ஞாயிறு, 28 மார்ச், 2021

ஹுனர் ஹாட் - நிழற்பட உலா - இரண்டு

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு காஃபி வித் கிட்டு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை ரசித்ததொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


நேசிக்கிறதுன்னு முடிவு பண்ணிட்டா ஒரு குழந்தை தன்னோட பொம்மையை நேசிக்கிறது போல நேசிக்கணும் - எந்தவித பிரதிபலனும் இல்லாமல்….  பொம்மைக்கு இம்மியளவு கூட தன்னோட நேசத்தைக் காட்டத்தெரியாது.  ஆனா குழந்தைக்கு அந்த பொம்மையைத் தவிர வேற உலகமே கிடையாது. 


*****




சென்ற வாரங்களில் பதிவிட்ட ஒரு தில்லி உலா பதிவில் தில்லியில் நடந்த ஹுனர் ஹாட் நிகழ்ச்சி/கண்காட்சி குறித்த தகவல்களையும் அங்கே எடுத்த சில நிழற்படங்களையும் உங்களுடன் பகிர்ந்து கொண்டது உங்களுக்கு நினைவில் இருக்கலாம். அதன் பிறகு அங்கே எடுத்த நிழற்படங்களை, நிழற்பட உலா - பகுதி ஒன்றாக சென்ற வாரம் பகிர்ந்து கொண்டேன்.    இந்த ஞாயிறில் அங்கே எடுத்த மேலும் சில படங்களை நிழற்பட உலாவாக, உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.  படங்கள் உங்களுக்கும் பிடிக்கும் விதமாக இருக்கும் என நினைக்கிறேன்.  வாருங்கள் படங்களை ரசிக்கலாம்.



ஸ்டைலிஷ் விசிறி!


கோரைப்புற்களால் சிறு பெட்டிகள்...


பாய்களும் பிடிகளோடு - அழகான ஓரங்களுடன்...


நூல்கொண்டு ஆடும் பொம்மை...


ஆட்டுவித்தால் ஆடாதார் யாரோ - இறைவனின் நூல்களில் நாம் ஆடுவதைப் போல!


ஆட்டமும் மேளமும்....  மேளம் கொட்டுபவரின் படம் முன்னரே பகிர்ந்திருக்கிறேன்.  











பொம்மலாட்ட பொம்மைகள் - கலர் கலராக...
ஒரே ஒரு சந்தேகம்...  பொம்மை செய்பவர் ஏனோ எல்லா பெண் பொம்மைகளையும் குண்டாக செய்திருக்கிறார்! 


அழகழகாக உலோகத்தில் பொருட்கள்...


தாமிரத்தில் தண்ணீர் குடிப்பது நல்லதா? 
தாமிரக் குடிநீர் பாத்திரம் ஒன்று...




அழகழகாய் மரச் சிலைகள் - பிரம்மாண்டமாக....


தண்ணீர் குடமெடுத்து நடக்கும் பெண்களை 
கிராமங்களில் கூட, இப்போது பார்க்க முடிவதில்லை!

நண்பர்களே, இந்த வாரத்தின் நிழற்பட உலா பதிவு உங்களுக்குப் பிடித்திருந்ததா?  பதிவு குறித்த உங்கள் எண்ணங்களை, பின்னூட்டம் வழி பகிர்ந்து கொள்ளுங்களேன்.  மீண்டும் வேறு ஒரு பதிவு வழி உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்



வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து…


18 கருத்துகள்:

  1. பொம்மலாட்ட பொம்மைகள் மிக அழகாய் இருக்கிறது. மரத்தில் செய்த தெய்வ சிலைகள் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொம்மைகளும், சிலைகளும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. பொம்மைப் படங்கள் மிகவும் அழகு ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் வழி பகிர்ந்து கொண்ட படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. காலை வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. வாசகம் உண்மை. ரசித்தேன். கண்காட்சியில் வேலைப்பாடுகள் மிகுந்த படங்களனைத்தும் அருமையாக உள்ளது.

    பிடியுடன் கூடிய பாய் நன்றாக உள்ளது. பொம்மலாட்ட படங்கள் அனைத்தும் கண்களை கவரும் வண்ணம் உள்ளது. அதற்கு பொருத்தமான வரிகளை தந்துள்ளீர்கள். இறைவன் படைப்பில் அவன் கைநூலில் ஆடும் பொம்மைகள்தானே இந்த மனிதர்கள்...

    உலோகங்களால் ஆனப் பொருட்களையும் பார்த்து ரசித்தேன். இப்போது அனைவர் வீட்டிலும் தண்ணீர் குடிப்பதற்கு தாமிரத்தில் சொம்புகள் டம்ளார்கள் என்று வைத்திருக்கிறார்கள்.

    மரச்சிலைகள் இறைவனார்கள் படைப்பில் பூரணத்துவம் பெற்று விட்டன. தண்ணீர் பானைகளை ஒன்றின் மேல் ஒன்றாக இருத்தி சுமக்கும் பெண்கள் படமும் மரத்தினால் செய்யப்பட்டதா? அழகாக உள்ளது. கொலுவில் வைக்கலாம். அத்தனைப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      பதிவும், வாசகமும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. பானைகள் சுமக்கும் பெண்கள் - மரத்தினால் செய்யப்பட்ட பொம்மைகள் தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. பதில்கள்
    1. நுணுக்கமான வேலைப்பாடுகள் - அதன் பின்னே இருக்கும் உழைப்பு பிரமிக்க வைப்பது தனபாலன். சில பொருட்களை அவர்கள் செய்வதைப் பார்க்க முடிந்தது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. அழகான கலைப் பொருட்கள்! அருமையான பகிர்வு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் வழி பகிர்ந்து கொண்ட விஷயங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ராமலக்ஷ்மி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. அந்த கைவினைக் கலைஞர்களின் கையில் தெய்வம் குடியிருக்கிறது.    எல்லாமே அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கைவினைக் கலைஞர்களின் கையில் தெய்வம் குடியிருக்கிறது// - உண்மை தான் ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்த விதத்தில் அமைந்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. பெட்டிகள், உலோகப் பொருட்கள் மற்றும் சிற்பங்கள் மிக அழகு. திறமையுள்ள இவர்கள் நிச்சயம் வறுமையிலும், இதனை சந்தைப்படுத்துபவர்கள் நல்ல பணத்தை ஈட்டுபவர்களாகவும் இருப்பதுதான் கொடுமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சந்தைப்படுத்துபவர்கள் நல்ல பணத்தை ஈட்டுபவர்களாக இருக்கிறார்கள் - வேதனையான உண்மை தான் நெல்லைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. அன்பு வெங்கட்,
    அருமையான கண்காட்சி.
    அதிலும் நீங்கள் கொடுத்திருக்கும் படங்களில் உலா வரும் கலைப்
    பொருட்கள்
    எல்லாமே கண்கவரும் விதத்தில் நல்ல
    உழைப்பால் உருவானவண்ண பொம்மைகளும்,
    பாய்களும் மனதை வசீகரிக்கின்றன..

    மரப் பொம்மைகளிலும் குடியேறி இருக்கும்
    கடவுளர்கள்,துதிக்கும் படி இருக்கிறார்கள்.இந்தக் கலைஞர்களுக்கு உரித்தான வளம் சேர்ந்தால்
    நன்றாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் வழி பகிர்ந்த படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....