ஞாயிறு, 12 டிசம்பர், 2021

வாசிப்பனுபவம் - நேசித்த இரு நெஞ்சங்கள் - சந்தியா ஸ்ரீ

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட அவரும் நானும் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

இரண்டு பக்கமும் கூர்மை கொண்ட கத்தியை கவனமாக கையாள வேண்டும். அது போல இரண்டு பக்கமும் சாயும் மனிதர்களிடம் கவனமாகப் பழக வேண்டும் - கண்ணதாசன்.

 

******

 


சஹானா இணைய இதழின் வாசிப்புப் போட்டிக்காக நான் படித்த ஒரு மின்னூல் சந்தியா ஸ்ரீ அவர்கள் எழுதிய நேசித்த இரு நெஞ்சங்கள் எனும் நாவல். அந்த மின்னூல் குறித்து இன்றைய பதிவில் பார்க்கலாம் வாருங்கள்! 

 

வகை: நாவல்

வெளியீடு: அமேசான் கிண்டில்

பக்கங்கள்: 447

விலை: ரூபாய் 280/-

மின்னூல் தரவிறக்கம் செய்ய சுட்டி கீழே:

 

Nesitha Iru Nenjangal (Tamil Edition) eBook : ஸ்ரீ, சந்தியா

******* 



 

நேசித்த இரு நெஞ்சங்கள் - சந்தியா ஸ்ரீ அவர்களின் நீண்டதொரு நாவல் - 447 பக்கங்கள் என்பதிலேயே எத்தனை நீண்ட நாவல் என்பது புரிந்திருக்கும்.  கல்லூரி படிக்கும் மாணவனைக் காதலிக்கும் பதினைந்து வயது மாணவி!  இப்படித்தானே இன்றைக்கு பல காதல்கள் இருக்கின்றன - தனக்கு இருப்பது காதல் என்று தெரிந்து சில நாட்களுக்குள் காதலர்களுக்குள் பிரிவு.  ஏழு வருடங்கள் கழித்தே மீண்டும் சந்திக்கிறார்கள்.  அதற்குள் காதலி மதுமிதாவுக்குத் தான் எத்தனை எத்தனை இன்னல்கள்! சில அவளாக உண்டாக்கிக் கொண்டவை என்றால் சில இன்னல்கள் அவளுடைய பெற்றோர்களால் உண்டாக்கப்பட்டவை.  

 

மதுமிதா என்னென்ன பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது, மதுமிதா-ரோஹித் காதல் தவிர இன்னும் எத்தனை எத்தனை காதல் ஜோடிகள், நடுவில் வரும் பெற்றோர்கள், சொத்துத் தகராறு, கொலை, நட்பின் பலம், சகோதரிகளுக்குள் இருக்கும் பாசம், என பல விஷயங்களை இந்த நாவல் வழி சொல்ல முயன்றிருக்கிறார் கதாசிரியர்.  பல விஷயங்களைத் தொடுவதால் எல்லாவற்றையும் விளக்க பல பக்கங்கள் தேவையாக இருக்கிறது.  ஏழு வருடங்களுக்குப் பிறகு தனது காதலியைத் தேடி வரும் காதலன் அவளை ஒரு குழந்தையுடன் பார்க்க, குழப்பம் வருகிறது காதலனுக்கு!  காதலி தனக்காகக் காத்திருக்காமல் திருமணம் புரிந்து கொண்டாளா, குழந்தை யாருடைய குழந்தை என கொஞ்சம் கொஞ்சமாக சொல்லிக் கொண்டு வருகிறார் கதாசிரியர்.  

 

நீண்ட கதை என்பதால் படிக்க பொறுமையும் தேவையாக இருக்கிறது.  நீண்டதொரு நாவலை, தொய்வில்லாமல் எழுதி இருக்கும்  அவருக்குப் பாராட்டுகள்.  மேலும் பல கதைகளை எழுதிட அவருக்கு வாழ்த்துகள். 

 

*******

 

எங்களது இல்லத்திலிருந்து, நானும், எனது இல்லத்தரசியும் இதுவரை வெளியிட்ட மின்னூல்களுக்கான சுட்டி கீழே.  முடிந்தால் எங்களது நூல்களை தரவிறக்கம் செய்து வாசிப்பதோடு, உங்கள் வாசிப்பனுபவங்களையும் பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சி!  

 

சந்தித்ததும் சிந்தித்ததும்: மின்புத்தகங்கள்...

 

மீண்டும் ஒரு வாசிப்பனுபவத்துடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து.

 

12 கருத்துகள்:

  1. மதுமிதா... சுஜாதாவின் பிரிவோம் சிந்திப்போம் கதையின் நாயகி பெயர் என்று நினைவு! நீண்ட கதையில் பல்வேறு சம்பவங்கள் நல்ல யுக்தி. சீரியல் போல கதையை நீட்டலாம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசிப்பனுபவம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. மதுமிதா அழகான பெயர். உங்களின் வாசிப்பு பிரமிக்க வைக்கிறது வெங்கட்ஜி!

    கதை பல விஷயங்களைத் தொட்டுச் செல்கிறது தெரிகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மதுமிதா - அழகான பெயர் தான் கீதா ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. நிறைய வாசிக்கிறீர்கள், உடனே அதற்கு விமர்சனமும் எழுதி விடுகிறீர்கள். பிரமிப்பாக இருக்கிறது. தொடர வாழ்த்துகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில மாதங்களாக வாசிக்க முடிவதில்லை பானும்மா. இந்த வாசிப்பனுபவங்கள் முகநூலில் எழுதியவை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. சுருக்..எனினும் நறுக்...வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி.

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு
  6. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....