ஞாயிறு, 12 ஏப்ரல், 2026

அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி அறுபத்தி ஆறு - விஜி வெங்கடேஷ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******



வாட்ஸப்பில் வரும் அழகிய வண்ணச் சித்திரங்களுக்கு தகுந்தாற்போல சில வரிகளை விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதி அனுப்ப, அவற்றை தொடர்ந்து இங்கே ஞாயிற்றுக் கிழமைகளில் வெளியிட்டுக் கொண்டிருக்கிறேன்.  


அந்த வரிசையில் மேலும் சில படங்களும் அதற்கு விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதிய வரிகளும் உங்கள் பார்வைக்கு! எப்படி இருக்கிறது இந்த முயற்சி என்று சொல்லுங்களேன்! படம் பார்த்து உங்களுக்குத் தோன்றும் எண்ணங்களையும் எழுதுங்களேன். ஓவர் டு விஜி வெங்கடேஷ் - வெங்கட் நாகராஜ்.


*******



வெண்ணெயை காட்டிக் காட்டி ஆட வெக்கறாங்க.. இன்னிக்கி யுகாதியா வேற இருக்கு...

ஆடி  சந்தோஷப் படுத்துவோம்… எனக்குக் கொடுக்கணும்னா இவங்களுக்கு extra வா கை முளைக்குது! அவ்வளவு பாசம்!🥰ஆனாலும் இவங்களுக்குத் தெரியாம போய் எடுத்து சாப்பிடற திரில் வராது... அதை அப்புறம் வெச்சுக்கலாம்..

இன்னிக்கி மாங்கா பச்சடியையும் சேர்த்து ஒரு கை பாக்கலாம்..😋😍


ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா🙏🏻🙏🏻🙏🏻


*******



ஆஹா உன் முகத் தாமரையால உன் கரத்துத் தாமரைக்கு வெளிச்சமா இல்ல அதால உன் முகத்துக்கா??


தாமரை shape ல torch light கிருஷ்ணா. late ஆ வந்துட்டு 🍨 🍦வெக்காத...


ஜெய் ஶ்ரீ ராதே கிருஷ்ணா🙏🏻🙏🏻🙏🏻


*******



அடடா இதுக்கெல்லாமா ராதா கண்கலங்குவாங்க?

LPG க்கு தட்டுப்பாடா இருந்தா என்ன?  gobar gas plant போட்டுறலாம். 

கோகுலத்துல gobar கா பஞ்சம்? 


ஜெய் ஶ்ரீ ராதே கிருஷ்ணா 🙏🏻🙏🏻🙏🏻


*******



கார்த்திகேயா நாம மரத்தவிட்டு இறங்கி வேற இடம் போறது நல்லதுன்னு நினைக்கிறேன்..


ஏன் மயில் bro?


இல்ல, தங்க கூட்டைத் 

தான் நீ எடுத்து தலையில கவுத்துக்கிட்டுருக்கியோன்னு குருவிங்க பேசிக்கிட்டிருந்ததுக...


அதுக பேசிச்சா இல்ல இது உன் mind voice ஆ bro....


சே சே என்ன முருகா என்னப் போய்...😧


ஓம் சரவண பவாய நமஹ🙏🏻🙏🏻🙏🏻


*******



நல்லா ஆட்டம் போட்டுட்டு அசதில தூங்கறான் கிருஷ்ணா.பாக்க அழகாகத்தான் இருக்கு… ஆனா நம்மள தலையாட்டாதீங்க மணி சத்தத்துல முழிப்பு வந்துடும்னு சொன்னான் பாத்தியா… அங்கதான் அவன் நிக்கறான்...


அது சரி bro நாமளும் முன்னாடியே கொஞ்சம் தள்ளிப்போய் நின்னுருக்கலாம்...

smart ஆ.... ஹ்ம்ம்ம்...😒


ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா🙏🏻🙏🏻🙏🏻


*******



நீ எப்படி கர்ஜிப்பேன்னுதான் தெரியுமே சிம்மா! இப்போ யாருமில்லாதபோது எதுக்கு practice பண்ணிக்கிட்டிருக்க?


நீங்க வேற தேவி! என் வால் விளக்கு மேல பட்டுடுச்சு… அதான்...😫


ஓம் தேவ்யை நமஹ🙏🏻🙏🏻🙏🏻


*******



ஆஹா என்ன அழகான சூழல்! எனக்கே இங்க கண்ணை மூடி தவத்துல உக்காரலாமான்னு தோணுது. மகாதேவன் கழுத்துல இருக்கற ஒரு உஸ் உஸ் necklace கூட தியானத்துல இருக்கற மாதிரி சாந்தமா படுத்துக்கிட்டிருக்கு… ஆமா ஈஸ்வரன் சிரசுல எப்பவும் ஒரு பிறை தான இருக்கும். இப்போ ரெண்டு இருக்கற மாதிரி இருக்கு? ஒருவேளை எனக்குத்தான் கண்ணுல ஏதோ கோளாறோ? இல்ல தூக்கக் கலக்கமா, illusion ஆ🙄 ரொம்ப தியானத்துல ஆழ்ந்துட்டனோ😇


ஓம் நமசிவாய🙏🏻🙏🏻🙏🏻


*******


படங்களும் படங்களுக்கான வரிகளும் உங்களும் பிடித்திருக்கும் என நம்புகிறேன்.  மீண்டும் வேறு ஒரு பதிவு வழி சந்திப்போம்…


நட்புடன்


விஜி வெங்கடேஷ்


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

12 ஏப்ரல் 2026


3 கருத்துகள்:

  1. படங்களும் வரிகளும் வழக்கம் போல் நல்லாருக்கு. ரசித்தேன்

    கீதா

    பதிலளிநீக்கு
  2. கடைசி படத்தில் - அப்படி சிவனை உருவகப்படுத்துவதில் சில தத்துவங்களும் இருக்கின்றன. அதாவது பாம்பு, கங்கை, பிறை.....ஆனா இப்பகுதி ஜாலி பகுதி!! SO, No philosophy!!ஹிஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....