சனி, 25 செப்டம்பர், 2021

காஃபி வித் கிட்டு - 128 - தெரியாது - தனிஷ்க் - இலக்கண வகுப்பு - பேச்சு - இலவசப் பேருந்து - மயிலங்கி மங்கை - ஓவியம்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட ஓசியில் வேர்க்கடலை பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


பாதைகளில் தடைகள் இருந்தால் அதை தகர்த்து விட்டு தான் செல்ல வேண்டும் என்றில்லை; தவிர்த்து விட்டும் செல்லலாம் - எறும்பைப் போல!


******


ராஜா காது கழுதை காது - உன்னையே எனக்குத் தெரியாது :


தமிழகத்தில் இருக்கும் போது ராஜா காதுக்கு நிறைய தீனி! எங்கே சென்றாலும் யாராவது பேசுவது கேட்டுக் கொண்டே இருந்தேன்.  ஒரு நாள் அடுக்கு மாடி குடியிருப்பின் வழி நடக்கும்போது ஒரு வீட்டிலிருந்து ஒரு பெண்ணின் குரல் - “உங்க அம்மாவை எனக்கு தெரியாது! உங்க அப்பாவை எனக்குத் தெரியாது! In fact, உன்னையே எனக்குத் தெரியாது!  ஆனாலும் கல்யாணம் ஆனப்பறம் எனக்குத் தெரிஞ்ச எல்லாரையும் விட்டுட்டு தானே, உன்னையே நம்பி வந்தேன்!”  


குரலுக்குரிய பெண், அலைபேசியில் பேசிக் கொண்டிருக்க வேண்டும் - அதனால் எதிர்புறத்திலிருந்து என்ன பதில் வந்தது என்று கேட்கவில்லை! குடும்பத்துல ஏதோ குழப்பம் போல! நமக்கெதுக்குங்க ஊர் வம்பு! காதுல விழுந்தத இங்கே அப்படியே எழுதியாச்சு! அம்புட்டு தேன்!   


******


இந்த வாரத்தின் விளம்பரம் - தனிஷ்க்


தனிஷ்க் விளம்பரம் ஒன்று - Valentine’s Day சமயத்தில் வெளியான விளம்பரம் - இப்போதும் பார்க்கலாம் - தப்பில்லை! பாருங்களேன்.

******


பழைய நினைப்புடா பேராண்டி: இரவில் ஒரு இலக்கண வகுப்பு


2013-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட பதிவு - இரவில் ஒரு இலக்கண வகுப்பு


பதிவிலிருந்து சில வரிகள் இங்கே! முழு பதிவினையும் படிக்க, மேலே உள்ள சுட்டியைச் சொடுக்கலாம்! (பின்னோக்கிப் பார்வை என்பதிலிருந்து பழைய நினைப்புடா பேராண்டி என்ற தலைப்பிற்கு மாற்றம் - நன்றி வல்லிம்மா!)


’அதா அங்க நிக்கில்ல ஒரு பஸ்ஸு, அதுல தான் உட்கார்ந்தேன் – பக்கத்து சீட்டுல இருந்த பையன் சொன்னான் – பஸ்ஸுல ஒரே மூட்டை”ன்னு அதான் இந்த பஸ்ஸுல வந்துட்டேன் – புதுசா இருக்குல்லா!” என்றார்.  ஓ அப்படியா? என்று கேட்டு அவர் விட்டதாய்ச் சொன்ன பழைய பேருந்தினைப் பார்த்தேன். அதிலிருந்து ஒரு முகம் என்னைப் பார்த்து சிரித்தது.


தொடர்ந்து அந்த பெரியவர் பேசவே, ஓரிரண்டு வார்த்தைகளில் பதில் சொல்லி, தூங்க ஆரம்பித்தேன். பேருந்து முழுவதும் இருந்த பயணிகள் உறங்கிக் கொண்டிருக்க, இவரும் வேறு வழியில்லாது அமர்ந்திருந்தார். ஒன்றிரண்டு மணி நேரங்கள் பயணித்திருக்கலாம். பேருந்து மீண்டும் ஹோட்டல் ஆரியாஸில் நின்றது. “வண்டி ஒரு பத்து நிமிஷம் நிக்கும், டீ, காபி குடிக்கறவங்க, பாத்ரூம் போறவங்க எல்லாம் போயிடுங்க” என்று ஹோட்டல் ஆரியாஸிலிருந்து ஒரு பெரியவர் வந்து சொல்லிவிட்டுப் போனார். குறைந்தது எழுவது வயதிருக்கலாம் – இந்த இரவு நேரத்திலும் உழைக்கும் அவரை நினைத்து மலைப்பாய் இருந்தது.


இயற்கை உபாதைகளை முடித்துக் கொண்டு பேருந்திற்குள் வந்தால், பக்கத்து இருக்கை பெரியவரைக் காணோம். என்னடா இன்னும் வரலையேன்னு பார்த்தால், அந்தப் பக்கத்து இரண்டு இருக்கைகளில் ஒன்றில் அமர்ந்திருந்தார். கூடவே அவரது நண்பர் ஒருவர் பின்னாடிப் பக்கத்திலிருந்து இங்கே அமர்ந்திருந்தார் – பேருந்து நின்ற நேரத்தில் பேசி இடம் மாற்றிக் கொண்டார் போல..... அங்கே ஆரம்பித்தது அவரது இடைவிடாத பேச்சு.


******


இந்த வாரத்தின் கேள்வி - பதில் : பேச்சைக் குறை:


தமிழ் QUORA பக்கத்தில் படித்த ஒரு கேள்வியும் பதிலும்!  பேச்சைக் குறை என்று அடிக்கடி பெரியவர்கள் சொல்வதுண்டு.  அப்படி இருப்பதால் நிறைய லாபம் உண்டு! அனுபவத்தில் நானும் உணர்ந்திருக்கிறேன்.  சரி கேள்வி பதிலுக்கு வருவோம்! 


கேள்வி: அதிகம் பேசாமல் இருப்பது எப்படி?


பதில்: தினமும் 15 நிமிடம் பேசாமல் மௌனம் காக்க பழகுங்கள் எடுத்துக்காட்டாக எழுந்தது முதல் 15 நிமிடங்கள். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக காலத்தை நீடித்து கொண்டே வாருங்கள். 1 மணி நேரம் ஒரு நாளைக்கு போதுமானது. அப்படி செய்கையில் 1 மணி நேரம் முடிந்ததும் உங்கள் உள்மனம் உங்களை எச்சரித்துக்கொண்டே இருக்கும். யாரவது பேச முனைந்தால் உடனடியாக பேச மாடீர்கள். பேச்சு குறையும்.


குறைவான பேச்சு மகிழ்ச்சியைத் தரும் என்பதை நீங்களும் உணர்ந்திருக்கலாம்! உங்கள் அனுபவங்களையும் சொல்லுங்களேன்! 


******


இந்த வாரத்தின் தகவல் - இலவசப் பேருந்தும் நடத்துனரின் புலம்பலும்:


தமிழகத்தில் பேருந்துகளில் மகளிர் இலவசமாகப் பயணம் செய்யலாம் என்று அறிவிப்பு வந்தாலும் வந்தது, மகளிர் சிலர் செய்யும் வேலைகள் பேருந்து நடத்துனர்களை மிகவும் கடினத்திற்கு உள்ளாக்குகிறது என்று புலம்பினார் ஒரு நடத்துனர்.  ஒரு ஸ்டாப்பில் ஏறி, அடுத்த ஸ்டாப்பில் இறங்குகிறார்கள் - முன்பு கட்டணம் வாங்கிக் கொண்டிருந்தபோது இப்படிச் செய்ததில்லை!  கட்டணம் இல்லை என்றாலும் பயணச் சீட்டு வாங்கிக் கொள்ள வேண்டும் - ஆனால் மகளிர் நடத்துனர் வரும் வரை காத்திருக்காமல் பயணச் சீட்டு இல்லாமல் இறங்கி விடுகிறார்கள்.  கீழே பயணச் சீட்டு பரிசோதகர்கள் இருந்தால், அவர்களை ஒன்றும் சொல்வதில்லை, உடனடியாக பயணச் சீட்டு கொடுக்கவில்லை என்று நடத்துனருக்கு Memo கொடுத்து விடுகிறார்கள் - பணியைச் சரி வர செய்யவில்லை என்று சொல்லி, காரணம் கேட்டு Memo கொடுக்கிறார்கள்.  பயணச் சீட்டு வாங்கிக் கொண்டு இறங்குங்கள் என்று சொன்னால், நடத்துனரிடம் சண்டைக்கு வருகிறார்கள் என தொடர்ந்து புலம்பிக் கொண்டே வந்தார் நான் பயணித்த பேருந்தின் நடத்துனர்.  மத்திய பேருந்து நிலையத்திலிருந்து திருவரங்கம் வரும் வரை நடுநடுவே என் அருகே வந்து புலம்பினார்! “அது ஏண்டா, உன் கிட்ட மட்டும் புலம்பறதுக்குன்னே சிலர் வந்துடறாங்க! உன் முக ராசி அப்படி இருக்கேடா! என்னவோ போடா மாதவா” என்று நினைத்துக் கொண்டேன்.  பாவம் அவர் கஷ்டம் அவருக்கு! 


******


இந்த வாரத்தின் வாசிப்பு - மயிலங்கி மங்கையின் மரகதப் பெட்டி:



காலச்சக்கரம் நரசிம்மா அவர்கள் BYNGE APP-இல் எழுதிய இந்தத் தொடர் சமீபத்தில் முடிவடைந்தது.  50 அத்தியாயங்கள் மட்டுமே எழுத வேண்டும் என்று நிர்வாகிகள் சொல்லி இருந்ததால் கடைசி சில அத்தியாயங்களை வேக வேகமாக முடித்து விட்டார் - இன்னும் மயிலங்கி மங்கை மற்றும் அவரது மரகதப் பெட்டி குறித்து நிறைய விஷயங்கள் சொல்ல இருந்தாலும் இந்தத் தொடரில் குறைவாகவே சொல்லி இருக்கிறார்.  விரைவில் இன்னும் விரிவான தகவல்களுடன் நூலாக வெளிவரும் என்று சொல்லி இருக்கிறார்.  அப்படி வரும்போது அதனை வாசிக்க ஆவலுடன் நானும் காத்திருக்கிறேன்.  இப்போதைக்கு BYNGE APP மூலம் நீங்களும் வாசித்து மகிழலாம் நண்பர்களே!  நல்லதொரு தொடரைப் படிக்கத் தந்த காலச்சக்கரம் நரசிம்மா அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றி.


******


இந்த வாரத்தின் ஓவியம் - பிள்ளையார் :





சமீபத்தில் இந்த வருடத்தின் பிள்ளையார் சதுர்த்தி சமயத்தில் நண்பரின் மகள் வரைந்த ஓவியம் ஒன்று உங்கள் பார்வைக்கு! அழகான ஓவியங்கள் வரையும் நண்பரின் மகளுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும். 


******


நண்பர்களே, இந்த நாளின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.  நாளை வேறு ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்



வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து...


26 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் அன்பு வெங்கட்.

    மிகச் சிறப்பான பதிவு மா. அதுவும் 'பழைய நினைப்புடா பேராண்டி" க்கு நன்றி:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வல்லிம்மா.

      பழைய நினைப்புடா பேராண்டி - நன்றிம்மா.

      தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. இனிய காலை வணக்கம் அன்பு வெங்கட்.

    மிகச் சிறப்பான பதிவு மா. அதுவும் 'பழைய நினைப்புடா பேராண்டி" க்கு நன்றி:)
    காஃபி வித் கிட்டு, மிக சுவாரஸ்யம்.
    பிள்ளையார் படம் வரைந்த நண்பரின் மகளுக்கு ஆசிகள். மென்மேலும் வளர வேண்டும்.

    தனிஷ்க் காணொளி மிக அற்புதம்!!
    எத்தனை அருமையாக எடுத்திருக்கிறார்கள்!!
    மிக நன்றி வெங்கட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் வல்லிம்மா.

      காஃபி வித் கிட்டு பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      நண்பரின் மகள் நல்லதொரு ஓவியர். அவரது ஓவியங்களை அவ்வப்போது எனக்கு அனுப்புவதுண்டு.

      தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. “அது ஏண்டா, உன் கிட்ட மட்டும் புலம்பறதுக்குன்னே சிலர் வந்துடறாங்க! உன் முக ராசி அப்படி இருக்கேடா! என்னவோ போடா மாதவா” என்று நினைத்துக் கொண்டேன். பாவம் அவர் கஷ்டம் அவருக்கு! "

    அச்சோ பாவம். அவரும் நீங்களும்:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பல சமயங்களில் இப்படித்தான் நடக்கிறது. பாவம் தான் வல்லிம்மா.

      தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. இரவில் ஒரு இலக்கண வகுப்பு
    யோசிக்க வைத்தது. பேசியேதீர்த்த பெரியவர், வேலை செய்து சம்பாதிக்கும்
    இன்னோரு பெரியவர்.
    நீங்கள் தூங்கியதுதான் சுவை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தூக்கம் - வேறு வழியில்லை வல்லிம்மா.

      தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. முன்னால் சொல்வார்கள். யாரையும் தெரியாமலே ஒருவர் ஒருவருடன் கலந்தோம் என்பதற்கு எதிர்மறை நீங்க கேட்டது' ராக க கா.:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எதிர்மறையாக ரா.கா. க. கா! :) ஆமாம் வல்லிம்மா.

      தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. அனைத்தையும் ரசித்தேன்.  மயிலங்கி ஆரம்பித்து அப்படியே நிற்கிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காஃபி வித் கிட்டு பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம். முடிந்த போது மயிலங்கி படித்து விடுங்கள். நன்றாகவே இருக்கிறது.

      தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. ஓவியம் அழகு
    தங்கள் அன்பு மகளுக்கும் பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓவியம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. ஓவியம் நண்பரின் மகள் வரைந்தது கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. பதில்கள்
    1. பல்சுவை விருந்து - மகிழ்ச்சி நாகேந்திர பாரதி.

      தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. பதில்கள்
    1. பதிவின் அனைத்து பகுதிகளும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்ப தறிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குறள் வழி சொன்ன செய்தி நன்று ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா.

      தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. பதில்கள்
    1. பதிவினை நீங்களும் ரசித்ததில் மகிழ்ச்சி இராமசாமி ஜி.

      தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. காஃபி வித் கிட்டு எல்லாமே அருமை வெங்கட்ஜி. ரசித்தேன்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காஃபி வித் கிட்டு பதிவின் பகுதிகள் அனைத்தும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துளசிதரன் ஜி.

      தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  13. வாசகம் செம வெங்கட்ஜி

    ஆமாம் பேச்சைக் குறைத்துக் கொண்டால் நல்லது என்பது என் அனுபவமும் கூட. தற்போது என் பேச்சு ரொம்பவே குறைந்திருக்கிறது.

    ராஜா காது கழுதை காது...அந்தப் பெண்ணின் பேச்சு கதை சொல்கிறது!

    பிள்ளையார் செம. நண்பரின் மகளுக்கு வாழ்த்துகள் பாராட்டுகள்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாஜி.

      பெண்ணின் பேச்சு கதை சொல்கிறது - உண்மை.

      பிள்ளையார் ஓவியம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....