ஞாயிறு, 5 டிசம்பர், 2021

வாசிப்பனுபவம் - வீரக்கூர்ச்சவர்மன் - முதல் பல்லவன் - ஜெயக்குமார் சுந்தரம்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


HAVING A SHARP MEMORY IS A GOOD QUALITY OF THE BRAIN; BUT THE ABILITY TO FORGET THE UNWANTED THINGS IS  FAR BETTER QUALITY OF THE HEART.


******





சஹானா இணைய இதழின் வாசிப்புப் போட்டிக்காக நான் படித்த ஒரு மின்னூல் ஜெயக்குமார் சுந்தரம் அவர்கள் எழுதிய “வீரக்கூர்ச்சவர்மன் - முதல் பல்லவன்” எனும் நாவல். அந்த மின்னூல் குறித்து இன்றைய பதிவில் பார்க்கலாம் வாருங்கள்! 


வகை: வரலாற்று நாவல்

வெளியீடு: அமேசான் கிண்டில்

பக்கங்கள்: 168

விலை: ரூபாய் 221/-

மின்னூல் தரவிறக்கம் செய்ய சுட்டி கீழே:


வீரகூர்ச்சவர்மன்: முதல் பல்லவன் (Tamil Edition) eBook : சுந்தரம், ஜெயக்குமார்


******* 


வரலாற்றுப் புதினம் எழுதுவது அவ்வளவு சுலபமல்ல. நிறைய படிக்க வேண்டும், ஆய்வுகளைச் செய்ய வேண்டும்.  முடிந்த போது புதினங்களில் கொண்டு வரப் போகும் இடங்களைச் சென்று பார்க்க வேண்டும், கற்பனை வளமும், சின்னச் சின்ன விஷயங்களையும், சங்கதிகளையும் விலாவரியாக விவரிக்கத் தெரிந்திருக்க வேண்டும் என பல விஷயங்கள் வரலாற்றுப் புதினங்கள் எழுதத் தேவை.  பல ஜாம்பவான்கள் கரை கண்ட களம் இந்த வரலாற்றுப் புதினம்.  பெரிய பெரிய எழுத்தாளர்களே வரலாற்றுப் புதினங்களை எழுதுவதற்கு தயங்குவதுண்டு.  ஆனால் நான் இந்த மாதம் படித்த வரலாற்றுப் புதினமான “வீரக்கூர்ச்சவர்மன் - முதல் பல்லவன் என்கிற வரலாற்றுப் புதினத்தினை எழுதி இருக்கும் நூலாசிரியர் ஜெயக்குமார் சுந்தரம் அவர்கள் தனது நூலின் முன்னுரையில் வரலாற்றுப் புதினத்திற்குப் புதியவன் என்று சொல்லி இருந்தாலும், சிறப்பாகவே எழுதி இருக்கிறார்.  


பல்லவர்கள் பற்றி நாம் நமது பாடப் புத்தகங்களில் படித்திருப்போம்.  பல்லவர்கள் குறித்த சில நாவல்களும் படித்திருக்கலாம்.  ஆனால் பல்லவ சாம்ராஜ்யம் எப்படி ஆரம்பித்தது, அதன் முதல் மன்னர் யார் போன்ற விவரங்களை இதுவரைத் தேடிப் படித்ததில்லை. நூலாசிரியர் தனது முயற்சியில் தெரிந்து கொண்ட விஷயங்களை கற்பனை கலந்து மிகச் சிறப்பாக பல்லவ சாம்ராஜ்யம் இப்படித்தான் ஆரம்பித்திருக்கும் என்று எழுதி இருக்கிறார் - வரலாற்றுப் புதினமாக.  வடநாட்டில் மேற்கு சத்ரபதி பேரரசை ஆண்டு வந்த ருத்ரதாமன் என்பவரின் படையில் சாதாரண வீரராக இருந்த சுவிசாக பஹ்லவன் தனது வீரத்தினாலும், மதியூகத்தினாலும் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி பல்லவ சாம்ராஜ்யத்தின் முதலாம் மன்னனாக ஆன கதையை, இந்தப் புதினத்தின் மூலம் சொல்லி இருக்கிறார். 


கதையில் காதல், போர், மதியூக நுட்பம், அரசியல் நுட்பம் என அனைத்தும் கலந்து எழுதி இருப்பது சிறப்பு.  ஒரு பேரரசை நிறுவக் கூடிய தகுதிகளாக போர் செய்யும் ஆற்றல் மட்டுமே போதுமானதாக இருக்காது - மதியூகமும், போரே செய்யாமல் தனது மதியூகத்தினால் பகைவர்களை வெல்ல முடியும் என்பதையும் சொல்வதோடு, அரசனாக இருப்பவன், தனது மக்களுக்கு எந்தெந்த விதத்தில் உதவ முடியும் என்பதையும் வீரக்கூர்ச்சவர்மன் கதை வாயிலாக எழுதி இருக்கிறார்.  நீர்நிலைகள் உருவாக்குவது, போர் கலைகளைக் கற்றுத் தருவது, இளைஞர்களை நல்வழிப்படுத்துவது, வேலைகளை உருவாக்குவது என பல விஷயங்களை கதை மூலம் சொல்லிச் சென்றிருக்கிறார்.  


மிகவும் சிறப்பாகவே இருந்தாலும், ஒரு சில விஷயங்கள் திரும்பத் திரும்ப எழுதி இருப்பதைத் தவிர்த்திருக்கலாம் - குறிப்பாக சுவிசாகன் தனது திறமையால் மன்னரை எப்படிக் காப்பாற்றினார் என்பது நிறைய இடங்களில் வருகிறது - அது குறித்து யாருக்குச் சொல்வதாக எழுதி இருக்கிறாரோ அவர்களுக்குப் புதிய விஷயமாக இருந்தாலும், படிப்பவர்களுக்கு அந்த கதை தெரிந்தே இருப்பதால் அலுப்புத் தட்டலாம்.  இது பெரிய குறை என்று சொல்ல முடியாவிட்டாலும், திரும்பத் திரும்ப ஒரே காட்சி வருவது போல இருந்ததை ரசிக்க முடியவில்லை.  மற்றபடி மிகச் சிறப்பாக இந்த வரலாற்றுப் புதினத்தினை எழுதிய நூலாசிரியருக்கு, பாராட்டுகளும் மனம் நிறைந்த வாழ்த்துகளும்.  மேலும் பல வரலாற்றுப் புதினங்களை எழுதி வெற்றி பெற அவருக்கு எனது வாழ்த்துகள்.   


*******

எங்களது இல்லத்திலிருந்து, நானும், எனது இல்லத்தரசியும் இதுவரை வெளியிட்ட மின்னூல்களுக்கான சுட்டி கீழே.  முடிந்தால் எங்களது நூல்களை தரவிறக்கம் செய்து வாசிப்பதோடு, உங்கள் வாசிப்பனுபவங்களையும் பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சி!  


சந்தித்ததும் சிந்தித்ததும்: மின்புத்தகங்கள்...


மீண்டும் ஒரு வாசிப்பனுபவத்துடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து….


18 கருத்துகள்:

  1. நல்லதொரு அறிமுகம்.  வரலாற்றுப் புதினம் எழுதுவது எளிதல்ல.  சிறப்பாகச் செய்திருக்கிறார் இந்நூலாசிரியர் என்று தெரிகிறது.  பல்லவர்களின் ஆரம்பம் பற்றி காலச்சக்கரம் நரசிம்மா வேறு விதமாக சொல்லி இருக்கிறார் இல்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வரலாற்றுப் புதினம் எழுதுவது கடினம் தான் ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. பதில்கள்
    1. விமர்சனம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. அறிமுகத்துடன் விமர்சனம் சிறப்பு. பல்லவர் தோற்றம் பற்றி காலச்சக்கரம் நரசிம்மாவும் சொல்லியிருக்கிறார்.

    அறிமுகத்திற்கு மிக்க நன்றி வெங்கட்ஜி.

    உங்களின் அறிமுகத்தினால் ஆழியின் காதலி வாசித்துவிட்டேன் ஜி, சஹானாவில்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விமர்சனம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாஜி.

      ஆழியின் காதலி வாசித்ததற்கு நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. வாசகம் அருமை. எல்லாவற்றையும் போட்டு வைத்து இருக்கிறோம் மூளையில், சில விஷயங்களை மறந்தால் இதயத்திற்கு நல்லதுதான். மறக்க மனம் கூடுதில்லையே!

    வரலாற்று புதினம் நன்றாக எழுதி இருக்கிறார் என்று சொல்வது மகிழ்ச்சி.
    நல்ல விமர்சனம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகமும் பதிவும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    வாசகம் அருமை. சிறந்த நூலறிமுகம். வரலாற்று புதினத்தை சிறந்த முறையில் எழுதிய ஆசிரியருக்கும், அதை சிறப்பாக விமர்சித்த தங்களுக்கும் மிக்க நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      வாசகமும் பதிவும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. இன்றைய காலகட்டத்தில் என்னால் தமிழில் வரும் புத்தகங்களை முழுவதுமாக படிக்க முடியவில்லை. அந்த குறையை உங்களது விமர்சனங்கள் நிறைவேஏறி வருகின்றன். உங்களத்து விமர்சனங்களை படித்தாலே புத்தகங்களை படித்த திருப்தி வந்துவிடுகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கே பதியும் விமர்சனங்கள்/அறிமுகங்கள் உங்களுக்கும் பயனுள்ளதாக அமைவதில் மகிழ்ச்சி மதுரைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. பல்லவர் குலம் தோன்றிய விதம் பற்றி பல பல அறிஞர்கள் பலவிதமாக சொல்லியிருக்கிறார்கள்! அவற்றில் இந்த நாவலும் ஒரு சிறு முயற்சி என்று புரிகிறது. மிக அருமையான விமர்சனம்! விரைவில் படித்துப்பார்க்க வேண்டும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்த போது வாசித்துப் பாருங்கள் மனோம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. நல்லதொரு அறிமுகம், மதிப்புரை! நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  9. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....