செவ்வாய், 12 அக்டோபர், 2021

நவராத்திரி - நைவேத்தியங்கள் - கொலு காணொளி


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட வாசிப்பனுபவம் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


ALL THE PROBLEMS ARE STUCK BETWEEN ‘MIND’ AND ‘MATTER’; IF YOU DON’T ‘MIND’, IT DOESN’T ‘MATTER’.


******


அரிசி புட்டு:



வெள்ளிக்கிழமை அம்பாளுக்கு அரிசி புட்டு நைவேத்தியம்!


******


பார்வையாளர்களும் எங்கள் வீட்டு கொலுவும்:





அழகா இருக்குங்க உங்க வீட்டு கொலு! இந்த வருஷம் புதுசா என்ன வாங்கினீங்க! அம்பாள் அலங்காரம் அழகா இருக்கு! 


நம்ம கட்டற 6 கஜப் புடவையையா இப்படி கட்டி விட்டிருக்கீங்க! எனக்கு நான் கட்டிக்கும் போதே பாதிப்புடவைய உள்ளே சொருகுவேன். அவ்வளவு உயரமா இருக்கும் எனக்கு!  சின்னதா எப்படி கட்டினீங்க!


நான்: உயரமா இருக்கிறதால எனக்கு எப்பவுமே பத்தாதுங்க! கொஞ்சமா தான் சொருகிப்பேன்.


நீங்க கட்டியிருக்கிற புடவை அழகா இருக்கு! உங்க உயரத்துக்கும், நிறத்துக்கும் எடுப்பா இருக்கு!


நான்: தேங்க்ஸ்!


வீடு எப்பவுமே பளிச்னு இருக்கே! நான் உங்கள பத்தி சொல்லும் போதெல்லாம் Housekeeping தான் நினைச்சுப்பேன். சுவரெல்லாம் கூட அழுக்கே ஆகல! அதெல்லாம் கூட துடைப்பீங்களா??


ஃபேனெல்லாம் யார் துடைப்பா??


நான்: நான் தான்!


பை கிஃப்ட் சூப்பரா இருக்கு! நிச்சயம் useful ஆக இருக்கும். நல்ல யோசிச்சு செஞ்சிருக்கீங்க!


இப்படியெல்லாம் கேள்வி கேட்டு, பேசி, அரட்டையடித்து செல்வோரும் இருக்கிறார்கள். Formal ஆக வந்ததும், வராததுமாக தாம்பூலம் தரீங்களா!! கிளம்பணும்! என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்...:)



Adhi's kitchen-இல் எங்க வீட்டு கொலுவைப் பார்க்கலாம். இணைப்பு கீழே..


எங்கள் வீட்டு கொலு/ நவராத்திரி/அம்பாள் பால திரிபுரசுந்தரி அலங்காரம்/Navrathiri Golu in five steps. - YouTube


******


கறுப்புக் கொண்டக்கடலை சுண்டல்:




நவராத்திரி மூன்றாம் நாள்! கறுப்புக் கொண்டக்கடலை சுண்டல்! 


செலவாகுமா அல்லது டின்னரா என்பது அந்த அம்பாளுக்கே வெளிச்சம்!


******


என்னவாக இருக்கும்?:




******


காராமணி சுண்டல்:




நவராத்திரி 4 ஆம் நாள்! காராமணி சுண்டல் நிவேதனம்!


******


வேர்க்கடலை சுண்டல்:




நவராத்திரி 5ஆம் நாள்! வேர்க்கடலை சுண்டல்!


தினமும் சுண்டல் தான் என்றாலும்  நேற்று காராமணி சுண்டலுக்கு சாம்பார் பொடி சேர்த்தேன். இன்று கொஞ்சம் மாறுதலாக தேங்காய், பச்சை மிளகாய், இஞ்சி அரைத்து சேர்த்திருக்கிறேன்..:)


******


பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்



ஆதி வெங்கட்


18 கருத்துகள்:

  1. கொலுவை நேரில் பார்க்க ஆசை, கையில் அன்றைய சுண்டலுடன் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்த வருடம் கொலுவிற்கு வந்து விடுங்கள் - தினம் தினம்! :) கொலுவும் பார்த்து, சுண்டலும் சாப்பிடலாம் ரிஷபன் ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. பதில்கள்
    1. பதிவு பிடித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. பதில்கள்
    1. சுண்டல் - ஆசை தான்! சாப்பிடலாம் வாங்க கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. சுண்டல் எல்லாம் நல்லா வந்திருக்கு ஆதி. அரிசிப் புட்டும் நல்ல சாஃப்டா வந்திருக்கு என்று தெரிகிறது.

    கலர்க்கோலம் அழகா இருக்கு. எல்லாவற்றிலும் கலக்கறீங்க ஆதி. உங்க வீடு சூப்பரா வைச்சுருக்கீங்க தெரியும். வாழ்த்துகள் பாராட்டுகள்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. சுண்டலும் பொம்மைகளுமாய்...  அருமை.  ஈர்க்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவும் பொம்மைகளும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. ஒரே பதிவில் எல்லா சுண்டலும் கிடைத்துவிட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரே பதிவில் எல்லா சுண்டலும் - ஹாஹா... மகிழ்ச்சி இராமசாமி ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. அனைவருக்கும்
    நவராத்திரி நல்வாழ்த்துகள்...

    ஓம் சக்தி ஓம்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓம் சக்தி ஓம்... வாழ்த்தியமைக்கு நன்றி துரை செல்வராஜூ ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. சுண்டல் அருமை. கொலு காணொளி அருமை. கரையாத காகம் இருக்கே ! தாமரைகளுக்கு அருகில்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

    தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....