ஞாயிறு, 4 ஏப்ரல், 2021

இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே!


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


SOME DAYS YOU WILL BE THE LIGHT FOR OTHERS; AND SOME DAYS YOU WILL NEED SOME LIGHT FROM THEM.  AS LONG AS THERE IS LIGHT, THERE IS HOPE AND THERE IS A WAY!


******


வடக்கில் 'ரோஷ்ணி ஆகயி' என்பார்கள். அதாவது 'வெளிச்சம் வந்துவிட்டது' என்று அர்த்தம். அது போல எங்கள் வாழ்விற்கு கிடைத்த வெளிச்சம் இவள். 


இவள் எங்களுக்கு வரமாய் கிடைப்பதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பே மனதில் எதிர்பார்ப்புடன் செய்த ஒரு ரயில் பயணத்தில் பேசிக் கொண்டிருந்த போது என்னவர் தேர்ந்தெடுத்த பெயர் தான் 'ரோஷ்ணி'..இன்னும் இவள் மழலை மொழியில் பேசியதே  நினைவில் இருக்க, வருடங்கள் 16 வேகமாக நகர்ந்து விட்டன! தனக்கு இது பிடிக்கும், பிடிக்காது என்று அழுத்தமாக சொல்ல முடியும் இவளால். 


இன்றைய சமுதாயத்திற்குத் தேவையான மனிதாபிமானம், இரக்கம், அன்பு, பொறுமை, சகிப்புத்தன்மை, சாதுர்யம் என எல்லாம் கிடைக்கப் பெற்று வளமோடு வாழணும்! இவளின் கனவுகளுக்கு நாங்கள் படிக் கற்களாக இருக்கணும்!


தனக்கு விருப்பமான துறையில் சாதித்து , தனக்கான தனி இடத்தை பிடித்து வாழ்வில் வெற்றி பெற கடவுள் துணை புரியட்டும்.


17 ஆம் வயதில் அடியெடுத்து வைக்கும் இவளுக்கு கடவுளின் அருளோடு உங்கள் அனைவரின் ஆசிகளும் கிடைக்கட்டும். 


வருடங்கள் தான் எவ்வளவு வேக வேகமாக கடந்து செல்கின்றன.  இப்போது தான் நடந்த மாதிரி இருந்தாலும், சில விஷயங்களில் கால ஓட்டத்தினால் பல வருடங்கள் கடந்து விடுகிறது என்பதை நாம் புரிந்து கொள்வதே முடிவதில்லை.  இதோ, இன்று தான் பிறந்த மாதிரி இருக்கிறது! அதற்குள் பல வருடங்கள் கடந்து விட்டது.  இதே நாளில் பிறந்த மகளுக்கு இன்றைக்கு அகவை பதினாறு!  பதினேழில் அடியெடுத்து வைத்திருக்கும் மகளுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.  வாழ்வில் எல்லா வளமும் பெற, எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும். மகளின் பிறந்த நாளுக்காய் வீட்டில் செய்த ரஸ்மலாய்!


இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கண்ணா!


அம்மா, அப்பா!


******


இன்றைக்கு வர வேண்டிய நிழற்பட உலா, முடிந்தால் இன்றே வெளிவரும்!  இல்லை என்றால் அடுத்த வாரம்!  ”இன்னிக்கே போடலைன்னா என்ன ஆகிவிடப் போகிறது! அடுத்த வாரம் போட்டால் போயிற்று!” நாளை மீண்டும் வேறொரு பதிவின் வழி சந்திக்கும் வரை…


நட்புடன்வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து....


30 கருத்துகள்:

 1. ரோஷ்ணி வாழ்வில் சகல நலன்களும் பெற்று வாழ இறைவன் அருள் புரியட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

   நீக்கு
 2. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ரோஷ்ணி! வாழ்க பல்லாண்டு வளமுடன் நலமுடன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   நீக்கு
 3. இனிய பிறந்த நாள் வாழ்ததுக்கள் ரோஷினி கண்ணா, அழகான பெயர் காரணம், அவளுக்கு பொருத்தமும் கூட. எல்லா வளமும் பெற்று பெரு வாழ்வு வாழ ஆசிகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி அப்பாவி தங்கமணி.

   நீக்கு
 4. வணக்கம் சகோதரி

  உங்கள் அன்பு மகள் ரோஷ்ணியின் பிறந்த நாளுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துகள். ஆசிகள். அவர் வாழ்வில் எல்லா நலன்களும் பெற்று சிறப்பாக வாழ இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி.

   நீக்கு
 5. உங்கள் மகளுக்கு எங்களின் வாழ்த்துகள். வாழ்வில் சிறப்பாக ஒளி பெறட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 6. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களும் ஆசீர்வாதங்களும் ரோஷினி இக்கு அன்புடன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி காமாட்சி அம்மா.

   நீக்கு
 7. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ரோஷ்ணி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 8. அன்பு மகளுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 9. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 10. பெயர்க்காரணம் அறிந்தேன். மகிழ்ச்சி. வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   நீக்கு
 11. செல்வி ரோஷ்ணிக்கு
  அன்பின் நல்வாழ்த்துகள்..

  பல்லாண்டு வாழ்க...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஐயா.

   நீக்கு
 12. அன்பின் இனிய ரோஷ்ணிக்கு ஆசிகளும் நல் வாழ்த்துகளும். என்னாளும்
  நல் நாளாகப் பெற்றோருடன் நூறாண்டு வாழ
  பெருமை பெற, நினைத்ததை சாதிக்க இறைவன் அருளுவான்.
  தாய் தந்தையருக்கும் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

   நீக்கு
 13. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ரோஷ்ணி! வாழ்க பல்லாண்டு வளமுடன் நலமுடன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி அரவிந்த்.

   நீக்கு
 14. ரோஷ்ணிக்கு வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்.

  ரஸ்மலாய் மிக அருமை.

  //தனக்கு விருப்பமான துறையில் சாதித்து , தனக்கான தனி இடத்தை பிடித்து வாழ்வில் வெற்றி பெற கடவுள் துணை புரியட்டும்.//
  இறைவன் துணை புரிவார், சாதிப்பாள் வெற்றி பெறுவாள். வாழ்க வளமுடன்.


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   நீக்கு
 15. முகநூலில் பார்த்துச் சொல்லிட்டேன். ரஸமலாய் தான் பார்க்கலை. இங்கேயும் வாழ்த்துச் சொல்லிக்கிறேன் ரோஷ்ணி. மனம் நிறைந்த ஆசிகள்/வாழ்த்துகள்/பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்த்தியமைக்கு நன்றி கீதாம்மா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....