செவ்வாய், 6 ஏப்ரல், 2021

கதம்பம் - டவுன்பஸ் - உலக இட்லி தினம் - சம்மர் ஸ்பெஷல் - கை முறுக்கு - ஐஸ்க்ரீம் - மெஹந்தி


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட வாசிப்பனுபவம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


மனதை திடமாக வைத்திருங்கள். சிறு சிறு கற்களாக எடுத்துப் போட்டாலும், காலம் கடந்து பார்க்கையில் ஒரு கோட்டையே உருவாகி விடும். காலம் அனைத்தையும் மாற்ற வல்லது.


******
டவுன்பஸ் பயணம் - 28 மார்ச் 2021:


”சில்வர் பின்னு! சில்வர் பின்னு!” 30 பின்னு 10 ரூபா தான்க்கா! வாங்கிக்கோங்க அக்கா! 


இருக்கையில் பைனாப்பிள் துண்டுகளை ரசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்த சின்னஞ்சிறு சிறுவன்!


யாருடனோ அலைபேசியில் சத்தமாக பேசிக் கொண்டிருந்த நபர்..


குடும்பத்தில் யாரேனும் ஒருவர் மட்டும் மாஸ்க் போட்டுகிட்டா போதும் கொரோனா கிட்ட நெருங்காது என்று குலசாமியை வேண்டிகிட்டு வீட்டை விட்டு இருசக்கர வாகனத்தில் வெளியே கிளம்பிய நால்வர்!!


அஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!! பேருந்தில்  தும்மிய ஒருவர்!


கிராமத்தை நோக்கிய பேருந்து பயணத்தில் பார்த்த காட்சிகள் இவை!


ஆன்லைன் கிளாஸ், ஸ்கூல் என்று சென்று கொண்டிருந்ததால் நெடுநாட்களாக கிராமத்தில் வசிக்கும் பெரிய மாமியாரை சென்று பார்க்க முடியாமலேயே போய்விட்டது. இன்று ஒருநாள் முழுவதும் அவருடன் நேரத்தை செலவிட்டு வேண்டிய உதவிகளை செய்து வந்ததில் மனதில் நிறைவு! மாலை வீடு திரும்பும் போது செய்த பேருந்து பயணத்தில் மனதிற்கு இதமான பாடல்களை கேட்டுக் கொண்டு வந்ததில் பிரயாண நேரமும், களைப்பும் தெரியலை..🙂 ஓட்டுனரும் பாடிக் கொண்டே வந்தார்..🙂  நடுவில் கோவிலைக் கண்டதும் ஸ்ட்யரிங்கையே விட்டுவிட்டு கையெடுத்து கும்பிட்டுக் கொண்டே வந்தார்...🙂 நம்மளையும் அந்தக் கடவுள் தான் காப்பாற்றணும் என்று நினைத்துக் கொண்டேன்..🙂 அதிசயப் பிறவிகளாக தனித்து தெரிந்தது மாஸ்க் அணிந்திருந்த நாங்கள் இருவரும் தான்..🙂 வீட்டிற்கு வந்து டெட்டால் குளியலுடன்  இன்றைய நாள் நிறைவு பெற்றது..🙂


******


உலக இட்லி தினம் - 30 மார்ச் 2021: 

இட்லி மாவு மட்டும் கைவசம் டப்பா நிறைய  வீட்டில் இருந்து விட்டால் போதும்.. அப்போது வரும் நிம்மதி இருக்கு பாருங்க அதுக்கு ஈடு இணையே இல்லை..🙂 என்ன டிஃபன் செய்வது என்று மண்டையை பிய்த்துக் கொள்ள வேண்டாம்..🙂


இட்லி, தோசை, ஊத்தாப்பம், குழிப்பணியாரம், இட்லி உப்புமா என்று எதையாவது செய்து ஒப்பேத்தி விடலாம்...🙂


வருடத்தில் ஒருமுறை ஹோட்டலுக்குச் சென்றாலும் முதலில் நான் கேட்பது என்னவென்றால் இட்லி சாம்பார் தான்..🙂 சுடச்சுட இட்லியும் பூண்டு சட்னியும் மிகவும் பிடித்தமானது!


மகளுக்கு இந்த சட்னி, சாம்பார் இதெல்லாம் தேவையே இல்லை..🙂 இட்லி மிளகாய்ப் பொடி இருந்தால் போதும்..🙂 அதற்காகவே எப்போதும் அரைத்து வைத்திருப்பேன்..🙂


துவரம்பருப்பு இட்லி கூட செய்து பார்க்கணும் என்று நினைத்திருக்கிறேன்..என் நாத்தனார் செய்து தந்து சாப்பிட்டிருக்கிறேன். அதே போல் கடலைப்பருப்பு இட்லி கூட செய்வார்கள் என்று இணைய வழித் தகவல்..


இன்னிக்கு என்ன இட்லி புராணமா இருக்கே!! என்று யோசிக்கிறீர்களா?? உலக இட்லி தினம் என்று மெமரீஸ்ல காண்பித்தது..யார் துவக்கினார்களோ?? பதிவு தேத்த ஒரு விஷயம் கிடைத்தது..🙂 


படத்தில் இருப்பது நான் செய்த சில ரெசிபீஸ். ரவா இட்லி, காஞ்சிபுரம் இட்லி, கொள்ளு இட்லி, தவா இட்லி, சாம்பார் இட்லி, பொடி இட்லி, இட்லிமாவு போண்டா, ஃப்ரைட் இட்லி..🙂


******


சம்மர் ஸ்பெஷல் - விமர்சனம் - சஹானா கோவிந்த் - 30 மார்ச் 2021:

Adhi's Kitchen எனக்கு எப்பவும் அம்மா வீடு போல, டக்குனு போய் வேணுங்கற ரெசிபி எடுத்துக்கலாம். பாரம்பரியம் தொடங்கி மாடர்ன் வரை எல்லாமும் இருக்கும் அவங்க அடுக்களையில்


இந்த மாத போட்டியில் உள்ளது, இப்ப உள்ள சீசனுக்கு ஏத்த சம்மர் ரெசிபிஸ்


காற்றுள்ள போதே தூற்றிக்கனும் சொல்ற மாதிரி, வெயில் இருக்கும் போதே, வத்தல் வடாம் போல போட்டு வெச்சுட்டா, நாளப் பின்ன லாக் டவுன் வந்தாலும் பயமில்ல பாருங்க. வரும்னு சொல்லல, just a precaution 😄


அதோட, வீட்லயே செய்யறப்ப நாள்பட வெச்சு பயமில்லாம உபயோகிக்கலாம்


இந்த புத்தகத்தில் எனக்கு பிடித்த சில ரெசிப்பீஸ் பத்தி இங்க சொல்றேன் கேளுங்க


- என் பொண்ணு மாம்பழ பிரியை, சோ அதுக்கு தகுந்த மாதிரி ஒரு ரெசிபி, மாம்பழ ஸ்ரீகண்ட். எளிமையா அழகா சொல்லி இருக்காங்க


- மண்டையை பிளக்கற வெயிலுக்கு ஜில்லுனு ஒரு ரெசிபி, ஜில் ஜில் ஜிகர்தண்டா அசத்தல்


- கேரட் ஹல்வா என்னோட பேவரிட் ஸ்வீட், செஞ்சு நாளாச்சு, அதை அழகா டிஸ்ப்ளே பண்ணி tempt பண்ணி விட்டுட்டாங்க ஆதி. நான் எப்பவும் non stick கடாய்ல ஸ்லோ குக் செய்வேன், இதுல குக்கர்ல செய்ய ஐடியா குடுத்து இருக்காங்க, செஞ்சிட்டு சொல்றேன்


அது மட்டுமில்லாம, வடாம் வத்தல் ஊறுகாய் சிற்றுண்டி இப்படி நிறைய நல்ல ரெசிப்பீஸ் விளக்கமா கொடுத்துருக்காங்க. நீங்களும் படிச்சு செஞ்சு பாருங்க. Book link commentல கொடுத்துருக்கேன்


Amazon Star Rating & review போட்டு இருக்கேன். வாழ்த்துக்கள் ஆதி


என்றும் நட்புடன்,

சஹானா கோவிந்த் 


******


பரிசோதனை - கை முறுக்கு - 31 மார்ச் 2021

அரிசிமாவில் ஏதாவது செய்யும் போதெல்லாம் இதை முயற்சி செய்து பார்த்துக் கொண்டே இருப்பேன்..🙂 இன்றைய பரிசோதனை இது..🙂 தேறிடுவேனா என்று சொல்லுங்கள்!!


என் பாட்டி (அம்மாவின் அம்மா) அஞ்சு சுத்து, ஏழு சுத்து என்று சீர் வைப்பதற்கு ஏற்றாற் போல் கைமுறுக்கு சுற்றி தேங்காயெண்ணெயில் போட்டு எடுப்பார்! அருமையாக இருக்கும். பாட்டிக்கு ஏற்ற பேத்தியாக எப்போது ஆகப் போகிறேனோ...🙂


*****


ஐஸ் ஐஸ் - ஐஸ் வண்டி நினைவுகள் - 3 ஏப்ரல் 2021:


சிறுவயதில் 'ஐஸ் வண்டி' சத்தம் கேட்டவுடன் அம்மாவை வாங்கித் தரச் சொல்லி கேட்டுக் கொண்டே இருப்போம் நானும், தம்பியும்..🙂 அவ்வளவு சீக்கிரம் அம்மா ஒத்துக் கொள்ளவே மாட்டார்..🙂 


ஜலதோஷம் பிடித்துக் கொள்ளும், காய்ச்சல் வந்து அவஸ்தை பட்டாத் தான் அறிவு வரும்! என்று திட்டுகளும் வாங்குவோம் .🙂 ஆனாலும் கேட்பதை விட மாட்டோம்..🙂


சிறிது நேரத்திற்குப் பிறகு 'தொலஞ்சு போங்க! சாயங்காலம் அப்பா வரட்டும்! என்று சொல்லி அம்மா ஒத்துக் கொள்ளும் போது ஐஸ் வண்டி அடுத்த தெருவுக்கு சென்றிருக்கும்..:)) ஆளுக்கொரு டம்ளரை எடுத்துக் கொண்டு ஓடி துரத்திப் பிடித்து வாங்கி வருவோம்..🙂


வீட்டுக்கு வருவதற்குள்ளாகவே ஐஸ் உருகி விடும்..🙂 ஆனாலும் குடித்தாவது அதை ருசிப்போம்!! அந்த ஐம்பது பைசா 'பால் ஐஸ்' தந்த ருசிக்கு இப்போதைய பிராண்டட் ஐஸ் ஈடாகாது...🙂


திருமணத்திற்கு பிறகு டெல்லி சென்று நிறைய நிறைய ஐஸ்கிரீம்களை சுவைத்திருக்கிறேன்..அங்கு கிடைக்கும் தரமான பாலினால் செய்யப்பட்ட ஐஸ்கிரீம் என்பதாலோ என்னவோ அவ்வளவு எளிதில் உருகாது. நிறைய விதமான ஃப்ளேவர்களிலும் கிடைக்கும். விலையும் இங்கு ஒப்பிடும் போது அங்கு குறைவு.


******


பிஸ்தா ஐஸ்க்ரீம் - காணொளி - ஆதி’ஸ் கிச்சன் - 3 ஏப்ரல் 2021:

இன்று Adhi's kitchen சேனலில் சுவையான பிஸ்தா ஐஸ்கிரீம் செய்முறை தான் பகிர்ந்து கொண்டுள்ளேன். மூன்றே மூன்று பொருட்களை கொண்டு செய்யப்பட்ட எளிதான ஐஸ்கிரீம். மகள் தான் பீட் செய்து கொடுத்தாள்.வீடியோ எடுத்தது நான்.🙂


பிஸ்தா ஐஸ்க்ரீம்


******


ரோஷ்ணி கார்னர் - மெஹந்தி - காணொளி - 3 ஏப்ரல் 2021:
 

மகளின் சேனலில் மெஹந்தி வீடியோ பகிர்ந்து கொண்டுள்ளாள். காணொளியைக் காண சுட்டி கீழே!


மெஹந்தி


காணொளிகள் இரண்டையும் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டால் மகிழ்வேன்.


******

நண்பர்களே, இந்த நாளின் கதம்பம் பதிவு குறித்த உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள். மீண்டும் வேறொரு பதிவின் வழி சந்திக்கும் வரை...


நட்புடன்ஆதி வெங்கட்


20 கருத்துகள்:

 1. பேருந்தில் பயணம் செய்யும் அளவு இன்னும் துணிவு வரவில்லை எனக்கு.  இங்கு அடைத்துக்கொண்டு செல்கிறார்கள்!

  விதம் விதமான இட்லிகள் கவர்கின்றன.  அப்பாவித் தங்கமணியும் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை!

  பார்த்தால் அடுத்த விமர்சனமே அவர்தான்!  சூப்பர்!

  ஐஸ் வண்டி...  எங்கள் காலத்தில் பால் ஐஸ் பத்து பைசா...  உண்மையில் அதன் சுவை இன்றைய ஐஸ்களுக்கு இல்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சில சமயங்களில் பேருந்துப் பயணம் செய்ய வேண்டியதாகி விடுகிறது - தலைநகரிலும். பெரும்பாலும், ஆட்டோ பயணம் தான் இங்கே.

   பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. பதில்கள்
  1. மெஹந்தி அலங்காரம் சூப்பர் - மகிழ்ச்சி ஸ்ரீராம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 3. பேஸ்புக்கில் பார்த்து படித்த ரசித்து மீண்டும் இங்கே பார்த்து மகிழும் பதிவு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஃபேஸ்புக் மற்றும் இங்கே படித்து ரசித்தமைக்கு நன்றி மதுரைத் தமிழன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 4. //அந்த ஐம்பது பைசா 'பால் ஐஸ்' தந்த ருசிக்கு இப்போதைய பிராண்டட் ஐஸ் ஈடாகாது//

  ஆம் மறுக்க முடியாத உண்மை கதம்பம் வழமை போல அருமை.

  இட்லி தினத்தன்றுதான் உலக மருத்துவர்கள் தினமும்கூட.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இருபத்தி ஐந்து பைசாவில் நான் ருசித்திருக்கிறேன் இதே ஐஸ்! அந்தச் சுவை இப்போதைய எதிலும் வராது தான் கில்லர்ஜி.

   உலக மருத்துவர்கள் தினமும் - தகவலுக்கு நன்றி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 5. வாசகம் அருமை.
  பேஸ்புக்கிலும் படித்தேன். சஹானா கோவிந்த் விமர்சனமும் நன்றாக இருக்கிறது.
  ரோஷ்ணியின் மெகஹந்தி டிசைன் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாசகம், பதிவுகளின் பகுதிகளும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 6. வணக்கம் சகோதரி

  அருமையான பதிவு. வாசகமும் நன்று. பேருந்தில் தைரியமாக பயணம் செய்து வந்து விட்டீர்களே..! வாழ்த்துகள். இங்கும் மக்கள் பேருந்துகளில் செல்கிறார்கள் ஆனால் கூட்டம் நான் பார்த்த வரை அவ்வளவாக இல்லை.

  இட்லி படங்கள் அழகாக உள்ளது. நானும் ஒரு இட்லி பிரியை. தினமும் இட்லி என்றாலும் அலுக்காமல் சாப்பிடுவேன்.

  தங்கள் மின்னூலுக்கு சகோதரி சஹானா கோவிந்த் அவர்களின் விமர்சனம் நன்றாக இருந்தது.

  தங்கள பதிவு பத்து பைசா பால் ஐஸை இளமை பருவத்தில் உங்களைப் போலவே ஓடிப் போய் வாங்கி வந்து சுவைத்ததை நினைவுபடுத்தியது. அதன் இனிமை இப்போது வராது. சுவாரஸ்யமான நாட்கள்.

  முறுக்குப் பிரி நன்றாக வந்துள்ளது. பிஸ்தா ஐஸ்கீரிம் நன்றாக உள்ளது. மெஹந்தி வரைகலையும் அழகாக உள்ளது. ரோஷ்ணிக்கு வாழ்த்துகள்.இன்றைய கதம்பம் அனைத்துப் பகுதிகளும் அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

   பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 7. இன்றைய கதம்பம் நன்று. டப்பாவில் ஐஸ்.... சட் என்று என் சிறுவயது காலத்துக்குச் சென்றதுபோன்ற நினைவு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கதம்பம் பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நெல்லைத் தமிழன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 8. அனைத்து பகுதிகளும் அருமை... ஐம்பது பைசா 'பால் ஐஸ்' டாப்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 9. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 10. பிஸ்தா ஐஸ்க்ரீமைப் பார்த்ததும் தான் நான் வாங்கி வைச்சிருக்கும் மில்லெட் ஐஸ்க்ரீம் நினைவில் வருது. வாங்கிட்டு ஓரிரண்டு நாட்கள் சாப்பிட்டதோடு சரி! நாளைக்குச் சாப்பிடணும். :))))) ஆதியோடு ஐஸ்க்ரீமில் கலர் நல்லா வந்திருக்கு. நான் வரச்சே முன்னாடியே சொல்லிடறேன் . இரண்டு கிண்ணம் எனக்கு மட்டும்! :))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இரண்டு கிண்ணம் எனக்கு மட்டும்! :))) ஆஹா.

   பதிவு குறித்த உங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி கீதாம்மா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....