ஞாயிறு, 21 மார்ச், 2021

ஹுனர் ஹாட் - நிழற்பட உலா - ஒன்று


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு காஃபி வித் கிட்டு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை ரசித்ததொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


GENEROSITY IS TO FIND ONE’S OWN SATISFACTION IN THE SATISFACTION OF OTHERS - THE MOTHER


*****




சென்ற வாரங்களில் பதிவிட்ட ஒரு தில்லி உலா பதிவில் தில்லியில் நடந்த ஹுனர் ஹாட் நிகழ்ச்சி/கண்காட்சி குறித்த தகவல்களையும் அங்கே எடுத்த சில நிழற்படங்களையும் உங்களுடன் பகிர்ந்து கொண்டது உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.  அந்தப் பதிவில் குறைந்த அளவு படங்களையே உங்களுடன் பகிர்ந்து கொள்ள முடிந்தது.  இந்த ஞாயிறில் அங்கே எடுத்த மேலும் சில படங்களை நிழற்பட உலாவாக, உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.  படங்கள் உங்களுக்கும் பிடிக்கும் விதமாக இருக்கும் என நினைக்கிறேன்.  வாருங்கள் படங்களை ரசிக்கலாம்.



நுழைவாயில் அலங்காரம் - தேநீர் கோப்பை...


போட்லி எனப்படும் சிறு மூட்டையும், விளக்குகளுக்கான Shade-உம்


இவ்வளவு கார் ரெடியா இருக்கே! ஒரு ரவுண்ட் போய்ட்டு  வரலாமா?


இசை கேட்க எழுந்தோடி வருவாருண்டோ?


புத்தம் சரணம் கச்சாமி....


இவை அனைத்தும் ஒரு சேர ஒலித்தால்.... 


விதம் விதமாய் காதணி... ஒரே இடத்தில்!


மணிகளும் கற்களும் கலந்து ஒரு காதணி...


பச்சை கலர் ஜிங்குச்சான்...  காதணி ஒன்று!


எப்பவும் சாதாரண பூட்டு தானா?  யானைப் பூட்டு!


ஒட்டக வடிவத்திலும் ஒரு பூட்டு!


உல்லு என ஹிந்தியில் அழைக்கப்படும் ஆந்தை வடிவிலும் ஒரு பூட்டு


ஆமை வடிவில் ஒரு பூட்டு!


மூணாவது வீட்டில என்ன விசேஷம்? ஒரே கூட்டமா இருக்கே?
அளவளாவும் பெண்கள்....



ஜல்ஜல் ஜல் என சலங்கை ஒலி....  மாட்டு வண்டியில் ஒரு ரவுண்ட் போலாம்!


எந்த அரசியல்வாதியாவது நாட்டுக்கு நல்லது செய்வானா என்ன? அரட்டை அடிக்கும் மனிதரகள்...


பார்க்க நல்லா இருக்கே? புளிக்காதே?
தஹி Bபல்லே!



அலங்காரங்களில் ஒன்று!


இயற்கைக் கூடுகளைப் பார்க்க இனிமேல் முடியாதோ?
செயற்கைக் கூடுகள்!


முறத்தில் முகம் பார்க்கலாம்!

நண்பர்களே, இந்த வாரத்தின் நிழற்பட உலா பதிவு உங்களுக்குப் பிடித்திருந்ததா?  பதிவு குறித்த உங்கள் எண்ணங்களை, பின்னூட்டம் வழி பகிர்ந்து கொள்ளுங்களேன்.  மீண்டும் வேறு ஒரு பதிவு வழி உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்



வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து…


20 கருத்துகள்:

  1. ஒவ்வொரு படமும் அற்புதம்... மிகவும் ரசித்தேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்த விதத்தில் அமைந்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. படங்கள் ஒவ்வொன்றும் அழகோ அழகு
    நேரில் கண்ட உணர்வு
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. அனைத்துப் படங்களையும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. காட்சியில் அழகிய பொருட்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மாதேவி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. ஆகா!! ஒவ்வொரு படமும் அழகு! உங்கள் தலைப்பும் அணி சேர்க்கின்றது. விதவிதமான பூட்டுகளும் தவில்களும் மனம்கவர்ந்தன. பிரமாதம் அண்ணா, பகிர்விற்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கிரேஸ்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. அன்பு வெங்கட்.
    முன்னால் போட்ட பதிவுகளுக்கு வர முடியவில்லை மன்னிக்கவும்.
    இந்தப் பதிவில் வந்த அற்புதப் படங்களைக் கண்டு மகிழ்ந்தேன்.
    ஒட்டக யானைப் பூட்டுகள் மிகப் பிரமாதம்.
    மீண்டும் வந்து படிக்கிற்ன் மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. படங்களை தத்ரூபமாக எடுத்து இருக்கிறீர்கள் ஜி ஸூப்பர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. மிக அருமையான போட்டோக்கள். வாழ்க வளமுடன். Keep going. All the best
    Vijay

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி விஜயராகவன் ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை.. எல்லா படங்களும் கலை நயத்துடன் மிக அழகாக இருக்கின்றன. காதணிகளில் பல வகை வகைகள், விதவிதமான பூட்டுக்கள், செயற்கை பறவை கூடுகள்,வயலின் இசை கருவி, தபேலா மற்றும் உடுக்கை கருவிகள் முகம் காட்டும் முறங்கள் அனைத்தும் அற்புதமாக உள்ளது. பச்சை கலர் காதணி மிகவும் அழகாக உள்ளது. அனைத்தையும் தாங்கள் அழகாக படம் எடுத்துள்ளீர்கள். பாராட்டுக்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      பதிவின் வழி பகிர்ந்த படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. ஆந்தையை நாம் தான் பார்க்கக்கூடாதது என்கிறோம். வட மாநிலங்களில் மஹாலக்ஷ்மியின் வாஹனம் என்பார்கள். ஆந்தையை விரட்டுவதில்லை. ஜாம்நகரில் எங்க க்வார்டர்ஸில் தோட்டத்தில் கூரைக்கு அடியே கூடு கட்டிக் கொண்டு 4 ஆந்தைகள் வசித்தன. அவை கத்தும்போதெல்லாம் எனக்குப் பொன்னியின் செல்வன் நினைவில் வரும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆந்தை, ஆமை போன்றவற்றை வடக்கில் வணங்குவது வழக்கம் தான் கீதாம்மா. நானும் பார்த்திருக்கிறேன்.

      பதிவின் வழி சொன்ன விஷயங்கள் குறித்த உங்கள் கருத்துரைக்கு நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....