செவ்வாய், 28 டிசம்பர், 2021

அவரும் நானும் - தொடர் - பகுதி பதினெட்டு



 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட அவரும் நானும் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

உள்ளே தள்ளும் உணவு ருசியாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் நாக்கு, வெளியே தள்ளும் வார்த்தையில் மட்டும் எதையும் நினைப்பதேயில்லை. 

 

******


 

அவரும் நானும் - பகுதி ஒன்று  பகுதி இரண்டு பகுதி மூன்று 

பகுதி நான்கு பகுதி ஐந்து பகுதி ஆறு பகுதி ஏழு பகுதி எட்டு

பகுதி ஒன்பது பகுதி பத்து பகுதி பதினொன்று

பகுதி பன்னிரெண்டு பகுதி பதிமூன்று பகுதி பதினான்கு

பகுதி பதினைந்து பகுதி பதினாறு பகுதி பதினேழு

 

சென்ற பகுதியில் என்னுடைய உணவுப்பழக்கம் பற்றியும் அதை  புரிதலுடன் அவர் கையாண்ட விதத்தை பற்றியும் எழுதியிருந்தேன். இந்தப் பகுதியில் திருமண வாழ்வில் வெற்றிகரமான பத்து வருடங்களைக் கடந்த பின் எங்களுக்குள் ஏற்பட்ட பிரிவைப் பற்றிப் பார்க்கலாம்!

 

திருமணமாகி சில வருடங்கள் கடந்த பின்னும் டெல்லியின் பகட்டான வாழ்க்கை முறையும், அதீத தட்பவெப்பமும் என  என்னால் ஒன்றிப் போக முடியலை! கொஞ்சம் கொஞ்சமாக அவரிடம் நாம ஊருக்கு போயிடலாம்! உங்களுக்கு ட்ரான்ஸ்ஃபர் கிடைச்சா பாருங்கோ! என்று அவ்வப்போது சொல்ல ஆரம்பித்தேன்.

 

அதேசமயம் ஒன்பது வருடங்களாக வசித்த வீட்டை விட்டுவிட்டு அலுவலகத்துக்கு அருகே என்ற காரணத்திற்காக அரசுக் குடியிருப்புக்கு மாறினோம். அந்த சூழலும் எனக்கு பிடிக்கலை! இது எல்லாவற்றையும் விட திடீரென என் உடல்நிலை தகராறு செய்ய ஆரம்பித்தது. அப்போது என் வயது 29 தொட்டிருந்தது!

 

மாதாந்திர சுழற்சி என்பது மூன்று நாட்களுக்கு மட்டும் இல்லாமல் ஒவ்வொரு சுழற்சியும் இரண்டு மாதங்களுக்கு நீடித்தது. அப்பாடா! என்று நிம்மதியாவதற்குள் அடுத்த சுழற்சி துவங்கி விடும். அதற்கான காரணமும் தெரியாமல், ஒரு சுழற்சிக்கு ஏற்றுக் கொண்ட மருந்துகள் அடுத்த சுழற்சிக்கு ஏற்றுக் கொள்ளாமல் என என்னைப் படுத்தி எடுத்தது. 

 

என் வேலைகளையும் செய்து கொள்ள முடியாமல், வாழ்வில் எதுவும் பிடிக்காமல் அழுகையும், கோபமும் ஒன்று சேர punching bag வாங்கித் தருமாறு அவரிடம் கேட்டுக் கொண்டிருந்தேன்! அவர் தான் என்னை சமாதானம் செய்து ஒரு குழந்தை போல கவனித்துக் கொண்டு, அவ்வப்போது மருத்துவரிடமும் அழைத்துச் சென்று, வீட்டு வேலைகளிலும் உதவி என்னைப் பார்த்துக் கொண்டார். 

 

அன்றைய நாட்களை விரக்தியாக இருந்தும், அவ்வப்போது விதவிதமான தைலங்களை முகர்ந்து பார்த்துக் கொண்டும் என இப்படியே ஒரு வருட நரகத்தை கடத்தினேன். என் வாழ்வில் மறக்க நினைக்கும் நாட்கள்!

 

அதன் பிறகு முன்பு இருந்த வீட்டருகே இருக்கும் மருத்துவமனைக்கே சென்று காண்பிக்கலாம் என முடிவு செய்தேன். அந்த பஞ்சாபி டாக்டர் தான் கருவுற்ற போதும் என்னைப் பார்த்து வந்தார். அங்கு ப்ளட் டெஸ்ட், ஸ்கேன் என்று செய்து பார்த்ததில் Hormonal imbalance என்று சொல்லப்பட்டது. 

 

தொடர்ந்த உதிரப்போக்கால் ஹீமோக்ளோபின் லெவல் 6 தான் இருந்தது. வெளிறிப் போய், உடல் எடையும் 10 கி கூடிப்போனது. மருந்தும், மாத்திரைகளும் ஓரளவு பிரச்சனைகளை குறைக்க, அப்போது தான் அவர் ஒரு முடிவெடுத்தார்!

 

இடமாற்றம் என் மனதையும், உடலையும் தேற்றும் என நினைத்து நீங்க ரெண்டு பேரும் முதல்ல அங்க போய் செட்டிலாகுங்க!  நானும் பின்னாடியே வந்துடறேன்! என்று சொன்னார். இந்த இடமாற்றத்திற்கு வயதான எங்கள் வீட்டுப் பெரியவர்களும் காரணம்! அவர்களை உடனிருந்து கவனித்துக் கொள்ள வேண்டிய சூழல்! 

 

அசோகவனத்து சீதையைப் போன்ற என்  வாழ்வில் இதோ கடந்து விட்டது பத்து வருடங்கள்! ஆளுக்கொரு புறமாக இருந்தாலும் எங்கள் அன்பிலும், புரிதலிலும் எந்தவொரு மாற்றமும் இல்லை!

 

இன்னும் சொல்ல வேண்டிய கதைகள் இருப்பதால் அடுத்த பகுதியில் சொல்கிறேன்.

 

******

 

பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்

 

20 கருத்துகள்:

  1. பகிர்வு அருமை... ஒரு நல்ல தம்பதியின் வாழ்க்கையை அறிய முடிகிறது. சிறப்பு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு உங்களுக்கும் பிடித்ததாக அமைந்ததில் மகிழ்ச்சி மதுரைத்தமிழன். தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  2. இந்த மாதிரி நிலை யாருக்கும் வரக்கூடாது என்றுதான் படிக்கும்போது தோன்றியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம். எல்லோரும் நலமாக இருந்துவிட்டால் பூரண மகிழ்ச்சி.

      நீக்கு
  3. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி தனபாலன்.

      நீக்கு
  4. வணக்கம் சகோதரி

    வாசகம் அருமை. தங்களுக்குள் பிரிவை உண்டாக்கிய அந்த கஸ்டமான நாட்களை படிக்கையில் வருத்தத்தை உண்டாக்கியது. உதிரப்போக்கு உடம்பை உருக்குலைந்து விடும். நானும் இந்த கஸ்டங்களை அனுபவித்து வந்திருக்கிறேன். உங்களுக்கு எதையும் தாங்கிக் கொள்ளும் மனதை தந்த இறைவன் இனியும் நல்லதே செய்வான். வாழ்க வளமுடன் என பிரார்த்தித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி. சில விஷயங்கள் நம் கையில் இல்லை. முன்னரே தீர்மானிக்கப்பட்ட ஒன்றாக இருக்கும்போது நம்மால் ஒன்றும் செய்வதற்கு இல்லை என்றே தோன்றுகிறது. தங்களது வருகைக்கும் பதிவு குறித்த எண்ணங்களை பகிர்ந்து கொண்டமைக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  5. என் மனைவிக்கும் இந்த Harmonal Imbalance இனால் இதே பிரச்சனை இப்போது! அகஸ்மாத்தாக இங்கு யாம் (கருணைக்கிழங்கு) -இலிருந்து எடுக்கப்படும் ஒரு எஸ்ட்ராக்ட் கிரீம் பற்றி கேள்விப்பட்டோம். அதை உபயோகப்படுத்துவதில் நல்ல பலன் தெரிகிறது. மணிக்கட்டின் உள்புறத்தில் பட்டாணி அளவு இருமுறை தடவிக்கொள்ள வேண்டியது தான்!

    மேலதிக விவரங்கள் தேவையானால் தருகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் இல்லத்தரசிக்கு இருந்த பிரச்சனைக்கு கிடைத்த தீர்வு பற்றி இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. என்னவிதமான தீர்வு என்பதை, மேலதிக விபரங்களை தந்தால் நல்லது. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி Bandhu ji.

      நீக்கு
  6. இந்த ஹார்மோனல் இம்பாலன்ஸ் வரக் கூடாத ஒன்றுதான் எப்படியோ அதையும் கடந்து பிரிவையும் சமாளித்துக் கொண்டு...பாராட்டுகள் ஆதி. இதிலிருந்து உங்களுக்கு அனுபவப் பாடங்களும் கிடைத்திருக்கும்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  7. ஒரு சொலவடை நினைவுக்கு வருகிறது. "கொண்டவன் துணை இருந்தால் கூரை ஏறி கோழி/கொடி பிடிக்கலாம்." என்ற சொலவடை.

    இப்புரிதலுக்கும் வாழ்த்துகள் ஆதி அண்ட் வெங்கட்ஜி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்றைக்கும் கேட்டு ரசிக்கக்கூடிய சொலவடை.... தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நெஞ்சார்ந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  8. ஆதர்ச தம்பதிகள் இப்படித்தான் இருக்கணும்...

    வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  9. வாழ்வில் வந்த கடினமான கட்டத்தையும் கடந்து வந்திருந்தாலும் புரிதலினால் வாழ்க்கை இனிமையாகிவிடும்.

    வாழ்த்துகள்!

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் நல்லதொரு கருத்துரைக்கும் மனம் நிறைந்த நன்றி துளசிதரன் ஜி.

      நீக்கு
  10. இது நூலாக வரும்போது திருமணம் ஆகவிருக்கும் தம்பதிகளுக்கு பரிசாக கொடுக்கலாம் என தோன்றுகிறது.
    அருமையாக விஶயங்களை எடுத்து வைக்கிறீர்கள் மேடம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தற்போது இந்தத் தொடர் மின்னூலாக வெளியிட்டு இருக்கிறோம் அரவிந்த். உங்கள் தகவலுக்காக. தங்களது வருகைக்கும் பதிவு குறித்த கருத்துப் பகிர்வுக்கும் உளங்கனிந்த நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....