ஞாயிறு, 19 டிசம்பர், 2021

வாசிப்பனுபவம் - மாற்றத்தை நோக்கி - ராஜேஸ்வரி ஜீவானந்தம்



 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

ALWAYS HAVE A HOPE FOR POSITIVE OPENINGS… AS THE PROVERB SAYS - KEEP A GREEN TREE IN YOUR HEART, THE SINGING BIRD WILL SURELY COME!.

 

******


 

சஹானா இணைய இதழின் வாசிப்புப் போட்டிக்காக நான் படித்த ஒரு மின்னூல் ராஜேஸ்வரி ஜீவானந்தம் அவர்கள் எழுதிய மாற்றத்தை நோக்கி எனும் நாவல். அந்த மின்னூல் குறித்து இன்றைய பதிவில் பார்க்கலாம் வாருங்கள்! 

 

வகை: குறுநாவல்

வெளியீடு: அமேசான் கிண்டில்

பக்கங்கள்: 30

விலை: ரூபாய் 63/-

மின்னூல் தரவிறக்கம் செய்ய சுட்டி கீழே:

 

மாற்றத்தை நோக்கி: matrathai nokki (Tamil Edition) eBook : ஜீவானந்தம், ராஜேஸ்வரி : Amazon.in: Kindle Store

 

******* 

 

"மாற்றம் ஒன்று மட்டுமே மாறாதது" என்று சொல்வதுண்டு. மாற்றத்தை நோக்கி என்ற தலைப்பில் ஒரு மின்னலுடன் நம்மை சந்திக்கிறார் நூலாசிரியர் ராஜேஸ்வரி ஜீவானந்தம். தனது நூலின் அறிமுகத்தில் பாரம்பரியத்தையும் நவீனத்தையும் இணைக்கும் மாற்றங்களை நோக்கிய ஒரு தேடல்தான் இந்த நூல் என்று சொல்லியிருக்கிறார். நூலின் வழி அவர் சொல்ல வந்த விஷயம் என்ன என்று பார்க்கலாம். 

 

ஒரு கனவில் ஆரம்பிக்கிறது கதை - தன் மகளின் திருமணத்தை எப்படி ஆடம்பரமாக கொண்டாடுகிறார் என்பதைக் கனவாக காண்கிறார் ஒரு தந்தை. கனவு நினைவாகும் நாள் பற்றி கதையில் எதுவும் சொல்ல ஆசிரியருக்கு வாய்ப்பில்லை! பயிற்சி ஒன்றிற்குச் சென்று இல்லம் திரும்பும் தாரிணி, தன்னுடன் கல்லூரி கால தோழி நான்சியையும் அழைத்து வருகிறார்.  அவர்கள் இருவரும் தாரிணியின் ஊரில் சந்தித்த மனிதர்கள், நிகழ்வுகள் எனக் கோர்த்து தன் எண்ணங்களைச் சொல்லி இருக்கிறார் நூலாசிரியர்.  பாரம்பரிய வாழ்வில் பார்த்த, அனுபவித்த பல விஷயங்களை கொஞ்சம் கொஞ்சமாக நவீனம் என்ற பெயரில் இழந்து வருகிறோமோ என்ற எண்ணத்தினை, இந்த நூல் மூலம் சொல்ல முயற்சி செய்திருக்கிறார். 

 

அவரது நூலிலிருந்து, பிடித்த சில வரிகளை அடையாளமாகச் சொல்லலாம் என்றால், கீழ்க்கண்ட வரிகளைச் சொல்லலாம்! 

 

நவீன வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாற்றங்கள், எல்லா விஷயங்களை எளிதாக்கியிருக்கிறது. தகவல் தொடர்பு, கல்வி, மருத்துவம், விவசாயம் என எல்லாத் துறைகளும் பெரிய வளர்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.  

 

ஒவ்வொரு வினைக்கும், எதிர்வினை உண்டு தானே. அது மாதிரி தான், சில விஷயங்கள் இருக்கு. புதுப்புது கண்டுபிடிப்புகளினால், ஓரிடத்தில் உட்கார்ந்து எல்லாரும் வேலை செய்ய ஆரம்பிக்க,கண்களுக்கும், கைகளுக்கும் மட்டுமே வேலை.”  

 

என்ன வேண்டுமோ, எளிதில், எல்லாருக்கும் கிடைக்கும் நிலை இன்று. அதுனால, ஆசை அதிகமாகிறது.  ஆசைப்பட்டது நமக்கு வேணுமா, வேண்டாமானு கூட நாம யோசிப்பதில்லை!

 

நூல் மூலம் நம்மையும் ஊரின் சில அழகான விஷயங்களைக் காண்பிக்கும் ஆசிரியருக்கு வாழ்த்துகள். 

 

*******

 

எங்களது இல்லத்திலிருந்து, நானும், எனது இல்லத்தரசியும் இதுவரை வெளியிட்ட மின்னூல்களுக்கான சுட்டி கீழே.  முடிந்தால் எங்களது நூல்களை தரவிறக்கம் செய்து வாசிப்பதோடு, உங்கள் வாசிப்பனுபவங்களையும் பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சி!  

 

சந்தித்ததும் சிந்தித்ததும்: மின்புத்தகங்கள்...

 

மீண்டும் ஒரு வாசிப்பனுபவத்துடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து.

 

16 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. அழகிய விளக்கம் வாழ்த்துகள் ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  3. //”என்ன வேண்டுமோ, எளிதில், எல்லாருக்கும் கிடைக்கும் நிலை இன்று. அதுனால, ஆசை அதிகமாகிறது. ஆசைப்பட்டது நமக்கு வேணுமா, வேண்டாமானு கூட நாம யோசிப்பதில்லை!”//

    ஆமாம் . யோசிக்க வேண்டிய விஷயம் தான்.

    //கண்களுக்கும், கைகளுக்கும் மட்டுமே வேலை.” //

    அதனால் கண்கள் சோர்வு அடைகிறது.
    கைகள் தோள்பட்டை வலி வருவது உணமை.
    நல்ல பகிர்வு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யோசிக்க வேண்டிய விஷயம் - ஆமாம் கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  5. ”என்ன வேண்டுமோ, எளிதில், எல்லாருக்கும் கிடைக்கும் நிலை இன்று. அதுனால, ஆசை அதிகமாகிறது. ஆசைப்பட்டது நமக்கு வேணுமா, வேண்டாமானு கூட நாம யோசிப்பதில்லை!”//

    யதார்த்தம். அப்படித்தான் வீடுகளில் குப்பைகள் சேர்கின்றன. முன்பெல்லாம் வீட்டின் பெரியவர்கள் மட்டுமே லிஸ்ட் போட்டு வீட்டுக்கு என்ன தேவையோ வாங்குவது வழக்கம். இப்போது அப்படியில்லை. வீட்டில் உள்ளோர் தனி தனியாக அவரவர்க்கு விருப்பம் என்று எல்லாம் வாங்கி விடுகிறார்கள். இண்டிவிஜுவல் ஸ்பேஸ்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி கீதாஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி.

      நீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. வாசகமும் அருமையாக உள்ளது.

    /என்ன வேண்டுமோ, எளிதில், எல்லாருக்கும் கிடைக்கும் நிலை இன்று. அதுனால, ஆசை அதிகமாகிறது. ஆசைப்பட்டது நமக்கு வேணுமா, வேண்டாமானு கூட நாம யோசிப்பதில்லை!”/

    உண்மை. அழகான வாக்கியங்கள். நூலைப் பற்றிய நல்லதொரு விமர்சனம். அருமையாக விமர்சித்த உங்களுக்கு மனம் நிறைந்த நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      வாசகமும் பதிவும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. வாசகம் மிக அருமை சார்.
    நல்ல செய்திகளைச் சொல்லும் நூலாகத் தெரிகிறது.
    விரைவில் வாசிக்கிறேன்.
    நல்லதொரு நூல் அறிமுகத்திற்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகமும் பதிவும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அரவிந்த்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....