக்கு
  12. பதிவு மிக அருமை.
    கவிதை, விளம்பர காணொளி எல்லாம் நன்றாக இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  13. இன்றைய கதம்பம் அருமை. ஆமாம் இவர் ஹேர் ஸ்டைல் பண்ணுவதுமட்டும்தான் உங்கள் கண்ணுக்கு தெரிகிறதா? தமிழக எதிர்கட்சியின் தலைவர் ஸ்டாலின் ஹேற் ஸ்டைல் உங்கள் கண்ணுக்கு தெரியவில்லையா இந்த வயதிலும் மிகவும் கருப்பாக கருகருவென்று அடர்த்தியாக இருக்கிறேதே ஹீஹீ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்டாலின் - :)

      பதிவின் வழி சொன்ன விஷயங்கள் உங்களுக்கும் பிடித்த விதத்தில் அமைந்ததில் மகிழ்ச்சி மதுரைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  14. வணக்கம் சகோதரரே

    இந்த வார காஃபி வித் கிட்டு நன்றாக உள்ளது. மாஸ்க் என்ன சொல்வது? அதன் பயன்பாட்டை மக்கள் சரியான வகையில் கவனத்தில் கொள்ளாதது கவலையே..

    தலைமுடி இந்த மாதிரி வெட்டிக் கொள்ளும் ஸ்டைல் வித்தியாசமாக உள்ளது. முள்ளம்பன்றி பொருத்தமான பெயர்:))

    கவிதை அருமை. ரசித்தேன். நிழற்படமும் அழகாக உள்ளது.

    பின்னோக்கிச் சென்று உலக மகளிர் தினம் பதிவை படித்தேன். இல்லறத்தின் சுமைகளை முழுமையாக ஏற்கும் பெண்களுக்கு வேலை நேரம் என்பது மிக அதிகந்தான்.

    இன்றைய காஃபி வித் கிட்டு தொகுப்பு நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      பதிவின் வழி சொன்ன விஷயங்கள் உங்களுக்கும் பிடித்த விதத்தில் அமைந்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  15. பதில்கள்
    1. படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  16. கவிதை அருமை. இந்த மாதிரித் தலை அலங்காரங்களில் பல கதாநாயகர்கள் தொலைக்காட்சிகளில் வந்திருப்பதால் இது புதுசாய்த் தெரியலை. இப்படித் தான் இப்போப் பலரும் வெட்டிக்கொள்கின்றனர். பின்னோக்கிப் பார்க்கணும். போகலை. விளம்பரப்படம் நல்லா இருக்கு. இன்னிக்கு உடனே பார்த்துட்டேன் என்பது தான் அதில் விசேஷமே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்த விதத்தில் அமைந்ததில் மகிழ்ச்சி கீதாம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  17. முதலில் தலை அலங்காரம். பிரமிக்க வைக்கிறது.

    கவிதையும் ஜோர்.
    அந்த டிரஸ்ட் குறும்படம் மிக அருமை. உங்களுக்கென்று
    நல்ல குறும்படங்கள் கிடைக்கின்றன .வாழ்த்துகள் வெங்கட்.

    குஜராத்தி உணவைப் பார்த்து வைத்துக் கொள்கிறேன்.

    2013 பதிவைச் சென்று பார்த்தேன்.
    பெண்களுக்கு அதுவும் இந்த கோவிட் காலத்தில்
    வேலைச் சுமை மிக அதிகம்.
    எல்லோருக்கும் மகளிர் தின வாழ்த்துகள் மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்த விதத்தில் அமைந்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....