திங்கள், 19 ஏப்ரல், 2021

வேலை சூடவா - விமர்சனம் - இரா. அரவிந்த்



அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


அனைத்தும் மகிழ்ச்சியாக மாறும் என்பதல்ல வாழ்க்கை. அனைத்தையும் மகிழ்ச்சியாக மாற்றுவோம் என்பதே வாழ்க்கை. 


******




நண்பர்களுக்கு, இந்த நாளில் நாம் பார்க்கப் போவது, பதிவுலக நண்பர் திரு இரா. அரவிந்த் அவர்களின் ஒரு வாசிப்பனுபவம். திரு சேவியர் அவர்கள் எழுதிய இந்த மின்னூல் அமேசான் தளத்தில் கிடைக்கிறது.  சுட்டி கீழே தருகிறேன்.  நூல் குறித்த விமர்சனம் கீழே!


******


வேலை சூடவா : அனைத்திலும் ஒளிந்திருக்கும் வேலை வாய்ப்புகளைக் கண்டறியும் அதிசயம் 





தாராளமயமாக்கப்பட்ட பொருளாதாரம் வந்தபின், மக்களை மிகவும் கவர்ந்தது  தகவல் தொழில்நுட்பம்  என்ற  டி சம்மந்தமான வேலைகளும், அதில் கிடைத்த ஊதியமும் வசதிகளுமே


கண்ணாடி மாளிகையாய் மிளிர்ந்த அத்துறை மீதான வசீகரம், 2008 இன் பொருளாதாரத் தேக்கம் தொடங்கி இன்றைய கொரானா சூழல் வரை படிப்படியாய் குறைந்து, வேலையிழப்பு, கடன் சிக்கல்கள், மன அழுத்தம், மண முறிவுகள், தற்கொலைகள் எனப் பலவிதங்களில் மக்களை அச்சுறுத்தும் துறையாக மாறியிருப்பது உண்மையே.  


இவ்வனைத்துச் சவால்கள் நிறைந்திருக்கும் டி துறை இல்லாமல் எத்துறையும் பிழைக்க முடியாது என்ற சூழல் இருப்பினும், அதில் எப்படித்தான் வேலை வாய்ப்புக்களைக் கண்டறிந்து நம்மை பொருத்திக் கொள்வது என்பதே பலருக்கு விடை தெரியாத  விடுகதையாக இருக்கிறது


அவ்விடுகதைக்கான எளிய விடைகளாக நிறைந்திருப்பதே, குமரி மாவட்டம் பரக்குன்றில் பிறந்து, எம்.சி.யே படித்து, டி விறுவனத்தில் 20 வருட உழைப்பால் இயக்குனர்  நிலைக்கு  உயர்ந்த திரு  சேவியர்  அவர்களின் 'வேலை சூடவா' நூல்


கூடுவிட்டு கூடு பாயும் சிறுவர் கதைகளைப் போல, கணினி, கைப்பேசி, ஸ்மார்ட் கடிகாரம் என கூடுவிட்டு கூடு பாயும் தொழில்நுட்பத்தின்  வரலாற்றையும், அதன் எதிர்காலத்தையும் சுவாரசியமாக விளக்கி அவரவர் இயல்புக்கேற்ப வேலைவாய்ப்புகளை அடையாளம் காண வாசகர்களைத் தூண்டுவதே நூலின் சிறப்பு அம்சம் எனலாம்


ஜெட் வேகத்தில் மாறிக்கொண்டிருக்கும் தொழில்நுட்பத்தால், ஒரு நுட்பம் குறித்து படிக்க ஆரம்பித்தால், அதை முடிக்கும் முன்னே அது காலாவதி ஆகிவிடுவது இத்துறையின் சவால் மட்டுமல்ல, இத்துறையின் தாக்கத்தால் அனைத்து துறையின் சவாலாகவும் விஸ்வரூபம் எடுத்திருப்பது உண்மை.


இச்சூழலில், இப்போது நடைமுறையில் கொடிகட்டிப் பறக்கும் தொழில்நுட்பங்கள் குறித்தும், எதிர்காலத்தின் தேவைகளைக்  கணித்து  உலகை ஆளவிருக்கும் தொழில்நுட்பங்கள் குறித்தும் தெளிவான விளக்கங்களை வைத்துள்ளார்  ஆசிரியர்


புதிய தலைமுறைக் கல்வி இதழில் கட்டுரைகளாக இந்நூல் வெளிவரும்போது, இவர் குறிப்பிட்ட 2020 இல் ஆளவிருக்கும் தொழில்நுட்பங்கள், தற்போது மக்களின் உயிர் மூச்சாக மாறியிருப்பதை பின்வரும் சில உதாரணங்களால் அறிவதோடு, அவற்றைக் கற்கும் வழிகளையும் நூலை படித்து அறிந்து கொள்ளலாம்


இவர் குறிப்பிட்ட 'ஸ்மார்ட் ஹோம்கள்', இன்று நடுத்தர வர்க்கத்தினரையும் அடைந்ததோடு பயோமெட்ரிக்ஸ் தொழில்நுட்பம், அலுவலகத்தையும் கடந்து மக்களின் அலைப்பேசிகளிலேயே வந்துவிட்டது


'அருகாமைத் தகவல் தொடர்பு நுட்பம்' என்னும் 'Near field communication' தொழில்நுட்பம், வாகனங்களிடமிருந்து சுங்கம் வசூலிக்கும் 'ஃபாஸ்டாக்' ஆக வடிவெடுத்திருப்பதை காண்கிறோம்.

 

இதற்கும் அப்பால், ராணுவ வீர்ரகளுக்காக உருவான ஜி.பி.எஸ், இன்று நம் அன்றாட வழிகாட்டியாக மாறியதோடு, 'ஜி.பி.எஸ் டிராக்கிங்' மூலம் சுங்கச்சாவடிகள் இல்லாமலேயே சுங்கம் வசூலிக்கும் சாத்தியக்கூறு  உறுவாவதை சமீபத்திய நம் போக்குவரத்துத்துறை அமைச்சரின் உரை மூலம் அறிகிறோம்


'ஆகுமெண்டட் ரியாலிடி' போன்ற தொழில்நுட்பங்கள், இணைய வர்த்தகத்தில் நமக்குச் சரியாகப் பொருந்தும் உடை உட்பட்ட அனைத்துப் பொருட்களையும் வாங்க உதவுவதோடு, வங்கிச்  சேவைகளும் மேம்பட்டிருப்பதை காண்கிறோம்


இன்று தனி நபர் கடனுக்காக வங்கிக்குச் சென்று ஆவணங்களை அளித்தால், மேலிட சிறப்பு அனுமதி தேவை


அதே ஆவணங்களை, வங்கியின் இணைய நிரலியில் பதிவேற்றம் செய்தால் கடன் உடனடியாகக் கிடைப்பது  தொழில்நுட்பத்தின் விஸ்வரூப வெற்றி எனலாம்நூலில் சொல்லப்பட்டுள்ள அணியும் தொழில்நுட்பம், ஆரோக்கியத்தை கண்காணிப்பதற்கும் அப்பால், 'SBI', 'Access bank' போன்ற பெருவங்கிகளின் 'Titan pay', ‘Wear N’ Play’ போன்ற சேவைகளாக உறுப்பெற்றிருப்பது கண்கூடு


நூலில் சொல்லப்பட்டுள்ள 'அனைத்து பொருட்களின் இணையம்' என நாம் புரிந்துகொள்ளும் 'Internet of things' நுட்பத்தை ஏர்டெல் நிறுவனம் 'IoT - Airtel' என்னும் சேவையாக அறிமுகப்படுத்தியதைக் காண்கிறோம்


பிக் டேட்டா, செயற்கை நுன்னறிவு மற்றும் ரோபோட்டிக்ஸ் துறைகள் குறித்து நூலாசிரியர் கணித்த எதிர்காலத்தை, மதுரை மீனாக்ஷி மிஷன் மருத்துவமனையில் 'Tell and talk'  கருவியாகவும், கிருமி நாசினிகளைத் தெளித்தல், உணவு வினியோகித்தல் போன்ற எளிய பணிகள் முதல் மருத்துவரின் கை அசைவிற்கேற்ப அறுவைச் சிகிச்சையையே செய்யும்  ரோபோட்டுகளாகவும் கண்டு வியக்கிறோம்


'இவ்வளவு வேகமாக மாறிக்கொண்டிருக்கும் தொழில்நுட்பங்களை எப்படித் தொடர்ந்து படித்து வேலையில் நம்மை நிலைநிறுத்திக்கொள்வது'? என்ற பலரின் கேள்விகளுக்கு அவர்களின் ஆர்வத்திற்கேற்ற விடைகள் இந்நூலில் உள்ளன


நமது பொழுது போக்கை சுவாரசியமாக்கச் செய்யும் செயல்களிலும், நாம் விரும்பி உபயோகிக்கும் கருவிகளிலும், நமது திறமை வெளிப்படும் துறையைக் கண்டறியும் சூட்சமம் ஒளிந்திருப்பதை அறிந்திருக்கும் நமக்கு, அதை சரியாகச் செயலாக்கும் வழிகாட்டியை அடைந்துவிட்ட திருப்தி இந்நூலைப் படிக்கும்போது ஏற்படுகிறது


உதாரணமாக, ஓவியம் வரைபவருக்கு, வரைபடங்களை வேகமாக அசைத்து  மாயாஜாலங்களால் மக்களைக் கட்டிப்போடும் அநிமேஷன் தொழில்நுட்பத்தை அறிந்துகொள்வதும், அதில் சாதனை படைக்கவும் வாய்ப்புக்கள் அதிகம்


திரைப்படங்களை வி.எஃப்.எக்ஸ் நுட்பங்களுடன், தரமான 5.1 ஸ்பீக்கர்களில் ரசிக்கும் ஆர்வலர்களுக்கு, அதை சாத்தியமாக்கும் வீடியோ எடிட்டிங் முறைகளையும், ஒலிப்பொறியியல் நுட்பங்களையும், அவற்றை கற்கும் முறைகள் குறித்தும், அவற்றில் பயன்படுத்தப்படும் அடோப் ஃபோட்டோஷாப், ஏபிள்டன், கியூபேஸ் உள்ளிட்ட மென்பொருள்கள் குறித்தும் சிறப்பான அறிமுகங்கள் இந்நூலில் உள்ளன


தொழில்நுட்பங்களைக் கற்க வழிகாட்டியதோடு நில்லாமல், ஐடி துறையில் உள்ள வெவ்வேறு வேலைகள் குறித்த அறிமுகங்கள் நூலின் மற்றொரு சிறப்பு அம்சமாகும்


பொறியாளர்களுக்கு, கணினி நிரலிகள் முதல் இன்றைய அலைப்பேசி செயலிகளை எழுதுதல் வரை உள்ள நுட்பங்கள் குறித்த அறிமுகமும், அதற்கான வேலைகள், பெரும் விறுவனங்கள் முதல் கிரௌட் சோர்சிங் இணையதளங்கள் வரை அவரவர் விருப்பத்திற்கேற்ப கொட்டிக்கிடப்பதையும் நூல் மூலம் அறியலாம்


கணினி மொழியிலேயே நிரலிகள் எழுதும் வல்லுனர்களுக்கு பொருந்தும் எம்படட் சிஸ்டம்ஸ் உருவாக்கம் முதல், தொழில்நுட்பம் சம்மந்தமான பட்டம் இல்லாதவர்களுக்கும் பொருந்தும் ஹெல்ப் டெஸ்ட் டெக்னீஷியன், மெயின்டனென்ஸ் அன்ட் ப்போர்ட், அட்மின் & ஃபெஸிலிடிஸ், மனிதவளத்துறை, விற்பனைத்துறை போன்ற டி துறையின் எண்ணற்ற வேலைவாய்ப்புகள் குறித்த அறிமுகங்கள், அனைவரும் அறிய வேண்டியவை


தொழில்நுட்பத்தால் விளையும் குறைபாடுகள் மட்டுமே தம் கண்களுக்குப் புலப்படுவதாகக் கூறுவோருக்கு, 'டெஸ்டிங்' என்ற மாபெரும் துறையின் பல படிநிலை வேலை வாய்ப்புகள் குறித்த விளக்கங்கள் ஒரு வரப் பிரசாதமே


இவற்றால் நம் சுதந்திரமும், பாதுகாப்பும் பெறும்  அச்சுறுத்தலுக்கு உள்ளாகிவிட்டதாகக் கருதுவோருக்கு பொருந்தக்கூடியவை, தகவல்களை பாதுகாப்பாக சேமிப்பது முதல், பரிமாற்றம் செய்யும் வரை பல படிநிலைகளில் செயலாற்றும் செக்யூரிடி ஸ்பெஷலிஸ்ட் வேலைகள் குறித்த அறிமுகங்களே


இவ்வளவு  வேலை வாய்ப்புகளை அறிமுகம் செய்ததோடு நிறுத்திக்கொண்டால் எப்படி


இவற்றைப் பெற செய்ய வேண்டிய ரெஸ்யூம் அலல் முறைகள், நெர்முகத்தேர்வை வெல்லும் ரகசியங்கள், குழு உரையாடல்களில் கடைப்பிடிக்கவேண்டிய உரையாடல் நுட்பங்கள், வெவ்வேறு வகையான நேர் காணல்களை எதிர்கொள்ளும் வழிகள் என இந்நூலில் இல்லாத எதுவும் இல்லை எனலாம்


ஐடி துறையில் வேலைகள் குறைகின்றன என்று சொல்பவர்களை விட, அத்துறையால் எங்கள் வேலையும் வருமானமும் போகிறதே என வருந்தும் பலருக்கும், அவற்றை மெருகேற்றும் வழிகளை அடையாளம் காணும் பல உத்திகள் இந்நூலில் இருப்பது மற்றொரு சிறப்பு அம்சம்


உதாரணமாக, அச்சிடும் கருவிகளை நம்பியோருக்கு, தாள்கள் உபயோகம் குறையும்போது, 3 டி பிரிண்டிங் தொழில்நுட்பத்தால், அடிப்படை மூலக்கூறுகள் கொண்டு உணவு முதல் உடல் உறுப்புகள் வரை பிரிண்ட் செய்யும் நவீன முறைகளால், ராணுவம், மருத்துவம், அறிவியல் என எண்ணற்ற இடங்களில் வருமானம் ஈட்டும் வாய்ப்புகள் உண்டு


'நின்று விட்டால் விழுந்து விடுவோம், ஓடிக்கொண்டே இருந்தால் நிற்போம்' எனும்' 'திரெட் மில்' த்துவத்திற்கேற்பநம் ஆர்வத்திற்கு தீனி போடும் வகையில் தினமும் ஏதாவது தெரிந்து கொள்ளும் பழக்கத்தை வளர்த்துக்கொண்டால், வேலை இழப்பு குறித்த பயம் மறைந்துவிடுவதோடு நம் வளர்ச்சியும் பெருகுவது உறுதி


உலக நடப்போடு நம்மைப் பொருத்திக்கொள்ள உதவும் இந்நூலோடு சேர்த்து, 'வேலை நிச்சயம்' என்ற நூலையும், மாணவர்கள் மட்டுமின்றி பெற்றோரும் வாசித்து, திறமைக்கேற்ப தம் குழந்தைகளை வழி நடத்தும் உற்ற தோழர்களாக மாறும் வலிமையைப் பெற அனைவரையும் ஊக்குவிக்கிறோம்


சேவியர் அவர்களின் இந்த மின்னூலை பின்வரும் சுட்டியில் வாங்கிப் பயனடையலாம்.  ஆசிரியரின் பிற நூல்களும் அமேசான் தளத்தில் உண்டு. 


வேலை சூடவா



நட்புடன்,

இரா. அரவிந்த்


******


நண்பர்களே, இன்றைய வாசிப்பனுபவம் குறித்த பதிவு வழி சொன்ன விஷயங்கள் உங்களுக்கும் பிடித்திருக்கலாம்!  பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களைப் பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்களைச் சந்திக்கும் வரை…


நட்புடன்



வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து...


16 கருத்துகள்:

  1. ஏராளமான புத்தகங்கள் படிக்கும் அரவிந்துக்கு வாழ்த்துகள்.  நல்லதொரு அறிமுகம்.

    பதிலளிநீக்கு
  2. தங்கள் வருகைக்கும் தொடர்ந்த ஊக்குவிப்புகளுக்கும் மிக்க நன்றி சார்.
    இலக்கியம், சிறுகதைகளோடு சேர்த்து, இன்றைய சூழலில் பலருக்கு தேவைப்படும் வேலைவாய்ப்புகள் குறித்து பயன்படும் நூல்களை தேடி அறிமுகம் செய்யும் ஆவல் எனக்கு வெகுநாட்களாக உண்டு.
    அதை நோக்கிய என் முயர்ச்சியின் முதல் படிதான் இது.
    தொடர்ந்து ஊக்குவிக்கும் வெங்கட் சார் உட்பட அணைத்து நன்ப்ரகளுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  3. சிறப்பாக இருக்கிறது விமர்சனம். ஆவலைத் தூண்டுகிறது...

    பதிலளிநீக்கு
  4. பதில்கள்
    1. திரெட் மில் தத்துவம் அணைவருக்கும் பொருந்தும் தத்துவம் சார்.
      தங்களின் வருகைக்கு மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன் சார்.

      நீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    நல்லதொரு அறிவு சார்ந்த புத்தகம். இதை எழுதியவருக்கும், அருமையாக விமர்சனம் செய்த திரு.அரவிந்த் அவர்களுக்கும் பாராட்டுக்கள். நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  6. தங்களின் வருகைக்கும் கருத்துப்பகிர்விர்க்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் மேடம்.

    பதிலளிநீக்கு
  7. //திரெட் மில்' த‌த்துவ‌த்திற்கேற்ப, நம் ஆர்வத்திற்கு தீனி போடும் வகையில் தினமும் ஏதாவது தெரிந்து கொள்ளும் பழக்கத்தை வளர்த்துக்கொண்டால், வேலை இழப்பு குறித்த பயம் மறைந்துவிடுவதோடு நம் வளர்ச்சியும் பெருகுவது உறுதி. //

    தினம் கற்றுக் கொள்பவர்கள் தான் வாழ்வில் உயரமுடியும் இப்போது உள்ள சூழ்நிலையில்.
    அதை அழகாய் சொல்கிறது இந்த நூல்.
    அருமையான விமர்சனம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விமர்சனம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. வேலை சூட வா! புத்தக விமரிசனம் என்றறிந்து மகிழ்ச்சி. நன்றாய் விமரிசனம் செய்திருக்கார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விமர்சனம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....