வெள்ளி, 12 மார்ச், 2021

மகளிர் தினம் 2021 - விளம்பரம் - குறும்படம்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட தீநுண்மி 2.0 பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


RESPECT THE OLD, WHEN YOU ARE YOUNG. HELP THE WEAK, WHEN YOU ARE STRONG.  CONFESS THE FAULT, WHEN YOU ARE WRONG.  BECAUSE ONE DAY IN LIFE, YOU’LL BE OLD, WEAK AND WRONG.


******



மகளிர் தினம் என ஒரு நாள் மட்டும் கொண்டாடி விட்டு மற்ற நாட்களில் மகளிரை அவர்களைக் கிள்ளுக்கீரையாக வைத்திருக்கும் பலரை நாம் காண முடிகிறது.  ஒவ்வொரு வருடமும் அந்த ஒரு நாள் மட்டும் மகளிரை வாழ்த்திவிட்டு, மற்ற நாட்களில் எத்தனை விதங்களில் முடியுமோ அத்தனை விதங்களில் பயன்படுத்திக் கொள்ளும் பலரை நான் கண்டதுண்டு.  என்னை விட மூத்தவர்களான பல வலையுலக நட்புகளும் இந்த விஷயத்தினை உணர்ந்திருப்பார்கள்.  இளைஞர்களும் உணர்ந்திருக்கக் கூடும்.  குறிப்பாக வட இந்தியாவின் சிற்றூர்களில் பெண்களுக்கு இருக்கும் மரியாதை என்ன, எந்த அளவு கீழ்த்தரமாக அவர்களை ஆண்கள் நடத்துகிறார்கள் என்பதை பல முறை பார்த்து கொதித்திருக்கிறேன்.  வழக்கம் போல இந்த வருட மகளிர் தினமும் வந்து கொண்டாடப்பட்டு, மறந்து போய்விட்டது!  இது இப்படித்தான் இனிமேலும் நடக்கப் போகிறது!  மாற்றங்கள் இங்கே கொண்டு வருவது மிகக் கடினம்! 


இந்த வருடத்தின் மகளிர் தினம் சமயத்தில் Prega News தனது விளம்பரம் ஒன்றினை வெளியிட்டது!  இவர்களது பெரும்பாலான விளம்பரங்கள் மனதைத் தொடும் விதத்தில் இருக்கும். ஒன்றிரண்டு விளம்பரங்களை முன்னரே எனது வலைப்பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறேன் - நீங்களும் பார்த்திருக்கலாம்!  இந்த வருடம் வெளியிட்ட விளம்பரம் - Infertility குறித்த விளம்பரம்!  ஒரு கூட்டுக் குடும்பத்தில் மூத்த மருமகளுக்குக் குழந்தை இல்லை - இளைய மருமகள் கருவுற்ற போது நடக்கும் விஷயங்களை அழகாகக் குறும்படம் போல எடுத்திருக்கிறார்கள் Prega News சார்பில்!  ஹிந்தியில் இருந்தாலும் ஆங்கிலத்தில் சப்டைட்டில் உண்டு!  நிச்சயம் உங்கள் மனதைத் தொடும் விதத்தில் இருக்கும் - பாருங்களேன்!

மஹிந்திரா நிறுவனமும் இந்த வருடம் தங்களது ஆட்டோ விளம்பரத்திற்கும், ட்ராக்டர் விளம்பரத்திற்கும் எடுத்திருக்கும் விளம்பரப் படம் நன்றாகவே இருக்கிறது - குறிப்பாக ட்ராக்டர் விளம்பரம்!  ட்ராக்டர் ஓட்டுவது அத்தனை சுலபமல்ல என்பதை உங்களில் சிலர் உணர்ந்திருக்கக் கூடும்!  கொஞ்சம் சவாலான விஷயமும் கூட!  அந்த இரண்டு விளம்பரங்களும் இந்த நாளில் பார்க்கலாம்!


ஆட்டோ விளம்பரம்:

ட்ராக்டர் விளம்பரம்:


முதலாவதாகக் கொடுத்திருக்கும் விளம்பரம் தான் இந்த மூன்று விளம்பரங்களில் எனக்கு மிகவும் பிடித்த விளம்பரம் - உங்களுக்கு மூன்றில் எது பிடித்தது என்று சொல்லுங்களேன் - பின்னூட்டத்தில்!


நாளை வேறொரு பதிவின் வழி உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்



வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து...


16 கருத்துகள்:

  1. மூன்று விளம்பரங்களும் பின்னர்தான் பார்க்கவேண்டும்.

    நான் கூட முன்பு ஒரு மகளிர் தினத்தில் "மதிக்க வேண்டாம், மிதிக்காமல் இருந்தால் போதும்.." என்று தொடங்கி சில வரிகள் எழுதி இருந்தேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விள்ம்பரங்கள் - முடிந்த போது பாருங்கள் ஸ்ரீராம்.

      மதிக்க வேண்டாம்... மிதிக்காமல் இருந்தால் போதும் - அதே தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. வருடத்தில் ஒருநாள் மட்டும் பெண்களை மதித்தால் போதுமா ?

    இன்னொரு விசயம் ஜி பெண்களை கண்ணியமாக நடத்த கற்றுக் கொடுக்க வேண்டிய முக்கிய பங்கே அம்மா என்ற பெண்மணிதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருடத்தில் ஒரு நாள் மட்டும் - நிச்சயம் போதாது கில்லர்ஜி.

      அம்மா என்ற பெண்மணி கற்றுக்கொடுக்க வேண்டிய விஷயம் - அதே தான். கற்றுக்கொடுத்தல் தலையாய கடமை தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. முதல் குறும்படம் (விளம்பரம்) மிகவும் அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் குறும்படம் (விளம்பரம்) உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
    2. இனிய காலை வணக்கம் அன்பு வெங்கட்.

      மூன்று விளம்பரங்களும் மிக அருமை. வாய் வார்த்தைகள் போதாது.
      முதல் விளம்பரம் கண்ணைக் கலங்க வைக்கிறது.

      என்ன ஒரு நடிப்பு. அதிலும் எத்தனை உண்மை.
      ஒரு குடும்பம் இத்தனை ஆதரவாக
      ஒரு மருமகளை நடத்தினால் தேசமே முன்னேறாதா.
      ஆட்டோ ஓட்டும் பெண்ணும், டிராக்டர் ஓட்டும் ஷக்தியும்
      அபார ஆச்சர்யம்.

      மகளிரைப் போற்றும் எந்தக் காணொளியும்
      என் வோட்டைப் பெறுகிறது.
      நன்றி மா.

      நீக்கு
    3. இன்றைய பதிவின் வழி பகிர்ந்து கொண்ட மூன்று விளம்பரங்களும் உங்களுக்கும் பிடித்த விதத்தில் அமைந்ததற்கு மகிழ்ச்சி வல்லிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    தங்கள் கூற்று உண்மைதான். மகளிர்களை அன்றைய ஒரு தினம் மட்டும் போற்றி விட்டு மற்ற தினங்கள் அவர்கள் நலன்களையோ, அறிவுரைகளையோ, விருப்பங்களையோ புறக்கணிப்பது தவறுதான்..

    விளம்பரங்கள் அனைத்துமே நன்றாக இருந்தன. அதில் நடித்வர்களும் இயல்பாக நடித்துள்ளனர். கடைசி டிராக்டர் ஓட்டும் பெண் நன்றாக நடித்துள்ளார். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      பதிவின் வழி பகிர்ந்து கொண்ட விளம்பரங்களும், எண்ணங்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. அனைத்தும் அருமை.
    முதல் குறும்படம் காணொளி மிக அருமை.
    மற்ற காணொளிகளும் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் வழி பகிர்ந்து கொண்ட விளம்பரப் படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. முதல் விளம்பரம் கண்களில் நீரை வரவழைத்துவிட்டது. அவளுடைய பெயரை தன் குழந்தைக்குச் சூட்டப்போவதாகச்சொன்னதும் அவள் முகத்தில் காணும் மகிழ்ச்சி....அவளின் மனச்சுமையை குறைத்ததோடு, வாழ்க்கை இலகுவாக்கிவிட்டதைப் போன்ற உணர்வு. அவளுக்கு மட்டுமல்ல. எனக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதலாவது விளம்பரம் மனதை நெகிழ்த்தி விடுகிறது. உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....