வெள்ளி, 6 செப்டம்பர், 2013

ஃப்ரூட் சாலட் – 59 – மாரத்தான் ஓட்டம் – ஒரு கலக்கு! – சிரிப்பு

இந்த வார செய்தி: சமீபத்தில் ஹைதை நகரில் Half Marathan போட்டி நடைபெற்றது. அதில் The Challenging Ones [TCO] அமைப்பினைச் சேர்ந்த இருபதிற்கும் மேலான நபர்களும் கலந்து கொண்டு போட்டியில் ஐந்து கிலோ மீட்டருக்கு மேல் ஓடி சாதனை புரிந்துள்ளார்கள்.


37 வயதான ரவி ஸ்ரீவத்ஸவா - ஆந்திர அரசில் பணி புரியும் இவர் இந்த மாரத்தான் போட்டியில் பல பிரச்சனைகளைக் கடந்து கலந்து கொண்டு ஓட்டத்தினை முடித்திருக்கிறார். கூடவே கார்கில் போரில் பங்குபெற்ற மேஜர் D.P. Singh, சென்னையைச் சேர்ந்த 23 வயது கிருஷ்ணா முத்துசாமி, நாகர்கோவிலைச் சேர்ந்த சுப்பையா, ஹைதையைச் சேர்ந்த 27 வயது கிரன் கனோஜியா எனப் பலரும் இந்த போட்டியில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

மாரத்தான் ஓட்டம் தானே, இதில் என்ன பெரிய சிறப்பு எனச் சந்தேகத்துடன் படித்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு ஒரு செய்தி – இவர்கள் அனைவருமே – விபத்துகளிலோ, போரிலோ தத்தமது காலை இழந்தவர்கள். கால்களை இழந்த பிறகு PROSTHETIC LIMB வைத்துக்கொண்டு மிகுந்த சிரமங்களுக்கு இடையில் இப்படி தன்னம்பிக்கை இழக்காது தங்களாலும் கடினமான மாரத்தான் ஓட்டங்களிலும் பங்குபெற்று முழு ஓட்டத்தையும் முடிக்க இயலும் என நிரூபித்து இருக்கிறார்கள்.

இந்த செயற்கைக் கால்கள் பொருத்துவதற்கு இன்சூரன்ஸ் இதுவரை கொடுப்பதில்லை. இதற்கு இந்த அமைபினர் முயற்சி செய்து வருவதாகக் கூறும் இந்த அமைப்பின் திரு தஸ்தகீர், சாதாரண செயற்கைக் கால் பொருத்த சுமார் இரண்டு லட்சம் ரூபாய் ஆகிறது எனச் சொல்கிறார். இதுவே இன்னும் சிறப்பான Carbon-Fibre Balde Runner செயற்கைக் கால் எனில் ஆறு லட்சம் ரூபாய் வரை செலவாகும் எனச் சொல்கிறார்.

இழந்தது கால் மட்டுமே, எங்களது தன்னம்பிக்கையை அல்ல எனச் சொல்லும் இவர்களுடைய முயற்சிகள் வெற்றி பெறட்டும். இவர்களிடமிருந்து நாமும் தன்னம்பிக்கையையும் விடாமுயற்சியையும், சாதிக்க வேண்டும் எனும் வெறியையும் கற்றுக் கொள்வோம். இந்த செய்தியை நாளிதழில் படிக்கும்போதே நமக்கும் ஒரு உத்வேகம் பிறக்கும் என்பதில் சந்தேகமில்லை.

போட்டியில் பங்குகொண்ட அனைத்து நபர்களுக்கும் நமது வாழ்த்துகள் – பூங்கொத்துகள்.

இந்த வார முகப்புத்தக இற்றை:

ஒரு நல்ல நண்பன் நூறு உறவினர்களுக்குச் சமம்.

இந்த வார குறுஞ்செய்தி:

ஒரு பள்ளியில் தமிழ் ஆசிரியர்: ”அடித்தது மணி. முடிந்தது என் பணி….”

மாணவன்: தொலைந்தது சனி. ஜாலி தான் இனி…… 

ரசித்த பாடல்: உதய கீதம் படத்திலிருந்து “பாடு நிலாவே தேன் கவிதை” பாடல், இந்த வார ரசித்த பாடலாக உங்கள் ரசனைக்கு. இதுவும் ரேவதி பாடலாக அமைந்தது தற்செயலான ஒன்று!



 
ராஜா காது கழுதை காது: பல்லவன் விரைவு வண்டி – சென்னையிலிருந்து திருச்சி வந்து கொண்டிருந்தபோது எதிரே ஒரு கணவன் – மனைவி.  மனைவி பால் வாங்கி வரச் சொல்ல, கணவர் விழுப்புரம் ரயில் நிலையத்தில் ஆவின் பால் வாங்கி வந்தார்.  சர்க்கரை கொஞ்சம் குறைவாக இருந்திருக்கும் போல – ஒரு வேளை ஒழுங்கா கலக்கலையோ! :) சந்தேகம் வந்த மனைவி – “ஏங்க, உங்க பேனாவைக் கொஞ்சம் குடுங்க, சக்கரை கலக்கணும்!”  அதற்கு கணவன் சொன்ன பதில்: “ஏண்டி, உங்க குடும்பமே இப்படித்தானா? பால்ல சக்கரை கலக்க பேனாவையா உபபோகிப்பீங்க!”…..

ரசித்த காணொளி: SEBI வெளியிட்ட ஒரு காணொளி. இப்படி எத்தனை அறிவுரை சொன்னாலும், அதிக லாபம் அடைய பேராசை பட்டு தன்னுடைய கடின உழைப்பினால் சம்பாதித்த பணத்தைத் தொலைத்து நிற்கும் மனிதர்கள் எத்தனை எத்தனை.  இதோ காணொளி – பாருங்களேன். [ஹிந்தி புரியாதவர்கள் மன்னிக்க!]


 
படித்ததில் பிடித்தது:

“அவள் அபூர்வமாகத்தான் வாய்விட்டுச் சிரிப்பாள். இன்னொரு தரம் அப்படிச் சிரிக்க மாட்டாளா என்று இருக்கும். அவளுடைய சிரிப்பிலே தான் எத்தனை விதம்! கண்களால் மட்டும் சிரித்துக் காட்டுவது. கண்கள் சிரிப்பதற்குப் புருவங்கள் அப்படி ஒத்துழைக்கும்! கடைக்கண்ணால் சிரிப்பது. முகத்தில் எந்தவித சலனமும் இல்லாமல் நேர்ப்பார்வையில் சிரிப்பது. [அவளுடைய சிரிப்பிலேயே இது தான் அழகு.] கண்களைச் சுழற்றி – பறவையாடவிட்டு – ஒரு சிரிப்புக் காட்டுவாள். [அப்போது கண்கள் ஜொலிக்கும்.] சில சமயம், சற்றே மூக்கை மட்டும் விரித்து மூக்கிலும் ஒரு சிரிப்பை வரவழைப்பாள்!”

     இது ஒரு நாவலில் இருந்து எடுக்கப்பட்டது. நாவலாசிரியர் மிகவும் புகழ் பெற்றவர். கண்டுபிடிக்க முடிகிறதா? முடிந்தால் பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்!

மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.
திருவரங்கத்திலிருந்து….


டிஸ்கி: பயணத்தில் இருந்ததால், கடந்த இரண்டு வாரங்கள் ஃப்ரூட் சாலட் வெளியிட முடியவில்லை. இனி வழக்கம் போல ஒவ்வொரு வாரமும் வெள்ளி அன்று ஃப்ரூட் சாலட் வெளிவரும்.

வியாழன், 5 செப்டம்பர், 2013

பதிவர் சந்திப்பு – புகைப்படங்கள் தொகுப்பு –3



கடந்த ஞாயிறன்று சென்னையில் நடந்த இரண்டாவது பதிவர் சந்திப்பில் எடுத்த புகைப்படங்கள் இரண்டு நூறுக்கும் மேலே. சில புகைப்படங்கள் மட்டுமே பகிர நினைத்திருந்தேன். எல்லாப் படங்களையும் வெளியிடச் சொல்லி ரஞ்சனி நாராயணன் அவர்களும் துளசி டீச்சரும் கேட்க, இன்னும் சில புகைப்படப் பகிர்வுகள் வெளிவரும் எனும் அபாய அறிவுப்பை இன்றைய பகிர்வில் தெரிவித்து விடுகிறேன். சில பதிவர்களின் பெயர்கள் வெளியிடாதது எனது மறதியின் தவறு மட்டுமே!


 நானும் ரமணி ஜியும். புகைப்படம் எடுத்த எனது மகள் ரோஷ்ணிக்கு நன்றி.


மேடையில் விழா குழுவினர்களில் ஒரு பகுதி.


நினைவு பரிசு பெறும் மெட்ராஸ் பவன் சிவகுமார்.

  
நினைவு பரிசு பெறும் சரவணன்
 

நினைவு பரிசு பெறும் மின்னல் வரிகள் பால கணேஷ்.


நினைவு பரிசு பெறும் “திடம் கொண்டு போராடு” சீனு.


மகிழ்ச்சியில் மதுமதியும், திரு கண்மணி குணசேகரன் அவர்களும்


விழா குழுவினர்கள் – மற்றொரு புகைப்படம்.


எழுத்தாளர்கள் – சேட்டைக்காரன், சங்கவி, மோகன் குமார் மற்றும் நிஷா [?]


மொட்டைத்தலையும் முழங்காலும் – புத்தக வெளியீடு


இதழில் எழுதிய கவிதைகள் – புத்தக வெளியீடு


வெற்றிக்கோடு – புத்தக வெளியீடு

மேலும் சில புகைப்படங்கள் அடுத்த பகுதியில்…..

மீண்டும் சந்திக்கும் வரை…

நட்புடன்

வெங்கட்.
திருவரங்கத்திலிருந்து.

புதன், 4 செப்டம்பர், 2013

பதிவர் சந்திப்பு – புகைப்படங்கள் தொகுப்பு – 2


கடந்த ஞாயிறன்று சென்னையில் நடந்த இரண்டாவது பதிவர் சந்திப்பில் எடுத்த புகைப்படங்கள் இரண்டு நூறுக்கும் மேலே. சில புகைப்படங்கள் மட்டுமே பகிர நினைத்திருந்தேன். எல்லாப் படங்களையும் வெளியிடச் சொல்லி ரஞ்சனி நாராயணன் அவர்களும் துளசி டீச்சரும் கேட்க, இன்னும் சில புகைப்படப் பகிர்வுகள் வெளிவரும் எனும் அபாய அறிவுப்பை இன்றைய பகிர்வில் தெரிவித்து விடுகிறேன். சில பதிவர்களின் பெயர்கள் வெளியிடாதது எனது மறதியின் தவறு மட்டுமே!


“எங்கள் பிளாக்” கௌதமன்


அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் “சுப்பு தாத்தா”
 

”பாட்டி சொல்லும் கதைகள்” திருமதி ருக்மணி சேஷசாயி


ஜாக்கி சேகர் 


 என்னுலகம் வலைப்பூ வைத்திருக்கும் திரு டி.பி.ஆர். ஜோசப்


 ரமணி ஜி, தோழன் மபா மற்றும் டிஸ்கவரி வேடியப்பன்


 சுவையாக பேசிய எழுத்தாளர் திரு பாமரன்


மேடையில் திரு வா.மு. கோமு, திரு பாமரன், புலவர் ஐயா, சென்னை பித்தன் ஐயா மற்றும் எங்கள் ஊர் பாரதி மணி ஐயா


 முரளிதரன் மற்றும் புலவர் ஐயா. பின்புலத்தில் திரு கௌதமன்


திரு வா.மு. கோமு


 முப்படைத் தளபதிகள்? – 
கடல் பயணங்கள் சுரேஷ், ஸ்கூல் பையன் சரவணன், ஆரூர் மூனா செந்தில்

 
விழா மண்டபத்தின் வெளியே – பதிவர்கள் – கவியாழி கண்ணதாசன், மின்னல் வரிகள் கணேஷ், ரமணி ஜி, சேட்டைக்காரன், ஸ்கூல் பையன் சரவணன், [சாரிப்பா பெயர் தெரியல!] மற்றும் மதுரை சரவணன்.

மேலும் சில புகைப்படங்கள் அடுத்த பகுதியில்…..

மீண்டும் சந்திக்கும் வரை…

நட்புடன்

வெங்கட்.
திருவரங்கத்திலிருந்து.

செவ்வாய், 3 செப்டம்பர், 2013

பதிவர் சந்திப்பு – புகைப்படங்கள் தொகுப்பு – 1



கடந்த ஞாயிறன்று சென்னையில் நடந்த இரண்டாவது பதிவர் சந்திப்பில் எடுத்த சில புகைப்படங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி. அதே அளவு மகிழ்ச்சி பார்க்கும் உங்களுக்கும் இருக்கலாம், இல்லாதும் போகலாம்! :)

இரண்டு நூறுக்கும் மேற்பட்ட புகைப்படங்கள் எடுத்திருந்தாலும், நான் பகிரப் போவது ஒரு சில புகைப்படங்கள் மட்டுமே – அதுவும் ஒரே பதிவில் இல்லை – மூன்று பதிவுகளாக இன்று முதல் வெளியாகும். சில பதிவர்களின் பெயர்கள் வெளியிடாதது எனது மறதியின் தவறு மட்டுமே!



உண்மைத் தமிழன்



சங்கவி
 

”வீடுதிரும்பல்” மோகன் குமார்


பின்னூட்டப் புயல் திண்டுக்கல் தனபாலன்


மகிழ்ச்சியின் உச்சத்தில் ஸ்கூல் பையன் “சரவணன்” – ஒரு வேளை டீச்சர் ஹோம் ஒர்க் கொடுக்கலையோ?  
 


ராஜி அக்காவுக்கு அல்வா கொடுத்த தமிழ்வாசி பிரகாஷ்


ரமணி ஜி!
 

சென்னை பித்தன் ஐயா
 

 பழனி. கந்தசாமி ஐயா


உரையாற்றும் புலவர் ஐயா
 

புலவர் ஐயாவும் 
”அடையார் அஜித்” சென்னை பித்தன் ஐயாவும்


நிகழ்வினை தொகுத்து வழங்கிய சுரேகா



மேலும் சில புகைப்படங்கள் அடுத்த பகுதியில்…..

மீண்டும் சந்திக்கும் வரை…

நட்புடன்

வெங்கட்.
திருவரங்கத்திலிருந்து.