திங்கள், 29 மார்ச், 2021

அந்தமானின் அழகு - விமர்சனம் - புவனா சந்திரசேகரன்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


அறுசுவை உணவோ, கூழோ எதை உண்டாலும் முடிவு ஒன்று தான். வயிறு நிறைந்து பசி தீருவது தான் அது.


******






இந்த வாரத்தின் முதல் நாளாம் இன்று நாம் பார்க்கப் போவது எனது மின்னூல்களில் ஒன்றான “அந்தமானின் அழகு” நூலுக்கான வாசிப்பனுபவம் - எழுதியிருப்பவர் புவனா சந்திரசேகரன் அவர்கள்.  சஹானா இணைய இதழின் ஜனவரி மாத போட்டியில் பங்குபெற்ற எனது நூலுக்கு அவர் எழுதி முகநூலில் வெளியிட்ட விமர்சனம் இது.  படித்துப் பாருங்களேன்! ஓவர் டு புவனா சந்திரசேகரன்...


*****


பயண நூலை இவ்வளவு தெளிவாகவும் சுவாரஸ்யமுமாக எழுதிய ஆசிரியருக்கு எனது வாழ்த்துகள். 


பயண நூலைப் பயனுள்ள நூலாகவே எண்ணும் படியாக அத்தனை தகவல்களை அள்ளித் தந்திருக்கிறார். கட்டணத்தில் இருந்து, தங்கும் வசதி பற்றி, சுற்றுலாவை நடத்தி வழிகாட்டும் ஏஜென்சி பற்றி, பார்த்த இடங்கள், பார்க்காமல் விட்டுப் போன இடங்கள் என்று எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்து எழுதிய விதம் சுகமான அனுபவமாகவே இருந்தது. 


அந்தமானுக்கு இவர் குடும்பத்தை விட்டு விட்டுத் தனியாகக் கிளம்பியதைப் படித்தபோது என் கணவரும் பல வருடங்களுக்கு முன்னால் அலுவலக நண்பர்களுடன் அந்தமான் போனது நினைவிற்கு வந்து வீட்டில் உள்நாட்டுக் கலகத்தை உண்டு பண்ணியது. 


ஸ்கூபா டைவிங், ஜெட் ஸ்கீ, ஸீ வாக் போன்ற கடல் நீர் விளையாட்டுகளைப் பற்றிப் படித்தபோது நானே அனுபவித்த மாதிரி தான் இருந்தது. அதுவும் அந்த பனானா ரைட் ரொம்பப் புதுமையாக இருந்தது. 


எத்தனை தீவுகள்? பே தீவு, போஸ் தீவு, ஸ்வராஜ் தீவு, கிளித்தீவு. அவற்றைத் தவிர சிலவற்றின் பெயர் மாற்றங்களின் காரணத்தையும் விளக்கியது சிறப்பு. அதே போல எத்தனை கடற்கரைகள்!


ராதாநகர் கடற்கரை, காலா பத்தர் கடற்கரை, லக்ஷ்மண்பூர் கடற்கரை, சீதாபூர் கடற்கரை, பரத்பூர் கடற்கரை, எலிஃபண்ட் கடற்கரை  என்று கடற்கரைகளை விவரித்த விதமும் அழகு. 


செல்லுலர் சிறை பற்றிய தகவல்கள் சிலிர்க்க வைத்தன. அதுவும் அங்கே வழங்கப்பட்ட மனிதாபிமானமில்லாத கொடூர தண்டனைகள் மனதை வருந்த வைத்தன. 


சீதாபூர் கடற்கரையில் சூரிய உதயமும் லக்ஷ்மண்பூர் கடற்கரையில் சூரிய அஸ்தமனமும் நானே பார்த்தது போல இருந்தது. 


சுண்ணாம்பு குகை பற்றிய தகவல் , சொகுசுக் கப்பல் பயணம் எல்லாமே சிறப்பு. வாங்கும் பொருட்களுக்கு பில் தேவை என்பதை வலியுறுத்தியதற்கு நன்றி. 


நண்பர்களின் திருமணநாள் கொண்டாட்டம், பர்ஸ் தொலைத்த அனுபவம், தாழம்பூப் புதர்களின் அருகே நடந்தது, பழங்குடி மக்களைப் பார்க்கச் செய்த பயணம், தெருவோரக் கடைகளில் வடை சாப்பிட்டது என்று இடையிடையே சேர்த்திருந்தது கதை படிக்கும் அனுபவத்தைத் தந்தது. 


பால் பவுடரில் தான் தேநீர் தயாரிக்கிறார்கள் என்பது புதிய தகவல். 

அந்தமான் செல்லத் திட்டமிடுபவர்கள் இந்த நூலை ஒரு கையேடாக எடுத்துச் செல்லலாம். அவ்வளவு பயனுள்ள தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. 


ஆசிரியருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள். 


நிறைய பயணக்கட்டுரைகளை எழுதி எங்களை மகிழ்விக்க வேண்டுகிறேன். 


புவனா சந்திரசேகரன்/28/01/2021.


*****


நண்பர்களே, மின்னூல் குறித்த புவனா சந்திரசேகரன் அவர்களின் விமர்சனம் உங்களுக்கும் பிடித்திருக்கலாம். விமர்சனம் செய்த அவருக்கு மனம் நிறைந்த நன்றி. பதிவு குறித்த உங்கள் எண்ணங்களை பின்னூட்டம் வழி பகிர்ந்து கொள்ளுங்களேன்.  மீண்டும் வேறு ஒரு பதிவின் வழி சந்திக்கும் வரை…


நட்புடன்



வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து...


14 கருத்துகள்:


  1. இந்த காலத்தில் படிப்பதே அதிசயமாக இருக்கிறது அதிலும் படித்து ஒருவர் விமர்சனம் எழுதுகிறார் என்றால் அவர் மிகவும் பாராட்டுக்குரியவர். அந்த வகையில் புவனா சந்திரசேகரன் மிகவும் பாராட்டுக்குரியவர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசிப்பது குறைந்து விட்டது தான் மதுரைத் தமிழன். சில வாசிப்புப் போட்டிகள் வாசிப்பை இன்னும் தக்க வைத்திருக்கிறது - அதில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. அவரது பாராட்டுகள் ஒவ்வொன்றும் உண்மை.   வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாராட்டியதற்கு நன்றி ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. சிறப்பான விமர்சனம் ஆசிரியருக்கும், வாழ்த்துகள.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விமர்சனம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. பதில்கள்
    1. விமர்சனம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன். வாழ்த்தியமைக்கு நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. நன்கு ரசித்து எழுதியுள்ளார். மகிழ்ச்சி. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்தியமைக்கு நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. அருமையான விமர்சனம் புவனா. கட்டியம் கூறி வரும் மின்னூல் வரிசைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் வெங்கட் சகோ :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தேனம்மை சகோ.

      நீக்கு
  7. நன்றாக விமர்சனம் செய்து இருக்கிறார் புவனாசந்திரசேகரன், அவர்களுக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விமர்சனம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா. வாழ்த்தியமைக்கு நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....