சனி, 17 ஜூலை, 2021

காஃபி வித் கிட்டு-119 - ஒகே ஒக லோகம் - அழையா நண்பர்கள் - வைரக்கல் - மின்னூல் - முதுமை - நிலநடுக்கம் - ஜார்ணி நரசிம்ஹ ஸ்வாமி


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட Mesmerising Meghalaya பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


EVERYONE HAS “A FRIEND” DURING EACH STAGE OF LIFE. BUT ONLY LUCKY ONES HAVE THE “SAME FRIEND” IN ALL STAGES OF LIFE.


******


இந்த வாரத்தின் ரசித்த பாடல் - ஒகே ஒக லோகம் நூவே



சமீபத்தில் தான் இந்தப் பாடலை கேட்க நேர்ந்தது. சித் ஸ்ரீராம் பாடிய தெலுங்கு பாடல் - இதற்கு நிறைய காணொளிகள் இருக்கிறது யூவில். எது முதலில் வந்தது என்பது குறித்த தகவல்களைத் தேட விரும்புபவர்கள் தேடலாம். மற்றவர்கள் என்னைப் போல, பாடலைக் கேட்டு, காட்சிகளைப் பார்த்து ரசிக்கலாம்!  பாடலின் மொழி தெரியாதவர்கள் கூட அதன் இசை காரணமாக ரசிக்கும்படி இருக்கிறது! பாருங்களேன்!

******


இந்த வாரத்தின் எண்ணம் - அழையா நண்பர்கள்: 


ஒரே அறையில் ஒரு சில வருடங்கள் ஒன்றாக தங்கி இருந்த நண்பர்கள், விட்டு விலகினாலும், எத்தனை வருடங்கள் பார்க்காமலும், பேசாமலும் இருந்தாலும் நட்பு விலகுவதில்லை! அப்படி நிறைய நட்புகள் உண்டு.  “ஏண்டா நீ பேசவே இல்லையே?” என்று கேட்டுக் கொள்வதில்லை! இருவரில் யாருக்கும் ஏதாவது சந்தேகம், விஷயம் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் நிச்சயம் அழைப்பு வரும்! இப்படி கடந்த வாரத்தில் இரண்டு அழைப்புகள்!  ஆரம்பிக்கும்போதே! ”அடேய்…. என்ன விஷயம்? என்ன வேலைக்காக ஃபோன் செய்தாய்?” என்று கேட்கும் அளவிற்கு பழகி விட்டது.  அழைத்த போது, எந்தக் காரணத்திற்காக அழைத்தானோ அதையும் தாண்டி நிறைய பேசிக் கொண்டிருந்தோம் - சில வருடங்கள் கழித்து அழைத்ததால், இடைப்பட்ட காலத்தில் நடந்த பலவற்றை பேசிக் கொண்டிருந்தோம்.  என்னதான் ஒருவருக்கொருவர் பேசி சில வருடங்கள் கடந்திருந்தாலும், நட்பில் எந்த தடங்கலும் இல்லை! இப்படியான நண்பர்கள் நிறையவே இருக்கிறார்கள் இல்லையா! உங்களுக்கும் இருக்கலாம்!


******


இந்த வாரத்தின் பின்னோக்கிப் பார்க்கலாம் பதிவு - வைரக்கல்:


2017-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட பதிவு - ஃப்ரூட் சாலட் – 138 - தில்லியில் ”அம்மா” உணவகம் – சங்கு - வைரம்


பதிவிலிருந்து சில வரிகள் இங்கே! முழு பதிவினையும் படிக்க, மேலே உள்ள சுட்டியைச் சொடுக்கலாம்!


”என்கிட்ட இது மட்டும் தான் இருக்கு.... எடுத்துக்கோ..... இதை வைத்து உன் வாழ்வில் முன்னேறு....” 


வைரக்கல்லை, அதிலிருந்து வீசும் ஒளியைக் கண்ட அந்த வழிப்போக்கர், தனக்குக் கிடைத்த வைரம் கொண்டு வாழ்நாள் முழுவதும் சுகமாக இருக்க முடியும் என்று சந்தோஷத்தோடு மூதாட்டியிடம் விடை பெற்றுச் சென்று விட, மூதாட்டி எந்த வித உணர்வுகளும் இல்லாது தன் வழியே சென்று கொண்டிருந்தார். 


சில நாட்களுக்குப் பிறகு, அந்த வழிப்போக்கர், மூதாட்டியிடம் வந்து, “தாயே...  இந்த விலைமதிப்பில்லாத வைரத்தினை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். உங்களிடமிருந்து வாங்கும்போது மிகவும் மகிழ்ச்சியுடன் வாங்கிக் கொண்டேன். ஆனால் பிறகு யோசித்துப் பார்க்கும்போது இந்த கல்லின் விலையை விட, அதன் விலை தெரிந்தும், மிகச் சாதாரணமாக எடுத்து என்னிடம் கொடுக்க உங்களால் முடிந்ததே...  அந்த குணத்தினை எனக்கும் கொடுங்கள். அது தான் இந்த கல்லின் விலையை விட பல மடங்கு உயர்ந்தது. எனக்கும் அந்த ஈகை குணத்தினையும், அறிவையும் கொடுங்கள் என்று கேட்டுக் கொண்டாராம்.


******


இந்த வாரத்தின் மின்னூல் தகவல் - கல்யாணக் கனவுகள்


எனது மின்னூல்களில் ஒன்றான ”கல்யாணக் கனவுகள்” - நான் சந்தித்த கதைமாந்தர்களின் கதைகளைத் தொகுத்து சென்ற வருடம் வெளியிட்ட மின்னூல்.  அமேசான் தளத்தில் வெளியான இந்த மின்னூல் குறித்த வாசிப்பனுபவத்தினை நண்பர் ராம. தேவேந்திரன் அவர்கள், முகநூல் குழுமங்களிலும், அவரது வலைப்பூவிலும் வெளியிட்டு சிறப்பித்து இருக்கிறார்.  அவருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி.  மின்னூல் வாசிக்க விரும்புபவர்கள் இந்தப் பக்கத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.  நண்பர் ராம. தேவேந்திரன் அவர்களின் வாசிப்பனுபவத்தினை வாசிக்க விரும்புபவர்கள் இங்கே வாசிக்கலாம்! 


******


இந்த வாரத்தின் ரசித்த புகைப்படம்   - காலை வணக்கம்:



வாட்ஸப் வழி காலை வணக்கம் சொல்லும் நண்பர் சமீபத்தில் அனுப்பியிருந்த படம்.  வாசகங்களை விட அந்தப் படத்தில் இருக்கும் மூதாட்டியின் முகத்தில் தெரியும் மகிழ்ச்சி மிகவும் கவர்ந்தது என்பதால் இங்கே பகிர்ந்து இருக்கிறேன். 


******


இந்த வாரத்தின் தில்லி தகவல்   - நிலநடுக்கம்


தலைநகர் தில்லியும் அதனைச் சுற்றியுள்ள இடங்களும் ஆங்கிலத்தில் Seismic Zone என்று சொல்லக் கூடிய பகுதியில் இருப்பதால், அவ்வப்போது நிலநடுக்கங்கள் ஏற்பட்ட வண்ணமே இருக்கின்றன.  சில முறை அதிகம் தெரியும், சில முறை தெரியவே தெரியாது - என்னால் உணர்ந்து கொள்ள முடியாத அளவிற்கே பல முறை இந்த நிலநடுக்கங்கள் இருந்திருக்கின்றன.  தில்லி வந்த புதிதில் இப்படி நிலநடுக்கம் ஏற்பட்ட போது அயர்ந்து தூங்கிக் கொண்டு இருக்க, எல்லோரும் வெளியே ஓடியிருக்கிறார்கள்! ஹாஹா… அதிகமாக உணர்ந்தது குஜராத் மாநிலத்தில் கட்ச்-Bபுஜ் பகுதியில் நிலநடுக்கம் வந்த போது தான்.  கடந்த ஐந்தாம் தேதி கூட இரவு 3.7 ரிக்டர் அளவில் ஒரு நிலநடுக்கம்! ஆனால் எனக்குத் தெரியவே இல்லை! நண்பர் அரவிந்த் வாட்ஸப் வழி நிலநடுக்கத்தினை உணர்ந்தீர்களா என கேட்ட பின்பு தான் “ஓ நிலநடுக்கம் வந்ததா?” என்று நினைத்தேன் - ”நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்” படக் காட்சியில் வரும் ”சிவாஜி செத்துட்டாரா” என்று கேட்ட மாதிரி! 


******


இந்த வாரத்தின் சுற்றுலா - ஸ்ரீ ஜார்ணி நரசிம்ஹ ஸ்வாமி குகைக் கோவில்: 


கர்நாடகா மாநிலத்திலுள்ள பீதர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஒரு கோவில் பற்றிய காணொளி உங்கள் பார்வைக்கு! குகைக்குள் இருக்கும் மார்பளவு தண்ணீரில் நடந்து சென்று நர்சிம்ஹ ஸ்வாமியை தரிசிக்க வேண்டும் - அங்கே பயணிக்கலாம் என்று சமீபத்தில் நண்பர் கேட்க, அலுவலக பணி இருப்பதால் என்னால் வர இயலாது என்று சொல்ல வேண்டியதாயிற்று!  கோவில் பற்றிய தகவல்கள் இந்தக் காணொளி வழி நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.  கர்நாடகாவில் இருந்தாலும், இந்த கோவில், ஆந்திர மாநிலத்தின் தலைநகர் ஹைதையிலிருந்து 150 கிலோமீட்டர் தொலைவு - பெங்களூரிவிலிருந்து என்றால் 600 கிலோமீட்டர்!  பயணிக்க ஆசையிருந்தால் ஹைதை வழி செல்லலாம்!

******


நண்பர்களே, இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த தங்கள் எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக பகிர்ந்து கொள்ளுங்கள்.  நாளை வேறொரு பதிவுடன் உங்களைச் சந்திக்கும் வரை…


நட்புடன்



வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து…


30 கருத்துகள்:

  1. கணினி ஸ்பீக்கர் அவுட்!  ஸ்பீக்கருக்கு தமிழில் என்ன?  ஒலிப்பான்?  எனவே பாடல் எல்லாம் கேட்க முடியாது.  கைவைத்தியம் எல்லாம் செய்து பார்த்துவிட்டேன்.  மருத்துவரை அழைத்திருக்கிறேன்.  அவர் வாக்சிங் போட்டுக்கொண்டு ரெஸ்ட்டில் இருக்காராம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கணினியில் ஹெட் போன் சாக்கெட் இல்லையா? அல்லது மொபைலில் பார்க்கலாமே!

      Jayakumar

      நீக்கு
    2. முடிந்த போது கேளுங்கள் ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    3. மொபைல் வழி பார்க்க விருப்பம் இல்லாதிருக்கலாம்! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா.

      நீக்கு
  2. நீங்கள் சொல்லியுள்ள மாதிரி நண்பர்கள் எனக்கு உண்டு.  நடுவில் பெரிய சண்டை போட்டு மறுபடி சேர்ந்த நண்பனும் அதில் அடக்கம்.  இப்போது புனேயில் பெரிய போஸ்ட்டில் இருந்தாலும் அவன் தகுதிக்கு அதெல்லாம் தூசு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சண்டை போட்டு இணைந்த நண்பர்கள் எனக்கும் சிலர் உண்டு ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. பாட்டியிடம் ஈகைகுணம் கேட்கும் கதை சிறப்பு. பாடல் கேட்டேன் ஜி.
    மற்ற காணொளியும் கண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. ரசித்த பாடல் இன்று தான் கேட்கிறேன் நன்றாக இருக்கிறது.
    சாய் பல்லவி நடித்த இந்த படம் தமிழில்(மொழி மாற்றம் செய்யப்பட்டது) பார்த்தேன் விஜய் தொலைக்காட்சியில்.
    மிக நன்றாக நடித்து இருந்தார் .

    நண்பர்கள் உரையாடல் அருமை.

    ஈகை குணத்தினையும், அறிவையும் கொடுங்கள் என்று கேட்டுக் கொண்டாராம்.//

    மிக அருமை.

    மூதாட்டியின் முகத்தில் தெரியும் மகிழ்ச்சி மிகவும் கவர்ந்தது //
    உண்மை. கையை பிடித்து இருப்பதில் பார்வையில் கனிவு, மகிழ்ச்சி இரண்டும் இருக்கிறது.

    நிலநடுக்கம் சில நேரம் உணர முடியவில்லை என்று பேரனும் சொல்வான்.


    ஸ்ரீ ஜார்ணி நரசிம்ஹ ஸ்வாமி குகைக் கோவில் வரிசையில் தண்ணீரில் போய் பார்க்க வேண்டும் போல் இருக்கிறது. அருமையாக தரிசனம் செய்து கொண்டேன், நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      ஜார்ணி நரசிம்ஹ ஸ்வாமி குகைக் கோவில் தரிசனம் உங்களுக்கும் கிடைத்திட எனது பிரார்த்தனைகள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. இன்றைய கதம்பம் அருமை. குறிப்பாக வைரக்கல்.

    நாம் பெரும்பாலும் விலை உயர்ந்த முக்கியப் பொருட்களை பத்திரமாக வைத்திருந்து உபயோகிக்காமலேயே விட்டுச் செல்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடைசியில் எதைத்தான் கொண்டு செல்கிறோம். மேலும் விலை என்பது அவரவர் மதிப்பீட்டில் உள்ளது. கல் என்றால் கல், வைரம் என்றால் வைரம்.

      நீக்கு
    2. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நெல்லைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    3. எதையும் கொண்டு செல்லப் போவதில்லை என்றாலும் சேர்த்துக் கொண்டே தான் இருக்கிறோம் ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. அன்பின் வெங்கட்,
    இனிய காலை வணக்கம். சில காரணங்களால் தொடர்ந்து வரமுடியவில்லை.

    நீங்கள் சொல்லி இருக்கும் வாசகம் மிகக் கருத்துள்ளது.
    நட்புகள் பற்றிய பதிவும் உண்மை. நானும் என் பதின்ம வயதுத் தோழியும் அப்படித்தான் இரண்டு வருடங்களுக்கு முன் வாட்ஸாப்பின் மூலம்
    மீண்டும் நட்புக் கொண்டோம்.
    இன்றும் அதே நட்பு. பிரிந்ததால் சங்கடம் இல்லாமல் தெளிவான் நதிபோல சினேகம்.
    இது இருந்தால் போதும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வல்லிம்மா. முடிந்த போது பதிவுலகம் பக்கம் வாருங்கள். எல்லா நாளிலும் என்னாலும் பதிவுலகம் பக்கம் வர இயலுவதில்லை.

      பதிவின் பகுதிகள் குறித்த உங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. பிடார் நரசிம்மர் முன்பிருந்தே தெரியும்.
    சென்று தரிசிக்கும் நாள் என்னாளோ
    தெரியாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிடார் நரசிம்மர் நான் அறிந்ததில்லை வல்லிம்மா. சமீபத்தில் நண்பர் அறிமுகம் செய்தார்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. அந்தப் பாட்டியின் முகத்தில் எத்தனை சந்தோஷம். எத்தனை கனிவு இந்தப் பேரன் முகத்தில்!!!
    என் பாட்டி,தாத்தா போன்றவர்கள் நினைவுக்கு வந்தார்கள்.
    மிக நன்றி வெங்கட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பகிர்ந்த படம் உங்கள் நினைவுகளை மீட்டெடுக்க உதவியதில் மகிழ்ச்சி வல்லிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. தில்லி நில நடுக்கம் அங்கிருப்பவர்களுக்குப் பழகி இருக்கும் என்று நினைத்தேன்.

    இந்தோனேஷியாவிலும் இந்த மாதிரி இருக்கும். நமக்குப் படிக்கும் போதுதான் தெரியும். எல்லோரும் நலமுடன் இருங்கள் அம்மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பழகிய விஷயம் தான் என்றாலும் நில நடுக்கம் சமயத்தில் பதறிவிடுவது வழக்கம் தானே.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. நண்பர்கள்
    தொடர்பில் இருந்தாலும், இல்லாவிட்டாலும்
    என்றுமே நண்பர்கள்தான்
    அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொடர்பில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் என்றுமே நண்பர்கள் - உண்மை தான் கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. குகைக் கோவில் வியப்பு...

    ஒகே ஒக லோகம் நூவே பாடலை ரசித்தேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குகைக் கோவில் வியப்பு தான். அடுத்த மாதத்தில் செல்ல நண்பர் திட்டமிட்டு என்னிடம் கேட்டார். பணிச் சூழல் காரணமாக செல்ல முடியாத சூழல் தனபாலன்.

      பாடலை ரசித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. மொழி புரியாவிட்டாலும் பாடல் ரசிக்கும்படி உள்ளது. நரசிம்மர் குகைக்கோயில் இப்போதுதான் அறிகிறேன். மிகவும் சிறப்பு. இறையருள் இருப்பின் செல்வேன், அவரைக் காண்பேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாடல் ரசித்ததில் மகிழ்ச்சி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      குகைக் கோவில் குறித்து உங்களுக்கு ஒரு தகவலை பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  13. நீங்கள் குறிப்பிட்டிருப்பதைப் போன்ற நட்புகள் எனக்கும் உண்டு. ஸ்ரீ ஜார்ணி நரசிம்ஹ ஸ்வாமி குகைக் கோவில் பற்றித் தங்கள் பகிர்வின் மூலம் அறிய வருகிறேன். நல்ல தொகுப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ராமலக்ஷ்மி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....