அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
வாட்ஸப்பில் வரும் அழகிய வண்ணச் சித்திரங்களுக்கு தகுந்தாற்போல சில வரிகளை விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதி அனுப்ப, அவற்றை தொடர்ந்து இங்கே ஞாயிற்றுக் கிழமைகளில் வெளியிட்டுக் கொண்டிருக்கிறேன்.
அந்த வரிசையில் மேலும் சில படங்களும் அதற்கு விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதிய வரிகளும் உங்கள் பார்வைக்கு! எப்படி இருக்கிறது இந்த முயற்சி என்று சொல்லுங்களேன்! படம் பார்த்து உங்களுக்குத் தோன்றும் எண்ணங்களையும் எழுதுங்களேன். ஓவர் டு விஜி வெங்கடேஷ் - வெங்கட் நாகராஜ்.
*******
எப்ப, எப்பிடி கிருஷ்ணா மீன் தொட்டிக்குள்ள போன? மூச்சு முட்டாதா? கடவுளே இந்த பிள்ளையை வெச்சுண்டு நான் என்ன பண்ணுவேன்?
Relax மா.இது flute இல்ல, Oxygen cylinder தான். அப்பப்போ தலைய வெளிலயும் நீட்டிப்பேன். don't worry.. உன்னை யாரு வாஸ்து பாத்து மீன் தொட்டி வெக்கச் சொன்னா? அதுவும் மெகா size ல....
ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா🙏🏻🙏🏻🙏🏻
*******
ஸ்ஸ்.... ஸப்பா.. இந்த நெருப்பா தகிக்கிற வெய்யில்ல வேர்வை ஆறா பெருக்கெடுக்குது இல்ல நாதா? முடியல....🥵
அது கங்கா, தேவி! என்னை chill பண்ணறத்துக்காக இப்பிடி...
(அதான பாத்தேன்...😏)
ஓம் நமசிவாய🙏🏻🙏🏻🙏🏻
*******
பழங்கள் ஊட்டலாம்னு பார்த்தா அசந்து தூங்கறான் குழந்த.. கைய வெச்சிண்டு இருக்கற அழகைப் பாரு...🥰😘
(ஆமா, வெண்ணையும் தயிருமில்லாத சாப்பாடு ஒரு சாப்பாடா😏?? தான் டயட் ல இருக்கறது போறாதுன்னு எனக்கு வேற… இப்பிடியே continue பண்ணுவோம்..😞அம்மாவே கொஞ்ச நேரத்துல பசிக்கறதுன்னு அதை finish பண்ணிடுவா… அப்புறம் எழுந்தாதான் நாம safe...)
ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா🙏🏻🙏🏻🙏🏻
*******
அப்பா நான் உன்கிட்ட ஒரு விஷயம் சொல்றேன்... யார்ட்டயும் மூச்சு விட்டுட்டாத..... ok?
என்னது?பின்னாடி யாரோ மூச்சு விடற மாதிரி இருக்கு?
முன்னாடியே சொன்னேனே பக்கம் பாத்து பேசுன்னு… அதனால ரகசியத்தை பின்னாடி பாத்துக்கலாம்....
(சே... இங்க கூட privacy இல்லயே...)
ஓம் நமசிவாய🙏🏻🙏🏻🙏🏻
*******
இத பாரு கணேசா, பொறுமையா கேளு.. இந்த hair style எல்லாம் அப்பாக்குத்தான் suit ஆகும் ok? அடம் பிடிக்கக் கூடாது..
சமத்து...😘(குளிப்பாட்டற கஷ்டம் எனக்குத்தான தெரியும்!😟 இதுல அதுக்கு தகுந்த கிரீடத்த வேற தேடணும்..😕)
ஓம் நமசிவாய🙏🏻🙏🏻🙏🏻
*******
நான் கண்ணாடியப் பாக்கல, ஆனா கண்ணாடில என் பிம்பம் தெரியுது? எப்படி நாதா?😟
அது கண்ணாடி மாதிரி வரஞ்ச உன் portrait தேவி. நெத்தில கை, சிரிப்பு, ரோஜாப்பூ எத்தன வித்யாசம்? (பேய் படங்கள் அதிகமா பாக்காதன்னா கேட்டாத்தான....)
ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻
*******
பிரமாதம் நாதா, கடுமையா யோகா பண்ணி உடம்பை எப்படி, இப்படி கச்சிதமா வெச்சுக்கிட்டிருக்கீங்க! excellent👏🏻👏🏻ஆதியோகின்னா சும்மாவா!
நம்ம கணாவையும் இதுல கொஞ்சம் train பண்ணினா தேவலை...
சும்மா இரு தேவி, அவன் கொழு கொழுன்னு இருந்தாத்தான் அழகு.. (அந்த நேரம் நான் நிம்மதியா இருக்கறது உன் கண்ண உறுத்துது??)
ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻
*******
படங்களும் படங்களுக்கான வரிகளும் உங்களும் பிடித்திருக்கும் என நம்புகிறேன். மீண்டும் வேறு ஒரு பதிவு வழி சந்திப்போம்…
நட்புடன்
விஜி வெங்கடேஷ்
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கம்
26 ஏப்ரல் 2026








வாசகம் நல்லாருக்கு.
பதிலளிநீக்குகீதா
6 pack சிவன்!!!! கடைசிப் படம்...ஹாஹாஹா
பதிலளிநீக்குஅதானே பிள்ளையாரின் அழகே அந்தக் கொழு கொழு தான்!
கீதா
மேலுலகிலும் படங்களா!!!!
பதிலளிநீக்குஅது சரி கிச்சாக்கு பழங்கள் பிடிக்காதா!! ஆனா பாருங்க கிருஷ்ண ஜெயந்தி அன்னிக்கு பக்ஷணமும் பழங்களும் தானே நிறைய வைக்கிறோம்!!!ஹாஹாஹா
கீதா
படங்களையும் வரிகளையும் ரசித்தேன்
பதிலளிநீக்குகீதா
அழகான படங்களையும் ரசனையான வரிகளையும் ரசித்தேன்.
பதிலளிநீக்கு