அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட பயணத்தொடர் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
நமக்காக அனுசரிச்சுப் போறவங்க எல்லாம் முட்டாள், கோழைன்னு நினைச்சுடாதீங்க! அனுசரிக்கிற உறவெல்லாம் கிடைக்க ரொம்பப் புண்ணியம் செஞ்சிருக்கணும்….
******
இந்த வாரத்தின் முதல் நாளில் எனது மின்னூல்களில் ஒன்றான “ஹனிமூன் தேசம்” என்ற மின்னூலுக்கு கிடைத்த இரண்டு விமர்சனங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. சஹானா இணைய இதழ் நடத்தி வரும் மாதாந்திர வாசிப்புப் போட்டிகளில், மார்ச் மாதத்திற்கான போட்டியில் பங்கு பெற்ற எனது இந்த மின்னூலுக்கு விமர்சனங்களை, முகநூலில் எழுதிய நண்பர்களுக்கு நன்றி.
விமர்சனம் - 1 - புவனா சந்திரசேகரன்:
எங்க ஊர்க்காரரான இந்த ஆசிரியர் நிறைய இடங்களைச் சுற்றிப் பார்ப்பதோடு தனது அனுபவங்களையும் பயனுள்ள தகவல்களையும் தொகுத்து நல்லதொரு புத்தகமாக வழங்கி விடுகிறார்.
சாதாரணமாக பயணக்கட்டுரை எழுதுவது கடினமான செயல். ஒருவர் தனது கோணத்திலேயே எழுதுவதால் அதைப் படிக்கிறவர்களுக்கு சலிப்பு தட்ட விடாமல் சுவாரஸ்யமாக எழுதத் தெரிய வேண்டும். அதில் ஆசிரியர் வெற்றி கண்டிருக்கிறார். அதற்காக எனது பாராட்டுகள்.
அது ஏன் ஒவ்வொரு தடவையும் மனைவியை விட்டு விட்டுத் தனியாகப் போகவேண்டும்? அதுவும் ஹனிமூன் தேசத்துக்கு? ஆதிம்மா, கொஞ்சம் ஆத்துக்காரரை மிரட்டி வைங்க. (சும்மா ஜாலிக்காக எழுதினேன்? கோபித்துக் கொள்ள வேண்டாம்).
இத்தனை வருடங்களாக எனக்கும் குல்லூ, மணாலி பார்க்கும் பாக்கியம் கிடைக்கவில்லை. சண்டிகர் , ஷிம்லா பார்த்திருக்கிறேன். இதைப் படித்ததும் இந்த வருடமே போக ஆசையாக இருக்கிறது. பார்க்கலாம்.
சைவ உணவு கிடைக்கும் என்பது பெரிய ஆறுதல். அஸ்ஸாம் போய்விட்டுத் திண்டாடிய அனுபவங்கள் நினைவிற்கு வந்தன.
ஒவ்வொரு இடத்திற்கும் போகும் வழி, தங்கும் இடம், உணவு கிடைக்கும் இடங்கள் என்று அனைத்தையும் பயனுள்ள வகையில் தந்திருப்பது போற்றுதற்குரிய விஷயம்.
காலபைரவருக்கு பிஸ்கட் அளித்த அனுபவம் சுவாரஸ்யமாக இருந்தது. அந்த பைரவர் தனது காலைத் தூக்கிக் காலில் வைத்து உட்கார்ந்திருக்கும் புகைப்படத்தையும் போட்டிருக்கிறார். ஆச்சர்யமாக இருந்தது.
அதே போலத் தங்க மோதிரத்தைத் திரும்பத் திரும்பத் தொலைத்தவரின் அனுபவமும் பாவமாக இருந்தது. கடைசியில் பனியில் புதைந்து போனது மோதிரம். தெனாலி படத்தில் சார்லி , குளத்தில் வைரமோதிரம் தேடும் ஸீன் எனக்கு ஞாபகம் வந்தது.
ராஃப்டிங், பாரா க்ளைடிங், கேபிள் கார் அனுபவங்கள் சிலிர்க்க வைத்தன. பயணத்திற்குப் தேவையான தகவல்களுடன் பட்ஜெட்டும் போட்டுக் கொடுத்திருக்கிறார். இந்த ஸீஸனில் போய்ப் பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொள்கிறேன்.
ஆசிரியருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள். நல்லதொரு பயணக் கட்டுரை நூல். அழகாகத் தொகுத்து வழங்கும் நல்ல முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
புவனா சந்திரசேகரன்,
07/03/2021.
விமர்சனம் - 2 - Daisy Josephraj:
வட இந்தியாவில் பயணம் மேற்கொள்பவர்கள், அதிலும் தேனிலவுக்கென்று குலூ-மணாலிக்குச் செல்லும் இளம் தம்பதியருக்கு இந்தப் பயணக்கட்டுரை மிக மிக உபயோகமாயிருக்கும்.
இது ஒரு பயணக்கட்டுரை என்று தோன்றாத வண்ணம் மிகவும் சுவைபடக் கூறியுள்ளார் ஆசிரியர். பயணம் செல்பவர்கள் ஒரு குழுவாக டெம்போவேனில் பயணிக்கிறார்கள். ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள குலூ-மணாலி இயற்கை ஆர்வலர்களுக்கு ஒரு சொர்க்கம் என்பதை அவர் இணைத்திருக்கும் புகைப்படங்களிலிருந்து நாம் தெரிந்து கொள்ளலாம். ‘பஞ்சாப் ஹரியானாவைக் கடக்கும் பொழுது ஓட்டுனர்கள் காட்டுவேகத்தில் ஓட்டுவார்கள். கொஞ்சம் உறங்கினாலும் குலு- மணாலி சென்று சேர்வதற்குப் பதிலாகக் குளுகுளு பெட்டிக்குள் போகும் வாய்ப்பு அதிகம்.’ இது அவருடைய எழுத்து நடைக்கான ஒரு சான்று.
குருஷேத்திரம், அம்பாலா சண்டிகர் பியாஸ் நதியைப் பற்றிய குறிப்பு 14300 அடி உயரத்தில் ரோஹ்தாங்க் பாஸ் நதிக்கரை ஓரம் குலூ செல்லும் பாதை ஃபோட்டொ செஷன், தொங்கு பாலம், ராஃப்டிங்க், நதி ஓரங்களில் கிடைக்கும் கூழங்கற்கள் படகுப் பயணம் அங்கு பூக்கும் மலர்கள், காய்கறிகள் பழங்கள், நல்ல உயரத்தில் கேபிள் காரில் செல்வது, மேலே பல ஆயிரம் அடி உயரத்தில் அந்த கூண்டுகளுக்குள் பயணிக்கும் பொழுது கீழே விரிந்து கிடக்கும் பனிப் ப்ரதேசம்; இது போன்று பல கருத்துக்களைக் கூறிக் கொண்டே போகிறார்.
பனி படர்ந்த அந்த மலைப் பிரதேசத்தில் பனிகட்டிகளை உருட்டி ஒருவர் மேல் ஒருவர் எறிந்து விளையாடுவது,,, என அவர் அந்த உல்லாசப் பயணத்தை எப்படி உணர்ந்தாரோ அதை அப்படியே நம்மையும் உணர வைக்கிறார். இந்தப் பயணக்கட்டுரையின் சிறப்பை நான் கூறுவதைவிட நீங்கள் படித்து சுவையுங்கள். அப்பொழுதுதான் எல்லா இடங்களுக்கும் உங்கள் கைபிடித்து அவர் அழைத்துச் செல்வதை உங்களால் உணர முடியும்.
‘யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்’ என்ற கூற்றிற்கு இனங்க குலூ-மணாலி பற்றி ஓர் அழகான பயணக்கட்டுரை கொடுத்தைமைக்கு வாழ்த்துக்கள் நண்பரே! படித்து மகிழுங்கள் வாசகத் தோழர்களே! கீழே உள்ள அமேசான் லிங்கில் சென்று இந்த ஹனிமூன் தேசம் பயணக்கட்டுரையைப் படித்து மகிழலாம்.
https://www.amazon.in/dp/B087923Z7X
Daisy Josephraj
*******
நண்பர்களே, இந்தப் பதிவின் வழி உங்களுடன் பகிர்ந்து கொண்ட வாசிப்பனுபவங்கள் குறித்த உங்கள் எண்ணங்களை, பின்னூட்டம் வாயிலாக பகிர்ந்து கொள்ளுங்கள். நாளை வேறொரு பதிவின் வழி உங்களைச் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லியிலிருந்து…
நல்ல விமர்சனங்கள். ஹனிமூன் தேசம்... பெயரே கவர்ந்திழுக்கும்.
பதிலளிநீக்குவிமர்சனங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
காலை வணக்கம் வெங்கட்ஜி!
பதிலளிநீக்குநல்ல விமர்சனம் வெங்கட்ஜி!
வாழ்த்துகள்!
கீதா
வணக்கம் கீதாஜி.
நீக்குபதிவு குறித்த தங்கள் கருத்துரை மகிழ்ச்சி அளித்தது.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
நம் புத்தகங்கள் வாசிக்கப்படும் போது அது தனி சந்தோஷம் அதிலும் விமர்சனம் வரும் போது டபுள் சந்தோஷம்!
பதிலளிநீக்குவாசகம் மிக அருமை. ஆனால் அனுசரித்துப் போனால் கிடைக்கும் பெயர்கள் யதார்த்தம்.
கீதா
வாசகமும் பதிவும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
இருவரும் விமர்சித்த விதம் அருமை.
பதிலளிநீக்குவாழ்த்துகள் ஜி.
பதிவு குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி கில்லர்ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
அருமையான விமர்சனங்கள்!
பதிலளிநீக்குஉங்களுக்கும் இனிய வாழ்த்துக்கள் வெங்கட்!
விமர்சனங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மனோம்மா. வாழ்த்தியமைக்கு நன்றி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
இரு விமர்சனங்களும் அருமை.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அரவிந்த்.
நீக்குஅருமையான விமர்சனங்கள் ஜி... வாழ்த்துகள்...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குவாசகம் அருமை. பதிவும் அருமை. உங்களின் ஹனிமூன் தேசம் பயணக் கட்டுரையை குறித்து இருவரும் நன்றாக விமர்சித்து உள்ளார்கள். விமர்சனங்களை நன்கு எழுதியவர்களுக்கும், சிறப்பானதொரு பயணக் கட்டுரையை எழுதிய உங்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். நன்றிகள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.
நீக்குவிமர்சனங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
விமர்சனங்கள் அருமை
பதிலளிநீக்குவாழ்த்துகள் ஐயா
விமர்சனங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
இருவரும் மிக அருமையாக விமர்சனங்கல் செய்து இருக்கிரார்கள்.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் விமர்சனம் செய்தவர்களுக்கும், உங்களுக்கும்.
விமர்சனங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
அன்பு வெங்கட்,
பதிலளிநீக்குபுத்தக வெளியீடுக்கு வாழ்த்துகள்.
இந்த மாதிரி நேரத்தில் நல்ல பயணப் புத்தகங்கள் தரும் இனிமை வேறெங்கும் கிடைக்காது.
நீங்கள் பதிவிட்ட காலம் மறந்தாலும் உங்கள் பயணங்கள் மறக்கவில்லை.
வாசகம் யதார்த்தம். உறவுகளை எந்த நிலையிலும் உதாசீனம் செய்யும் காலம் இல்லை இப்போது.!!
எப்போதுமே கூடாது..
இருவரும் அருமையாக அனுபவித்துப் படித்து
விமரிசித்திருக்கிறார்கள்.
இங்கு படிப்பவர்கள் அதை நன்றாக உணர்வார்கள்.
அன்பு பாராட்டுகளும் வாழ்த்துகளும் வெங்கட்.
வணக்கம் வல்லிம்மா.
நீக்குவிமர்சனங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. முன்னரே வெளியிட்ட நூல் தான். தற்போது விமர்சனங்கள் வந்தன.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
இரு விமரிசனங்களையும் முகநூலிலும் படித்தேன்.
பதிலளிநீக்குவிமர்சனங்கள் இங்கேயும் முகநூலிலும் படித்ததில் மகிழ்ச்சி கீதாம்மா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.