அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
வாட்ஸப்பில் வரும் அழகிய வண்ணச் சித்திரங்களுக்கு தகுந்தாற்போல சில வரிகளை விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதி அனுப்ப, அவற்றை தொடர்ந்து இங்கே ஞாயிற்றுக் கிழமைகளில் வெளியிட்டுக் கொண்டிருக்கிறேன்.
அந்த வரிசையில் மேலும் சில படங்களும் அதற்கு விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதிய வரிகளும் உங்கள் பார்வைக்கு! எப்படி இருக்கிறது இந்த முயற்சி என்று சொல்லுங்களேன்! படம் பார்த்து உங்களுக்குத் தோன்றும் எண்ணங்களையும் எழுதுங்களேன். ஓவர் டு விஜி வெங்கடேஷ் - வெங்கட் நாகராஜ்.
*******
மகேஸ்வரன் கணபதியைத் தூக்கிட்டு இருக்கார். தேவி சண்முகனைத் தூக்கிக்கிட்டிருக்கலாம்.. அவன் கோச்சுக்கிட்டு போகாம இருக்கணும்… சே எனக்கு எதுக்கு இந்தக் கவலை...
ஓம் நமசிவாய🙏🏻🙏🏻🙏🏻
*******
உன் கன்னத்துல நான் சிவப்பு சாயம் பூசின மாதிரி நீயும் நீல கலர்ல பூசியிருக்கலாம் தேவி..
இது contrast ஆ நல்லாத்தான் இருக்கு நாதா… ஹோலி விளையாடும்போது கலர் பாக்கக் கூடாது.... பூசறத்துல....
உங்க நீலக்கலரே பூசினமாதிரிதான் இருக்கு நாதா. நீங்கள்தான் அந்தி (பொன்) வண்ணனாச்சே… எப்படி? யாரு? எங்க??
சரி சரி விளையாட்ட கவனி தேவி.. ( எதாவது சொன்னா போச்சு...)
ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻
*******
எனக்கென்னவோ இந்த பனீர், சீஸ் இதெல்லாம் பிடிக்கறதே இல்ல.அதுவும் பனீர் எல்லாம் இப்ப நம்ம பாலிலிருந்து பண்றதில்லையாம்.. கேக்கவே பயங்கரமா இருக்கு..😟
ஆனா கிருஷ்ணா கேட்டாத்தான… முதல்ல நமக்குக் குடுத்துட்டுத்தான் சாப்பிடுவானாம்… பாசக்கார பய… 🥰 ஒருவேளை நமக்கு ஊட்டி விட்டுட்டு பின் விளைவை பாத்துட்டு சாப்பிடுவானோ..🤨
ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா 🙏🏻🙏🏻🙏🏻
*******
மகேஸ்வரன் சுட்டு எரிக்கற மாதிரி பாத்துக்கிட்டு தீ மேல நடந்து வராரு, அது அவருக்கு OK. அது அவர ஒண்ணும் பண்ணாது....
எனக்கும் எதுக்கு இப்போ சிவப்பு contact lense, எந்திரன் மாதிரி costume னு தெரியல.. உடம்பு பயங்கரமா சூடாகுது… இதுல முறைக்கற மாதிரி பாக்கணுமாம்...😫
ஓம் நமசிவாய🙏🏻🙏🏻🙏🏻
*******
குடு ராதா பானையை
நான் தூக்கிக்கிட்டு வரேன்...
ஆஹா என்ன அக்கறை!
(என் friends ஓட நான் இருக்கும்போது!)
நான் பாத்துக்கிறேன்,
நீ உன்னோட வேலைய (மட்டும்) கவனி… அவங்க முன்னால கொஞ்சம் distance maintain பண்ணு. புரிஞ்சுதா?
சரி சரி...
அதுக்காக கை முஷ்டிய எல்லாம் இப்படி மடக்கக்கூடாது, cool baby....
(சே இந்தப் பெண்களுக்கு நல்லது நினைச்சாலே இப்படித்தான்...😕)
ஜெய் ஶ்ரீ ராதே கிருஷ்ணா🙏🏻🙏🏻🙏🏻
*******
இத பாருங்க sakis, நீங்க என்னை உங்கள்ள ஒருத்தரா நினைக்கிறீங்கங்கற த்துக்கு அர்த்தம் இது இல்ல.. this is too much..
Happy women's day Krishna!🥰இந்த அலங்காரத்துல நீ இன்னும் பேரழகா இருக்க😘❤
(சே தனியா வந்து மாட்டிக்கிட்டமே...)
ஜெய் ஶ்ரீ ராதே கிருஷ்ணா 🙏🏻🙏🏻🙏🏻
*******
காதுக்கிட்ட உக்காந்துட்டு நான் இப்ப யார் மேல ஏறுவேன்னு மங்காத்தா விளையாடாதீங்க மயில் bros. பாட்ட நிம்மதியா கேக்க முடியல.. நீங்க continue பண்ணுங்க chellams வண்ண மயிலேறும் என் தங்க வடிவேலோ...
பாத்தியா bro பாட்டே நம்மளப் வெச்சுத்தான் ஆரம்பிக்குது, ஆனா நாம தொல்லையா இருக்கோமாம்....
என்ன, இன்னும் நீங்க கிளம்பலையா...
ஓம் சரவணா போற்றி🙏🏻🙏🏻🙏🏻
*******
படங்களும் படங்களுக்கான வரிகளும் உங்களும் பிடித்திருக்கும் என நம்புகிறேன். மீண்டும் வேறு ஒரு பதிவு வழி சந்திப்போம்…
நட்புடன்
விஜி வெங்கடேஷ்
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கம்
5 ஏப்ரல் 2026








முதல் படத்துக்கான வரியே புன்சிரிப்பை வரவழைத்துவிட்டது. அவங்க பாட்டுக்குத் தேமேன்னு குடும்ப புகைப்படம் எடுத்துருக்காங்க இதுல நாம எதுக்குக் குழப்பத்தைக் கிளறிவிட்டு....இன்னொரு பழநி மலையா!!!
பதிலளிநீக்குகீதா
என்னென்னமா படங்கள் எல்லாம் உருவாக்கறாங்கப்பா எல்லாம் இந்த AI வந்தப்புறம் இல்ல? அதாங்க ஹோலி படம் பத்திச் சொன்னேன்.
பதிலளிநீக்குகீதா
மகேஸ்வரன் சுட்டு எரிக்கற - இந்தப் படம் இப்போதைய படங்களில் ஹீரோ இப்படிப் பின் புறம் தீ எரிந்து கொண்டிருக்க ஹீரோ வருவாரே அப்படியான படம் போன்று இருக்கு!!
பதிலளிநீக்குராதா வேறு யாரோ ஆண் நு நினைச்சுட்டாங்க போல, அதான் கையை முஷ்டியை மடக்க யத்தனிக்கறாங்க....விடுங்க இப்ப கண்ணன் தான்னு தெரிஞ்சு போச்சே! ஹாஹாஹா
படங்களையும் வரிகளையும் ரசித்தேன்
கீதா
படங்கள் வரிகள் இரண்டையுமே ரசித்தேன்.
பதிலளிநீக்குவாசகம் அருமை.
பதிலளிநீக்குவண்ண மயிலேறும் என் தங்க வடிவேலோ...//
பாடல் வரிகளையும் முருகனையும் ரசித்தேன்.
படங்களும் அதற்கேற்ற வரிகளும் அருமை.